"ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்ய முடியுமா? சாப்பிடும் போது வாய்க்கு வேலை இருக்கு, அப்புறம் எதுக்கு எக்ஸ்ட்ராவா பேசுற வேலை வேற?"
"எனக்கு மல்டி டாஸ்க்கிங் செய்யாமல் எதுவுமே நடக்காது அங்கிள்... இன்னைக்கு ஒரே ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்துக்குறீங்களா?"
ராஜசேகர் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உணவு உண்பதை தொடர்ந்தார்.
அதை சம்மதமாக எடுத்துக் கொண்ட நந்திதா,
"நான் ஒரு கேள்வி கேட்குறேன், தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க... சரியா?" என்றாள்.
மற்றவர் பதில் சொல்ல காத்திருக்காமல், தன் கேள்வி கணைகளை தொடங்கினாள்.
"ஒருத்தர் துணி துவைக்குற இடத்துல போய் பால் இருக்கான்னு கேட்டார், ஏன்???? சொல்லுங்க பார்ப்போம்...."
"ஏன்னா அவருக்கு கண்ணு தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் கவனிக்க மாட்டா! எதுக்கு எல்லோருக்கும் ப்ரீ ஷோ தரணும்னு இரண்டு டப்பா பின் குத்தி கொடுத்திருக்கேன்... ப்ளீட்ஸ் மட்டுமில்லை, கொசுவம் சைடும் கூட ரொம்ப ஸ்ட்ராங்!"
"ஹா ஹா ஹா! நல்ல பொண்ணுங்க! எங்க அம்மா கேட்ருக்கணும் இதை எல்லாம்! ட்ரஸ் எப்படி இருக்குன்னு கூட தெரியாமல் வேலை செய்வீங்களா?"