(Reading time: 11 - 21 minutes)

09. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

ரிது- ஆதியின் பெண் பார்க்கும் படலம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிவடைந்தது.. அன்று அவளை பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை தொடர்பு கொண்டு பேசவோ , நேரில் சென்று பார்கவோ முயலவில்லை. அவள் அன்று பேசிய வார்த்தைகளின் தாக்கம் ஆதியை மிகவும் பாதித்தது உண்மை தான். முதல் முதலில் பார்த்த ரிதுவிற்கும் தற்போது உள்ள ரிதுவிற்க்கும், மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான். ஆனாலும் அவளை அப்படியே விட மனமில்லாமல் தன் தந்தையிடம் பேசி  திருமணத்திற்கு  விரைவில் நாள் பார்க்குமாறு கூறினான்.

ரிதுவோ தனக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும்  இல்லாதது போல் நடந்து கொண்டாள்.அவளின் படிப்பு முடிய இன்னும் ஒரு வாரம் இருந்தது . தேர்வு சமயம் என்பதால் அவளை அதிகம் யாரும் எதுவும் கேட்காமல் திருமண ஏற்பாட்டை பார்த்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் தான் ஆதி டெல்லி செல்ல வேண்டுமென்று வந்து நின்றான்.

Katre en vasal vanthai

ன்று மதியம் அதிசயமாக வீட்டிற்கு வந்த ஆதியை பார்த்த மீனாக்ஷி "என்னடா! இன்னிக்கு அதிசயமா சாப்பிட வீட்டுக்கு வந்து இருக்கற. மழை தான் வர போகுது." என்று கிண்டல் குரலில் கூறவும் 

"மாம்ஸ்!! விளையாடாதிங்க! நான் இப்போ அவசரமா டெல்லிக்கு கிளம்பிட்டு  இருக்கேன். நான் திரும்பி வர நாலு நாள் ஆகும். நான் போய் என்னோட திங்க்ஸ் பாக் பண்ணி எடுத்துட்டு வரேன். நீங்க எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க." என்று கூறி இரண்டிரண்டு படிகளாக தாவினான்.

"டேய் என்னடா!! நாளைக்கு டிரஸ் எடுக்க  போகணும் .இப்போ வந்து இப்படி சொல்லுற. அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ எங்கயும் போக வேண்டாம். ஒழுங்கா நாளைக்கு எங்களோட வர " என்று கூறவும் 

"மாம்ஸ் ! ப்ளீஸ். நானும் வேணும்ன்னு போகல. இத தவிர்க்க முடியாது. நாலு நாள்ல வந்துருவேன்." என்று கெஞ்சும் குரலில் சொல்லவும் 

"டேய் போடா. நீ போக கூடாது " என்று சொல்லும் போது அங்கே வந்த சொக்கநாதன் 

"என்ன ? யாரு எங்க போக கூடாது" என்று கேட்டுகொண்டே வரவும் 

"பாருங்க இவனை! நாலு நாளைக்கு டெல்லி போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு வந்து நிக்கறான். நீங்களே வந்து அவனுக்கு எடுத்து சொல்லுங்க. நாளைக்கு ஜவுளி எடுக்க போகும் போது சம்பந்தி வீட்ல இவன் எங்கன்னு கேட்டா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது " என்று மீனாக்ஷி அவரிடம் புகார் வாசிக்கவும்

"போச்சுடா!! பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டாங்க. ஆதி இதுல சிக்காத. சமாளி. நல்ல வேலை அந்த குட்டி பிசாசு இல்லை . இல்லேன்னா இன்னும் எடுத்து குடுப்பா . அதுக்குள்ள எஸ்கேப் ஆகு" என்று மனதில் கூறி கொண்டவன் வெளியில் சிரித்த படியே

"மாம்ஸ் !! அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். நான் மாமாவுக்கு ஏற்கனவே கால் பண்ணி சொல்லிட்டேன். அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சோ நான் இப்போ கிளம்பி  நாலு நாள்ல சமத்து பையனா திரும்பி வந்துருவேன். அதனால இப்போ கொஞ்சம் சிரிச்சிட்டே வந்து எனக்கு சாப்பாடு போடுங்க" என்று அவரின் கன்னத்தை இரண்டு பக்கமும் பிடித்து கேட்கவும்

“டேய் போடா நீ என்ன தான் அவங்க வீட்ல கால் பண்ணி சொல்லி இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல நீ கண்டிப்பா ரிது கூட இருக்கனும். வர வர நீ செய்யறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கலை"

"ஹ்ம்ம் இது ரொம்ப முக்கியமான விஷயம். அதுக்கு தான் நானே போறேன். இல்லேன்னா ரமேஷ் தான் அனுப்பி இருப்பேன். ப்ளீஸ் இந்த ஒரு டைம் மட்டும் என்னை மன்னிக்க கூடாதா" என்று அவரின் கன்னத்தில் முத்தமிடவும்

"டேய் டேய் !! அவ என் பொண்டட்டிடா!! அவளை விடு. என் முன்னாடி இனிமேலே இப்படி பண்ணாத" என்று சொக்கநாதன் கூறவும்,

"ஹை பொறமை!! வேணும்ன்னா நீங்களும் குடுங்க. யாரு வேண்டாம்ன்னு சொன்னங்க. நான் ஏதும் தப்பா நினைக்க மாட்டேன்." என்று கண் சிமிட்டி தான் தந்தையை பார்த்து கூறவும்

"நான் ரெடி தான். !! எங்க உங்க அம்மா தான் ஒத்துக்க மாட்டிங்கறா. கிட்ட வந்தாலே கரண்டியை தூக்கறா" என்று போலியாக கூறவும்

"ஆஹா மாம்ஸ் சூப்பர் சான்ஸ் . மிஸ் பண்ணாதிங்க." என்று அவரை பார்த்து கிண்டல் குரலில் சொன்னான்.

தன் பின்பு கேலியும் கிண்டலுமாய் மதிய உணவை முடித்தவன் டெல்லி நோக்கி  தன் பயணத்தை தொடங்கினான்.  

சென்னை விமான நிலையத்தை அடைந்தவன் , செக்கிங் முடிந்த பின்பு சிறிது நேரம் காத்திருந்தவன் மதுவின் மொபைலுக்கு கால் செய்தான். நாட் ரீச்சபிள் என்று வரவும்  தன் பயண விவரத்தை மெசேஜ் அனுப்பியவன் , அடுத்து ரிதுவை அழைத்து பேசலாமா என்று ஒரு நொடி யோசித்தான். ஆனால் அடுத்த நொடியே  தன் முடிவை மாற்றியவன் , மொபைலை அணைக்கவும் அவனின் விமானம் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

டெல்லி சென்றவன்  தன் வீட்டிற்கு அழைத்து பத்திரமாக இருப்பதாக கூறி அவனின் வேளையில் மூழ்கினான்.

மதுவிற்கு தேர்வு சமயம் என்பதால் ஆதி டெல்லி சென்ற விஷயம் அவளுக்கு வீடிற்கு வந்த பின்பு  தான் தெரியும். 

"உனக்கு அவன் கால் செஞ்சானாம். உன்னோட போன் நாட் ரீச்சபிள்  சொல்லி உனக்கு மெசேஜ் பண்ணிருகான் பாரு" என்று மீனாக்ஷி சொல்லவும் 

"ஒஹ்!! சரிமா . நான் போனை  பாக்கவே இல்லை. எனக்கு அசதியா  இருக்கு. நான் என் ரூம்க்கு போறேன்" என்று அவளின் அறையை நோக்கி சென்றாள்.

அவளின் மனமோ மதியம் நடந்த நிகழ்வை அசை போட துவங்கியது. 

தேர்வு முடிந்து தன்  தோழிகளுடன் பேசிய படியே வெளியே வந்தவளின் அருகே சலேரென ஒரு கார் வந்து  நின்றது.

கார் வந்து நின்ற வேகத்தில் திரும்பி நின்று  டிரைவரை  திட்ட தொடங்கவும், டிரைவர் சீட்டில் இருந்து ரஞ்சன் இறங்கவும் சரியாக இருந்தது.

அவனை பார்த்து மேலும் கடுப்பானவள் " ஏய் அறிவில்லை உனக்கு" என்று ஆரம்பித்தவளை மேலும் தொடர விடாமல் வேகமாக அவளின் அருகே வந்தவன் அவளின் வலது கையை பிடித்து அவளின் தோழிகளிடம் திரும்பி " சாரி friends !! எமர்ஜென்சி. நான் இவங்க பாமிலி friend தான்.. பயபடாதீங்க. நான் இவங்களை பத்திரமா வீட்ல கொண்டு போய் விடறேன்" என்று கூறியவன் அவர்கள் சென்றதும் முன் பக்க கதவினை திறந்து வைத்து "ஏறு" என்று சொல்லவும் அவள் அசையாது இருக்கவும், அவளின் வலது கையை பிடித்து அவளை முன் சீட்டில் அமர வைத்தவன் , திரும்பி வந்து அவன் சீட்டில் அமர்ந்து காரை முன்பை விட வேகமாக எடுத்தான்.

"ஏய் யாருக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்போ என்னோட கையை இப்டி புடிச்சு இழுத்த. ச்சே கை வலிக்குது." என்று கூறி மணிக்கட்டை தடவவும் அவளை திரும்பி பார்த்தவன் ஏதும் பேசாமல் இன்னும் அதிக வேகமாக  காரை செலுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.