(Reading time: 16 - 32 minutes)

07. என் உயிர்சக்தி! - நீலா

பித்து பிடித்தவள் போல சுற்றிக்கொண்டருந்தாள் பூங்குழலீ! 

நான்கு நாட்களாக பெரிதாக யாருடனும் எதுவும் பேசிவில்லை. கேட்க கேள்விக்கு மட்டும் பதில். மொபைல்லை ஸ்விட்ச் ஆஃவ் செய்துவிட்டாள். வெளி உலக்கத்திற்கான அணைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டாள்! மனதை திசை திருப்ப படிப்பதில் முழு கவனமும் செலுத்தினாள். சாப்பாடு தண்ணீர் தூக்கம் இல்லாமல், புத்தகங்களை கட்டிக்கொண்டு அந்த அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தாள்!

ஆனால் இன்று வெளியே அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம்! அப்பரைசல் மீட்டிங்! கட்டாயம் இருந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம். 

En Uyirsakthi

ஒன்றுமே புரியவில்லை! பலவகையான உணர்ச்சிகள்! அதீத சந்தோஷமா இல்லை தாங்கமாட்டாத துக்கமா?! எதுவென்று தெரியவில்லை! இருந்த மனநிலைக்கு கதறி அழ வேண்டும் போல இருந்தது! எதற்கு என்பது தான் தெரியவில்லை.

யாரை பார்க்கவே கூடாது, நினைக்கவும் கூடாது என்று நினைத்தாளோ அவன்கூடவே இனி வாழ்க்கை முழுவதும்! இரவும் பகலும் கடைசி மூச்சு உள்ளவரை அவனுடன்!

‘இவனை பிடிச்சிருக்கானு யாரும் கேட்கலை! எனக்கே தெரியவில்லை பிரபுவை பிடிச்சிருக்கா?? பிடிக்கவில்லையா??...’

மனதிற்குள் பெரிய போராட்டம். அதிக கனம் ! இதயத்தில் வலி!

'அவனுக்கு என்னை சுத்தமாய் பிடிக்கல! ஆனால் எனக்கு?? நான் நினைத்திருந்தா இதை நிறுத்திருக்கலாமே?...’

திருமண பந்தம் என்றால் இரு குடும்பங்கள், இரு மணங்கள் இணைவது எல்லாம் தாண்டி எல்லாவற்றையும் தம்பதிகள் தங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்! வெரும் பொம்மைத் திருமணம் அல்லவே! அதுவும் இவன்கூட..!

அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள்! 'அவளை நினைத்த மனதால் வேறு ஒருத்தியை நினைக்க போவதில்லை அதனால் எனக்கு மேரேஜ் ஒரு அக்ரிமன்ட் தான்!'. இது அவனுடைய வார்த்தைகள் தான். யாழினியிடம் கூறியவை எல்லாம் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது! 

'அவனுக்கு அக்ரிமன்ட்! எனக்கு இது வாழ்க்கை! நானும் உயிருள்ள உணர்ச்சிகளுள்ள ஒரு மனுஷிதான். இதை ஏன் யாரும் உணரவில்லை. அட்லீஸ்ட் பிரபு!?...’

இல்லை...எல்லாவற்றிற்கும் சேர்த்து பழிவாங்க நினைத்து இதற்கு சம்மதித்தானா? பழிவாங்கனாலும் வேற நேரமே கிடைக்கலியா இவனுக்கு? எக்ஸாம் இருந்தாலும் பரவாயில்லை அன்றே திருமணத்தை வைத்துக்கலாம் னு சொல்லிட்டானே? இதுல ‘கலெக்டர் மேடம்’ ஐ நானே கூடப் போய்ட்டு கூட்டிவரேன் வேற சொல்லறான்? ஐந்து நாட்களும் அவனுடன் தனியே சென்று...!

அவனுக்கு என்ன பிரச்சினை? நான் தானே எக்ஸாம் எழதப்போறேன்... இவ்வளவு படப்படத்த நேரத்துல எப்படி எழுத முடியும் ? எவ்வளவு சாதாரணமாய் சொல்ல முடியும்? என்ன செய்வேன் கடவுளே? இவ்வளவு விரதங்கள் பரிகாரங்கள் கேலி பேச்சுக்கள் ஒரு தவம் போல் இருந்ததற்கு இதுதான் விடையா?' என்று மனதில் ஆயிரம் கேள்விகள்.

'ஆ... ஸ்.. அம்மா கொஞ்சம் பார்த்து வாருமா! வலிக்குது. ஒரு முடியை மட்டும் இழுக்குறமா. ஆ... வலி..' என்று அம்மா பின்னலிட்டு முடிக்கும் போதுதான் சுயநினைவுக்கு வந்தாள். 

வலிக்கும் வலிக்கும்! ஏன் வலிக்காது? எல்லாம் என் நேரம்டீ!' என்று நொடித்துக்கொண்டார் லஷ்மி. 'சக்தி நில்லு கிளம்பிடாதே.., ஒரு நிமிடம் இரு இதோ வரேன்' என்று உள்ளே சென்றார். 

'அம்மா சீக்கிரம் வாமா... இந்த புடவையை வேற கட்டிக்கிட்டு வண்டி ஒட்ட முடியாது மா... மற்ற புடவைனா கூட பரவாயில்லை... இது அடங்கவே மாட்டேனு தனியா நிக்கற்து!'. கையில் மல்லிகை பூவுடன் வந்தார் அம்மா. 

'நானே உன்னை புடவை கட்ட சொல்லனும் இருந்தேன். நீயே புடவை கட்டிட்ட! பரவாயில்லை! என் பொண்ணு நான் சொல்லாமல் இதையேல்லாம் புரிஞ்சி நடக்கறா! ஆனா நான் இதை செய்யுனு சொன்னா கேட்கமாட்ட. எதாவது குதர்க்கமா பேசுவ! எதுக்கு வம்பு! சரி இனிமே தினமும் புடவை கட்டி பழகிக்கோ. சரியா?' என்றவாறு தலையில் அந்த மல்லிகையை சூட்டிவிட்டார். 

அம்மா... நான் ஆப்பிஸுக்கு போறேன். இப்படி இவ்வளவு பூவாமா? ஏற்கனவே இவளுங்க தொல்லை தாங்க முடியாம தான் புடவையே கட்டிட்டு போறேன். இன்னைக்கு தானா இவங்களுக்கு குழந்தைகள் தினம் கொண்டாட நேரம் கிடைச்சுது? மா.. இன்னிக்கு முழு நாளும் தொடர்ந்து மீட்டிங் மா. நடுவில் ஒரு அரைமணி நேரம் தான் அந்த குழந்தைகள் காப்பத்துக்கு போறோம். இதுல இவ்வளவு பூ வேற?!'

கூறி முடிப்பதற்குள் வாய் மீதே ஒரு அடி விழுந்தது. 

'அம்மா!!!' என்று திகைத்து நின்றாள். 

பூ வேண்டாம்னு சொல்லக்கூடாதுனு எத்தனை முறை சொல்லிருக்கேன்? இன்னொரு முறை சொல்லிப்பாரு...'

மா... இவ்வளவு வைக்காதீங்கனு தானே சொன்னேன்...பூவே வேண்டாம்னு சொல்லலையே...

....

மா... சரி மா. வைங்க!' இன்னும் எதோ வாய்க்குள் முனுமுனுக்க…

என்னடீ? என்ன முனுமுனுக்கற? இன்னும் இருபது நாளைக்கு இப்படி தான் இருக்குற! என்ன? முழிக்காதே...! கையில எங்க அந்த தங்க வளையல்? கழட்டி எங்க வைச்ச? மேட்சிங்கா வளையல் போடலைனா என்ன? எங்க அது??

'இருக்கு மா. உள்ளே பிரோவில் தான் வெச்சிருக்கேன். மா நீ சொல்லரா மாதிரி போனா கண்டிப்பா எங்க ஆப்பிஸில் கண்டுபிடிச்சிடுவாங்க! ஏற்கனவே இந்த மருதாணி வேற! அதுவும் இல்லாம இந்த மோதிரம் வேற!'

இப்ப என்ன தான் சொல்ல வர?' என்று முறைத்தார் லஷ்மி. 

'மாம்! கிளம்பும் போது தயவுசெய்து டென்ஷன் ஆகாதீங்க! இந்த மோதிரம் எவ்வளவு பெரிசா இருக்கு பார்தீயா? இதை போடலைனா யாரு அழுதா? அதுவும் கையில இருந்து வேற கழட்டி யாராவது போட்டுவிட சொன்னாங்களா? அதுவும் இதுல 'S' னு ஒரு லேட்டர் வேற! விரல் நழுவி கீழே விழுந்துச்சுனா என்னை குறை சொல்லக்கூடாது! சொல்லிட்டேன்!'

அதற்குள் அம்மாவிற்கு கைபேசியில் அழைப்பு வந்தது. ‘இரண்டு நிமிடம் இரு’ என்றுவிட்டு அழைப்பை ஏற்று பேச சென்றார். 

'P' னு போட்டாக்கூட ஏதாவது அர்த்தம் இருக்கும்! சம்பந்தமே இல்லாமல் 'S' எதுக்கு?' என்று முனுமுனுத்தாள். அதற்குள் யோசித்து யோசித்து கடைசியாக தனது மொபைலை உயிர்ப்பித்தாள்! கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு! வந்த குவிந்த மெசேஜ்களை பார்க்க தொடங்கினால் இன்றைய நாள் முழுவதும் பத்தாது! அர்ஜுனிடம் இருந்து ஏகப்பட்ட குறுந்தகவல்கள். வேகமாக ஒரு தகவல் டைப் செய்தாள்...

Life matter urgent! Meet u @ parking or my office reception around 12.30! Be there...'

இதை அனுப்பிய அடுத்த நொடி அவனிடம் இருந்து அழைப்பு! கால்லை எடுக்காமல் ஸ்விட்ச் ஆப் செய்தாள். அதற்குள் அம்மாவும் வந்துவிட்டார். 

'மா... பை! டைமுக்கு சாப்பிடு மா...' என்று வண்டியை கிளப்பினாள். 

'சக்தி இருடீ... மாப்பிள்ளையின் அப்பா தான் லைனில் இருக்கார்.. இன்னிக்கு ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரமா வருவியாம்.. மாப்பிள்ளையும் அவரும் திருமணப்பத்திரிக்கை சாம்பிள் எடுத்துட்டு வராங்கலாம்!' என்றார். 

வண்டியை நிறுத்திவிட்டு வந்த குழலீ அம்மாவிடம் இருந்து அலைபேசியை வாங்கி பேசினாள். 

‘வணக்கம் அங்கிள். நான் குழலீ பேசறேன்.’

‘ம்ம் சொல்லுமா பூங்குழலீ! இன்னும் என்னமா அங்கிள்னு கூப்பிட்டுகிட்டு? ஞாயிற்றுக்கிழமைக்கு அப்புறமா உன்னை ஆளையே பிடிக்க முடியல்ல..’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.