(Reading time: 15 - 29 minutes)

ரு ரிக்வஸ்ட் அண்ணி!

சொல்லுங்க! ரிக்வஸ்ட் எல்லாம் வேண்டாம். எது சொன்னாலும் செய்ய போறேன்... கட்டளைக்கூட போடலாம் சிஸ்டர்! அட் யூவர் சர்வீஸ்!' என்று சிரித்தாள் குழலீ.

நீங்க இப்படியே என்னைக்குமே இருக்கனும்...

அய்யோ இப்படியே இருந்தா உங்களுக்கு அண்ணியாக முடியாதே! இப்படியே இருந்தா கல்யாணம் எப்படி நடக்கும்?' என்று கண்ணடித்தாள்.

அச்சோ அண்ணி! நீங்க இப்போ எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? நார்மலா டிரஸ் செய்துகறதை விட இப்படி கொஞ்சம் மேக்கப் போட்டா கியுட்டா அழகா இருக்கீங்க!

அப்போ மற்ற நேரத்தில் இல்லையா?' என்றார்கள் மற்றவர்கள். 

இல்ல இல்ல.. அப்படி சொல்ல வரலை!

தெரியுது கீதாண்ணி! பட் எனக்கு மேக்கப் போட தெரியாது! அதில இன்ட்ரேஸ்டும் இல்ல! பவுடர் கூட போட மாட்டேன்... மைக்கூட கண் வலி இருக்கும் போது மட்டும் வைப்பேன்.. சரியாக்கூட வைக்க தெரியாது... இதோ இப்போதான் முதல் முறையா பார்லர் கூட போனேன் இவளுங்க தொல்லை தாங்கமுடியாம!

சூப்பர்! பட் நிஜமாவே சம அழகா இருக்கீங்க இன்னைக்கு!

தேங்கஸ்!

வந்ததையே மறந்துட்டேன் பாருங்க! சீக்கிரம் தயாராகுங்க.. ஐயா வந்திட்டாரு!

கீதாவை தேடி வந்த மாலதியோ குழலீயை பார்த்தவர் அப்படியே ஆச்சர்யத்தில் நின்றுவிட்டார்.

வாஞ்சையுடன வந்து மருமகளுக்கு நெட்டி முறித்தார். 'என்ன பூங்குழலீ ரெடியா?'

இதோ இப்போ தயாராகிடுவேன் அத்தை!

பார்த்துட்டு வர சொன்னா நீ என்னடீ செய்யற இங்க? வா வா வேலையிருக்கு என்றுவிட்டு நகர்ந்தார்.

அண்ணி... நேத்தியை விட இன்னைக்கு தான் இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு! அண்ணா பாவம் டோட்டல் ப்ளாட் தான்! சரி சீக்கிறமா வாங்க.. நான் போய் அந்த வில்லன் சிவா... இல்ல இல்ல முறைக்காதீங்க... அந்த ஆன்டி ஹிரோ ரெடியானு பார்க்கிறேன்' என்று சென்றுவிட்டாள்.

பிரபுவின் அழைப்பு அணைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தாள் பூங்குழலீ. ஆனால் பொன்மலரோ அழைப்பை அப்படியே வைத்திருந்தாள்.

இவர்கள் உரையாடல் அனைத்தும் தெளிவாக விழுந்தது பிரபுவிற்கு மட்டும் அல்ல அங்கிருந்த வெற்றி, செந்தில், டேவிட் மற்றும் பிரபுவின் நண்பர்கள்.

போதுமா??? - வெற்றி

என்னடா போதுமா?' என்றான் பிரபு.

அவ தான் சொன்னாளே!- செந்தில்

என்னத்த சொன்னா? கல்யாணத்துக்கு சம்மதமானு கேட்துக்கு பதிலே வரலியே!

இதுக்கு மேல என்ன வேணும் டா உனக்கு?

ஆமாம்... இல்லை! இதுல ஏதாவது பதில் சொல்லலாம் ல?

சொல்லிட்டாளே! இப்போ மணமேடைக்கு போயிருப்பா பாரு... ஒரு பெண்ணு இவ்வளவு கண்டிஷன்ல கல்யாணத்திற்கு ஒத்துகிட்டா அவளே விருப்பப்பட்டு ஏற்றுகிறானு அர்த்தம். அதுவும் நீ பண்ற இத்தனை அலம்பலையும் பொறுத்துக வேற யாராவதா இருந்தா.. போடா நீயும் வேண்டாம் உன்கூட கல்யாணமும் வேண்டாம்னு போயிருப்பா! அதுவும் குழலீ மாதிரி ஒரு பொண்ணு கிட்ட இதேல்லாம் முடியாது தம்பி! ஒருத்தரை பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கற டைப் இல்ல டா அவ.. ரொம்ப தெளிவா முடிவு எடுக்கறவ... அதுவும் எதிராலியுடைய மனசை சுலபமா படிச்சிடுவா...'

செந்தில் போதும் டா உன் அத்தை பொண்ணு புராணம்!

சிவா அண்ணா ரெடியா?' என்று வந்து நின்றாள் கீதா.

ஹம்ம் ரெடி கீதா... இதோ..'

அண்ணா... ஆஸ் யூஷ்வல் நீ சூப்பரா இருக்க! பட் இன்னைக்கு நீ தான் டோட்டல் ப்ளாட் னு நினைக்கிறேன் .. ஏனா அண்ணி வேற லேவல்ல இருக்காங்க! அவங்களை போய் அழகாயில்லைனு சொல்லியிருக்க?! பார்க்கதானே போற.. ம்ம் சீக்கிரமா வா' என்றாள்.

வெற்றி பிரபுவிடம் 'டேய் மச்சி! உனக்கு குழலீயை பிடித்து தானே கல்யாணம் செய்துக்க போற?'

தெரியலையே மச்சி! அவ நல்ல பொண்ணு தான்! பட் திமிரு அதிகம்...வைஃபா?? அது கேள்விக்குறி தான்.

என்னடா இப்படி சொல்லிட்ட? என்றார்கள் கோரஸாய்.

இப்போ அவ பேசினதை கேட்ட பின்னுமா? - செந்தில்

இப்போ தான் இன்னும் அதிகமாய் அண்ணா!

கண்ட நாள் முதலாய் பாடலையே திரும்ப திரும்ப பாடிக்கொண்டு இருந்தாள் டீனா.

போதும் டீனா! தாங்கமுடியலை!

சரி அப்போ சொல்லு யாரவன்? சும்மா முறைக்காத டீ செல்லம்!

இப்போ ஃபோன் பண்ணானே ஒரு லூசு... அந்த பிகே தான்.. சிவா என்கிற பிரபு!

அதென்ன பிகே?

பிரபு கனகராஜ்... ஷார்ட் ஃபாரம்! லூசுனும் வைத்துக்கலாம். அவனோட ஸ்கூல் நிக் நேம்...

ஓகே ஓகே! நீ நடத்துடீ தங்கம்.. ஆனா ஒன்னு... எங்களை காயவிடறா மாதிரி அவனை காயவிடாதே! பாவம் டீ அவன்!

யாரு பாவம்?!! இவ்வளவு சப்போர்ட்டா! சரி அதையும் தான் பார்த்துடுறேன்.

சரி அவனுக்கு பொண்ணுங்க தலை முடி நீளமாயிருந்தா பிடிக்கும்னு தெரியும்னு சொன்னியே... எப்படி தெரியும்? - டீனா

அதேல்லாம் உனக்கு சொல்லமுடியாது! எங்க பர்சனல் விஷயம்!'

அய்யோ போதுமே...ரொமான்டிக்கா எதுவும் இருக்க போறதில்ல..

ஒரு விதமான புன்னகையுடன் டீனாவை பார்த்தாள் குழலீ.

ஹேய் ஏதோ விஷயம் இருக்கு!என்றாள் டீனா. 

நீ இதை பிரபு கிட்ட கேட்டுக்கோ!

சரி வா.. கூப்பிடுறாங்க' என்றாள் பொன்மலர்.

அதிகாலை ஐந்தரையிலிருந்து ஏழு வரை திருமண நேரம்...

தமிழ் முறையில் திருமணம்...

நெருங்கிய சொந்தங்களை மட்டும் எதிர்ப்பார்த்து நேரம் குறித்திருந்தாலும்... நண்பர்கள் கூட்டம் ஐந்தரை மணிக்கே சற்று அதிகமாகவே கூடிவிட...

முந்திய நாள் திருமண உறுதி மடல் எழுதும் நிகழ்ச்சிக்கு (நிச்சயத்திற்கு) என்று எடுக்கப்பட்ட அந்த மயில் கழுத்து நிற புடவையில் பூஞ்சடையிட்டு மையிட்ட கண்கள் மின்ன.. காதில் ஜிமிக்கி.. முழங்கை வரை மருதாணியிட்ட கைகளில் வளையல்களுடன்... கால்களில் மெல்லிய கொலுசு பூட்டி...ஏற்ற பொன் நகைகளுடன் வந்த பூங்குழலீயை எல்லோரும் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மணவிழாவை நடத்தி கொடுக்க வந்த அம்பலவாணர் ஐயா ஒரிரு நிமிடங்கள் அப்படியே உறைந்துவிட்டார். திரும்பி மணவறையில் அமர்ந்திருந்த பிரபுவை பார்த்தார். ஆண்மைக்குரிய கம்பீரத்துடனும் இளமையுடனும் தேஜஸுடன் இருந்தவன் பூங்குழலீக்கு ஏற்ற இணைதான் என்று எண்ணிக்கொண்டார். 

எல்லோருக்கும் அவளது அழகு கண்களுக்கு தெரிந்தால் அம்பலவாணருக்கோ அவள் அழகுடன் இருந்த கம்பீரம், மலர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு தெய்வீக தன்மையை காட்டியது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.