(Reading time: 17 - 33 minutes)

ன்ன சொல்லுறீங்க?...

உண்மைதான் வள்ளி… அவங்கிட்ட நான் மறுபடியும் பேசுறேன்… நீ கவலைப்படாதே… மஞ்சரியை தைரியமா இருக்க சொல்லு… சரியா…

சரிங்க… நீங்க சீக்கிரம் பேசுங்க…

கண்டிப்பாடா… நிச்சயமா பேசுறேன்…

மஞ்சு அழுது நான் பார்த்ததே இல்ல… இன்னைக்கு அவ அழுதப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… மைவிழியன் சார்கிட்ட பேசியே ஆகணும்னு நினைச்சு தான் உங்களைப் பார்க்க வந்தேன்… கொஞ்சம் பேசுங்க அவர்கிட்ட… ப்ளீஸ்… மஞ்சரி ரொம்ப அழறா… என்றவளின் விழிகளில் நீர் இப்பவோ அப்பவோ என்றிருக்க,

ஹேய்… வள்ளிம்மா… என்னைப்பாரு… என்ற வ்ருதுணனின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது…

உன் தோழி அழுகை உன் மனசை கரைக்குது… நல்லது தான்… ஆனா, நான் வெளியே சொல்லி அழலையே தவிர, மனசுக்குள்ள அழறேனே… அது உனக்கு தெரியாதா?... இல்ல புரிஞ்சிக்க தான் முடியாதாடா?... என்று அமைதியாக அவன் கேட்க…

அவள் பேச்சிழந்தாள்… அவளின் கண்ணீர்த்துளிகள் இப்போது அவளது கன்னங்களை தொட்டுவிட்டிருந்தது…

உன்னைக் காயப்படுத்தணும்னு நான் இதை சொல்லலடா… உன் மனசு யாருக்கும் தெரியாம அழறதை என்னால புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைக்கிறியா?... இல்ல எனக்கு தெரியாதுன்னு தான் நினைக்குறியா?...

ப்ளீஸ்… விட்ருங்க… இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க… என் மனசு அழலை… காயப்படவும் இல்லை… மைவிழியன் சார்கிட்ட பேசிட்டு சொல்லுங்க… அது போதும்… என்று அழுத்தி சொல்ல…

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், உடனடியாக மைவிழியனுக்கு போன் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்தான்..

டேய்… எங்க இருக்குற?...

ஆஃபீசுக்குள்ள தான் வந்துட்டிருக்கேண்டா… என்ன விஷயம்??...

நீ உடனே என் ரூமுக்குள்ள வா… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…

எதைப் பத்திடா?...

ஏன் சொன்னா தான் துரை வருவீங்களோ?... மரியாதையா உடனே வரலை… மகனே நீ அவ்வளவுதான்…

சரிடா.. சரிடா… வரேன்… கோபப்படாதே…

அவன் வரேன் என்று சொல்லி முடித்ததும், போனை கட் செய்துவிட்டு அவன் வள்ளியைப் பார்க்க அவள் எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தாள்…

பேசமாட்டாளே… ஹ்ம்ம்… என்றெண்ணிக்கொண்டிருந்தவனின் யோசனையை சட்டென்று உள்வந்த மைவிழியன் கலைத்தான்…

என்னடா… எதுக்கு வர சொன்ன உடனேயே?... என்றபடி உள் நுழைந்த மைவிழியன் வள்ளி அங்கே நிற்பதைக் கண்டதும்,

ஓ… சாரி… நான் அப்புறம் வரேன்… என்றபடி வெளியே செல்ல முயல,

வள்ளியோ, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்… பேசலாமா???… என்றாள்…

எங்கிட்டயா?... ஹ்ம்ம்… சொல்லுங்க வள்ளி… என்ன விஷயம்?...

மஞ்சரியை நீங்க உண்மையா விரும்பினீங்கன்னு எனக்கும் தெரியும்… அப்புறம் ஏன் இன்னைக்கு அவளை அழ வைச்சுப் பார்க்குறீங்க?.. இது உங்க பெர்சனல்தான்… ஆனா அவ என்னோட ப்ரெண்ட்… அந்த உரிமையில தான் கேட்குறேன்… சொல்லுங்க… என்ன பிரச்சினை உங்களுக்கு?...

அவள் கேட்டதற்கு அவன் பதிலே சொல்லாது அமைதியாக இருக்க…

டேய்… வள்ளி கேட்குறால்ல… பதில் சொல்லுடா… ஒழுங்கா… என வ்ருதுணனும் அதட்ட… அவன் அமைதியாக இருந்தான்…

சொல்லுங்க மைவிழியன் சார்… உங்களுக்கு என்ன தான் பிரச்சினை… ??...

…..

டேய்… வாயைத்திறந்து பதில் சொல்லேண்டா… என வ்ருதுணன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மைவிழியனின் போன் சத்தம் கொடுக்க…

யார் என்று பார்த்துவிட்டு போனை வ்ருதுணனிடம் நீட்டினான்…

என்னடா… யார் போனில்… என்ற வ்ருதுணனின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை மைவிழியன்…

கொடுத்து தொலை… என்று அவனிடமிருந்து போனை வாங்கியவன், அம்மா என்று திரையில் மின்னியதை பார்த்துவிட்டு,

சொல்லுங்கம்மா… என்றான்…

என்ன  துணா?... விழியன் எங்க?...

அவன் வேலையா இருக்கான்மா.. நீங்க சொல்லுங்க…

ஒன்னுமில்லடா… உடனே இரண்டு பேரும் கிளம்பி வீட்டுக்கு வாங்க…

என்னம்மா?... எதும் பிரச்சினையா?...

கிட்டத்தட்ட அப்படித்தான்… சீக்கிரம் வாங்க… என்ற துர்கா… போனை அணைத்துவிட, வ்ருதுணனோ, டேய்… அம்மாதான் போன் பண்ணாங்க… உடனே வீட்டுக்கு வரணுமாம்… வந்து தொலை… வா… என்று சொல்ல…

ஹ்ம்ம்… என்றான் மைவிழியன்…

ஏன் அதை வாயைத் திறந்து வரேன்னு சொன்னா நீ குறைஞ்சு போயிடுவியா?... என்று திட்டியபடி துணா அவனைப் பார்க்க  

அவனோ இதற்கெல்லாம் நான் பயந்தவனா?... என்றபடி கண்டுக்காமல் இருந்தான்…

முன்னாடி போய்த் தொலை… நான் பின்னாடி வரேன்… என்றாண் துணா அவனிடம்…

ஹ்ம்ம்… என்றவன் அதற்கும் மேல் அங்கு நிற்காமல் வெளியேறிவிட..

சாரி… வள்ளி… அம்மா அவசரமா கூப்பிட்டாங்க… போயிட்டு வந்துடுறேன்… கிளம்புறதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்… இவன் என்…. என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, வ்ருதுணனின் கையில் இருந்த மைவிழியனின் கைபேசி மீண்டும் சிணுங்க…

இதோ கிளம்பிட்டோம் மா… வந்துடுவோம்… இப்போ என்றான் அவசரமாக…

சீக்கிரம் வாங்கடா…. என்றபடி அவரும் போனை வைத்துவிட,

சாரி வள்ளி… வந்து சொல்லுறேன்…  வரேண்டா… என்றபடி சென்றுவிட, வள்ளியோ மஞ்சரியைத் தேடிச் சென்றாள்…

அப்போது…

நீ எதுக்கு இப்போ அவரைத் திட்டின?... அவரைத் திட்டிட்டா மட்டும் எல்லாம் சரி ஆயிடுமா?...

அதுக்காக, என்ன ஏதுன்னு கேட்காம உட்கார்ந்து உன்னை மாதிரி அழ சொல்லுறியா மஞ்சு?...

அய்யோ.. பாலா… நீ வேற ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?...

யாரு நான் உன்னைப் புரிஞ்சிக்கலையா?... நேரம்தாண்டி…

என்னால முடியலை பாலா… நான் வீட்டுக்குப் போறேன்… தலைவலிக்குது… என்றவள், எதிரே வந்த வள்ளியிடம், பாலா மைவிழியனைத் திட்டியதைப் பற்றியும், தான் வீட்டிற்கு கிளம்புவதையும் கூறிவிட்டு அகல, வள்ளி பாலாவைப் பார்த்தாள்…

அவள் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, போடி போ… உனக்காக, நான் அவரிடம் சண்டை போட்டதற்கு நீ என்னிடம் சண்டை போடுறியா?... போடுடி… போடு… எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்குறேன்… எங்கிட்ட நீ வந்து தான் ஆகணும்… அதை மனசுல வச்சிக்கோ… என்று மஞ்சரியின் காதில் விழுகும்படி கத்தி சொல்ல… மஞ்சரியோ அதை கேட்டுவிட்டு, திரும்பி நின்று ஒருமுறை பாலாவைப் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்…

அவள் சென்ற சிறிது நேரத்தில் பாலாவும், வள்ளியும் அலுவலகத்தில் லீவ் சொல்லிவிட்டு அவரவர் ஸ்கூட்டியில் மஞ்சுவைப் பின் தொடர்ந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.