(Reading time: 19 - 37 minutes)

ன்று மதியம் தேர்வில் இருந்து வரும்போதே வீடு களைகட்டியிருந்தது. தடபுடலாக மறுவீட்டு விருந்து தயாராகியிருந்தது. இவர்கள் வருகைக்காக காத்திருந்தனர். மூன்றாம் மாதம் இவள் தாயகம் திரும்பிய பின்னர் தாலிக்கொடியை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

விருந்து முடிந்து பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள் பூங்குழலீ. விட்டுச்செல்லும் அவளுக்கு மனதில் பாரமில்லை..எப்போதும் போல் இயல்பாய் இருந்தாள். ஆனால் லஷ்மியும் அருள்மொழியும் தான் கண்கலங்க நின்றிருந்தனர். தனியே அழைத்து சென்ற லஷ்மி அறிவுறைகள் கூற அதை காதில் வாங்கிக்கொண்டாள்.

ஏன்டீ உனக்கு மனசு கஷ்டமாயில்லையா? - லஷ்மி

எதுக்கு மா?

எதுக்கா?

ஆமாம். நான் இந்த வீட்டுல இருந்து போனா உங்களுக்கு நிம்மதி சந்தோஷம்னு சொன்னீங்கல்ல? இப்போ உங்களுக்கு அந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் வந்திடுச்சுல்ல! அதுக்கு என் மனசு ஏன் கஷ்டப்படனும்??'

அடிப்பாவி!

நீங்க கவலைப்படாதீங்க அத்தை! நான் பார்த்துக்குறேன்!- பிரபு

பெற்றவர் கலங்கிய கண்களோடு விடை கொடுக்க குழலீ புன்னகையுடன் புறப்பட்டாள்.

புகுந்தவீட்டில் அவர்கள் முறைப்படி ஒவ்வொரு சாங்கியமும் நடந்தது. மிகுந்த சிரத்தையுடன் அவற்றை கவனத்தில் ஏற்றிக்கொண்டாள் குழலீ. சந்தேகம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டாள்.

என்ன அண்ணி இந்த சாங்கியத்தில்ல இவ்வளவு டவுட் உங்களுக்கு? பாத்து அண்ணி இன்னிக்கு நைட் இன்னோரு முக்கிய சடங்கு இருக்கு.. அதிலையும் டவுட் அம்மாகிட்ட கேட்காதீங்க! அப்போ சிவா உங்கக்கூட தான் இருப்பான்.. அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க' என்று குழலீயை பார்த்து கண்சிமிட்டியவாறே சிரித்தாள்.

குழலீயின் ஏதுவும் பேசவில்லை... ஆனால் முகம் மட்டும் இரத்தமேன சிவந்துவிட்டது!

சிவா சம லக்கி நீ!' என்று அவன் காதில் முனுமுனுத்தாள் கீதா.

தேங்க்ஸ்! என்றான் அவனும் பதிலுக்கு. 'அப்புறம் கீதா.. அப்பா எங்கே?'

ஹாலில் உன் மச்சான் கிட்ட பேசிட்டு இருக்காரு. ஏன் கேட்குற?'

சும்மா தான்!' என்றபடி அவரை நோக்கி சென்றான்.

கீதா குழலீயை ஏதோ சாக்கிட்டு ஹாலிற்கு அழைத்து சென்றாள். அங்கே வந்த பிரபு குழலீயை பார்த்துவிட்டு தந்தையை அடைந்தான்.

அப்பா! உங்கக்கூட கொஞ்சம் பேசனும்!'

சொல்லுப்பா! குழலீ.. கீதா.. இரண்டு பேரும் இப்படி உட்காருங்க! நீ சொல்லு...

அது வந்து...

சரி வந்துட்ட.. சொல்லு!

இல்ல பா... என்று வாழ்க்கையில் முதன்முறையாக தயங்கினான் பிரபு.

சரி நீ யோசிச்சு அப்புறமா சொல்லு! ம்ம்.. ஒரு நிமிஷம் இரு.. மாலதி.. அந்த கவரை எடுத்துட்டு வா!

என்ன கவர் அப்பா சொல்லுங்க நான் எடுத்துட்டு வரேன்' - கீதா

நீ உட்காரு! உன்னால முடியலயேடா.. இரு அம்மா எடுத்துட்டு வரட்டும்.

குழலீ கேள்வியாய் கீதாவை பார்க்க.. அவளோ வெட்கத்தோடு புன்னகைத்தாள். அதற்குள் மாலதி கவரோடு வந்துவிட்டார்.

சிவா இந்த கவரை பிடி..

என்னது பா?

பிளைட் டிக்கட்ஸ்!

அப்பா?!

நாளைக்கு ஈவ்னிங் திருவனந்தபுரத்துக்கு பிளைட்! அங்கிருந்து குருவாயூருக்கு கார் புக் செய்திருக்கேன்! நாளை மறுநாள் மேரேஜ் முடிச்சிட்டு சுவாமி தரிசனம் முடிச்சு திருவனந்தபுரத்திலும் சுவாமி பாத்துட்டு பிளைட் ஏறுங்க! வெள்ளிக்கிழமை நம்ம வீட்டுல பூஜை இருக்கு...’

….

‘அது மட்டும் இல்லாம நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நேர்த்தி கடன் பாக்கியிருக்கு.. திருப்பதி போகனும்... குல தெய்வ கோவிலுக்கு போகனும்.. இதேல்லாம் பூங்குழலீ இங்க இருக்கும் போதே முடிக்கனும்.’

‘என்னம்மா குழலீ? நீ கேட்டது போல உன் பிரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க..இவனே கூட்டிட்டு போவான்.. ஹேப்பி??

தேங்க்ஸ் மாமா!' என்றாள் குழலீ.

அப்பா ப்ரியா கல்யாணத்துக்கு போகனும்னு தான் உங்ககிட்ட அனுமதி வாங்க வந்தேன்.. அதுக்குள்ள நீங்களே...'

எப்போ வந்து அனுமதி கேட்குற? அப்படியே அனுமதி வாங்கி நடக்குற பையன் தான்டா நீ' என்று செல்லமாய் அவனை ஒரு அடி வைத்தார் மாலதி.

அதேல்லாம் என் மருமக பேசி சம்மாளித்து அனுமதியும் வாங்கிவிட்டாள். போ...நீ போய் தயாராகு.. கீதா மாப்பிள்ளையை கொஞ்சம் சிவாவோட இருக்க சொல்லு!' என்றார் கனகராஜ்.

அம்மாடி கீதா...அண்ணியையும் தயார்படுத்தும்மா' என்றார் மாலதி.

ரவு நெருங்க நெருங்க குழலீயின் மனதில் ஒருவித படபடப்பு.. எவ்வளவு தான் இவர்களின் உறவுமுறையை பற்றி தெளிவாய் பேசிவிட்டதாய் நினைத்தாலும்... 'மனைவி என்ற உரிமை இருக்கு.. என்னை யாரும் தடுக்க முடியாது என்று நெருங்கினால்...ஏற்கனவே அவன் வசம் கரைந்து கொண்டிருக்கும் மனது.. மொத்தமும் நெகிழ்ந்து அவன் காலடியில் சுருண்டுவிட்டால்... அதை விட அவமானம் எதுவும் இருக்காது!' நினைத்தவாறு ஒரு முடிவும் எடுத்துவிட்டாள்.

அண்ணி.. உங்க திங்க்ஸ் எல்லாம் மேலே வெச்சிருக்கேன்.. என்ன அப்படி பார்க்கறீங்க? மூன்றாம் மாடியில் தான் சிவாவின் ரூம் இருக்கு. அந்த தளம் முழுதும் அவனுக்கு தான். அவன் ராஜ்ஜியம் தான்.. அதோட மகாராணி நீங்க! நீங்க ரெடியாகிட்டீங்க தானே? அம்மா இப்போ வந்திடுவாங்க..'

இதோ வந்துட்டேன் டா.. பெரியம்மா... இது தான் நம்ம சிவா பொண்டாட்டி.. பூங்குழலீ! 

அந்த முதாட்டி இவள் முகத்தை சுற்றி திருஷ்டி கழித்தார். நாம நினைச்சது போலவே சக்தி சொரூபினியா ஒரு பொண்ணு என் பேரனுக்கு அமஞ்சிட்டா... தீர்க சுமங்கலியா இரு மா!' என்று அவர்கள் பாதம் தொட்டவளை எழுப்பினார். மாலதியின் கையில் இருந்த அந்த தாலிக்கொடியை வாங்கி குழலீயின் கழுத்தில் அணிவித்தார். 'நியாயமா தாலிகயிறு மாற்றும் போது தான் இதை போட்டுவிடனும்... ஆனா அதுவரைக்கும் ஏன் காத்திருக்கனும்.. என்ன இருந்தாலும் பேத்தியாயிட்ட! அதனால இப்போவே போட்டுவிட்டேன். போ மா... மேல உன் ரூமுக்கு போ.. கீதா அண்ணியை கூட்டிட்டு போடா மா!' என்று அனுப்பி வைத்தார்.

அண்ணி.. சிவா கீழ தான் இருக்கான்.. அதனால பயப்படாத போங்க! ஆல் தி பெஸ்ட்!' என்று அவள் கன்னத்தில் தட்டியவாறு மூன்றாவது மாடியில் விட்டுவிட்டு சென்றாள்.

பெரிய விஸ்தாரமான ஹால். சோப்பா, டிவி என்று சகல வசதிகளுடன் வெகு ஆடம்பரமாய் இருந்தது. அதையொட்டி ஒரு பெரிய படுக்கையறை அதற்குள்ளேயே மற்றும் ஒரு படுக்கையறை போல இருந்த அறையில் ஆளுயர கண்ணாடியும் பிரோக்களும்... ஒரு ட்ரசிங் ரூம் போல தோற்றம் அளித்தது. அதே அளவிளான குளியல் அறையும் அதற்கு பக்கத்தில் இருந்தது. அந்த படுக்கையறையில் இருந்து வெளியே செல்ல இன்னோரு புறம் கதவு இருந்தது. திறந்துக்கொண்டு வெளியில் சென்றால் மீதமிருந்த மாடியில் ரூஃப் கார்டன் அமைந்திருந்தது. அங்கிருந்து நான்காவது தளத்தில் இருக்கும் மொட்டை மாடிக்கு செல்ல படிக்கட்டுகளும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.