(Reading time: 17 - 34 minutes)

ரி வை!

சத்தமாக இவள் பேசுவதை கவனித்தனர் அனைவரும்.. அம்மாவுக்கு புரிந்தது இவள் பேசியது அனைத்தும் பெரியப்பாவை பற்றிதான் என்று!

அத்தை! குழலீயை எங்க கூட கொஞ்சம் வெளியே அனுப்பி வைக்கறீங்களா? அம்மாவும் கூட வராங்க! நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் மீதியிருக்கு அதில கொஞ்சம் பணம் கூட போட்டு குழலீக்கு நகையேடுக்கலாம் னு அம்மா சொன்னாங்க. நான் புடவை எடுக்கலாம் னு சொன்னேன். அப்பாதான் எதுக்கு அவளையே கூட்டிட்டு போய் எடுத்திடுங்க னு சொன்னார். நாங்க அதுக்கு தான் வந்தோம்! அடுத்த வாரம் திருமணத்தை வைத்துக்கிட்டு இப்போ வெளியே அனுப்ப கேட்கறது சங்கடமா இருக்க தான் அம்மா தயங்கினாங்க!

இதுக்கு எதுக்கு மாப்பிள்ளை கேட்கறீங்க... அதான் தாம்பூலம் மாற்றினப்பவே சொல்லிட்டீங்களே இனி அவ உங்க வீட்டு பொண்ணு னு! உங்க வீட்டு பொண்ணை அழச்சிட்டு போக என் கிட்ட கேட்கனுமா? தாரளமா போய்ட்டு வாங்க!

வேலன் பெரியப்பாவின் குடும்பத்திடம் சண்டை எதுவும் போடவில்லை.. ஆனால் பெரிதாக மதிக்கவும் இல்லை பிரபு! அவர்கள் இருப்பதையே கண்டுகொள்ளவில்லை அவன்! இக்னோர் செய்தான் என்பதுதான் சரி! மாறாக அருள்மொழி, அங்கவை, சங்கவை யிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தான்.

இதை கண்டும் காணாமல் தயாராகினாள் குழலீ! சங்கவையும் உடன் வர விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். இவள் மாமியாரோ எதுவுமே நடவாது போல சகஜமாக பேசினார்.

காரின் ஓட்டுனர் இருக்கையில் பிரபு அமர, பக்கத்து இருக்கையில் அமர சென்ற சங்கவையை தடுத்தாள் குழலீ.

அக்கா.. முன்னாடி உட்கார்ந்து மாமாகிட்ட பேசிட்டே வரேன் கா... ப்ளீஸ்!

சும்மா இரு சங்கு! இப்படி வா பின்னாடி உட்கார்' என்றாள் பின்னிருக்கையை காட்டி. அத்தை நீங்க முன்னே உட்காருங்க... நாங்க பின்னாடி இருக்கோம்!

போகும் வழியில் 'ஏன் குழலீ... நீ இங்க உட்காரலாம் இல்ல?'

இல்லைங்க அத்தை.. வேண்டாம்! அது தவறு அத்தை!

என்னமா நீ? இன்னும் நாளு நாள் கழிச்சு இது தானே உன் இடம்...உரிமை இருக்கும் போது உட்கார்ந்தா என்ன குழலீ? நானே கொடுக்கிறேன் அப்புறம் என்ன?

இல்லைங்க அத்தை... அது தவறு! இப்போ னு இல்லை.. இன்னும் நாலு நாள் கழிச்சு அதிகாரப்பூர்வ உரிமையோடு இருந்தாலும் சரி... நாலு வருடம்... நாற்பது வருடம் ஆனாலும் சரி... தவறு தான். இத்தனை நாள் நீங்க தானே உட்கார்ந்து வந்தீங்க? மாமாவோ.. கீதா அண்ணியோ இல்லையே?

இங்க அம்மா இல்லைனா மனைவி தான் உட்காரலாம்! அதனால வேற யாரும் உட்காரமாட்டாங்க! மனைவி ஒரு கணவனுக்கு தாயுமாய் இருப்பவள் குழலீ!

அது தான் அத்தை நானும் சொல்ல வரேன்! என்ன தான் மனைவினு நான் ஒருத்தி வந்தாலும் நான் ஒருகாலும் பிரபுவின் அம்மாவாக முடியாது! உங்களை ரீப்ளேஸ் செய்ய முடியாது.. அதற்கு முயற்சியும் செய்யக்கூடாது! அதனால உங்க இடத்தை, அவர் மீது உங்களுக்குகான உரிமையை பாசத்தை பங்கு போடவோ பறிக்கவோ எனக்கு எந்த உரிமையும் இல்லை! அதற்காக நான் உங்க மருமகளாய் நான் வரவுமில்லை.

அப்போ என்னை மட்டும் பார்த்து என்மீது மட்டும் அன்பு வைத்தால்... அப்புறம் நீ??? 

சிரித்துக்கொண்டே 'அத்தை...உங்க மீது இருக்கும் அன்பு வேற விதமானது! என்மீது வரும் அன்பு வேற! இந்த அன்பை உங்ககிட்ட காட்ட முடியாது.. நீங்க கொடுகிற பாசத்தை என்கிட்ட எதிர்ப்பார்க்கவும் முடியாது!' என்றாள்.

நல்லா பேசற! ஜெயிக்க முடியாது போல இருக்கே?!

தேங்கஸ் அத்தை! தேங்கஸ்!

ஆச்சர்யம்.. புன்னகை.. என கலவையான உணர்வுகளுடன் காரினை செலுத்திக்கொண்டிருந்தான் பிரபு.

என்னமா வேணும் உனக்கு? நகையா? புடவையா? என்றார் பிரபுவின் அம்மா.

...

சொல்லு பூங்குழலீ!

எவ்வளவு இருக்கும் அத்தை? ஒரு பத்து இல்ல இருபதாயிரம்?

ஆச்சர்யத்தோடு சம்பந்தி கொடுத்ததே ஒரு லட்சம் இருக்கு! நான் ஒரு லட்சம் போட்டு நகை எடுக்கலாம் னு சொன்னேன். உனக்கு என்ன வேணும்' என்றார்.

எனக்கு நகையும் வேண்டாம்... புடவையும் வேண்டாம் அத்தை...

இரண்டுமே வேண்டாமா?? சரி வேற என்ன வேணும்?

நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

சொல்லு பார்க்கலாம்!' என்றார்.

குரலும் தோணியும் மாறியிருக்க குழலீக்கு தான் பேசியது தவறோ என்று தோன்றிவிட்டது! தயங்கியவாறே தன் கருத்தை தெரிவித்தாள்.

சாலையின் ஓரமாக கார் நிறுத்தப்பட்டது. இப்போது பெரும் பீதியே அடைந்துவிட்டாள் குழலீ.

ஒரு நிமிஷத்துல நீ பேசற முழுதும் கேட்காம உன்னை தப்பா நினைச்சுட்டேன் குழலீ! பணம் எவ்வளவு இருக்குனு கேட்டீயே அப்போ! என்ன இந்த பொண்ணு பணத்தை பற்றி கேட்குது னு?

....

ஆனா.. அதை பற்றி முடிவு எடுக்க வேண்டியது உங்க மாமா.. அதனால இப்போ என்ன எடுக்கலாம் னு சொல்லு!

சரிங்க அத்தை. நகையே எடுத்திடுங்க'. அப்போது அவள் அறியவில்லை இந்த பண விஷயத்தில் தான் கூறிய கருத்து எவ்வளவு விளைவுகளை அவர்கள் வாழ்வில் கொண்டுவரப்போகிறது என்று!

தி. நகரின் அந்த புகழ் பெற்ற நகை கடையில் இருக்கும் போதே அர்ஜுனிடம் இருந்து அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. அதனால் அவனை அந்த நகை கடைக்கே வரவழைத்தாள்.

அவனை தேடிச்சென்று பார்த்த குழலீ...

டேய் எருமை! எனக்கு கல்யாணம் னு கால் செய்து சொன்னேன் ல... ஒரு வார்த்தை கேட்டியா? அப்போவே அப்புறம் கால் செய்யறேனு சொல்லிட்டு இதோ இன்னிக்கு தான் கூப்பிட்டே! என்ன தான் டா நினைச்சுக்கிட்டு இருக்க?? மாப்பிள்ளை யாருனு கேட்டியா?

ஹேய் இருடீ குரங்கு! சொல்லுறத கேளு...

ஆப்பீஸ் வர சொன்னா உன் ஆளையும் கூட கூட்டிட்டு வந்து திரும்பி போய்ட்ட.. அப்போவே சொல்லனும் னு தான் கூப்பிட்டேன். பத்திரிக்கையை பார்த்தியா இல்லையா?

என் பத்திரிக்கையை பார்க்கலியா நீ? டிசம்பர் 16 குருவாயூர்ல மேரேஜ்...

டேய் முன்னமே சொல்ல மாட்டியா? எனக்கு 12!

சரி உன் ஹஸ்பென்ட் கிட்ட நான் பேசறேன். அதற்கு முன்னாடி என் வருங்கால மனைவியும் வந்திருக்கா... அவளும் வந்திட்டும்.. வெயிட் செய்.

அச்சச்சோ!

என்ன டீ? எதுக்கு பதறுற? நீ மட்டுமா வந்த? உன் ஃபியான்சி வரலியா?

அது தான் டா பிரச்சனையே!

என்ன? - அர்ஜுன்

அதற்குள் ப்ரியா வந்துவிட அவளை அறிமுகம் செய்து வைத்தான். கை குலுக்கி பரஸ்பரம் அறிமுகபடுத்திக்கொள்ள...இருவரும் பேசி கொண்டதில் ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்து விட்டது!

உங்களை என்னமோ நினைச்சேன் ப்ரியா! நீங்க அவனுக்கு கிடைத்த பெரிய வரம்!

நீங்களும் ரொம்ப ஸ்வீட் பூங்குழலீ. உங்க ஹபி ரியல்லி லக்கி!!

இவர்கள் பேசிக்கொண்டுயிருக்க குழலீயின் மாமியார் அவளை தேடிக்கொண்டு வந்தார். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை திகைப்புடனே பார்த்து வந்தவர் அவள் அருகில் வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.