(Reading time: 19 - 37 minutes)

15. என் உயிர்சக்தி! - நீலா

ல்லி வழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி...

அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி...

ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி..

En Uyirsakthi

அன்னம் இவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி

கெட்டிமேளம் கொட்டிட மணபெண்ணைத் தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை...

டிஜே வால் இந்த பாடல் ஒலிக்கப்பட அவசரமாக பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள் பூங்குழலி!

வந்தவளின் கண்கள் அலைபாய்ந்துக்கொண்டே இருந்து! 'யாரை தேடுகிறாள் இவள்?' என்ற எண்ணம் தோன்றினாலும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் அவளது அருமை கணவன்!

அருகில் இருந்த ஷாஜியிடமும் மலரிடமும் ஏதோ கேட்கிறாள் குழலீ... அவர்களும் சிரித்துக்கொண்டே பதில் சொல்ல அதற்கு அவளிடம் இருந்து ஒரு முறைப்பை வாங்கிக்கொண்டார்கள்.

குழலீயின் கண்களில் மின்னல்! முகத்தில் ஒரு கலவையான உணர்ச்சி... ஆனந்தத்தின் வெளிப்பாடு! இவை அனைத்துடன் நின்றது அவளது தேடல்.. பிரபுவை கண்டதும்!

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி

உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ...

பாடல்வரிகள் பிண்ணனியில் அவள் மேடையேறினாள். புன்னகை மாறாது அதே வசீகர கன்னத்து குழியுடன் சிரித்துக்கொண்டிருந்தான் பிரபு!

அந்த கருநீல கோட் சூட் ரேமாண்ட் விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல அவனுக்கென்று கனக்கச்சிதமாய் தயார் செய்யப்பட்டது என்று தெளிவாக காட்டியது. அதற்குள்ளே ஒரு அவன் அணிந்திருந்த சட்டை பிங்க் நிறமாய் இல்லாமல் அடர் தாமரை வண்ணத்தில் சிவப்பு கலந்து குழலீயின் உடைக்கு ஏற்றவாறு இருந்தது! அவனின் இந்த தோற்றத்தை கண்களால் வாங்கி மனதில் பதித்து கொண்டிருந்தாள் பூங்குழலீ!

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி

உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ...

பிரபுவிற்கு ஏனோ முதலில் ஒலித்த பாடல் வரிகள் இவளுக்கு ஏற்றதாய் இருப்பது போல் தெரிந்தது. நிஜமாகவே இது குழலீதானா? என்று தோன்றிவிட்டது..'இவளை போய் அழகில்லைனு சொல்லிட்டேனே! ரொம்ப ஹர்ட் செய்துட்டேனோ?'

நேர்த்தியாக பின் செய்யப்பட்ட அந்த தாமரை வண்ண கனத்த டிசைனர் சாரியில் ஒளிரும் கற்களுக்கு இணையாக அவள் கழுத்திலும் காதிலும் கைகளிலும் வைரங்கள் மின்னிக்கொண்டிருந்தன!

உனக்கு தங்கத்திலே தான் ஈடுபாடு இல்லை.. அதனால் தான் வைரமாக வாங்கிட்டோம் என்று பரிசம் போட்டபோது அவளது மாமியார் மாலதி வைரத்தோடும் வைரத்தில் கழுத்தாரமும் தட்டில் சீராக வைத்துகொடுத்தார். மோதிரம் மாற்றிக்கொள்ள சொன்ன போது எதிரும் புதிருமாய் அமைந்திருக்கும் இரண்டு 'P' எழுத்துக்கள் பார்ப்பதற்கு இரண்டு சாவிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு இதயமானது போல தோற்றம் உள்ளமோதிரத்தை குழலீ போட்டுவிட... பிரபு இவளுக்கு கைகளில் வைர வளையல்களை அணிவித்தான்!

இவளது இடுப்பளவு நீள கூந்தல் விரியவிடப்பட்ட பவுன்சிங்க் கர்ள்சாக மாறியிருந்தது. மாறாதிருந்தது காலையில் அவன் அணிவித்த மஞ்சள் கயிறு தாலியும் நெற்றியில் இட்ட குங்குமமும்!

ஹீல்ஸ் அணிந்துக்கொண்டு நடக்க தெரியாமல் நடந்து வந்த குழலீ கடைசி படிகளில் கால் தடுக்கிவிட அவள் கைபிடித்து அழைத்து செல்ல வந்த பிரபு அவளை கைக்கொடுத்து தாங்கினான்.

பின்னால் இருந்து 'ஓ!' என்று ஆக்ரோஷமாய் அரைக்கூவல்! 

அவனது தொடுகை அடிவயிறு வரை சில்லிட்டு சிலிர்த்தது இவளுக்கு! ஆனால் அடுத்த நொடி இவன் காதல் கணவன் இல்லை என்று அறைந்தது அறிவு! மனமோ நெகிழ தொடங்கியிருந்தது! 'சக்தி கன்ட்ரோல் யூவர்சேல்வ்! ஹி இஸ் நாட் யூவர்ஸ்!' என்று இடித்தது அறிவு!

அண்ணி சும்மா இருங்க... மேடம் கால் தடுக்கி விழ போனாங்களேனு கைக்கொடுத்தேன்! நீங்க எல்லாம் இப்படி கலாட்டா செய்றதை என் வைஃப் பார்த்தா எங்களை.. இல்ல இல்ல என்னை தப்பா நினைக்க மாட்டா?'

அறிவுக்கும் மனதிற்கும் இடையே போராடிய குழலீயினது கவனம் இப்போது இவர்களிடம்!

இவளிடமாய் திரும்பி 'மேடம்! சாரி தப்பா எடுத்துக்காதீங்க! என் வைஃப் பூங்குழலீ வந்தபிறகு நீங்க மேடையேறி வந்து எங்களை விஷ் செய்யுங்க... இல்லைனா நாங்களே வந்து உங்களை பார்க்கிறோம்.. அதற்கான ஏற்பாடு தான் செய்திருக்கிறோமே? என்ன அண்ணி இவங்களை கூட்டி போய் உட்கார வையுங்க! ஆமாம் ஷாஜித்தா உங்க ப்ரண்ட் எங்கே? உங்களை அவக்கூடத்தானே இருக்க சொன்னேன்?'

வைத்தக் கண் வாங்காமல் பிரபுவை முறைத்துக்கொண்டிருந்தாள் குழலீ. பிரபு 'என் வைஃப்' என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் குழலீயின் கன்னங்கள் அவளறியாமலே செம்மையுற்றன!

பிரபு உங்களை எண்ண செய்றதுனே தெரியலை! இதுதான் 'உங்க வைஃப்' பூங்குழலீ! - ஷாஜித்தா.

சும்மா விளையாடாதீங்க ஷாஜி! குழலீ இப்படி இருக்க மாட்டா! எனக்கு தெரியும்!'

எப்படி இருக்க மாட்டா? இவ்வளவு அழகா இருக்க மாட்டா இல்ல?? மார்டனா இருக்க மாட்டால்ல?' என்று யாழினி விளையாட்டாய் கூற அதற்கு அவனும் 'ஆம்!' என்று தலையசைக்க யாழினி கூறியது திருப்பி அவனிடம் உறைத்து விட்டு திரும்பி நடக்க முனைந்தவள் ஏதோ தோன்ற திரும்பி அவனை பார்த்துவிட்டு வரவேற்பில் குருப் போட்டோ எடுப்பதற்காக போடப்பட்ட அந்த நாற்காலி அருகே போய் நின்றுவிட்டாள்.

அவளருகே சென்று நின்றவனை கேமராக்கள் விழுங்கிக்கொண்டருந்தன. 'ஏய் பூ! சும்மா தான் உன்னை கலாய்க்கலாம்னு தான் அப்படி பேசினேன்.. சத்தியமா உன்னை ஹர்ட் செய்யனும் என்ற எண்ணம் இல்லை!'

முதல் முறையாய் அவளை துன்புறுத்தி விட்டு விளக்கமும் கொடுக்கிறான் அவன் இயல்புக்கு எதிர்மறையாய்! இவளிடமான அவனது செய்கைகள் குறித்த ஆராய்ச்சியில் குழலீயின் மனதிற்கும் அறிவுக்குமான போராட்டமும் வாக்குவாதமும் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அதை மறைத்து சகஜ நிலையில் தன்னை காட்டிக்கொள்ள பெரும்பாடு பட்டாள்! இதுவும் இவள் இயல்பில்லையே! எந்த வித உணர்வாய் இருந்தாலும் அதை வெளிப்படுத்தி வடுவாள் பூங்குழலீ... வாய் வார்த்தையாய் இல்லை எழுத்து வடிவமாய்!

எல்லோரிடமும் சிரித்து பேசி கலகலப்பாய் இருந்தாலும் பிரபுவிடம் ஒரு வார்த்தை சிரித்து பேசவில்லை. எல்லோர்முன் மட்டுமே அவனுடன் பேசினாள் பூங்குழலீ!

வழக்கமான வரவேற்பில் மணமக்களை தேடி வந்து வாழ்த்து கூறுவார்கள்! ஆனால் இங்கே தலைகீழ்! பார்ட்டி ஸ்டைலில் அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவ மேசைகளை சுற்றி நாற்காலிகள் போடப்பட்டு அதில் அமர்ந்திருந்தார்கள் வாழ்த்து கூற வந்தவர்கள்.  

இதழ்களில் புன்னகையுடன் வந்தவர்களை அவர்கள் அருகே தம்பதியாக சென்று வரவேற்று வாழ்த்துப்பெற்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் இருவரும்!

காலையை போலவே இப்பொழுதும் பரிசுகளுக்கு தடை! இருவரின் பள்ளி, கல்லூரி, அலுவலக நணபர்கள் அனைவரும் வந்தருந்து வாழ்த்தினார்கள். வரவேற்பு முடிந்து கூட்டம் கலைய தொடங்கியதும் போட்டோகிராப்பர் பிடித்துக்கொண்டார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.