(Reading time: 20 - 40 minutes)

திருடா…..உங்கப்பாவுக்கு தெரியாம பழக கில்டியா இருக்குன்னுட்டுஇப்ப லுக் விட வந்தியாநான் இங்க வாரேன்னு நிச்சயம் நவ்யா சொல்லிருப்பா…..வா வாஉனக்கு இருக்கு இன்னைக்குநீ டெம்பரரி சாமியாராபோலி சாமியாரான்னு இன்னைக்கு தெரிஞ்சாகனும் எனக்கு

அவன் கவனிக்கா வண்ணம் மறைவாக அவனை நெருங்கினாள். இப்பொழுது அவன் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறான் என கண்ணில் பட்டு படு எரிச்சல் வந்தது. சதீஷ்.

கோபமாக அவனைப் பார்த்து வெளியரங்கமாக வேகமாக சென்றாள். இவளை இருவரும் கவனித்த மாதிரி தெரியவில்லை.

“சொன்னா கேளுங்க மாப்ள…அவ அப்பாவுக்கு மொத்த சொத்தே ஒரு 150 சி தான் தேறும்..விசாரிச்சுட்டேன்……” சதீஷின் வார்த்தை காதில் விழ விறைத்தாள். சட்டென அருகிலிருந்த ரேக்கிற்கு பின் மறைந்தாள்.

இவர்கள் என்ன இவள் சொத்துக் கணக்கைப் பற்றி பேசுவது?

“நான் உங்களுக்கு அதே அளவு இன்னைக்கே தாரேன்…”

மைகாட் இந்த சதீஷுக்கு என்ன வேணும்…?

“ஒரு ஒன் ஆர் டூ மந்த்ஸுக்குள்ள ரெண்டு மூனு பிஸினஸ் ஆரம்பிச்சுட்டு……அந்த செங்கிஸ்கான்ட்ட போய் பொண்ணு கேளுங்க…. ஈ ன்னு இளிச்சுட்டு பொண்னு கொடுத்துடுவான்…. இசையை ரொம்ப காக்க வைக்காதீங்க……பாவம் அவளுக்கு ஃபீவர் வந்ததே நீங்க இல்லைனு ஆகிடுமோங்கிற வலியிலதான்”

தலைசுற்றாத குறைதான் நல்லிசைக்கு. 150 கோடி என்னமோ சுண்டைக்காய் சமாச்சாரம் என்பது போல் தூக்கி தருகிறேன் எங்கிறானே…..அதுவும் இவளுக்காக

“இல்ல சதீஷ் அது சரியா வராது”

மதுரனின் மறுப்பு கர்வம் கொள்ள வைக்கிறது இவளை.

என்னவன்வேலைக்கு செல்லவென, இவளுக்காய் என இத்தனை கடின உழைப்பு செய்கிறவன் ஓசியில் வரும் பணம், அதுவும் யாரையும் தடுமாற வைக்கும் தொகைஅதை வேண்டாம் என்கிறானேசுத்தன்

“இவ்ளவு பணம் திடீர்னு எப்டி வந்ததுன்னு வரகூடிய லீகல் இஷ்யூசை பத்தி யோசிக்காதீங்க…அதெல்லாம் ஒன்னும் வராம பக்காவா செய்து தாரேன்…ஒரு சின்ன ப்ரச்சனை கூட உங்களூக்கோ தங்கச்சிக்கோ வராது…”

அடப்பாவிநீ இன்னும் இந்த தங்கச்சி புராணத்தைவிடலியா….?ஒருவேளை இவன் பைத்தியமோ.....150 சின்னு 150 தடவை சி எழுதிட்டு வந்து கொடுப்பானோ…?

“அதுக்குன்னு இல்ல…..மனசாட்சின்னு ஒன்னு இருக்குது……கடவுள் பயம்னு ஒன்னு இருக்குது…..யேசப்பாவோட மனசு கஷ்டபடுற மாதிரி மட்டும் என்னால எதையும் செய்யமுடியாது”

“ப்ச்..” சதீஷின் முகம் மிகவும் வாடுவது இவளுக்கு பார்வையில் படும் இடத்தில் இருந்த கண்ணாடியில் தெரிகிறது.

“இந்த விஷயத்தில நீங்களும் நவியும் ஒன்னு….ப்ராக்டிகல் லைஃப்னு ஒன்னை பார்க்கவே மாட்டீங்க….”

அவன் மெல்ல முனங்குவது அரை குறையாய் இவள் காதில் விழுகிறது.

நவியா…..?முதல் நாளே நவ்யாவை இவளிடம் நவி என்றுதானே குறிப்பிட்டான்சதீஷுக்கும் நவ்யாவுக்கும் இடையில் என்ன? இந்த மதுர் அமைதியாய் நிற்பதைப் பார்த்தால் அவனுக்கு இந்த லிங்க் ஏற்கனவே தெரிந்திருக்கும் போல….நவ்யா மதுரனுக்கு சகோதரி எனில்…. ??சதீஷ் இவளுக்கு அண்ணனான கதை இதுதானா?

“சரி அதைவிடுங்க…அப்டின்னா இப்பவே போய் கல்யாணம் செய்துக்கோங்க…இசை ஒன்னும் ரொம்ப தாம் தூம்னு செலவு செய்ற மாதிரி இல்லை…உங்க வீட்ல அவ சந்தோஷமாவே இருப்பா…அந்த செங்கிஃஸ்கான் ப்ராப்ளம் செய்யாம பார்த்துக்கிறது என் பொறுப்பு…”

டேய்எங்கப்பாவ இன்னொரு தடவை செங்கிஸ்கான்னு சொன்ன...அப்புறம் இருக்குது……

“கண்டிப்பா…..வேலை கிடச்சவுடனே அதை தான் செய்ய போறேன்…”

நீயும் எங்க அப்பாவை நம்பலையா மதுர்….?போடா….எங்கப்பா எனக்கு பிடிக்காததை செய்யவே மாட்டங்கஅதுவும் உன்னைப் போய் வேண்டாம்னு எப்டி சொல்வாங்க...?

“ம்…பிடிவாதம் உங்க குடும்ப சொத்து….அதை யார் மாத்த…? கல்யாணம் செய்ற டைம்ல கண்டிப்பா அந்த செங்கிஸ்கான் எதாவது ப்ரச்சனை செய்தா நான்தான் பார்த்துப்பேன்….அதை மறந்துராதீங்க…..இப்பவும் என்ன ப்ரச்சனைனாலும் நான் இருக்கேன்…”

பதில் சொல்லாமல் மதுரன் புன்னகைப்பது தெரிகிறது.

“நவி இங்க இருந்தா நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்புகிறது விருதா…அப்டின்னு இப்போ சொல்லிருப்பா…அதை சொல்ல மட்டும் செய்யாம நீங்க நிக்கீங்க…..அந்த மட்டும் மரியாதை வச்சுருக்கீங்களே…சரி கிளம்புங்க……..நவியை பத்ரமா பார்துகோங்க…”

சதீஷ் திரும்பிச் செல்வது தெரிகிறது. சட்டென தாவிச் சென்று முன்பு சதீஷ் நின்ற மூலையில் மதுரனுக்கு எதிராக நின்று தலை சாய்த்து ஒரு பார்வை.

“ஹேய்…..க க இங்க என்ன செய்ற நீ?”

கேட்க வந்ததெல்லாம் மறந்து க க மட்டும் மனதில் நிற்கிறது.

“என்ன காகா வா?”

“க க கருங்குரங்கு கடப்பாரை….உங்க தமிழ்புலமையை மெச்சி நாங்க வச்ச பேரு….”

“சகிக்கலை”

“அப்போ ஆன்கமிங் ஔவையார்…இது எப்டி இருக்குது?”

காதிலிருந்து புகை வந்தது நல்லிசைக்கு….

“லவ் பண்ற பொண்ண பார்த்து காகா ஔவையார்னு பேர் வைக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும்தான்.”

“சாமியார்னு நீ பேர் வச்சல்ல…?”

“அது டெம்பரரி சாமியார்…”

“அப்போ நான் டெம்பரரியா காகா ன்னு கூப்டுகிறேன்… ஏற்ற நேரத்தில் மாற்றி கூப்பிடுவேன்…”

“எப்டினு?.” ஆசையாய் கேட்டாள்.

“காகம்னு..அதுதான சுத்த தமிழ்…?”

ம்ம்ம்ம்ம்ம்….பல்லைக் கடித்தாள் நல்லிசை.

“இப்டியே எங்க வீட்டு தோட்டத்தில வந்து நில்லு….நிறைய காகா வருது….ஒரு ஸ்கேர் க்ரோ வைக்கனும்னு அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..”

முறைத்தாள்.

“நாங்க படு ஜென்டில் மேன் அப்டின்னு சொல்லிட்டு திருட்டுத்தனமா லுக் விட வர்றது….பட் பேசுறது மட்டும்…ஆசையே இல்லாத மாதிரி….”

“ உன்னை பார்க்கனும்னு தோன்றப்ப பார்க்க வரத்தான் செய்வேன்…பட் இன்னைக்கு அதுக்குன்னு வரலை…”

“ஆக அந்த சதீஷைப் பார்க்கவா வந்தீங்க..? அவன்பாட்டுக்கு எங்கப்பாவை செங்கிஃஸ்கான்னு வேற சொல்லிட்டு போறான்…நீங்க ஈ ன்னு நின்னுகிட்டு இருக்கீங்க….நவ்யாவுக்குதான் அவனை பிடிக்கலைனு தெரியுதுல…அப்புறம் என்ன அந்த பொறுக்கிட்ட உங்களுக்கு பேச்சு…?”

“அப்டி இல்லமா நவ்யா சதீஷை ரொம்பவே அவாய்ட் செய்றா…எல்லா வகையிலும் சதீஷை குறை மட்டும்தான் சொல்லுவா…பட் அவங்களுக்குள்ள ஏதோ இருக்குது…”

“அப்டியே இருக்கட்டும்….அவந்தான் சரி இல்லைனு தெரியுதுல…அப்புறம் என்ன..? நவ்யாவையே நீங்க அவனை அவாய்ட் செய்ய தானே சொல்லி தரணும்?”

“அவனை அவ ஸ்ட்ராங்கா அவாய்ட் செய்தாலும், அவனை ஃபோர்ஸ்ஃபுல்லா ஃஸ்டாப் செய்தா அது பெருசா ப்ரச்சனை ஆகிடும்னு பயப்படுறா…அவனே கொஞ்ச நாள் ட்ரை செய்து பார்த்துட்டு போய்டுவான்னு சொல்றா….அவங்களுக்குள்ள என்னன்னு தெரியலை…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.