(Reading time: 14 - 28 minutes)

18. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

நெஞ்சமெல்லாம் காதல் தொடரை படித்து இது வரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் தோழர்களுக்கும் மிக்க மிக்க நன்றி... இவ்வளவு நாட்கள் எனக்கு என்ன ஆச்சோன்னு கதை என்ன ஆகுமோன்னு உங்களை எல்லாம் நான் ரொம்ப தவிக்க விட்டிருந்தாலும் என் கதை மேல ஈடுபாடு குறையாம இதை படிப்பதற்கும் காத்திருந்ததுக்கும் எப்பவுமே நன்றி கடன் பட்டிருக்கேன்.. என்னுடைய சில தவிர்க்க முடியாத சொந்த வேலைகளால் தான் இந்த தாமதம்... இதை ஈடாக்க ஊனமறு நல்லழகே-வின் அடுத்த அத்தியாயம் மேலும் ஒரு புது தொடருக்கான முதல் அத்தியாயமும் சில்சீ குழுவிற்கு அனுப்பியிருக்கேன்.. கூடிய சீக்கிரம் அதையும் நீங்க படிப்பிங்க... எல்லாருக்கும் இன்னும் ஒரு முறை ஆத்மார்த்தமான நன்றி.. மற்றும் என் மன்னிப்பு.. ப்ளீஸ் இதை ஏத்துக்கிட்டு என்னை மன்னிச்சுருங்க... துவாரகா நீங்க யாருன்னு தெரியல ஆனா உங்களோட ஒரே ஒரு கமெண்ட் நான் ஆடி போயிட்டேன்.. இனி கவலை படாதீங்க 'ப்ரியா இஸ் பேக் வித் பேங்'... இனி என் கதைகள் எல்லாம் லேட்டா இல்லாம லேட்டஸ்ட்டா வந்துகிட்டே இருக்கும்... இதற்கு எல்லாம் மேல சில்சீ குழுவிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்... முடிவில் 'ப்ரியா ஹாப்பி அண்ணாச்சி' :D :) 

நொடி பொழுதில் கண்கள் சிவக்க,தன் கேபின் அருகே மதுவை பார்த்து கொண்டே அவன் முன்னேற, எதிர்புறத்தில் வசுந்திரா மதுவின் அருகே வந்து விட்டிருந்தாள்.

இப்போது எது பேசினாலும் அது வசுந்திராவின் கேள்விக்கு உள்ளாக நேரிடும் என்பது புரிய நடை தளர்த்தினான் ஆதி.

"என்ன மது, யார் அந்த புது ஹென்ட்சம், ஆள் பார்க்க அழகா இருக்கான்?"

Nenjamellam kathal

"ஐயோ வசு, மெதுவா பேசுங்க, அவரு புதுசு இல்ல சீனியர் தான்.. டெல்லி ல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்திருக்காராம்"

"ஒ, அப்படியா விஷயம்.. ஆனா நீ கைய புடிச்சிட்டு சிரிச்சுட்டு இருந்தியே? அவர் மூஞ்சில வேற டன் கணக்குல வலிஞ்சுதே?" என கேலி போல கேட்கவும் அவர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்ட ஆதியின் காதுகள் கூர்மையாகின.

"நீங்க வேற, சடன்னா கை நீட்டிட்டாரு பதிலுக்கு நான் கை கொடுக்கமா இருந்தா தப்பு ஆகிடுமேன்னு கொடுத்தேன் அவ்வளவு தான் ஆள விடுங்க, வேற ஒன்னும் இல்லை"

"நிஜமாவா?"

"நிசமா தான்.. வேணும்னா நீங்க ட்ரை பண்ணுங்களேன் உங்களுக்கு பொருத்தமா இருப்பார்" என்று கூறி விட்டு நாக்கை கடித்தவளை பார்த்து முறைக்க முயன்று தோற்று சிரித்து விட்டாள் வசுந்திரா.

அதை பார்த்த மதுவும் சிரிக்க, மதுவின் பதிலில் ஆதியின் முகத்திலும் மென்னகை!!

மதுவின் அருகில் வந்து அமர்ந்தவன் இருவரையும் மாறி மாறி பார்க்க சிரிப்பை நிறுத்தி விட்டு இருவரும் வேலையில் ஆழ்ந்தனர்.

தன் நினைவுகளின் தாக்கத்தால் அவன் முகம் காண்பது கூட அவஸ்தையாய் இருக்க மது மனதை வேலையில் ஈடுபடுத்த முயன்றாள். அவள் முகம் காண ஏங்கி ஏங்கி முடியாமல் போன கோபத்தில் அவனும் வேலையில் ஆழ்ந்தான்.

அவர்களை இன்னும் சோதிக்கவே அன்று முழுவதும் ப்ரொஜெக்டில் இஸ்யு, மேனேஜருடன் மீட்டிங் என நாள் மிகவும் மோசமாக போனது. மாலை ஆவலுடன் பேச வந்த போது மீண்டும் அந்த பிரகாஷ் அவளுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க மனதிற்குள் ஏதோ சரி இல்லை என்று தோன்றியது ஆதிக்கு.

அமைதியாக அருகில் வந்து அவனது பேக்கை எடுக்கும் போது கண்டும் காணாதது போல் அவர்களை பார்க்க, தன்னுடன் பைக்கில் வந்து இறங்கி கொள்ளுமாறு அவன் மக்டுவை கேட்டு கொண்டிருந்தான்.

அவள் தவிப்புடன் மறுப்பு கூறி கொண்டிருந்தாள். கோபத்தில் நகர போனவன் என்ன நினைத்தானோ மதுவிடம் திரும்பி,

"மது, பைக்க எடுத்துட்டு வரேன் நீ கேட் பக்கத்துல வெயிட் பண்ணு" என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

ஒரு சில வினாடிகள் வியப்பில் இருந்தவள் சுதாரித்து,

"சாரி பிரகாஷ் நான் எப்பவும் ஆதி கூட தான் போவேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அவன் கூறிய பின் மது முகத்தில் தோன்றிய வியப்பும் பின் சுதரிப்பும் அதன் பின் வெட்கம் கலந்த புன்னகையும், ஆதிக்கு எது தெளிவாக புரிய வேண்டுமோ அது பிரகாஷிற்கு புரிந்தது அதுவே போதும் அல்லவா?

ஏனோ முன் பின் பார்த்து பேசியிராத அவன் மீது முதன் முதலாய் மனதின் அடி ஆழத்தில் இருந்தா பொறமை விதை மெல்ல துளிர் விட்டது என்றால் மதுவின் மென்முகத்தில் தோன்றிய காதல் புன்னகை அதற்கு உரமிட்டது..!!!

வெளியே வந்தவள் கால்கள் மட்டும் தரையில் நடக்க சிறகில்லாத தேவதை போல் மிதந்து போவது போல் உணர்ந்தாள். ஆதி பைக்கில் வர அவன் தோல் தொட்டு ஏறி அமர்ந்து, ஏதோ கூற அவள் முனைகையில் எதிர் பாராத வண்ணம் வேகமாக வண்டியை அவன் ஸ்டார்ட் செய்ததில் அவன் தோளை அழுத்தின அவள் விரல்கள்.

ஏதோ ஒரு பயம் மனதை கவ்வ, அவன் ஒட்டிய விதமும், வண்டியின் வேகமும் கண்டு திணறி போனாள். என்ன தான் தன்னவளை தான் வண்டியில் ஏற்றி கொண்டு பயணித்தாலும் மனதில் காரணமின்றி கனன்ற நெருப்பு அனைய மறுத்தது.கண் மூடி திறக்கும் போது அவள் வீட்டின் முன் நின்றது பைக்.

இறங்கி முன்னே வந்து அவனிடம் ஏதோ சொல்ல வந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் நேராக திரும்பி கொண்டான்.

"தேங்க்ஸ், அந்த பிரகாஷ்.."

"தேங்க்ஸ் ஆ?!! ஆச்சரியமா இருக்கு, அந்த பிரகாஷ் கூட உன்ன போக விடாம நான் கூட்டிட்டு வந்துட்டேன்னு நான் உனக்கு சாரி சொல்லன்னுமொன்னு நினைச்சேன்"

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியும் முன்னரே,

"ஆனா உன்கிட்ட எல்லாம் இதுக்காக என்னால சாரி சொல்ல முடியாது டி, இனி தினமும் நான் தான் உன்ன கூட்டிட்டு வருவேன், இல்லன்னா உங்க அண்ணன் வரணும் சொல்லிட்டேன்" என்று கூறி விட்டு பறந்திருந்தான்.

ஏதோ யோசனையிலேயே வீட்டிற்கு சென்றவள் இரவு உணவுக்காக தன்யா வந்து அழைக்கும் வரையில் உடை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்திருந்திருந்தாள்.

'என்னவாயிற்று அவனுக்கு? அவன் கோப படுவதின் அடிப்படை? ஒரு வேலை பிரகாஷிடம் நான் பேசுவது பிடிக்கவில்லையோ? இருக்காது ஆதி அப்படி சிறு விசயத்துக்கு எல்லாம் கோப படும் ஆள் இல்லையே'

காதலில் சிறு விஷயம் கூட தன்னவள் என்கிற உரிமையில் பெரிதாய் தெரியும் ஆதியின் மனதை கணிக்க தெரியாதது மதுவின் குற்றமென எவ்வாறு கூற இயலும்???

நேற்றைய இரவில் மனதை வாட்டியவை அனைத்தும் அவன் முகம் பார்த்ததும் காணாமல் போனது. சிறு துள்ளலுடன் அவள் இருக்கையில் அவனை பார்த்தவாறே அமர்ந்த போது, அவனும் இவளை தான் ஒர கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் ஒர கண் பார்வையே அவள் மனதிற்கு இதம் தந்து விட அன்றைய நாளை அழகுடன் துவங்கினாள். இல்லை இல்லை துவங்க எண்ணினாள்!!

"ஹாய் மது"

"ஹாய் வசு, இப்போ தான் வரிங்களா?"

"ஆமாம்... ஆமாம்"

"ஏன் இவ்வளவு சலிச்சுக்கரிங்க?"

"நானா? அது வந்து... ஆமா நீ ஏன் இவ்வளவு ப்ரைட்டா இருக்க இன்னைக்கு? அந்த மேட்டர் உனக்கும் தெரிஞ்சுடுச்சா?"

"என்ன மேட்டர்?"

"ஹே ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத"

"நானா நான் என்ன?!!!! ஒன்னும் புரியல"

"என்ன விஷயம் வசுந்திரா?" என்றவாறு ஆதியும் பேச்சில் கலந்து கொண்டான்.

"அது ஒண்ணுமில்லை ஆதி, மடக்கும் எனக்கும் நடுவுல இருக்க சீக்ரெட், நீங்க வேலைய பாருங்க பாஸ்" என வசுந்திரா சிரிப்புடன் கூறவும்

அதே சிரிப்புடன் ஆதியும் விலகி கொண்டான். அவனுக்கு தெரியாதா? அவனுக்கு தெரியாமல் மதுவின் வாழ்வில் எந்த ரகசியமும் இல்லையே அவள் தான் எல்லாவற்றையும் அப்படியே ஒப்பித்து விடுவாளே?!.

"அந்த புது ராக் ஸ்டார் இல்ல?"

"ராக் ஸ்டாரா?"

"ஐயோ அதான் பிரகாஷ்"

"அவரா? ராக் ஸ்டார் ஆயாச்சா அதுக்குள்ள.. நடக்கட்டும் நடக்கட்டும்"

"ம்ம்ம் என்ன சொல்லி என்ன, அவன் கண்ணு உன்மேல தான இருக்கு... அவன் உன்ன தான் விழுந்து விழுந்து பாக்கிறான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.