(Reading time: 20 - 40 minutes)

04. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

காலையில் எழும்பும்போதே அறையில் யாருமில்லை என்பது புரிந்தது. நவ்யா தேவையானதை வாங்க போயிருக்கலாம். மெல்ல அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள். எதிர்பார்த்தது போல் இந்த டெம்ப்ரரி சாமியாரையும் காணவில்லை.

ஃப்ரெஷப் செய்யலாம் என அட்டாச்ட் பாத்தை நோக்கி திரும்புகையில் கண்ணில் பட்டது அந்த ரிப்போர்ட். என்னவாக இருக்கும்? எடுத்துப் படித்தாள். சதீஷின் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட். ப்ளட் க்ரூபிலிருந்து, ஹச் ஐ வி டெஸ்ட் வரை எல்லா சோதனைகளுக்கான முடிவுகள். மொத்தத்தில் அவன் ரத்த தானம் செய்ய தகுதியான நபர் என அறிவித்தன.

“அவன் கண்டிப்பா ப்ளட் கொடுக்கவே கூடாது….அவன் இசையை இம்ப்ரெஸ் செய்ய டொனேட் செய்ற மாதிரி ட்ராமா போடுறானா இருக்கும்….அது கூட ப்ரவாயில்லை…உண்மையிலேயே இவன் ப்ளெட்டை யாருக்கும் கொடுத்தா அவ்ளவுதான்…” நல்லிசையின் புலம்பலில் இவள் அவனை தவறாக நினைத்துவிடக் கூடாது என்று இப்படி ஒரு சாட்சியா? இதுவும் காசு கொடுத்து கடையில் வாங்கிய ரிப்போர்ட்டாக இருந்தால்? காலையிலேயே இவனை நினைத்து எரிச்சல் படவா?

Nagal nilaஃப்ரெஷ் அப் செய்ய போனாள்.

அன்று பகல் முழுவதும் மதுரன் கண்ணில் படவே இல்லை. அதை இவள் ஓரளவு எதிர் பார்த்தாள். இரவில் வருவார் சாமியார்.

ஆனால் இரவில் இவள் படுக்கப் போகும் வரையும் கூட அவன் வரவே இல்லை. தூங்குவது போல் கண்மூடிக் கிடந்தவள் மெல்ல எழுந்து அறைக்கு வெளியில் சென்று பார்த்தாள். நேற்று போல் படித்துக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கையில். ஆனால் இவள் எதிர் பார்த்தற்கு முற்றிலும் நேர் மாறாக நேற்று மதுரன் அமர்ந்திருந்த இடத்தில் சதீஷ் அமர்ந்திருந்தான் ஏதோ சிந்தனை வசப்பட்டவனாக.

எது செய்யவும் தோன்றாமல் வந்து படுத்துக் கொண்டாள்.

மறு நாளும் இதே கதை இப்படியே தொடரவும் கொதித்துப் போனாள் நல்லிசை.

ஏதோ இவள் அவன் தங்கை மாதிரியும் இரவில் அவள் மதுரனை சந்திப்பது நல்லதிற்கில்லை என்பதற்காக காவலிருப்பது போலவும் சதீஷ் சீன் போடுவது போல் ஒரு ப்ரமை.

ஏனெனில் “என்ன இருந்தாலும் இப்டி நைட் தனியா மீட் பண்றது நல்லதுக்கு இல்லை” என்று முந்திய நாள் பேசும் போதே சதீஷ் குறிப்பிட்டு இருந்தான்.

அதோடு அந்த சீன் பார்ட்டி  தடுக்கிறான் என்பதை சாக்காக வைத்துக் கொண்டு இந்த கே டி எஸ்ஸும் காணாமல் போயாச்சு.

இதை இப்படியேவிட முடியாதே. அழைத்துப் பேச மதுரன் எண்ணும் இவளிடம் கிடையாது. திட்டி தீர்க்க சதீஷ் எண்ணும் தான்.

இன்று  10 மணியளவில் டிஸ்சார்ஜ் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். அதற்காவது மதுரன் வந்தாக வேண்டும் இவளைப் பொறுத்த வரை.

காலை சாப்பாடை சாப்பிட மாட்டேன் என உண்ணாவிரதத்தை துவக்கினாள். கே டி எஸ் வந்து தராமல் நோ சாப்பாடு….நோ மெடிசின்.

மதுரன் வரும் முன்னும் வந்து நின்றான் சதீஷ். பக்கத்தில்தான் சுற்றிக் கொண்டு இருந்திருப்பானாயிருக்கும்.

“மாப்ளைட்ட என்ன சண்டை போடுறதுனாலும் சாப்டுட்டு போடு…”

வாயடைத்துப் போனாள் சதீஷின் முதல் டயலாக்கில்.

அடப்பாவி அவளுக்கு சொந்த அண்ணன் இருந்தா கூட இவ்ளவு உரிமையா இப்பவே மாப்ளைன்னு சொல்லுவானான்னு தெரியலையேநேத்து தான் அந்த சாமியார் சைட் ட்ராக்லயாவது லவ் ட்ரெயின் விட வாய திறந்திருக்குது. அதுவும் அதோட ஃப்ரெண்டுட்ட….அதுக்குள்ள நீ இப்டி சொல்லிட்டு அலைஞ்சா விஷயம் ஊரெல்லாம் பரவிட்டுன்னு மாப்ளை பையன் தலை மறைவாக மாட்டானா? நவ்யா ஆ எனப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“சதீஷ் நீங்க அளவுக்கு மீறி என் பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிடுறீங்க…..இதெல்லாம் வச்சு எனக்கு உங்க மேல எந்த நல்ல இப்ரெஷனும் வரப் போறது இல்லை…ஜஸ்ட் எரிச்சல் தான் வரும்…”

ஒரு ரசனையுடன் அவள் கோபத்தைப் பார்த்திருந்தான் அவன்.

“ஏய் எண்ணை என்ட்ட சண்டை போடுறதுக்கு கூட உனக்கு தெம்பு வேணும்…முதல்ல சாப்டுன்னு சொன்னேன்…”

“இப்போ இடத்தை காலி பண்றீங்களா இல்லையா? அப்டியே போறப்ப இந்த போலி ரிப்போர்ட்டையும் தூக்கிட்டு போங்க….இப்டி பண்றதால தான் நீங்க இன்னும் படு மோசம்னு தோணுது…”

“ஓ ரிப்போர்ட்டை நம்பலையா….இத நான் எதிர் பார்த்தேன்….எல்லாம் உன் நாத்தனார் வேலையா இருக்கும்….” திரும்பி நவ்யாவைப் பார்த்தான்.

நல்லிசை சத்யமாய் குழம்பிப் போனாள்.

நாத்தனாரா? ஓ நவ்யாவை மதுரனுக்கு சிஸ்டர் ஆக்கியாச்சு…முதலில் அண்ணன், பின் மாப்பிள்ளை…இப்பொழுது நாத்தனார்….வாயாலயே வடை சுடுறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா…?

“மாப்ள வரவும் என் கூட வரச் சொல்லு…..நீங்க சொல்ற லேப்க்கே வந்து ப்ளெட் கொடுக்கேன்….டெஸ்ட் செய்றப்ப ப்ரொசீர் புக்கை பிடிச்சுகிட்டு பக்கத்திலே நின்னு …ரிசல்ட்டை அவரேயே பார்த்துட்டு வரச் சொல்லு…”

“அப்டி உங்க ப்ளெட்டை பத்தி தெரிஞ்சாகவேண்டிய அவசியம் இங்க யாருக்கும் இல்லை…” நல்லிசை பேசிக்கொண்டிருக்கும் போதே மதுரன் வந்து சேர்ந்தான்.

“முதல்ல அவள சாப்ட சொல்லுங்க மாப்ள….அப்றமா பேசிப்போம்….” சதீஷ் வெளியேற அவன் மாப்ள பதத்தில் மதுரனுமே ஒரு ஜெர்க் வாங்கினான்.

“வாங்க மாப்ள சார்….அந்த வில்லன் விரட்டினான்னு நீங்களும் ஓடிட்டீங்க என்ன?” ஏனோ சதீஷ் இவளுக்கும் மதுரனுக்கு இடையில் வருவது போலவும் மதுரனுமே அதை அனுமதிப்பது போலவும் ஒரு உணர்வு.

“நேத்தாவது சாப்டியா நீ…நவ்யா இவ நேத்து சாப்டதை நீ பார்த்தியா?”

உரிமையாய் மதுரன் பேசிய முதல் வார்த்தை இதுதான்.

மதுரமாய் அது மனதிற்குள் இறங்கினாலும் இப்பொழுது இவள் என்ன கேட்டுகொண்டிருக்கிறாள் அவன் என்ன சாப்ப்பாடு தான் தலை போற விஷயம் என்பது போல் அதைப் பத்திப் பேசிக் கொண்டு இருக்கிறான்? என்ற எண்ணமும் கூடவே எழுந்தது.

“முதல்ல சாப்டுட்டு டேப்லட் போடு…” இன்னும் அவன் அதே ரூட்டில் பேசவும் இவளுக்குள் தோல்வி உணர்வு. எனக்கும் உனக்கும் இடையில் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்ற வகையில் அல்லவா அவன் எதாவது சொல்லி இருக்க வேண்டும்? ஆக காதலை வெளியரங்கமாய் ஒத்துக் கொள்ள இவன் தயாராய் இல்லாதது மட்டுமல்லாமல், சின்ன சின்ன சல சலப்புக்கும் பயந்து வேறு ஒளிய வேண்டும் என்கிறானா?  பிடிவாதம் எழுந்தது அவளுள்.

“நீங்க தந்தா தான் சாப்டுவேன்…” மெத்தையில் இரு கையையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள் நல்லிசை.

சிரித்தபடி நவ்யா வெளியே போய்விட்டாள்.

ஒரு கணம் அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் சாப்பிடவென தயார் செய்து வைத்திருந்த அந்த ஓட்ஸ் கஞ்சி இருந்த பௌலை எடுத்துக் கொண்டு அவள் அருகில் சென்றான்.

“முதல் முதல்ல தர்றீங்க ஸ்வீட் வேணும்….லைட்டா சுகர் போடுங்க..”

அவள் சொன்னதை செய்து அவள் அருகில் சென்று நின்றான். படுக்கையில் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் அமரும்படி கை காட்டினாள்.

அமர்ந்து அவளிடமாக அந்த பௌலை நீட்டினான்.

ஆ வாயை திறந்து காண்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.