(Reading time: 10 - 20 minutes)

ந்து வருடங்களுக்கு முன், அவள் நுஎநவெ ஆயயெபநஅநவெ நிறுவனத்தில் வேலை பார்த்தாள். அந்த நிறுவனம் ஒரு நிகழ்ச்சியை பொறுப்பேற்று எந்தத் தடங்கலும் இல்லாமல் நடத்திக் கொடுக்கும். நிகழ்ச்சி என்பது திருமணம் போன்ற குடும்ப விழா மட்டுமல்லாமல் கோவில் விழாவிலிருந்து அரசியல் விழாக்கள் வரை நடத்தித் தருவதால், அவர்களுக்கு ஆட்கள் தேவை அதிகம். அலுவலகத்தில் மட்டுமே சுமார் 30 பேர் வேலை செய்கிறார்கள். மைதிலியும் அந்தப் பிரிவில் தான் வேலை பார்த்து வந்தாள். அவர்கள் நடத்தும் விசேஷங்களில் வரவேற்பில் தொடங்கி சாப்பாடு, போட்டோ வீடியோ, தாம்பூலம் வரையும், குடும்ப விழா அல்லாத மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் நினைவுப் பரிசு, பந்தல் என அனைத்து வேலைகளுக்கும் இவர்கள் பொறுப்பேற்று நடத்துவார்கள். மைதிலியின் வேலை வரப்போகும் நிகழ்ச்சிகள், அதற்கு பொறுப்பேற்ற அலுலர்கள் யார், யார் அவர்களின் பொறுப்புகளை மற்ற அலுவலரோடு ஒருங்கிணைத்து மொத்தமாக ஒரு நிகழ்ச்சி அட்டவணை தயாரிப்பது.

இந்நிலையில் ஒரு நவம்பர் மாதத்தில் சூர்யா கம்பெனியின் குடும்ப விழா ஒன்று இவர்கள் பொறுப்பில் நடைபெற்றது. அவர்கள் கம்பெனி சார்பில் சூபர்வைசர் போன்ற ஒருவர் விழா நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் கம்பெனியின் எழுதப்படாத சட்டம். அன்றும், மறுநாளுமாக கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் அவர்கள் நிறுவனம் மூலமாக நடைபெற்றதால், சூபர்வைசர் பற்றாhக்குறை ஏற்பட்டது. மேலும் ஒரு சூபர்வைசர் அப்பா சீரியஸாக இருப்பதால், அவர் வரவில்லை. அதனால் மைதிலியின் ஹாஸ்டல் விழா நடைபெறும் இடத்திற்கு சற்று அருகில் இருப்பதால், போய் ஒருமுறை பார்த்துவிட்டு இரவு அவளை கிளம்பச் சொல்லி உத்தரவு வந்தது. அதற்காக அவள் மாலை 6.00 மணி அளவில் அந்த மண்டபத்திற்குச் சென்றாள். அவள் கையில் அந்த விழா சம்பந்தப்பட்ட பைல் இருந்தது. பந்தல் அலங்காரங்களிலிருந்து எல்லாவற்றையும் கவனித்தபடி நடந்தாள்

அது ஒரு சதாபிஷேக விழா. மறுநாள்தான் சதாபிஷேகம். முதல் நாள் ஏதோ சில சாஸ்திரங்கள் நடைபெற்று முடிந்தது. இனி இரவு 8.00 மணிக்கு உணவு தயாராக வேண்டும். அங்கே சென்று சரிபார்த்து விட்டு மேலே மண்டபத்திற்கு சென்றாள்.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” பாடல் கேட்டது ஆச்சரியமாயிருந்து. பொதுவாக இது போன்ற விழாக்களில் கர்நாடக இசைக் கச்சேரி, கதாகாலாட்சேபம் போன்றவை தான் ஏற்பாடு செய்யப்படும். எதுவும் நிறுவன தவறாக இருக்குமோ என்றெண்ணியபடி தன்னுடைய அட்டவணை சரிபார்த்தாள். அதில் இந்நிகழ்ச்சி பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் கச்சேரி நடைபெற்று வந்தது.

அடுத்த பாடல் “காலங்;களில் அவள் வசந்தம்” எனவும் அப்படியே நின்றாள். பாடிக்கொண்டிருந்தவன் கம்பீரத்திலும் குரலிலும் மெய் மறந்து நின்றாள். அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள், அங்கிருந்த அனைவரயும் அவர்கள் தன் பாடலால் கட்டி வைத்ததைப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்தாள்;. பிறகு கீழே டைனிங் ரூம் சென்று மேற்பார்வை பார்த்தாள்.

அங்கே சூர்ய நாராயணனின் பேரன் பேத்திகள் நால்வருமாக கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நால்வருமே முறையாக சங்கீதம் பயின்றவர்கள். இதையறியாத மைதிலி காதுகளில் ஒலித்த குரல் இனிமையை ரசித்தபடி வேலையைப் பார்க்கச் சென்றாள்

ண்டபத்தில் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த ராம், அப்போது தாத்தா அருகில் வந்து “வாப்பா, சாப்பிடலாம்” எனவும் வீட்டில் எல்லோரும் காத்திருப்பதை அறிந்து அவனும் சென்றான்.

கீழே டைனிங் ஹாலில் இருந்த மைதிலி எல்லோரும் சாப்பிட வரவும் நகர்ந்து கை கழுவும் இடத்தில் டிஷ்யூ, லிக்விட் மற்றவற்றைச் சரி பார்த்தாள். அப்போது கை கழுவ வந்தவனைப் பார்த்து சிரித்தபடி “ஹலோ சார் !” என்ற குரல் கேட்டுத் திகைத்தான். ஏனெனில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் உறவினரே. யார் சார் என்று கூப்பிடுவது என்று நினைத்தபடி திரும்பியவன் எதிரில் நின்ற பெண்ணைப் பார்;த்தவன், அப்படியே நின்றவன், ஐந்தரை அடி உயரமும், உயரத்திற்கேற்ற உருவமும் அழகான வட்ட முகமும், பெரிய கண்களும், அவனை விழத்தட்டியது. எல்லாவற்றையும் விட அவளது நீண்ட கூந்தல் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

“நான் மைதிலி” எனவும் “நான் ராம்” என்று கூறியவுடன் இருவர் மனதிலும் தோன்றியது என்ன ஒரு பெயர் பொருத்தம். அப்போது அவர்கள் இருவர் கண்ணும் நோக்கிய போது கம்பரின் “அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.” என்ற வரிகளே ஓடியது.

யாரோ வரும் அரவம் கேட்டு சுதாரித்த மைதிலி ராமிடம்

“மிஸ்டர் ராம். நான் இந்த நுஎநவெ ஆயயெபநஅநவெ நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்த கச்சேரி நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. நீங்கள் இவர்களுக்கு தெரிந்தவர்களா?.”

“இதோ என் நண்பன் சந்தோஷ் தான் எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்தான்” சந்தோஷ்யைப் பார்த்து மெலிதாக கண்ணடித்தான்.

“ஓ .. உங்கள் பாடல் தேர்வு அருமையாக இருந்தது. மேலும் அனைவரும் நன்றாகப் பாடினீர்கள் சரி உங்கள் செல் நம்பர் கொடுங்கள். நான் உங்களை காண்டாக்ட் செய்து வாய்ப்புகள் வரும்போது சொல்கிறேன்”

“தேங்கஸ். சரி. என் நம்பர் 98…….. .” என்றான்.

“உங்கள் குரலினிமையில் அனைவரையும் அசைய விடாமல் செய்து விட்டீர்கள். மிகவும் மென்மையான அதே சமயம் இந்த விழாவிற்கேற்ற பாடலாக தேர்வு செய்து இருந்தீர்கள் மிஸ்டர் ராம்” பேசிக் கொண்டிருக்கும் போது ராம் இடைமறித்து “ராம் என்று அழைத்தால் போதும் மிஸ்.மைதிலி ” என்று கூறினான்.

தலையாட்டியபடி “நீங்களும் என்னை ஒருமையில் கூப்பிடலாம். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவள் மணியைப் பார்த்து விட்டு கிளம்பத் தயாரானாள்.

தொடரும்

Episode 02

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.