(Reading time: 19 - 37 minutes)

ன்னல் அருகே நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். வெகு அருகில் காலடியோசை கேட்க நிமிர்ந்தவள் மயங்கி விழாத குறை தான். கன கச்சிதமாக பொருந்திய அந்த பட்டு வேட்டி சட்டையில் அவன்தான் பேரழகன் என்றது குழலீயின் மனம். இவளை பார்த்தவாறு தோட்டத்தின் பக்க கதவை தாளிட்டுவிட்டு அவளருகில் வந்தான். பிரபு!

குழலீ.. பூங்குழலீ! என்றான் மெதுவாய் அவள் தோள்களை பற்றினான்.

துள்ளியபடி நகர்ந்துவிட்டாள். 'ஏய் என்னடீ ஆச்சு?'

என்னது டீயா?'

ஆமாம்டீ என் அருமை பொண்டாட்டீ!

பிரபு யூ ஆர் க்ராசிங் யூவர் லிமிட்ஸ்! திஸ் இஸ் டூ மச்!

லிமிட்ஸ்?? புரிஞ்சுதான் பேசறியா குழலீ.

யெஸ்! ஆல் மென் ஆர் மென்! நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?

குழலீ.. நான் உன்கிட்ட பேசனும்... முதல்ல நான் பேசுறதை காது கொடுத்து கேளு!' என்று அவளை தொட்டு திருப்பினான்.

தொடாதீங்க பிரபு! ப்ளீஸ்! 'அவள் பாடு அவளுக்கு தானே தெரியும்!'

ஏன்? இத்தனை நாட்களாய் .. கடந்த ஒரு வாரமாய் தொட்டு தானே பேசறேன்! அப்போ சொல்ல வேண்டியது தானே இந்த வார்த்தையை!’

….

உரிமையுள்ளவங்க தான் தொட்டு பேசலாம்னு நீயே சொல்லிட்டு... உன் மீது முழு உரிமை உள்ளவன் நான்! அதுவும் தோள் பற்றி திருப்பியதற்கே இவ்வளவு பேச்சு.. தடை.. எல்லாம்!

ஆமாம் நீங்க எனக்கு உறவு உரிமையுள்ளவங்க தான். ஆனால் இந்த உரிமை உறவு எல்லாம் இந்த தாலியனால் தானே! கட்டாயத்தின் பேரில் வருவது... எனக்கு வேண்டாம்!’

….

எனக்கு காதல் வேண்டும்... காதலோடு கணவன் வேண்டும்! அதனால் வரும் உரிமை உறவும் மனைவியாய் வேண்டும்.

உளராதே குழலீ!

ஆமாம்.. உளருகிறேன் பாருங்க! உங்க மனசுல வேற ஒருத்தவங்க இருக்காங்க. அவங்க மீது தான் உங்களுக்கு காதல் இருக்கு. அவங்களை தாண்டி என்றைக்கு என் மீது உங்களுக்கு முழுமையான அன்பு வருதோ அன்றைக்கு தான் மற்றது எல்லாம்.’

மத்தபடி கடமைக்காக என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எனக்கு இது பெரிய அவமானம்!' என்றவள் உணர்ச்சிகள் மொத்தமும் கண்ணீராய் வந்துக்கொண்டிருந்தது.

பிரபுவுக்கும் கோபம் வந்துவிட்டது. 'ரொம்ப ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சுட்ட! முட்டாள்! கண்ணை திறந்து பார்! வேற ஒருத்தி மனசுல இருந்தா அவளுக்காக போராடி எப்படியாவது ஜெயித்திருக்க மாட்டேனா?’

கடமைக்காக வாழ்பவன் இல்லை நானும் என்பது உனக்கு தெரியும் தானே? நீ தான் என்னை பிடிக்காம கல்யாணம் செய்துகிட்டவ... நானில்லை!'

யாரு? நான் உங்களை பிடிக்காம கல்யாணம் செய்துக்கிட்டேனா?! குட் ஜோக்!’

….

அப்படி ஒரு நிர்ப்பந்தம் வந்திருந்தா இந்நேரம் குழலீ உயிரோட இருந்திருக்க மாட்டா! அதுவும் வேறு யாருக்காவது மனைவியாகி இருந்தாலும் இந்த உடம்பில் உயிர் இருந்திருக்காது.

மனதில் ஆயிரம் இன்ப அலைகள் மோத உற்சாகமாய் அவளருகில் வந்து கைக்குள்ளே அவளை இழுத்தான்.

தழுதழுத்துக்கொண்ட 'பிரபு.. வேண்டாம் பிரபு! ப்ளீஸ்! புரிஞ்சிக்கோங்க... இந்த பிறவியில் நீங்க தான் என் கணவர்.. பட் நான் உங்க காதலியாகவும் இருக்கனும்! அப்படி இல்லா..ம இ..து என..க்கு அருவருப்பா.. இருக்கு!'

சட்டேன்று அவளை விலக்கி நிறுத்தி விழிகளில் ஊடுருவ பார்த்தான். 'என் கையணைப்பில் இருக்க பிடிக்காது! ஆனால் எவனோ உன் அக்கா கணவரை போய் ஹக் செய்துப்ப இல்லை..சீ' என்று உதரிவிட்டான்.

பிரபு! தப்பா பேசறீங்க நீங்க!

நீ செய்யறது எல்லாம் தப்பா இருக்கே! பின்னே எப்படி பேச சொல்லற!

மனைவிகிட்ட பேசற பேச்சா இது?

ஆமாம். நான் உங்க மனைவி என்பது என்கிட்ட பேசனுங்கறதும் இப்போ இன்னைக்கு தானே உங்க நினைவுக்கு வருது... கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் பேசாமல் இருந்ததற்கு சேர்த்து வைத்து பேசறீங்க..' என்று உடைந்து அழுதாள்.

அவளை சமாதானம் செய்ய இரண்டடி முன்னே வைத்தான் பிரபு.

கையை காட்டி நிறுத்தி விட்டாள் குழலீ.

போதும் பிரபு! இதுக்கு மேலையும் என்னால் உடைய முடியாது... ஆனாலும் உங்களை வெறுக்க முடியவில்லையே என்னால?' என்றவாறு அப்படியே மயங்கி சரிந்தாள் பூங்குழலீ.

'புலீ..!' என்று பதறியவாறு அவளை போய்  தாங்கிக்கொண்டான் பிரபு.

நீங்க...இஷ்டப்...பட்டவளை கை....பிடிங்க பிரபு.. நா..ன் தடை...யா இருக்க மாட்டேன்...' என்றுவிட்டு சுய நினைவை இழந்தால் திருமதி பூங்குழலீ பிரபு!

தொடரும்...

Episode # 14

Episode # 16

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.