(Reading time: 15 - 29 minutes)

12. என் உயிர்சக்தி! - நீலா

டிசம்பர் மாதம்...அந்த அதிகாலைப்பொழுது...ரம்யமான சூரிய உதயத்திற்காக காத்திருந்தது!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த உதயமானது தனது வருகையால் வெவ்வேறு வகையான மாற்றங்களை கொண்டுவருகிறது. அதன் தாக்கம் சிலருக்கு நேர்மறையாகவும் சிலருக்கு எதிர்மறையாகவும் அமைந்துவிடுகிறது! 

டிசம்பர் 12!

En Uyirsakthi

அந்த காலைப்பொழுது மட்டுமல்ல... இரு உள்ளங்கள் கூட அந்த விடியலுக்காக காத்திருந்தது! இருவர் வாழ்விலும் இன்று சூரிய உதயம்...

காலையில் எண்ணை நலங்கு முடிந்து குளித்துவிட்டு வந்து இறைவனை வணங்கிக்கொண்டிருந்தாள் குழலீ.

ஹேய் போதும்டீ வா... நேரமாகுது பாரு!' என்றாள் ஷாஜி என்கிற வைஷ்ணவி.

குழலீயும் வந்தாள். புடவையை கட்டிக்கொள்ள உதவி செய்துக்கொண்டிருந்தார்கள் மற்ற தோழிகள்.

நாலு மணிக்கே எழுப்பி பேய் மாதிரி குளிக்க வைக்கறீங்களே!' என்று அலுத்துக்கொண்டாள் குழலீ.

பின்னே! முடி கொஞ்சமா இருந்தா பரவாயில்லை... இவ்வளவு முடியும் காய வேண்டாமா?' என்றாள் ஷாஜி ப்ளோயரில் குழலீயின் முடியை உலர்த்தியவாரே.

உங்களுக்கேல்லாம் பொறாமை டீ! கல்யாணம் மட்டும் முடியட்டும்னு இருக்கேன்... அப்புறம் பாரு என் ஹேர் ஸ்டைலை!

பிரபு பெண்களின் நீளமான கூந்தலை ரொம்ப லைக் பண்ணுவான்..' என்றாள் யாழினி.

அங்கே யாழினி, டீனா, ஷாஜி, மலர், மகா என்று இவளது தோழிகள் மட்டுமே இருந்தனர். அதனால் எந்த குழப்பமும் வரவில்லை. மாறாக குழலீயிடம் இருந்து பதில் வந்தது.

தெரியும்... தெரியும்! நல்லாவே தெரியும்' என்றாள்.

எப்படி டீ?' என்றாள் டீனா.

...

ஏன்டீ இப்படி இரண்டு நாளா எங்களை காயவிடற? நாங்க என்ன தப்பு பண்ணோம் னு இப்படி ரியாக்ட் செய்யற? ஓவர் ஆக்டிங் டீ'

ஏன் குழலீ பேசிடேன்' என்றாள் மலர்.

உனக்கென்ன நீ சொல்லுவ... என்னைவிட அவன் தானே உங்களுக்கு முக்கியமா போயிட்டான். 

எவன்??

கடுப்பேத்தாதே டீனா! அவன் தானே உசத்தி... எவனோ ப்ரண்ட் கல்யாணம் னு சொல்லிட்டு இங்க வந்து நிக்கறீங்க! நான் கூப்பட்டா வர முடியாதும்பீங்க... அவன் சொன்னவுடனே ஓடி வருவீங்க!

யாரு டீ அவன்?

இப்போது குழலீயின் முறைப்பை வாங்கிக்கொண்டாள் டீனா. அவசரமாக அங்கே வந்தார்கள் அங்கவை சங்கவை இருவரும்.

அக்கா.. உன் மொபைல் எங்கே?' என்று தேடி அதை எடுத்துவர்கள் சைலேனட் மோட்லிருந்து எடுத்துவிட்டார்கள்.

என்னடீ பண்ணறீங்க?

உனக்கு தேவையில்லாத வேலை! அக்காஸ் சீக்கிரமா இவங்களை ரெடி செய்ய சொன்னாங்க..' என்று மொபைலை அங்கே வைத்துவிட்டு சென்றனர்.

மணி ஐந்துதான் ஆகிறது... முஹுர்த்தம் 5.30 தானே என்றாள் யாழினி.

ஆமாம் 5.30 டூ 7.00 என்றாள் மலர். 

சரி நீ யாருனு சொன்ன? எவனை சொன்ன?

சரியாக அந்த நேரம் மொபைல் சிணுங்கியது...

'கண்ட நாள் முதலாய்...

காதல் பெருகுதடி!

கையினில் வேல் பிடித்த

கருணை சிவ பாலனை...'

இந்த ரிங்க்டோன் கேட்டவுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு குழலீயின் கைகளுக்கு அது செல்லாமல் எடுத்துவிட்டனர்.

இவன் தானா?' என்று கேட்டப்படி அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டனர். 'பிகே' என்றது டிஸ்ப்ளே!

குழலீ...' என்றான் பிரபு. ஏதோ குரல் நெகிழ்வுற்ற நிலையில் இருந்தது. குழலீயுமே சற்று திகைத்துவிட்டாள். 

குழலீ... உன்கிட்ட ஒரு விஷயம்... முக்கியமான விஷயம் பேசனுமே...'

அமைதியாக இருந்தாள் பூங்குழலீ. அவள் மட்டுமல்ல மற்றவர்களுமே!

ஆர் யூ தேர்??

ம்ம்ம்.. சொல்லுங்க!

பக்கத்தில் யார் இருக்காங்க?

அப்புறமா பேசலாமே...கல்யாணம் முடிஞ்ச உடனே?

எனக்கு இப்போவே பேசனும். உன் பதிலை பொறுத்து தான் இந்த விஷயத்துல நம்மொட அடுத்த அடியே வைக்கப்போறோம்.

கேளுங்க!

என்னை கல்யாணம் செய்துக்கிட்டு...என் வாழ்க்கை துணையா...என் வாழ்க்கைக்கும் துணையா என் குறைகளை ஏற்றுகிட்டு என்கூட வர உனக்கு உண்மையாவே சம்மதமா???

...

உனக்கு இந்த கல்யாணத்தில முழு சம்மதமா?? Are you ready to accept this marriage and relationship with me?

ஹேய் பிரப்போஸ் பண்ணறான் டீ!' என்று கிசுகிசுத்தனர் மற்றவர்கள். மௌனமாகவே இருந்தாள் குழலீ!

கேள்வி கேட்டா எனக்கு பதில் வேணும்!

எத்தனை முறை இதே கேள்வி? என்ன பிரப்போஸ் பண்ண ட்ரை செய்யறீங்களா? இதேல்லாம் இங்க நடக்காது பாஸ்!

....

வார்த்தையை மாற்றி போட்டாலும் உங்களுக்கு என்ன பதில் வேணும் னு சொல்லனும்! ஆமாம் னா ஆமாம்...இல்லை னா இல்லை! எதுவாய் இருந்தாலும் என்ன செய்வீங்க?

எல்லாமே திட்டமிட்ட படி நடக்கும்!- பிரபு

லூசா பா நீ? இதுக்கா இத்தனை கேள்வி? அதுவும் எப்போ வந்து என்ன கேள்வி? சின்னபுள்ள தனமா இருக்கு!' என்று மனதில் எண்ணிக்கொண்டாள் குழலீ.

நான் பதில் ஏற்கனவே சொல்லிட்டேன் பிரபு! எனக்கு பத்து மணிக்கு எக்ஸாம்... நினைவிருக்குல?? ஒன்பது மணிக்கேல்லாம் புறப்படனும்...' என்னும் போதே கீதா கதவை திறந்து கொண்டு 'சக்தி அண்ணி...' என்றவாறு உள்ளே வந்தாள்.

ரெடியாகிட்டீங்களா?? என்றவள் குழலீயை பார்த்தவுடன் 'வாவ்!' என்றாள்.

சொல்லுங்க கீதா அண்ணி!

...

அண்ணி...' என்று கீதாவின் கையை பற்றிய போது தான் ப்ரமிப்பில் இருந்து வெளியே வந்தாள் கீதா.

வாவ்!!! அண்ணி நீங்க... நீங்க நிஜமாவே பூங்குழலீ தானே!

ஏன் கீதா? இது பூங்குழலீ தான்! என்ன சந்தேகம்? என்றனர் மற்றவர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.