(Reading time: 10 - 20 minutes)

01. காதல் உறவே - தேவி

"துதிப்போர்க்கு வல்வினை போம்” அருகில் உள்ள கோவில் ஸ்பீக்கரில் வழிந்த சஷ்டி கவசம் கேட்டு கண்விழித்தாள் மைதிலி. வயது 28. அருகில் தூங்கிக் கொண்டிருந்தத குழந்தை ஷ்யாமை முத்தமிட்டுவிட்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி 5.30 என்றது. குழந்தை ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள் விழித்துவிடுவான். அதற்குள் காலை வேலைகளை முடிக்க வேண்டும் என்றெணணியபடி குளியலறைக்குள் புகுந்து இருபது நிமிடத்தில் வெளியே வந்தாள்.

சமையலறைக்குள் சென்று காபி போட்டபடி செல்போனில் சுப்ரபாதம் ஒலிக்க விட்டாள். முதல் நாள் நறுக்கி வைத்த காய்கறி, அரிசி மற்றும் பருப்பை குக்கரில் ஏற்றினாள். கையோடு ரசத்தையும் கொதிக்க விட்டு, காபியை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள். குடிக்கும்போதே நினைவுகள் எங்கெங்கோ செல்ல ஆரம்பிக்க குக்கர் விசிலின் சத்தம் கேட்டு ஒரு பெருமூச்சோடு நினைவுலகுக்கு வந்தாள் மைதிலி.

கையில் உள்ள காபியை தினமும் போல் ருசியறியாமல் குடித்து விட்டு வீட்டைச் சுத்தம் செய்து, குளிக்கும்கோது துவைத்த துணிகளை பால்கனியில் உலர்த்திவிட்டு உள்ளே வந்தாள். குழந்தை மெதுவாக புரண்டது. குழந்தையை எழுப்பி பிரஷ் செய்து, குளிக்க வைத்தாள். குழந்தைக்கு காலை உணவாக இரண்டு இட்டிலியை ஊட்டி விட்டு தானும் மூன்று இட்டிலி உண்டாள். குழந்தைக்குத் தேவையானவற்றை ஒரு கூடையில் வைத்துக் கொண்டு இருவருமாகக் கிளம்பினர்.

Kathal urave

ஸ்கூட்டியில் முன்புறம் கூடை மற்றும் கைப்பையைத் தொங்க விட்டு விட்டு, குழந்தையை நிற்க வைத்து வண்டியை கிளப்பினாள். இருபது நிமிடங்களில் முதலில் மூன்றரை வயது குழந்தையை க்ரீச்சில் உள்ள ஆயாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு விட்டு அடுத்த 10 நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாள்.

மைதிலி அந்த அலுவலகத்தில் ர்.சு நஒநஉரவiஎந ஆக பணியாற்றுகிறாள். அன்றைய அட்டெண்டஸ் ரிஜிஸ்டரை சரி பார்த்துவிட்டு, லீவில் உள்ளவர்கள் விபரங்களை சரிபார்த்தாள். பிறகு அன்றைய வேலைகளை ர்.சு ர்நயன   மெயில் அனுப்ப அதன்படி செய்ய ஆரம்பித்தவள், சின்ன சலசலப்பில் மணியைப் பார்த்தவள் ஒன்று என, ஷ்யாமை பார்த்துக் கொள்ளும் ஆயாவிடம் விசாரித்துவிட்டு சாப்பிட்டாள். மீண்டும் மாலை 5.30 மணிக்கு க்ரீச்சில் இருந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வரும்போது ரேடியோவில் கேட்ட “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்” பாடலால் வண்டியில் சடன் பிரேக் போட்டு நிறுத்தியவள் பின் சுதாரித்து வீட்டிற்குச் சென்றாள். ஷ்யாமிற்கு தேவையானவற்றை பழக்கத்தில் செய்த போதும், குழந்தையை தூங்க வைத்தபின் மனமோ கொஞ்சமும் அடங்காமல் ஐந்து ஆண்டு பின்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

பிராங்கஃபோர்ட் - மணி இரவு 11.00. ராம் தன் செல்போனை பார்த்தான். இந்தியாவிலிருந்து வந்த ஐந்து அழைப்புகள் எடுக்கவில்லை. இனியும் தள்ளிப் போட முடியாது. வீட்டிற்கு எல்லோரும் அநேகமாக 6.00 மணி சுமாருக்கு வந்து விடுவார்கள். எனவே லேண்ட் லைன் டயல் செய்தான். போன் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில்

“ஹலோ, ராம். கண்ணா, அண்ணா” என்ற பல குரல்கள் கேட்க, சிரித்து விட்டு “ஒருவர் ஒருவராக பேசுங்கள் ”என்றான் ராம்.

அப்பா முதலில் “ராம், எப்படி இருக்கிறாய்? எப்போ வருகிறாய் ?” கேட்க

“நன்றாக இருக்கிறேன். இன்னும் டிக்கெட் புக் பண்ணவில்லை” என்றான் ராம்.

அம்மா “ சாப்பிட்டாயா?” என, தங்கையோ “நீ வரவில்லை எனில் இங்கு விசேஷம் நடக்காது” என்றாள்.

“ஏனம்மா? எப்படி வராமல் இருப்பேன்.” விசேஷத்திற்கு இன்னும் 20 நாட்கள் இருக்குல்லமா? 10, 15 நாளில் வரப்பார்க்கிறேன்” என்றான்.

அம்மா “கண்ணா, பாட்டி, அத்தை வீட்டிற்கும் பேசி விடு” என்க ராம் “சரிம்மா, எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் அம்மா? உங்கள் எல்லோரையும் தேடுகிறது,” “நீயும் எங்களோடு இருந்தால் நன்றாகவே இருப்போம் ராம்”

அப்பா “ சரிப்பா , டிக்கெட் எடுத்து விட்டு போன் பண்ணு. போய்த் தூங்கு. மணி பதினொன்று ஆகிறது பார்.” என்றார்.

ராம் அவன் தாத்தா மற்றும் அத்தையிடம் பேசி விட்டு வருவதற்குள், ராம் மற்றும் அவன் குடும்பத்தைப் பற்றிய சிறிய அறிமுகம்

திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் வசிக்கும் 85 வயது சூர்ய நாராயணன், லக்ஷ்மி தம்பதியர். அவர் ரிடையர்ட் கவர்மெண்ட் ஊழியர். ஊரில் நில புலன்களில் விவசாயம் செய்து வருகிறார். அவர்க்கு ஒரு மகன், ஓரு மகள். மகள் சுபத்ரா சென்னையில் திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறாள். மகன் ஜெகந்நாதன் சென்னையில் ஆட்டோமெபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரித்து முண்ணனி கம்பெனிகளுடன் வியாபாரம் செய்பவர், அம்மா கௌசல்யா குடும்பத் தலைவி.

ராம் ஜெகந்நாதனின் முதல் மகன். சென்னை ஐஐவு ல் டீ .வுநஉh ரூ ஆ.டீ.யு முடித்து விட்டு, தந்தையின் ஆட்டோமொபைல் பிஸினெஸோடு வேறு சில தொழில்களிலும் பொறுப்பேற்றுள்ளான். வயது 33. சூர்யா குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகிறான். தற்போது ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி நிர்வாகித்து வருகிறான். பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் குணத்திலும் ராமனே. தவறு பொறுக்காதவன். சற்று முன்கோபியும் கூட.

தங்கை சபரி டீ.டீ.யு ரூ ர்.சு உழரசளந முடித்துவிட்டு அவர்கள் கம்பெனியில் பொறுப்பேற்றுள்ளாள். வயது 28. திருமணமாகி குழந்தை அஸ்வினுக்கு ஒரு வயது நிறையப் போகிறது. சற்று தாமதமாக பிறந்த குழந்தை அவளுடைய கணவர் முரளி சிவில் இன்ஜீனியரிங் முடித்து விட்டு சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தி வருகிறார். அவர்கள் வேறு சில தொழில்களும் செய்து வருகின்றனர்.

ராம் வீட்டிற்கு பேசிவிட்டு அத்தை வீட்டிற்கு பேசினான். அங்கேயும் சந்தோஷ் , சைதன்யா மற்றும் அத்தையிடம் பேசி விட்டு, தாத்தா பாட்டிக்கும் பேசினான். எல்லோரும் அவன் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். அதிலும் தாத்தா பாட்டி அவன் சென்னை வரும் அன்றுதான் தானும் மகன் வீட்டிற்கு வருவதாக கூறினார். அம்மா ஓரே பெண். அம்மா வழி தாத்தா பாட்டியும் இறந்து 10 வருடங்களாகிறது. அதனால் அம்மாவிற்கும், அத்தையிடம் ஒட்டுதல். தனித் தனியாக இருந்தாலும் கூட்டுக் குடும்பம் போல் வாழ்பவர்கள்

சபரியின் திருமணத்திற்கு பின் ஜெர்மன் வந்தவன் தற்போதுதான்; மீண்டும் இந்தியா செல்லப் போகிறான். இத்தனை நாள் சொன்ன மாதிரி இனியும் சாக்கு சொல்ல முடியாது. சைதன்யா திருமணத்திற்குக் கூட ஒரே நாளில் கிளம்பி விட்டான். இப்பொழுது அஸ்வினின் காதுகுத்து மட்டுமல்லாது, ராமின் தாய் தந்தையரின் சஷ்டியப்த பூர்த்தியும் வருகிறது. அதை விமரிசையாகக் கொண்டாடுவது கடமை அது மட்டுமல்லாமல், இத்தனை நாள் விலகியிருந்து அவர்களை வருத்தியது போதும். ஏனெனில் ராம் எல்லோருக்கும் மூத்தவன் மட்டுமல்லாது செல்லமும் கூட. ஒருவர் கூட அவன் மனம் வருந்தும் விஷயங்களை இதுவரை பேச வில்லை. ஆனால் விசேஷத்தில் எல்லோரும் அப்படியா இருப்பார்கள். சமாளித்துத் தான் ஆக வேண்டும். ஒரு பெருமூச்சுடன் டிராவல் ஏஜென்சியில் அடுத்த 10 வது நாள் சென்னைக்கு புக் பண்ண சொன்னவன், உறங்கச் சென்றான்.

மைதிலிக்கு அந்தப் பாட்டு கணவனை நினைவு படுத்தியது. அவனை முதன் முதலில் பார்த்த நாள் மனதில் படமாக ஓடியது. எவ்வளவு தூரம் அவனை நினையாமல் இருக்க மனதை அடக்கியிருந்தாளோ, அவ்வளவு வேகமாக வெளியே கொட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.