(Reading time: 14 - 28 minutes)

ன்று ஆதியிடம் எப்படியாவுது பேசி விட வேண்டும் என்ற முடிவில் வந்திருந்தாள் மது. அவன் காட்டும் ஒதுக்கம் அவளை பெரிதும் பாதித்தது. இன்று மனம் திறந்து அவனுடன் பேச வேண்டும் அவள் மனதில் இருப்பது பிரகாஹ் அல்ல ஆதி தான் என்று சொல்லி விட வேண்டும் என தீர்மானித்து இருந்தாள்.

காலையில் ரகுவிற்கு போன் செய்து அனைத்தையும் கூறியவள் தன் காதல் பற்றி மட்டும் கூறவில்லை. ஆனால் அன்று முழுதும் ஆதியை பற்றிய பேச்சு தான் இருந்தது.மகிழ்ச்சியுடன் அலுவலகம் வந்தவள் ஆதியை கண்டதும் வெட்கத்தில் எதுவும் பேசாமல் மௌனம் காத்தாள்.

பெண்களுக்கு மட்டுமே உரியதா என்ன வெட்கம்? ஆதியையும் அது பற்றி கொண்டது இருந்தாலும் அதை வெளி காட்டாமல் கம்பீர அழகுடன் வளைய வந்தான். 

இன்று மாலை அருகில் உள்ள ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் தன்னை சந்திக்குமாறு மதுவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு ஆவலுடன் மாலைக்காக காத்திருந்தான்.அவளும் அந்த சந்தற்பதிர்காகவே காத்திருந்தாள்.

மாலை அவள் அந்த ஹோட்டலிற்கு சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்பே சென்று விட அலுவலகத்தில் கிளம்பும் நேரத்தில் மேனஜரிடம் இருந்து அழைப்பு வந்தது ஆதிக்கு. அவரை காண சென்று விட்டு தாமதமாக ஹோட்டலிற்கு வந்தான்.

அவன் அவர்களுக்காக புக் பண்ணியிருந்த டேபிள் எண்ணை முதலிலேயே மதுவிற்கு தெரிவித்து இருந்ததால் அந்த டேபிளிற்கு விரைந்தான்.

கையில்  பூங்கொத்துடன் அவன் டேபிளை பார்த்த வண்ணம் முன்னேற கண்ட காட்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

யாருக்காக டேபிளை புக் செய்தானோ அதே அலங்கரித்த டேபிளின் முன் நாற்காலியில் பிரகாஷின் தோளில் சாய்ந்த வண்ணம் மது அமர்ந்திருந்தாள்.

அவன் கையில் இருந்து பூங்கொத்து கீழே விழ, அவன் காதலும் அதனுடனே சரிந்து விழுந்தது. கோபத்தில் அவன் ஒரு எட்டு முன் வைக்க, அருவருப்பில் முகம் சுளித்து வேகமாக ஹோட்டலை விட்டு வெளியில் சென்றான்.

தன் பைக்கில் அமர்ந்தவன் அதை கிளப்பாமல் பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருக்க, கார் ஓசை கேட்டு திரும்பி பார்த்தான். பிரகாஷ் கார் தான். அதான் உள்ளே அவன் தோளில் இன்னும் சாய்ந்து அமர்ந்திருந்த மதுவை பார்த்தான்.

வேகமாக வீட்டிற்கு கிளம்பி சென்று அமேயகாவில் இருந்த தன் மாமாவை தொடர்பு கொண்டான் அடுத்த ஒரு வாரத்தில் அமெரிக்கா பறந்திருந்தான்..!!

இன்று...

நினைவுகளில் இருந்து மீண்டான் ஆதி. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டான். இப்போது பார்த்தல் இந்த பிரகாஷ் இங்கே இன்னொரு பெண்ணுடன்.எது எப்படியோ சென்னைக்கு சென்ற உடன் மதுவை பார்த்து பிரக்ஷை பற்றி கூற வேண்டும். அப்படியே ஸ்வேதாவிடமும் பேச வேண்டும். இனியும் தாமதிக்க கூடாது.

கடற்கரை மணலில் அமர்ந்து மது சொன்ன கதையை கேட்டு கொண்டிருந்தவள் அவளை அணுகி அணைத்து கொண்டாள். அவளை விளக்கி புன்னகையுடன் எழுந்து கொண்டாள் மது.

எதுவும் பேசாமல் இருவரும் வீட்டை அடைந்தனர்.

ஆதியுடன் சண்டை போட்டு விட்டு, சஞ்சனாவை அவள் வீட்டில் விட்டு வந்து படுத்த பிரகஷிற்கும் கடந்த கால நினைவுகள் தான் மனதில் இருந்தது. முதன் முறையாக தான் தவறு செய்து விட்டோமோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது!!!

வழக்கம் போல் இரவு தன் ரேடியோ ஆபீஸ் சென்ற மது தன் இனிய குரலில் நிகழ்ச்சியை துவக்கி விட்டு, பாடலை ஒலிக்க விட்டாள்,

அந்த பாடலை யார் கேட்டார்களோ இல்லையோ யாரை நினைத்து அவள் அதை தேர்வு செய்து ஒலிக்க விட்டாலோ அவன் கேட்டு கொண்டே தான் காரில் அவளை காண வந்து கொண்டிருந்தான்..!!!

தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இல்லை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கருகிறேன்
வான் நீலத்தில் என்னைப் புதைக்கிறேன்

காதல் என்னைப் பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத் தேடும் வேரினைப் போல
பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டு மூடும் போது
நூறு வண்ணம் தோணுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூனியம் ஆகுதே

சிறு பொழுது பிரிந்ததுக்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ….. 

காதல் பெருகும்… 

Episode # 17

Episode # 19

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.