(Reading time: 11 - 21 minutes)

ழைப்பை துண்டித்து விட்டு கற்பகத்தை தேடி போனான் அவரிடம் விஷத்தை சொல்லி விடுவது சிறந்தது என முடிவு செய்து.

திவாக்கரின் பேச்சை கேட்டு கொண்டிருந்த மூர்த்தி கிளம்ப, லக்ஷ்மியும் ப்ரிஷனை தூக்கி கொண்டு கிளம்பினார். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ரகுவின் வீட்டின் முன் நின்றது ரகுவின் கார்..!!!

இரவு உணவிற்கு பின் ஓய்வாக அமர்ந்து தன் மனிவியிடமும் மகளிடமும் பேசுவதில் ஒரு தனி இன்பம் நரேனுக்கு. வைஷ்வி அவள் கல்லூரியில் நடந்த எதையோ பற்றி கூறி கொண்டிருக்க அதை பானுமதியும் நரேனும் கேட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்து அமர்ந்தான் வருண்.

"அப்பா"

"என்னப்பா?" கேள்வியாய் அவனை பார்த்து கேட்க,

வைஷ்வியை ஒரு முறை பார்த்து விட்டு தந்தையின் பக்கம் திரும்பினான், வைஷ்விக்கு மாட்டும் எதுவோ புரிவது போல் இருந்தது அவளும் தீவிரமானாள்.

பானுமதியும் வருநின் முகத்தில் இருந்தே ஏதோ சரியில்லை என்று கணித்து விட்டார்.

"உங்க கிட்டயும் அம்மா கிட்டயும் நான் ஒரு விஷயத்தை பேசணும்ப்பா"

"சொல்லு டா", பானுமதி.

மூவரும் அவன் முகத்தையே பார்த்து கொண்டு அமர்ந்திருக்க பேச்சை தொடங்கினான் வருண்!!!

மெத்தையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள் சஞ்சனா. பிரகாஷிடம் இருந்து வந்த அழைப்பை அலைபேசியில் பார்த்தவுடன், அவசரமாய் எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்து கொண்டு தொண்டையை செருமி சீர் செய்து கொண்டாள்.

அழைப்பை ஏற்று அமைதி காத்தாள்,

"ஹலோ சஞ்சு"

"ம்ம்ம்"

"கோபமா இருக்கியா என்மேல?"

விசும்பி அழுதாள். அவனுக்கு அவள் நிலை நன்றாக புரிந்தது.

"உன்மேல எப்படி நான் கோப படுவேன்? எனக்கு தான் அது தெரியாதே அது தெரியாம தான என்மேலேயே கோபப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே அழிச்சுகிட்டு இருந்தேன்"

"ம்ம்ம்.. சரி சஞ்சனா..நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்.. உங்க அப்பா வீட்டில இருக்கறா?"

அழுகையை நிறுத்தி கொஞ்சம் நிதானத்துடன் பதில் தந்தாள்,

"ம்ம்ம் இருக்காங்க"

"ஓகே நான் என் அப்பா அம்மாவுடன் அங்கே வரேன்"

"இப்போவா?"

"என்ன ஆச்சு? வர கூடாதா?"

"இல்லை இந்த நேரத்துல.. அதும் அப்பா கிட்ட என்ன பேசணும்?"

"உன் கடந்த காலத்த பத்தி.. இப்போ நீ இருக்குற நிலை பத்தி.. உன்ன பத்தி டாக்டர் என்கிட்ட சொன்னது பத்தி"

"பிரகாஷ் ப்ளீஸ் இப்போ எதுக்கு அதெல்லாம்"

"அதுக்கு அவசியம் வந்திருச்சு.. நல்ல யோசிச்சுட்டேன் நாங்க இப்போவே வரோம்"

"அதுக்கு உங்க அப்பா அம்மா எதுக்கு?"

"நான் பேச போற விஷயம் அப்படி.. என்கூட அவங்களும் இருந்தால் தான் உன் அப்பா நம்புவார்"

"ஆனால்"

"ஏதும் பேசாதே நான் வரேன் பை"

நின்றிருந்த அழுகை மீண்டும் தொடர எழுந்து தந்தையின் அரை நோக்கி சென்றாள் சஞ்சனா. அவன் சொல்வதற்குள் இவள் சொல்வதே மேல் அல்லவே?

அவளுடன் பேசி விட்டு நாதனையும் சித்ராவையும் அழைத்து விஷயத்தை சொன்னான் பிரகாஷ்.அவர்கள் குழப்பதிற்கு மத்தியில் அவன் இருந்த நிலையை புரிந்து கொண்டு கிளம்பினர் அவனுடனே. அவர்களிடம் சொல்ல வேண்டிய இன்னும் சில விஷயங்களும் இருந்தன பிரகாஷிடம்.

காரை அவன் ஓட்ட நாதனும் சித்ராவும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களின் முகம் தெரியுமாறு முன்னால் இருந்த கண்ணாடியை சரி  செய்து விட்டு ஆழ மூச்செடுத்து விட்டான்.

தொண்டையை செருமி பேச ஆயுதமானான். சிறு தயக்கத்திற்கு பின் சொன்னான்,

"அம்மா அப்பா உங்க கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன் அதை இப்போ சொல்லனும்னு தோணுது"

நாதனும் சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஸ்ரீகாந்த் ஆராதனா சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டு கொண்டிருந்தான், ஆராதிரிகா தூங்கி கொண்டு இருக்க அவளுக்கு தட்டி கொடுத்த படியே மெல்லிய குரலில் ஸ்ரீகாந்திடம் சொல்லி முடித்திருந்தாள் ஆரா.

"நீங்க தாங்க அப்பா அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கணும்"

"என்னது நானா?"

"ஆமாங்க ப்ளீஸ் ப்ளீஸ்"

"அடிபாவி இதுக்கு தான் என்ன உங்க அம்மா வீட்டில இன்னைக்கு ஒரு நாள் இருக்கலாம் நு கூட்டிட்டு வந்தியா?"

"ஹிஹிஹி"

"சிரிக்காத டீ"

"என்ன ஓவரா டீ வருது, பேச முடியுமா முடியாதா?"

ஆரா அவளின் அடுத்த ஆயுதத்தை கையில் எடுக்க

"சரி சரி கூழ் டவுன் பேபி, கண்டிப்பா பேசறேன்"

"ம்ம்ம் அது வாங்க போகலாம்"

"வேண்டாம்னா விட மாட்ட வா போலாம்"

இருவரும் ரஞ்சனி மகேஷ் இருந்த அறைக்கு சென்றனர்!!!

சரண்ராஜ் கலைகளி கட்டி கொண்டு அவர் மடியில் படுத்திருந்த ஸ்வேதாவின் கால்களை தன் மடியில் வைத்து அமுத்தி விட்டு கொண்டிருந்தார் திவ்யா.

"அப்பா?"

"என்னம்மா?"

"அம்மா"

"என்ன டா தங்கம்"

"நான் ஒன்னு சொன்ன கேட்பிங்களா?"

"சொல்லு டா, கண்டிப்பா கேட்டுடுவோம்" என அவள் தலையை கோதினார் சரண்ராஜ்.

மெல்ல முகத்தை உயர்த்தி அவர் விழிகளை பார்த்து அதை சொல்லி விட்டிருந்தாள் ஸ்வேதா.

வழிமறித்த ஆதியை எதுவும் செய்ய முடியாமல் எரிச்சலுடன் நின்றிருந்தாள் மது.

"ப்ளீஸ் மது நான் சொல்றத மட்டும் கேளு, இப்படி ரோட்ல வேண்டாம் கார்ல ஏறு ப்ளீஸ் இல்லேன்னா உன் வீட்டுக்கு கூட பொய் பேசலாம்"

உணர்வற்ற ஒரு பார்வையை மது அவனுக்கு விடையாக அளித்தாள்.

அவ்வளவு தான் ஆதியின் மனது ஏற்கனவே பட்டிருந்த உளைச்சலில் இந்த பார்வைக்குள் இருந்த ஆயிரம் ஆயிரம் காயங்களுக்கான வழியை வேதனையை சகித்து கொள்ள முடியவில்லை.

அவள் கைகளை பற்றி இழுத்து அணைத்து அவள் தோள் தேடி புதைந்து கண்ணீர் விட்டான்!!!

இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கற்சிலையென மது நின்றிருந்தாள்.

"மிதா...." ஆதியின் விசும்பல் அதிகமாயிற்று!!!!

வார்த்தைகள்!!! மௌனங்கள்!!! சொல்லாத மௌனத்திற்குள் சொல்ல தெரியாத மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் பொருள் உண்டாம் வலி உண்டாம்... சொல்லிய வார்த்தைகளுக்குள் அதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருள் கொள்ளப்படும் மூளைக்குள் ஆயிரம் என்ன கோடி கோடியாய் பொருள் உண்டாம்...

வார்த்தையோ மௌனமோ எதுவாயினும் சரியான நேரத்தில் சரியான இடத்தில வரவில்லை என்றால் என்றுமே அவஸ்தை தான்... இதோ இங்கே இவர்களில் சிலர் ஏதோ ஒன்றை நியயபடுதவோ சாதிக்கவோ இனி மகிழ்வுடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையின் உந்துதலினாலோ வருத்பட்டோ  கோபப்படோ ஏதோ ஒன்றை முடிவு சிஎஹு பேச காத்திருகின்றனர்.. பேச தொடங்கியிருக்கின்றனர் . சிலர் மௌனமே வேதமாய் வருவதை எதிர் கொள்கின்றனர்..

வாழ்கையில் நினைப்பது யாவுமே நடந்து விட்டால் விதி என்ற பெயர் வந்திருக்காது அல்லவோ? தொடர்ந்து பெருகுமா காதல்???

அடுத்த அத்தியாயத்துடன் காதல் நிறையும்.....

Episode # 18

Episode # 20

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.