"ஹா ஹா ஹா! ஆன்ட்டி, இவ உங்களை பத்தி சொன்னது தப்பே இல்லை! நீங்க சூப்பர் வுமன் தான்!"
"அதுக்குள்ளே நீங்க இரண்டு பேரும் ஒரு சைட் ஆகிட்டீங்களா?"
"நீ இப்படி இருந்தா நாங்க என்ன செய்றது? இவ காலேஜ்ல கூட இப்படி தான் ஆன்ட்டி, துப்பட்டாவை போட்டு இரண்டு சைடும் பின் வேற செஞ்சுட்டு வருவா!"
"சரத்க்கு அப்படி தான் பிடிக்கும்! டிவி பார்த்தால் கூட இது என்ன டிரஸ் கேவலமா இருக்கு அது இதுன்னு புலம்பிட்டே இருப்பான். நான் கூட இவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு டைம் மெஷின்ல போய் சரோஜா தேவி, பத்மினி யாரையாவது தான் பிடிச்சுட்டு வரணும்னு நினைப்பேன்...."
நந்திதா வாய் விட்டு சிரித்தாள்.
"இரண்டு பேருமா சேர்ந்து என்னை ஓட்டுறீங்க? நீங்க கூட அத்தை???"
...
This story is now available on Chillzee KiMo.
...
சில நிமிடங்கள் 'பொறுமையாக' அமைதியாக இருந்த நந்திதா,
"என்ன எல்லோரும் இப்படி அமைதியா சாப்பிடுறீங்க?" என்றாள்.
சரத், துளசி, காமாட்சி மூவரும் அவள் பக்கம் பார்த்தார்களே தவிர எதுவும் சொல்லவில்லை.
"என்ன அங்கிள் நீங்க தானா கல்ப்ரிட்? உங்களுக்கு சாப்பிடும் போது பேச பிடிக்காதா?"