(Reading time: 17 - 34 minutes)

11. என் உயிர்சக்தி! - நீலா

னது ஏதோ அதி பயங்கரமாய் வேகமாய் அலைபாய்ந்துகொண்டே இருந்தது குழலீக்கு!

விடை தெரியாத பல கேள்விகள்... வாழும் காலம் வரை என்று எதிர்பார்த்தால்.... இப்போது வாழ்க்கையே கேள்வியாய்!!!

அதோ இதோ என்று நாட்கள் வேகமாய் ஓட... இதோ இதோ இன்னும் நான்கு நாட்களில் பிரபுவின் மனைவியாய் இவள்!

En Uyirsakthi

'வரும் விதி வரினும் வருவது முற்றும் நன்மையே என நம்பி வாழ்வேன்!'

எங்கேயோ படித்த வாசகம் சட்டேன நினைவு வந்தது. 'ஆம்! எது வந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும்!' என்று மனதிற்குள் குறித்துக்கொண்டாள். 

அம்மாவும் தம்பியும் முக்கியமான விஷயமாக வெளியே சென்றிருக்க... இவளுக்கு துணையாய் சித்தி மகள்கள் அங்கவை, சங்கவை இருவரும்! எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற என்று வந்தாள். புடவையை இழுத்து இடுப்பில் முடிந்து கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து கொண்டிருந்தாள் குழலீ.

மடமடவென ஓடி வந்த தங்கையை பார்த்து, ஏன்டீ இப்படி ஓடி வர?' என்றாள்.

அக்கா.. கா... அது வந்து மாமா இல்ல மாமா...

எந்த மாமா?? உன் மாமாவா இல்ல என் மாமாவா?? என்றாள் நக்கலாய்.

ஹங்ங்.. அங்கவி ஆப்ஸில் வர்க் பண்ணறார்ல... அவர் தான்!

புரிந்துவிட்டது! பிரபுவை குறிப்பிடுகிறாள் சின்னவள். 'அவனுக்கு என்ன இப்போ?'

அக்கா!?

என்னடீ அக்கா மக்கா னு சொல்லிட்டு... போ போய் வேலையிருந்தா பாரு.. இல்ல தண்ணீர் விடு.. நான் போய் டீ வைக்கிறேன். எப்போ பார்த்தாலும் அவன் புராணம் தானா?'

உங்க அக்காவுக்கு என் புராணம் கேட்க பிடிக்காதே!

குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள் குழலீ. அவன் தான்! அவனே தான்... அவனுக்கு பின்னால் மாமியார்!

அவனை பார்த்த போதும் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தவள் மாமியாரை பார்த்ததும் வேலையை நிறுத்திவிட்டு புடவையை சரி செய்து கொண்டே 'வாங்க அத்தை' என்றாள்.

நீ ஏன் குழலீ இந்த வேலையேல்லாம் செய்யற?

அய்யோ ஆன்டீ! பெரியம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டாங்க! கேட்கவே மாட்டாங்க... சின்ன சின்ன செடிகளுக்கு எல்லாம் இப்படி தான் மக்குல தண்ணீர் ஊற்றனும்னு சொல்லுவாங்க... பெரிய செடி மரங்களுக்குலாம் பைப் ல தான் தண்ணீ.. இந்த குட்டி குட்டி செடிகள் நிறைய இருக்கு... ரூஃப் கார்டன் கூட வெச்சிருக்காங்க ல... சோ இது ஒரு வகையான எக்சர்சைஸ் னு சொல்லுவாங்க! அதையும் தாண்டி நம்ம எமோஷன்சை பேசுவதை செடிகள் புரிஞ்சுக்கும் னு சொல்லுவாங்க! அவற்றின் மேல் நாம அன்பு காட்டினா அது நமக்கு நிச்சயமாய் திருப்பி கொடுக்கும்!...' பேசிக்கொண்டே அவர்களை வரவேற்பறை அழைத்து சென்று அமர வைத்தாள் சின்னவள் சங்கவை!

தங்கையின் சாமர்த்தியத்தை கண்டு மனதில் மேச்சினாள் குழலீ!

அதற்குள் காஃபி கலக்கி எடுத்து வந்தாள் அங்கவை! யார் என்ன வேலை கொடுத்தாலும் இடத்தை விட்டு அசையாத சோம்பேறி தங்கை இன்று தன் அலுவலகத்தில் வேலை செய்யும் மேனேஜர் (பிரபு தான் வேற யாரு!) முன் நல்ல பிள்ளை போல் நடந்து கொள்கிறாள்! 'அடியே என் ராசாத்தி... தங்க கட்டி!' என்று மனதில் கொஞ்சினாள் குழலீ.

அப்போது தான் நினைவு வந்தது அவள் கொடுப்பது காஃபி என்று! 'அங்கு...உங்க மாமா காஃபி சாப்பிட மாட்டார்!' என்று தடுத்து நிறுத்தினாள் குழலீ.

அய்யே.. அக்கா எனக்கு தெரியும்... மாமாவுக்கு டீ.. மத்தவங்களுக்கு காஃபி.. எப்புடி!!' என்று பழுப்பு காட்டினாள் பெரியவள்.

அச்சச்சோ... நீ காஃபி போட்டாக்கூட சாப்பிடலாம்..டீ போட்டுடீயே அக்கா!!' என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.

கொடு அங்கவை!' என்று அந்த டீ யை வாங்கி கொண்டான் பிரபு. நல்லா தானே இருக்கு!' என்று அவர்களை வம்பிழுத்து கொண்டிந்தான்.

ஏன் சங்கவை...இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்பியா?? வாயே வலிக்காதா? இப்படி ஒரு அக்காவுக்கு இப்படி ஒரு தங்கை! என்றான் குழலீயை சுட்டிக்காட்டி!

மாமா... யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?? எனக்கு பேசறதுக்கு இன்ஸ்பிரேஷனே குழலீகா தான். அவங்க பேறத நிறுத்தினா உலகமே நின்னுடும்! அது மட்டும் இல்லாமல் நான் ஆடிட்டர் இன் மேக்கிங் மாமா! சோ பேசியே ஆகனும்.

நீங்க இருவரும் டிவின்ஸா?

மாமா!!! அங்கவைக்கும் எனக்கும் மூன்று வயது வித்யாசம் மாமா. நான் இப்போ தான் சி ஏ இன்டர் ஜாயின் பண்ணிருக்கேன்!

அப்புறம் பெயர் மட்டும் எப்படி ரைமிங்கா?

அவளுக்கு ஒரு டிவின் சிஸ்டர் இருந்தாங்க. பட் டெலிவரியில சர்வைவ் பண்ணல... சோ அவங்களுக்கு சேலக்ட் செய்த நேம் எனக்கு வந்திடுச்சி!

அதற்குள் கதவு திறக்கும் ஓசை கேட்க வேலன் பெரியப்பாவின் குடும்பம் உள்ளே நுழைந்தது. ஐந்து நிமிடத்தில் அம்மாவும் தம்பியும் வந்து விட்டனர். அவர்கள் வந்த பிறகு பரஸ்பர அறிமுக படலம் முடிய பிரபுவும் சரவணனும் சிறிது நேரம் உரையாடினார்கள்.

அப்போது...'சம்பந்தி..' என்று ஆரம்பித்தார் பிரபுவின் தாய். 

சொல்லுங்க சம்பந்தி!' - குழலியின் தாய். 

பிரபுவின் தாய் சற்று தயங்க படப்படவென பேச ஆரம்பித்தார் வேலனின் மனைவி ராஜி.

என்னங்க யோசிக்கிறீங்க? எதுவா இருந்தாலும் சொல்லுங்க! என்ன ஏதாவது வரதட்சணை எதிர்ப்பார்க்கறீங்களா? எவ்வளவு? தயங்காம கேளுங்க! இப்படி கடைசி நிமிஷத்துல கேட்டா கொடுப்போம் னு தானே கேட்கறீங்க?

இல்லைங்க... நான் சொல்ல வந்ததை கேளுங்க!

என்ன கேட்கறது? நீங்க தயங்கும் போதே தெரியுதே! உங்க பிள்ளையை விட்டா வேற பையனே இல்லையா? இப்போ கேட்டா கொடுத்திடுவோம் னு நினைக்கறீங்க?? பெரிய இடத்திலிருந்து நீங்க பொண்ணு கேட்கறப்பவே நாங்க யோசிச்சியிருக்கனும்! தயங்காம கேளுங்க! இருக்கிற வீட்டை விற்றாவது ஏதாவது செய்றோம்!

இவர்கள் பேச தொடங்கியதும் பிரபு சரவணன் உரையாடல் தடை பட்டது. இதை பார்த்து கொண்டிருந்த குழலீக்கோ ரத்தம் கொதித்து கொண்டிருந்தது! யார் வந்து யாரை பற்றி தவறா பேசுவது?! என்ன ரைட்ஸ் இருக்கு இவங்களுக்கு. இப்போது எதிர்த்து கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை! இவர்களை கேட்டால் மாமியாரின் முன்னே குடும்ப மானம் கப்பல் ஏறிவிடும்?!

இரண்டுக்கும் நடுவே சிக்கி தவிக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையில் வெறித்து பார்த்துக்கொண்டுருந்தாள் குழலீ.

பிரபுவும் அவர்கள் பேசுவதையும் குழலீயின் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் அர்ஜுனிடம் இருந்து அழைப்பு வந்தது குழலீக்கு! ஏற்கனவே இவள் தொடர் அழைப்புகளை ஏற்காத காரணத்தால் அவன் மீது இருந்த கோபத்துடன் இப்போது இவர்கள் பேச்சு ஏற்றிவுட அழைப்பை ஏற்றாள். 

டேய் குரங்கு! எறுமை! அறிவிருக்கா உனக்கு! உன்னையேல்லாம் பெரிய மனுசன் நினைச்சு கூப்பிட்டேன் பாரு! என்னை அடிக்கனும்! வயசுல பெரியவனு பார்த்தா ரொம்ப பேசிக்கிட்டே போற? நான் பேச ஆரம்பிச்சனு வை.. தாங்க மாட்ட...இப்போ என வேணும் உனக்கு?

அடி லூசு! யாருனு நினைச்சு திட்டற? நான் அர்ஜுன் டீ!

சொல்லு!

உங்க பெரியப்பா இருக்காறா??

ஆமாம். 

நீ கிளம்பி இஏ வா! இப்போவே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.