(Reading time: 17 - 34 minutes)

14. என் உயிர்சக்தி! - நீலா

ட்டப்படி நாங்க இரண்டு பேரும் டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து கணவன் மனைவி டா...

என்ன டா சொல்லுற?

எப்போ நடந்தது?

En Uyirsakthi

அன்னைக்கு நான் குழலீ வீட்டுக்கு வந்தேனே.. அப்போக்கூட அவ எதுவும் சொல்லவே இல்லையே! - ஷாஜி

குழலீயை வந்து பெண் பார்த்த அன்றே அப்பா முடிவு செய்துட்டார் அடுத்த ஞாயிறே தாம்பூலம் மாற்றுவது என்று! அவளோ நானோ எது சொன்னாலும் அப்பா காதுல ஏறவேயில்லை...

அருகிலிருந்த பார்க்கில் அமர்ந்து நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

நீ என்ன சொன்ன?? அப்பா ஏன் கேட்கல? - வெற்றி

நான் ஏற்கனவே தகராறு செய்துக்கிட்டிருந்தேன்! என் கல்யாண விசயத்துல அப்பா ஏற்கனவே ரொம்ப இன்டர்விஃயர் செய்துட்டார்...ப்ரியாவுக்கும் எனக்கும் விரிசல் வர கரணமாய் இருந்ததே என் அப்பா தான்! அதனால் தான் அவரை மிரட்டினேன். அப்படியும் என்னை அழைத்துகிட்டு வந்து குழலீ வீட்டில நிறுத்திட்டார்.

என்ன டா மிரட்டின?' என்றான் செந்தில். 

எப்படியாவது இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவேனு சொன்னேன். சரி பார்க்கப்போற பொண்ணு கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடலாம்னு தான் போனேன்...

உண்மையை அவகிட்ட சொன்னியா?- டேவிட்

அவளுக்கு ஏற்கனவே எல்லாம் தெரியுமே! இதில நான் போய் எதை புதுசா சொல்றது?

தடுத்து நிறுத்திருக்கலாமே கல்யாணத்தை? குழலீ வாழ்க்கை தப்பிச்சிருக்கும் இல்ல? - யாழினி.

ஏய் எல்லாரும் என்னை குறுக்கு விசாரணை செய்யறீங்களா? உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல நினைச்சேன் பாருங்க! அப்புறம் என்ன குழலீ வாழ்க்கை தப்பிச்சிருக்குமா??? அப்போ என் வாழ்க்கையும் தப்பிச்சிருக்கும்! 

சரி நடந்ததை சொல்லு! நாங்க எதுவும் நடுவில் டிஸ்டர்ப் செய்ய மாட்டோம்.' என்றான் செந்தில்.

அந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு திருமணத்திற்கு தாம்பூலம் மாற்றப்பட்டது. இதற்கு முடிவு செய்த போது நாங்க ரெண்டு பேருமே எதுவும் எதிர்த்து பேசலை... இவ தான் என் மருமகள்னு தான் அப்பா அறிமுக படுத்தியதே! என் வாழ்க்கை நல்லா இல்லைனா பரவாயில்லையானு அப்பாகிட்ட கேட்டேன்... அதற்கு அவர்..குழலீ உன்கூட இருந்தா உன் வாழ்க்கை என்றைக்கும் நல்லா தான் இருக்கும்..எதுவந்தாலும் என் மருமக பார்த்துப்பானு சொல்லிட்டார்! இதுக்கும் மேல நான் என்ன சொல்லுவது? தனியாகவும் பேசவிடல்லை! குழலீகிட்ட உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமானு அவ அம்மாக்கூட கேட்கல... அப்படியே தேதி குறிக்க பேச ஆரம்பித்த போது தான் வாயை திறந்தா...

என்ன சொன்னா?

அவர்கள் இரண்டு நாள் குறிச்சாங்க... 12 இல்லைனா 15 டிசம்பர். 12 தான் இருவருக்கும் ரொம்ப நல்லாயிருக்குனு நாக்ஸ் அங்கிள் சொன்னார். பத்தாம் தேதி அவளுக்கு மேயன்ஸ் எக்ஸாம் ஆரம்பிக்குது.. அதனால வேற தேதி வைக்க சொன்னா.. இந்த தேதிகளை விட்டா தை மாதம் தான் நல்ல நாள் இருக்குனு சொல்ல.. இவ டிசம்பர் கடைசியே திரும்பி யூ எஸ் போகனும் ... திரும்பி இந்தியா வருவது செப்டம்பர் இல்லைனா அக்டோபர் னு சொன்னா... அத்தனை மாதங்கள் காத்திருக்க நானும் சரி எங்க இருவரின் குடும்பமும் சரி தயாராயில்லை.. அதனால இந்த மாதமே கல்யாணம் வைத்து கொள்ளலாம் னு முடிவு செய்த போது 12ம் தேதி தான் சரியா வரும் னு முடிவு செய்தாங்க... ஒன்னு அவ எக்ஸாம் எழுதனும் இல்லைனா கல்யாணம் நடக்கனும்... இரண்டும் சேர்ந்து நடக்காது என்று அத்தை சொல்லிட்டாங்க! ஆனா அவ பிடியில் அவ உறுதியா இருந்தா.. என்ன நடந்தாலும் சரி எக்ஸாம் எழுதியே ஆகனும் என்பது தான் அவ முடிவா இருந்தது! கல்யாணமே நடக்கவில்லைனா கூட பரவாயில்லைனு சொல்லிட்டா! 28 வயசு பொண்ணு அதுவும் பூங்குழலீ அவளோட முடிவில் இவ்வளவு உறுதியா இருக்கிறது என்னை அசைத்துவிட்டது! அவளே இவ்வளவு ஸ்டேபர்னா இருக்கும் போது நான் எப்படி னு காட்ட வேண்டாமா? அதனால 12ம் தேதியே கல்யாணம் நடக்கனும்னு முடிவா சொல்லிட்டேன்... அதுவும் அவக்கூட தான்னு சொல்லிட்டேன்.. எக்ஸாம் தொடங்குவதில் இருந்து நான் தான் அவளை எக்ஸாமுக்கு கூட்டிச்செல்வேனு உறுதியா சொல்லிவிட்டேன்.

சரி. இதுக்கும் பதிவு திருமணத்திற்கும் என்ன லிங்க்?

பொறுமை! பொறுமை!

சரி சொல்லு!

அந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு திருமண தேதி குறித்தாங்க....

ன்ன நடந்தது

பூங்குழலீ பிரபு வீட்டில் நெருங்கிய உறவுமுறையில் உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது! குழலீயின் அம்மா வழியில் இரு பெரியம்மாக்கள், ஒரு சித்தியும் அவர் பிள்ளைகள் அங்கவை சங்கவை ஒருபுறம் இருக்க...அவள் அப்பா வழி உறவுகளாய் இரு அத்தையின் பிள்ளைகளும் பெரிய பெரியப்பா விநாயகம் அவர் இரு பிள்ளைகள் நீலகண்டன் மகாலட்சுமியுடன் வேலன் பெரியப்பாவின் மகள் வசந்தியும் இருந்தனர்.

பிரபுவின் அப்பா உறவுமுறையில் இரு சித்தப்பாக்கள் ஒரு அத்தையும் வந்திருக்க... அம்மா வழியில் இரண்டு மாமாக்களும் ஒரு பெரியம்மாவும் வந்திருந்தனர். நிகழ்ச்சி குழலீ வீட்டில் நடைபெற்றது.

சொந்தங்கள் முன்னிலையில் மறுபடியும் பெண் பார்க்கும் படலம்! காஞ்சி பட்டு புடவையில் தலையில் மல்லிகையுடன் புன்னகையும் பொன்னகையும் பூட்டி மலர்ந்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் வைத்து சபையில் எல்லோரிடமும் ஆசி பெற்றாள் பூங்குழலீ!

விநாயகம் பெரியப்பா பிரபுவின் அப்பாவிடம் மற்ற விஷயங்கள் பேசி முடிவு செய்துவிட்டு தாம்பூலம் மாற்றலாம் என்று கூறினார். அதற்கு கனகராஜ்..'நகை பணம் வரதட்சனை எதுவும் வேண்டாம் எங்களுக்கு! இத்தனை நாள் பெண் பார்த்த போது நாங்கள் பெண் வீட்டில் எங்களுக்கு ஈடாய் வசதி இருக்க வேண்டும்னு எதிர் பார்த்தோம் தான். ஆனால் இப்போ எதிர்ப்பார்க்கலை! நீங்க உங்க பெண்ணை மட்டும் கொடுங்க அது போதும்!'

அப்போ உங்களுக்கு தோதாய் நாங்க இல்லைனு சொல்லறீங்களா? அப்பா இல்லாத நடுத்தர குடும்பம் தான். ஆனா பொண்ணுக்காக எதுவும் செய்ய எங்க சித்தி தயாரா தான் இருக்காங்க... அதனால உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காம கேளுங்க!' என்றான் நீலகண்டன் விநாயகத்தின் மகன்.

நாங்க அப்படி எதுவும் சொல்ல வரலை தம்பி!' என்றார் மாலதி.

பின்னே நீங்க சொல்லுறது அப்படி தானே இருக்கு!

மச்சான்..என்ன இவங்க இப்படி பேசறாங்க?' என்றார் மாலதியின் அண்ணன் வைத்தியலிங்கம்.

நாங்க உண்மையை ஒத்துகிட்டோம் சம்பந்தி...இதுவரைக்கும் அப்படி தான் பெண் தேடிக்கிட்டு இருந்தோம். அதனால தான் முதலில் குழலீயை வேண்டாம்னு மறுத்ததும்! ஆனா இப்போ குழலீயை நாங்களே தானே பெண் கேட்டு வந்திருக்கோம்! குழலீயை தவிர வேறு யாரும் எங்களுக்கு மறுமகளாய் வரக்கூடாது.. வரவும் முடியாது! எங்களுக்கு பெண்ணை ரொம்பவும் பிடிச்சிட்டது!! உங்க பெண் கட்டின புடவையோடு எங்க வீட்டிற்கு வந்தால் போதும்!

மச்சான் என்ன விட்டா கெஞ்சிடுவீங்க போல இருக்கே??

மாமா இந்த பொண்ணு தான் வேணும்னு ஏன் இவ்வளவு திடமான முடிவுல இருக்கீங்க?' மாலதியின் அண்ணனும் தம்பியும் கேள்வி கேட்டனர்.

பூங்குழலீ தான் திருமதி. பிரபு! இதில் எந்த மாற்றமும் இல்லை... மற்றபடி எதுவும் இப்போ கேட்காதே வைத்தி!' என்றார் கனகராஜ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.