(Reading time: 11 - 21 minutes)

19. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

நினைவுகளின் குவியலில் இருந்து நிகழ களம் தேடி பிடித்து அதை பற்றி கொண்டு கரை சேர்ந்தது ஆதியின் மனது!!

'தவறு செய்தவன் பிரகாஷ் அல்ல தான் தான், எவ்வளவு பெரிய தவறு ஒரு வருடம் தான் என்றாலும் என்ன இப்படி செய்து விட்டேன்' பதறியது மனது.

'நீ சொல்வதும் சரி தான் அன்றே உன் பேச்சை கொஞ்சமேனும் கேட்டிருக்க வேண்டும்.' வருந்தி உச்சு கொட்டியது மனது.

Nenjamellam kathal

' எவ்வளவு சொன்னேன் கேட்டியா, காதலுக்கு அடிப்படையான நம்பிக்கையே இழந்துட்டு உன் புத்தி போன போக்கில போன தான?', மனது.

'நான் மட்டும் என்ன வேணும்னா அப்படி பண்ணேன், அவள அந்த நாய் கூட அதும் அவ அவளோட தோள்ல சாஞ்சுக்கிட்டு இருக்கறத பாதஹ்டுக்கு அப்புறமும் நான் பண்ணது தப்புன்னு சொல்றியா?'

'அந்த பிரகாஷ் பத்தி தான் தெரியும்ல அப்படி இருந்தும் மது மேல சந்தேகபடுவியா?'

வேகமாக சென்று கொண்டிருந்தவன் காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.மனசாட்சியும் மூளையும் இப்படி ஆளுக்கு ஒரு புறமாய் யுத்தம் நடத்த.. இதயம் வலித்து தலை கிறுகிறுத்தது. ஸ்டியரிங்கின் மேல் தலை கவிழ்ந்து யோசித்தவன் மதுவை காண செல்வது என முடிவு செய்தான்.

 ஏற்கனவே சென்னை எல்லையை கடந்திருந்தவன், மதுவை காண அவள் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்.

கடற்கரையில் இருந்து வீடு வந்த நால்வர் மனத்திலும் குழப்பமே மண்டி கிடந்தது. தன்யாவிற்கும் ரகுவிற்கும் மது ஆதியை நினைத்து பெரும் கவலை.

என்னதான் இவர்கள் முடிவு செய்தாலும் வீடில்லுல பெரியவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே.

முதலில் திவாக்கர் இதை ஒப்பு கொள்வானா? ஆதிக்கும் மதுவிற்கும் இடையில் நடந்த அனைத்தையும் கூற வேண்டுமென்றால் அத்தி மதுவை விட்டு பிரிந்ததையும் அதற்கான காரணத்தையும் அல்லவே கூற வேண்டும்?? அதன் காரணம்?? தவறு ஆதி மேல் தானே உள்ளது.

இவர்கள் இருவரும் இந்த ரீதியில் சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, வருணும் ஸ்வேதாவும் வேறு மன நிலையில் இருந்தனர்.

ரகு ஆதிக்கும் மதுவிற்கும் நடுவில் நடந்த அனைத்தையும் சொன்னதில் இருந்த பல வகையான குழப்பங்கள் மனதில். அவர்கள் ஒன்று சேருவது என்பது ஆதி எப்படி மதுவை அணுக போகிறான் என்பதில் மட்டுமே உள்ளது.

மற்றபடி ஆதி மதுவை மணந்து கொண்டால் நான் ஸ்வேதாவை மணப்பதில் எந்த பிரச்சனையும் வந்து விடாது. அவன் அப்பாவை மட்டும் சமாளித்தாள் போதும் என வருண் எண்ணி கொண்டு இருந்தான்.

மதுவிடம் பேசி விட்டு வந்தவளுக்கு முதன் முறையாக ஆதியின் மேல் சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பு தான் வந்தது.'அவன் இப்படி பட்டவனா? என்ன நடந்தது என்று கூட ஆராயாமல் இப்படியா நடந்து கொள்வான்? மது பாவம் எவ்வளவு காய பட்டு போயிருக்கிறாள்' இதையே திரும்ப திரும்ப அவள் மனம் கேட்டு கொண்டிருந்தது. வருண் மீதான தன் காதலை கூட மறந்து விட்டிருந்தாள்.

ஆனால் ஆராவின் நிலை தான் மிகவும் மோசம், ஆதியின் நிலையை எண்ணி வருந்தவும் முடியவில்லை அவனை வெறுக்கவும்  முடியவில்லை, மதுவை போலவே அவனும் கஷ்டப்பட்டான் என்பதை கூட இருந்து பார்த்தவள் ஆயிற்றே. ஆயினும் அவன் செய்தது தவறு தான்.

இன்னொரு புறம் வருண் ஸ்வேதா, பிரிந்த தன் குடும்பம் ஒன்று சேர்ந்தால் தான் அவர்கள் திருமணம் நடைபெறும்.

எல்லாவற்றிற்கும் மேல் அவள் பெற்றோரை எப்படி சமாளிப்பாள்? ஆதி என்ன செய்வான்?.

நிகழ்ச்சியை முடித்து விட்டு சோர்வுடன் கிளம்ப தயாரானாள் மது. இப்போது எல்லாம் மேகாவின் வேலை முடிந்தவுடன் அவள் வீட்டிற்கு சென்று கற்பகத்தை கவனித்து கொள்கிறாள். அதுவும் இல்லாமல் மதுவிற்கும் அது சரியென படவே அவளை முன்பு போல் காத்திருக்க சொல்வதில்லை.

ரகுவே வந்து மேகாவை கூடி சென்று விடுவான். அவர்களுக்கான இடைவெளியில் தலையிட மது விரும்பவில்லை. அது மட்டுமில்லாமல் பிரகாஷ் ஆதி இருவரின் மூலம் தன் வாழ்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற மாற்றங்களை பற்றி யோசிக்கவும் குறைந்த பட்சம் வருந்தவும் அவளுக்கு தனிமை தேவை பட்டது. அலுவலுகத்தின் வெளியே வந்தவள் தன் ஸ்கூட்டியை தேடி அதனை ஸ்டார்ட் செய்தாள். அது மக்கர் பண்ணவே, பட்டனில் ஸ்டார்ட் செய்யாமல் கிக்கரை உதைத்து ஸ்டார்ட் செய்து பார்த்தாள். அப்போதும் அது மக்கர் செய்யவே என்ன செய்வதென புரியாமல் ஓரிரு நிமிடம் யோசித்தவள் ரகுவை தொடர்பு கொண்டாள். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. நான்கைந்து முறைகள் முயற்சித்து விட்டு அந்த யோசனையை கை விட்டாள்.

'எப்போதுமே ரகு இப்படி செய்ய மாட்டனே?' என்று எண்ணியவாறே மேகாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். அவளும் போன் 'சுவிட்சுட் ஆப்' என வந்தது. இம்முறை மதுவிற்கு எரிச்சல் வந்தது.

கடைசியாக திவக்கரை அழைத்தாள். அவனும் போனை எடுத்த பாடில்லை.

'இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சு ச்ச' என ஸ்கூட்டியை பூட்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள். இந்த அநேரத்தில் பஸ் இருக்காது ஆட்டோ ஏதேனும் உள்ளதா என தேடி அருகில் இருந்த ஆட்டோ  நிறுத்தத்திற்கு சென்றாள். அவள் நேரமோ என்னவோ ஆடோவும் இல்லை.

மீண்டும் அலுவலகம் சென்று யாரிடமவுது உதவி கேட்கலாமென்ற எண்ணத்தில் அவள் திரும்பி நடக்க அவள் எதிரே ஒரு கார் வேகமாக வந்து நின்றது அதில் இருந்து ஆதி இறங்கி மதுவை நோக்கி வந்தான். 

அரை மணி நேரத்துக்கு முன்பு...

தன்யாவிற்கு உறக்கமே வரவில்லை. திவாக்கர் வேறு வீட்டிற்கு வரும் போது மூர்த்தியையும் லக்ஷ்மியையும் கூட்டி வந்திருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் கோவை சென்றிருந்தனர்.

திவாக்கர் தான் அவர்கள் தனியே அங்கு என்ன செய்ய போகிறார்கள் மதுவின் திருமணம் முடியும் வரை சென்னையிலே தங்குமாறு அழைத்திருந்தான் அவர்களும்  கிளம்பி வந்ஹ்டு விட்டிருந்தனர்.

அவர்களை பார்க்கும் போது இன்னும் தன்யாவின் சிந்தனை அதிகமானது. ப்ரிஷன் தூங்காமல் அடம் பிடித்து கொண்டிருக்க அவனுடன் லக்ஷ்மி விளையாடி கொண்டிருந்தார். டிவியில் மூழ்கி இருந்த திவாக்கரை அவ்வபோது பார்த்து கொண்டு பின் யோசித்து கொண்டிருந்த மருமகளை மூர்த்தி கவனிக்க தவறவில்லை.

ஆனாலும் அவர் என்னவென்று வினவவில்லை. அவளோ நேரே மூர்த்தியிடம் சென்று,

"மாமா, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் என ஆரம்பித்தாள்.

"என்னம்மா?"

"ஒரு நிமிஷம் இருங்க ரகுவிற்கு போன் போடு வர சொல்றேன் அவனும் இருக்கனும்"

டிவியை அணைத்து விட்டு திவாக்கரும், பேரனோடு விளையாடி கொண்டிருந்த லக்ஷ்மியும் தன்யாவை பார்த்தனர்.

அரை மணி நேரத்துக்கு முன்பு...

மேகாவை கூடி வந்து வீட்டில் விட்டு விட்டு, ஓரளவு அவளிடம் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டவன். மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.

மதுவை பற்றிய யோசனையில் இருந்தவனை தன்யாவின் பெயருடன் ஒளிர்ந்து ஒலித்த அலைபேசி சத்தம் கலைத்தது.

"சொல்லுங்க அண்ணி"

"ரகு உடனே கிளம்பி வீட்டுக்கு வா"

"இப்போவா?! என்ன ஆச்சு எதாவது அவசரமா?"

"இல்லை, இல்லை நம்ம சாயங்காலம் பேசுன விஷயத்தை பத்தி மாமா அத்தை கிட்ட பேசிடலாம்னு இருக்கேன்"

"அண்ணி இப்போவே எதுக்கு? மது கிட்ட கேட்டுட்டு..."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க வாங்க"

அதற்குள் அவளிடம் இருந்து கைபேசியை வாங்கிய திவாக்கர்,

"ரகு, தன்யா இப்போவே பேசணும்னு சொல்றதை பார்த்த ஏதோ முக்கியமான விஷயம்னு தெரியுது.. நீ வர வேண்டாம் நாங்களே அங்க வரோம் இன்னும் பத்து நிமிஷத்துல"

"சரி வாங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.