(Reading time: 14 - 28 minutes)

பெருமூச்சுடன் இதை சொன்ன வசுந்திராவின் குரல் ஆதியின் காதுகளை எட்ட தப்பவில்லை.

"......?!"

"என்ன சொல்றிங்க?"

"நிஜம் தான், இன்னொரு விஷயம் தெரியுமா? இன்னைக்கு காலைல உன்ன பாக்க அவன் அம்மா கூட வந்தாங்க ஆனா ஒரு கலயனதுக்கு போகணும் நு கிளம்பிட்டாங்களாம்"

"...."

"என்ன மது ஷாக் ஆகிட்டயா?, எனக்கு கூட அப்படி தான் இருந்துச்சு, எனிவே ஆல் தி பெஸ்ட்"

இதை சொல்லி வலுக்கட்டாயமாக மதுவின் கரத்தை பற்றி அவள் குலுக்கும் போது அனிச்சை செயலை மதுவின் விழிகள் ஆதியை நோக்கின. அமர்ந்திருந்த சுழற்நாற்காலியை விருட்டென பின்னே தள்ளி எழுந்து சென்றிருந்தான் அவன்.

அன்றைய நாள் முழுவதும் ஆதியை தனிமையில் சந்தித்து பேச முடியாமல் தவித்தாள் மது. அவள் தன்னிடம் பேசி விடாத படி வேலையில் தன்னை ஆழ்த்தி கொண்டான் ஆதி.

மாலையில் கிளம்பும் போது அவள் மீதிருந்த கோபத்தில் அவளை தன்னுடன் அழைத்து செல்லாமல் பாதி தூரம் வரை சென்று விட்டு திரும்பிய போது அவளை அலுவலகத்தில் காணவில்லை. அவள் செல்போனிற்கு தொடர்பு கொண்டாலும் லைன் கிடைக்கவில்லை. அவள் மீதிருந்த கோபம் இன்னும் அதிகரித்தது இருந்தாலும் அவள் மேல் காதல் கொண்ட மனது அவளை காணமல் தவிக்க அவள் வீட்டிற்கே வண்டியை செலுத்தினான்.

அவன் சென்ற சமயம் அவன் காரில் இருந்து மது இறங்க முகம் கொள்ளா பூரிப்புடன் கை அசைத்து விடை பெற்றான் பிரகாஷ்!!

என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் வண்டியை விட்டு இறங்கி சென்று அவளை இழுத்து நிறுத்தி தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்தான். அவள் கண்கள் ஒரு கணம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தரிதவிப்புடன் நோக்க எதுவோ சொல்ல அவள் வாய் திறவும் முன் 'பளார்' என அறைந்து விட்டு பைக்கில் பறந்திருந்தான்  அவன்..!!!

தன்னை சுற்றிலும் உள்ள யாரேனும் பார்கிறார்களா என்று அவசரமாய் பார்த்தவள் அவன் அறைந்ததை தெளிவாக பார்க்க கூடிய தொலைவில் எவரும் இல்லை என்ற சிறு நிம்மதியுடன் கன்னத்தை பிடித்தபடி வீட்டிற்கு ஒடியிருந்தாள்.

நேரே கடற்கரைக்கு சென்றவன் மணலில் அமர்ந்து தன் வலக்கையை மடக்கி மண்ணிலே வேகமாக குத்திக் கொண்டே அலைகளை வெறித்த வண்ணம் இருந்தான்.

'அவள் எப்படி அவனுடன் வரலாம்? நான் இல்லையென்றால் அவனுடன் வருவாள? என்ன திமிர் இருக்கணும் அன்று தானே தெளிவாக சொன்னேன்? இனி என்னுடனோ இல்லை அவள் அண்ணனுடனோ தான் வரனம்னு' அவன் கோபத்தில் மதி தன் வசமிழந்து அரற்றியது.

'என்ன இருந்தாலும் நீ பண்ணினது தப்பு டா, ஒரு பொண்ண எல்லாரும் பாக்கிற  மாதிரி அடிச்சது தப்பு அவ கிட்ட விசாரிசுருக்கணும்' காதல் செய்யும் மனது நிதானமாக எடுத்துரைத்தது.

'அவளுக்கு திமிரு அதிகம் ஆகிடுச்சு இல்லேன்னா அவன் கூட போறப்போ எந்த தொந்திரவும்  வேண்டாம்னு போனை கூட ஆப் செய்து வைப்பாளா?' மூளை முரண்டியது.

'வேற என்ன ப்ரிச்சனயோ பொறுமய கேட்டிருக்கணும் நீ, அவளை தனியா விட்டுட்டு வந்தது உன் தப்பு தானே, நீயே கூட்டிட்டு போயிருக்கலாமே?' மனது மூளையை மறுத்து பேசியது.

நீண்ட நேரம் மனதிற்கும் மதிக்கும் நடந்த சண்டையில் மனதே வென்றது. இதில் ஆதிசயம் என்ன இருக்கிறது. காதலுக்கு கண் மட்டுமா இல்லை? காதல் வசம் தன்னை இழந்து விட்டால் தன் வசம் இருந்து சிந்திப்பது இயலாது ஒன்று தானே?!

அடுத்து வந்து சில நாட்களில் அவளை அறைந்து விட்டதால் வந்த குற்ற உணர்ச்சியால் அவள் முகம் பார்பதை ஆவலுடன் பேச வருவதை தவிர்த்து வந்தான் ஆதி.

அவன் காட்டிய ஒதுக்கம் பிரகஷினால் தான் வந்தது என புரிந்து விட்டிருந்தது மதுவிற்கு. என்ன செய்வது என புரியாமல் மௌனம் காத்தாள் மது.

இவர்கள் கண்ணாமூச்சி ஆடிய வண்ணம் இருந்த நாட்களில் பிரகாஷின் காதல் இன்னும் வலுவானது.

அன்றைய காலை ஆதிக்கு மிகவும் அழகானதாகவும் புதிதானதாகவும் இருந்தது. நேற்று இரவின் தனிமையில் தான் அவன் அந்த முடிவை எடுத்திருந்தான். அந்த குழப்பத்திற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்க தன் காதலை சொல்லி விடுவதென முடிவு செய்திருந்தான்.

காலை ஜாக்கிங் முடித்துக் கொண்டு, குளித்து வந்தவன் ஆராதனவை தேடி சென்றான்.

அவள் அறையின் பால்கனியில் இருந்த நாற்காலி போன்ற கூடை ஊஞ்சலில் அமர்ந்தவண்ணம் தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தவள் காலடி சத்தம் கேட்டு திரும்பினாள்.

மெல்லிதாய் மேடிட்டு இருந்த வயிறு தாய்மையை உணர்த்த அழகுடன் புன்னகைதவளை ஒரு கணம் ரசித்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பேச தொடங்கினான்.

"என்னடா இன்னைக்கு ரொம்ப பிரெஷா இருக்க?"

"ம்ம்ம் ஆமாம் விஷயம் இருக்கு"

"அப்படியா என்ன டா விஷயம்?"

"என் ப்ரெண்ட் மது தெரியும் ல?"

"மது... ஒ அந்த பெங்களூர் பொண்ணு தானே"

"ஐயோ அக்க அவ பெங்களூர் இல்ல"

"அதான் டா அங்க உங்க ஆபீஸ் ல ஜாயின் பண்ணினாலே அப்புறம் இப்போ உன் ப்ரொஜெக்ட்ல தான வொர்க் பண்றா?"

"ம்ம்ம்ம் பரவயில்லையே ஞாபகம் வெச்சுருக்க?"

"பொண்ணுங்க வாசனை பிடிகாத ஆஞ்சிநேயர் பக்தன ஓர் பொண்ண பத்தி பேசறன்னா மறக்க முடியுமா?"

"ம்ம்ம் அவ கூட ரொம்ப நாளா சண்டை அக்கா, இன்னைக்கு போய் சாரி கேட்டு அவ கிட்ட பேச போறேன்"

"ஹ்ம்ம் அதான் விஷயமா?"

"இன்னொரு விஷயமும் இருக்கு அதை ஈவனிங் வந்து சொல்றேன்"

"என்னடா சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கிற? எனக்கு தலை வெடிச்சுரும் இப்போவே சொல்லு டா"

"நோ வே, இத பத்தி யோசிச்சு குழப்பிக்காம என் எஞ்சல் குட்டிய நல்ல பாத்துக்கோ நான் ஈவனிங் வந்ஹ்டு சொல்றேன்"

"எரும அப்போ ஈவனிங் வந்து முழுசா சொல்ல வேண்டியது தான போடா"

"கோச்சுக்காத உங்கிட்ட சொல்லணும் நு தோணுச்சு அதான்"

"சரி போ"

"ம்ம்ம்ம் பை"

"ம்ம்ம் டேய் டேய் ஒரு நிமிஷம் அமெரிக்கா ல இருந்து மாமா நைட் போன் பண்ணியிருந்தார் நீ ஏதோ ஆன்சைட்ல ஒர்க் பண்ணனும் கேட்டிருந்த போல.. அது ஓகே ஆகர மாதிரி இருக்காம், இன்டர்வியு வரும் போது உன்ன கூபிட்றேன்னு சொன்னார், அடுத்த வாரமே கூட இருக்கலாமாம் ரெடியா இரு"

"ம்ம்ம் ஓகே ஓகே பை"

மனதில் 'என் தேவதை இங்க இருக்கும் போது  அமெரிக்கா போய் நான் என்ன பண்ண போறேன்' என கூறி கொண்டு சென்று விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.