(Reading time: 6 - 12 minutes)

06. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா

 

Yathumagi nindraai kaali

மீராவின் பார்வைக்கு தன் பார்வையால் அமைதியாய் இருக்குமாறு செய்கை செய்த விக்டர் அந்த பெரியவர் அருகில் சென்று அமர்ந்தான்.என்ன தாத்தா இந்த அல்லி ராணிய பார்த்த மோகினி மாதிரியா இருக்கு , நீங்க வேற ....இது ஏன் கூட வேலை செய்ற மீரா, மீரா இதுதான் விஸ்வம் தாத்தா இந்த ஹோம் சூப்பர் ஸ்டார். ஹலோ ஹீரோ சார் , என்ன பண்றீங்க, எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா என்று மீரா இயல்பாக பேச ஆரம்பிக்க விக்டர் என்று ஒருவன் அங்கு இருபதே மறந்தவர்களாய் அவர்கள் பேசிகொண்டிருந்தார்கள். விக்டர் தாமஸ் சார் என்று அழைத்து கொண்டே அந்த வீட்டுக்குள்ளே போனான். அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன்னை மறந்து கத்ரி கோபால்நாத் அவர்களின் மென்மையான வாசிப்பை ரசித்து கொண்டுருந்தார். ஓசைபடாமல் அவர் அருகில் அவன் அமர்ந்து கொள்ள, இசை முழுவதும் அந்த ஒலித்தட்டில் முடிந்ததும் தன் அருகில் யாரோ இருப்பது தோன்ற தாமஸ் மெதுவாக கண் திறந்தார். தன் காலடியில் குழந்தையாக விக்டர் அமைதியாக உட்கார்ந்திருப்பதை பார்த்தவர் வாஞ்சையாக அவன் தலை கோதி, வாயா வா வா எப்படி இருக்க, வேலை எப்படி போகுது , என்ன சிறப்பு இன்னிக்கு? முரட்டு பையன் இங்க வந்திரக்க, எப்போ வந்த?? என்றார்,  இன்னிக்கு மோர்நிங்க்தான் வந்தேன் சார் , நல்ல இருக்கேன் சார் , உங்களுக்கு ஒரு புது தேவதையை காட்டலாம்னுதான் வந்தேன். இன்னிக்கு நைட் 9:30 flight எனக்கு. மீரா மீரா இங்க கொஞ்சம் வாயேன் என்றான். ஹான் விக் தோ வரேன் என்று மீரா உள்ளே வர, தாமஸ் சார்க்கு மீராவை அறிமுக படுத்தினான். மீரா அவள் இயல்பு போலவே அவருடன் சகஜமாக பேச தாமஸ்க்கு மீராவை மிகவும் பிடித்து போனது, தான் நடத்தும் இந்த சிறிய ஹோமில் தன்னால் முடிந்தவரை கைவிடப்பட்ட பெரியோர்களுக்கு தான் உதவி செய்வதையும் , விக்டரை ஒரு பயணத்தின் போது சந்தித்ததில் இருந்து அவன் நெறைய உதவிகள் மாதம் தோரும் செய்வது பற்றியும் சொன்னார். பிறகு மீராவை பற்றி விசாரித்தவர் அவளை அங்கு உள்ள பெரியவர்களுக்கு அறிமுக படுத்தினார். மீராவிற்கு அந்த இடம் , அந்த அன்புக்கு ஏங்கும் பெரியவர்கள் அனைத்துமே புடித்தது. டைம் ஆய்டுச்சு சார் நாங்க கெளம்பறோம் என்று விக்டர் சொல்ல தாமஸ் அவர்கள் இருவர் தலையின் மீதும் கை வெய்த்து ஆசிர்வதித்தார். பிறகு விக்டர் கார் எடுத்து வர செல்ல மீராவிடம் தாமஸ் சில விஷயங்கள் சொன்னார். கேட்ட மீராவிற்கு கண்களில் கண்ணீர் தளும்பியது ..பாரு மா, உன்னை ரொம்ப புடிச்சுருக்கு , விக்டர் தன்னோட தேவதைன்னு உன்ன கூப்டு வந்ததுனால உங்கிட்ட இது எல்லாம் சொன்னேன், ஆனா நீ தெரிஞ்ச மாதிரி  காட்டிக்காத மா அவன் adha virumba மாட்டான் என்று சொல்லி முடிக்கவும் , விக்டர் காருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது, நொடியில் தன்னை சுதாரித்து கொண்டவள் தாமஸிடம் அங்கிள் நீங்க சொன்னது நமக்குள்ளதான் நம்பலாம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

காரின் ஏறிய பிறகு சிறிது நேரம் அமைதியாக செல்லவும் மீரா தன்னை இன்னுமும் நிதான படுத்திக்கொள்ள உதவியது. பிறகு மெதுவாக அவன் பக்கம் திரும்ப அவன் ஏதோ தீவிர யோசனையில் காரை ஓட்டுவது புரிந்தது , மேலும் இரவு பெங்களூர் டிராபிக் மிகவும் அதிகம் என்பதால் அவனை தொந்தரவு செய்யாமல் கண்ணை மூடி கொண்டு வந்தாள்.

பயணித்தின் போதும் அவன் ஏதோ யோசனையிலே இருந்து விட மீரா அவனை தொந்தரவு செய்யாமல் தாமஸ் சொன்னதை எல்லாம் யோசித்து கொண்டு வந்தாள். இருவரும் 12 மணி அளவில் தரை இறங்கி விட மீரா வீடு வரும் வரை அந்த பிசினஸ் மீட்டிங் பற்றி discuss  செய்து வந்தார்கள். மீராவின் வீடு வாசலில் காரை நிறுத்தியவன் , குட் நைட் மீரா, நாளைக்கு ட்ரை டு கம் லேட், வி ஹட் எ பிக் டே டுடே என்றான். மீரா ஓகே விக்டர் u too take rest yendru  சொல்லி விடைபெற்றாள். கார் சிறிது தூரம் சென்று இருக்காது மீராவிடம் இருந்து அழைப்பு வர , என்ன ஆச்சு என்று காரை நிறுத்தி போன் எடுத்தான். எஸ் மீரா என்றான். விக் நான் இல்லைனோ ,இல்ல இன்னிக்கு புல்லா ச்மோக்கே பண்லேன்னு சிகரெட்டே தொட்ட அவ்ளோதான் என்று மிரட்ட, என்னவோ ஏதோ என்று பதறியவன் அவளின் இந்த பேச்சை கேட்டு சிரித்து விட்டு வாலு கண்டிப்பா smoke  பண்ண மாட்டேன் டா ,ஒழுங்கா தூங்கு என்றான். ஹ்ம்ம் அது, அந்த பயம் என்று மீரா போன் கட் செய்தாள்.

காலை மிகவும் கஷ்டப்பட்டு கண் விழித்த விக்டர் மொபைல் எடுத்து பார்க்க மீராவிடம் இருந்த 1 குறுஞ்செய்தி வந்திருந்தது. bf @ my home. Good Morning. Meera :-) 7:00 மணிக்கு வந்திருந்தது. கண்ணை இடுக்கி மணி பார்த்தான், 10:45 ஆகி இருந்தது, some other day meera pls, Dont mind, Just got up  என்று reply  செய்தவன் மறுபடியும் தூங்கலாமா என்று போர்வையை எடுத்தவன் பழக்கமான கார் கீறிச் ஓசை கேட்டு எழுந்து செல்லும் முன் புயல் என நுழைந்தால்.அவளால்தான் எல்லா நேரத்திலும் இப்டி உலக அழகி போல் ஆதி முதல் அந்தம் வரை தன்னை அலங்கரித்து கொள்ள முடியும், அவளால்தான் பால் வெண்மை முகம் தக்காளி பழம் போல் சிவக்கும் அளவிற்கு கோவப்படவும் முடியும், காற்றில் ஆடும் முடி பரக்க அவன் மேல் விழாத குறையாக உட்கார்ந்தவள் அவனை புதியதாய் பார்ப்பவள் போல் பார்த்தாள்.அவன் கல் என்று பேச ஆரம்பிக்கும் முன் அவன் வாயை பொத்தியவள் , விக்டர் ஒரு நாள் முழுக்க எனக்கு கால், மெசேஜ் பண்ணாம இருக்க முடியுமா உன்னால, ஏன் நினைப்பு கொஞ்சம் கூட வராம இருக்க முடியுமா உன்னால, எங்க போறேன்னு சொல்லாம போக முடியுமா உன்னால.ஏன் அப்டி பண்ண, என்னை டெஸ்ட் பண்றியா, இல்லை இந்த பித்து புடிச்சவ உனக்கு போர் அடிக்ரேனா.,.அவன் பதில் பேச முடியாமல் அவள் இன்னும் இறுக்கமாக அவன் வாயை மூட விக்டர் திணறி போனான். பிறகு அவள் கை எடுக்க விக்டர் பேச முற்படும் முன் தன் இதழால் அவன் வாயை மூட எதிர்பார்க்காமல் இருந்தவன் அப்டியே கட்டிலில் சாய்ந்து விட்டான் அவளோடு. அவனிடம் இருந்து சிறிதும் நகராமல் அவன் நெஞ்சில் சாய்ந்தவள் விக்டர் i missed u , i miss u so much , என்னால ஒரு நிமிஷம் கூட நீ இல்லாமல் இருக்க முடியல, ஆனா நீ ஒரு நாள் முழுசா என்கிட்ட எதுவும் சொல்ல இருந்துருக்க,,ஏன் அப்டி பண்ற, நான் ரொம்ப அலுத்துடேனா என்று அழ ஆரம்பிக்க, விக்டர் தன்னை ஒரு நிலை படுத்தி கொள்ள சிறிது நொடி ஆனது , அவளை மெதுவாக தன்னிடம் இருந்து விலக்கி உட்கார வெயத்தான். அவளை கண் கொட்டாமல் விக்டர் பார்க்க அவள் அபோதுதான் தன் நிலை அறிந்தவள் போல் தலை குனிந்து சொல்லாம கொல்லாம இவர் எங்கயோ போவாராம், ஒரு  msg  கூட பண்ண மாட்டாராம்,என்ன பண்றது தாங்க முடியல அதான் வழிஞ்சுடேன் என்று முனுமுனுத்தாள். விக்டர் சின்ன சிரிப்புடன் கல்யாணி i didnt even know that i will get a bed coffee like this, give me ten mins, i will refresh and  வந்து எல்லாம் சொல்றேன் , 10 மினுட்ஸ் நான் இல்லாம இருக்க முடியுமா என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க அய்யே தாங்கல போடா பொய் ரெப்ரெஷ் பண்ணு , சும்மா வஷியாத என்று பிடித்து தள்ளினாள்.

விக்டர் போன் சிணுங்க , அவன் இல்லாததால் கல்யாணி போன் எடுக்க அதில் 1 sms  வந்து இருந்தது .மீரா என்ற பெயர் புதிதாக இருக்க மெசேஜ் ஓபன் செய்தாள்,அதில் Hoyy when r u coming to pick up , hope no smoke till now, waiting என்று இருந்தது, கல்யாணி phoneai அப்டியே கீழே போட்டால் , விருட்டு என்று கோவமாக கெளம்பி விட்டாள்., விக்டர் குளித்து முடித்து கல்யாணி என்று வெளியில் வரவும் அவள் கார் கீறிச் என்ற சத்தத்துடன் பறக்கவும் சரியாக இருந்தது., 

விக்டர்க்கு இது புதிது இல்லை , ஆனால் இபோது என்ன சண்டை என்று புரியவில்லை ,இன்று எப்டியும் அவளை உட்கார வெய்த்து பேசி புரிய வெய்க்க வேண்டும் என்று நினைத்தது எப்போதும் போல நடக்க போவது இல்லை என்ற ஆயாசத்துடன் சோபாவில் உட்கார்ந்தவன் காலில் அவன் செல் இடறியது. எடுத்தவன் அதில் மீராவின் மெசேஜ் ஓபெனில் இருப்பதை பார்க்க அப்டியே தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தான்.

தொடரும்

Episode # 05

Next episode will be published as soon as the writer shares her next episode.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.