(Reading time: 15 - 29 minutes)

குழலீக்கு கூரைப்புடவையை கொடுத்துவிட்டு பிரபுவிடம் அவனுக்காக வேட்டியை கொடுத்தார்.

இருவரும் அவரவர் உடைக்கு மாறி வந்தனர். இவ்வளவு நேரத்திலும் ஒரே ஒரு முறை மட்டும் தான் பிரபுவின் பார்வை குழலீயின் மீது படிந்து மீன்டது. குழலீ தான் அடிக்கடி அவனை பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது... பிரபு தன்னிடம் முகம் கொடுத்து பேசி நான்கு நாட்கள் ஆகிறது... சரியாக யோசித்தால் அன்று ஆர்யனை பார்த்துவிட்டு வரும் போதிலிருந்தே அவளை பார்க்கக்கூட இல்லை பிரபு!

மனதில் ஏதோ உறுத்தியது... என் இவன் இப்படி இருக்கிறான்?! பாரா முகமாயிருந்தால் எப்படி இவனுடன் காலம் தள்ளுவது? ச்ச... மணவறையில் அவன் அருகில் அமர்ந்துக்கொண்டு என்ன யோசனை இது? இப்போ யோசித்து எதுவும் இல்லை... வருவது வரட்டும் பார்த்துக்கலாம். எவ்வளோ பார்த்துட்ட குழலீ... இதேல்லாம் சும்மா... ஜுஜுப்பி!' என்று சிரித்து தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.

அவளது ரகசிய சிரிப்பை பார்த்தான் பிரபு. அந்த வேள்வியின் புகையில் அவள் முகத்தில் இருந்த அழகும் கம்பீரமும் அந்த தேஜஸும் அவன் கண்ணில் பட்டது. அவன் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது. இவை எல்லாவற்றையும் கேன்டிட் கேமிராக்கள் விழுங்கி கொண்டிருந்தன!

நண்பர்களின் கேலிக்கு லேசான தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தாலும் அவை எல்லாவற்றையும் பிரபு மிகுந்த விருப்பத்துடன் கேட்டுக்கொண்டுருந்தான். இதற்கிடையில் மாமியாரையும் அவரது தங்கையையும் மறக்காமல் முன்னே அழைத்து மேடையில் ஏற்றி நிற்க வைத்தான். 

தாயின் கலங்கிய கண்களை பார்க்கும் போது குழலீக்கும் கண்களில் நீர் திரையிட்டது. தந்தையிருந்து தாரை வார்த்து கொடுக்க குடுப்பினை இல்லாமல் போய்விட்டாள்! 

நண்பர்களின் கலகலப்பான சூழலில் குடும்பம் சூழ்ந்திருக்க பூங்குழலீயின் கழுத்தில் மங்கள நாணினை பூட்டினான் பிரபு! தந்தையின் நினைவா இல்லை மனதிற்கு பிடித்தவனை கரம் பிடித்த நிறைவா அவள் கண்களில் இரு நீர்த்துளிகள் எட்டி பார்க்க... சந்தோஷத்துடன் அவளது முகம் பார்த்த பிரபுவோ அதை வேறு விதமாய் எடுத்துக்கொண்டான்! 'இதுக்கு தான் கேட்டேன் இவளுக்கு சம்மதமானு இப்போ வந்து அழுதுக்கிட்டிருந்தா என்ன பண்றது?'

அழாதே' என்று அவன் சொல்ல வாயை திறக்க குழலீ முந்திக்கொண்டு 'தேங்கஸ் பிரபு!' என்றாள். அவளது கண்கள் கலங்கியிருந்தது ஆனால் ஒளிர்ந்தது! அதரங்களும் கண்களும் சேர்ந்து சிரித்தது! அவனும் பதிலுக்கு அதையே தந்தான்.

மற்ற சடங்குகள் அனைத்தும் துரிதமாய் நடைப்பெற்றது! திருமண பத்திரிக்கையிலேயே 'No material gifts will be accepted.. Ur presence is more valuable than it' என்று கூறிப்பிட்டிருந்தனர். ஆனால் பரிசுப்பொருட்களோடு வந்திருந்தனர் மக்கள். தமிழ் முறை திருமணம் என்பதால் ஏற்கனவே மைக் ஒலி பெருக்கியிருந்தது. அம்பலவாணரை விட்டே அந்த அறிவிப்பை செய்தான் பிரபு.

மணமக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டு நீங்கள் அனைவரும் பரிசுப்பொருள் வாங்கி வந்திருங்கிறீர்கள். ஏற்கனவே எடுத்த முடிவை உடைக்க முடியாமல் உங்கள் அன்பினால் தவிக்கிறார்கள். அதனால் அன்பை மதித்து உங்களை புண்படுத்தாது இருக்க மணமக்களிடம் இருந்து ஒரு சிறு யோசனை! தங்கள் அன்பை வெளிப்படுத்த நினைப்பவர்கள் இங்கே இருக்கும் அன்பு இல்ல ப்ரதிநிதியிடம் மணமக்களுக்கு செய்ய விரும்புவதை செய்யலாம், கொடுக்கலாம்! அங்கே பயிலும் ஏழை மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு புதுமணத் தம்பதியினரின் வாயிலாக உதவலாம்! கட்டாயம் ஏதும் இல்லை ஆனால் பரிசுகள் ஏதும் மணமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'.

மணமக்களின் இந்த உயரிய குணத்தை கண்டு வியக்கிறேன்! மணமகன் இந்த முடிவை சிறு நொடிகளுக்கு முன் மனைவியான குழலீயிடம் கலந்தாலோசித்து எடுத்துள்ளார். பாராட்டுக்கள் பிரபு! எனது குருவாகிய மோகனசுந்தரத்தின் செல்ல பேர்த்தியின் திருமணத்தை நடத்தி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி! எனது எழுபது வயதிலும் என் உயிரை பாதுகாத்து கொண்டு இருந்தது இந்த நாளிற்காக தான். என் குருவின் வேண்டுகோள்... அவரது பேர்த்தி பூங்குழலீயின் திருமணத்தை நான் தமிழ் முறையில்நடத்தி கொடுக்க வேண்டும் என்று! இருப்பதைந்து வருடங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பரிசுக்கள் இதோ.. பூங்குழலீக்கு அவர் கைப்பட எழுதிய வாழ்த்துறை... மணமகனுக்கு ஒரு வாழ்த்துறையுடன் மோதிரம் பரிசு. நன்றி! இடைச்சொருகலாக ஒரு செய்தி! நம் மணமகன் திருவாளர் பிரபு அவர்கள் அன்பு இல்லத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்! அவரது உயர்ந்த குணத்திற்கு பரிசாக இதோ பூங்குழலீ அவரது திருமதியாய் கடவுள் கொடுத்திருக்கிறான்!'.

இவ்வளவு பேசும் போதும் பிரபு மற்றவர்களை பார்த்து புன்னகைத்தானே தவிர மறந்தும் கூட குழலீயின் பக்கம் திரும்பவில்லை! ஆனால் பூங்குழலீயோ வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருந்தாள். அன்பு இல்ல குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று தான் இவள் கேட்டது... அதுவும் கல்யாணத்திற்கான செலவில் மீதம் இருந்த பணத்தில்! மாமியாரும் தன் பங்கிற்கு பணம் போட்டு நகை வாங்குவதாக கூறினாரே... அதே பணம்தான்! அதை தான் குழலீ கேட்டாள்... அதுவும் அன்பு இல்லத்தில் இருக்கும் மாணவர்களின் கல்வி உதவிக்காக! அந்த பணத்தில் நகையை எடுத்துவிட்டார்கள் என்று மனதில் சிறிது வருத்தப்பட்டாள்.. ஏனென்றால் மாமனாரை கேட்காமல் முடிவு எடுக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரபுவின் தாய்! ஏற்கனவே பணம் இருப்பதால் மொய் அல்லது பரிசு பொருளோ வாங்கக்கூடாது என்று முடிவு எடுத்திருந்தனர். ஆனால் அதையும் மீறி திருமணத்திற்கு பரிசுகளுடன் வந்தவர்களயும் புண்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்று குறுகிய இடைவெளியில் யோசித்து குழலீயிடமும் கலந்தாலோசித்து முடிவு செய்து அதை அம்பலவாணரிடம் கூறினான். 'இவன் என் கணவன்... நல்லவன்..! இதுல என் மனசை புரிஞ்சிக்கிட்டவன் என் அன்பையும் புரிஞ்சிக்க மாட்டானா?? லவ் யூ டா பிகே' என்று மனதில் கூறிக்கொண்டாள். ஆனால் அவன் மீதான கோபம் அப்படியே தான் இருந்தது!

நேரம் செல்ல செல்ல பரபரப்பு தோற்றியது இருவருக்கும். மரூஉ கொடுக்கும் நிகழ்ச்சிக்காக உடையை மாற்றிக்கொண்டனர். பிரபு பட்டுவேட்டி கட்டி பச்சையில் முழுக்கை சட்டையுடன் வந்தான். புது மாப்பிள்ளைக்குறிய அழகுடன் கழுத்தில் சங்கிலி கைகளில் பிரேஸ்லட், மோதிரம் என்று இருக்க...குழலீயோ அவனுக்கு ஏற்றார் போல் பச்சை பட்டுப்புடவையில் ஜடையை அகற்றிவிட்டு தழைய பின்னலிட்டு தலை நிறைய மல்லிகை சூடி அதற்கு ஏற்ற நகைகளுடன் கை நிறைய வளையல்களுடன் வந்தாள். இருவரையும் ஒரு சேர பார்த்த மாலிதிக்கே தன் கண் பட்டுவிடுமோ என்று எண்ணி திருஷ்டி கழித்தார்! எல்லா சடங்குகள் முடிந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு உணவு முடித்த போது மணி காலை ஒன்பதே கால் என்றது!

அவர்கள் பிளான் செய்த நேரத்தை விட அதிகம் ஆகிவிட்டது! எல்லோரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு குழலீயின் கையை பற்றியவாறு வாசலுக்கு விரைந்தவன் காரினை நோக்கி செல்ல... அங்கே தயாராக வந்து நின்றது அவர்களது கார்... ஓட்டுனர் இருக்கையில் வெற்றி...அருகில் யாழினி!

டேய் வெற்றி! இறங்குடா... இரண்டு நாளாய் தான் மாற்றி மாற்றி படுத்தனீங்க! இப்போவாது தனியா விடுங்களேன் டா!

டேய் மச்சி! உன் வைஃப் கூட அப்புறமா டூயட் பாடலாம்! ரொமான்ஸ் அப்புறமா செய்யலாம்! இப்போ நம்ம குழலீ எக்ஸாம் எழுதறது தான் முக்கியம் பாஸ்! அதோட உங்க இரண்டு பேரோட சேஃப்டி முக்கியம்! - வெற்றி.

காரின் பின் சீட்டில் குழலீயும் பிரபுவும் அமர வண்டி புறப்பட்டது. மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரபு, 'டூயட்டா?? ரொமான்ஸா??? இவக்கூடயா?? வலிய போய் யாராவது புலிக்கிட்ட தலைய கொடுப்பானா மச்சி.. நேவர்!' என்றான் பூங்குழலீயை பார்த்தவாரே! பூங்குழலீயின் கோபம் அவளது கண்களில் தெரிந்தது நீர் துளியாய்!

தொடரும்...

Episode # 11

Episode # 13

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.