(Reading time: 17 - 34 minutes)

ட்டின புடவையில் அனுப்ப எங்ககிட்ட எதுவுமே இல்லைனு நினச்சுட்டீங்களா?' என்றார் விநாயகம்.

சரிங்க... உங்க பெண்ணுக்கு நீங்க என்ன செய்யனும்னு நினைக்கறீங்களோ அதை செய்யுங்க.. நாங்க எதுவும் தடுக்க மாட்டோம்! ஆனா சீர்வரிசை பாத்திரங்கள்னு எதுவும் வேண்டாம்! அது எல்லாம் ஐந்து மூன்று அடுக்கா இருக்கிற வீட்டில் தான் நீங்க மாப்பிள்ளை எடுக்கறீங்க! ஆனா பெண்ணுக்கு எவ்வளவு போட போறீங்கனு முன்னாடியே சொன்னீங்கனா... நாங்க நிச்சயத்தில் பெண்ணுக்கு போட வேண்டிய நகையை வாங்கிடுவோம். அது மட்டும் இல்லாம திருமணம் முடிஞ்சதும் எங்க வீட்டில் தாலிக்கொடி போடுற வழக்கம் இருக்கு! அதனால நாங்க தாலிக்கொடி வாங்கிடுவோம்.. மீதி உங்களோட விருப்பம்! என்னங்க நான் சொல்லுறது சரியா?' என்ற மாலதி பேச தொடங்கும் முன்பே கண்களால் கணவரிடம் சமிக்ஞை செய்து விட்டார் என்பது யாருமே அறியவில்லை!

நான் முன்னமே சொன்னா மாதிரி பொண்ணுக்கு ஒரு முப்பது பவுனும் மாப்பிள்ளைக்கு ஒரு பத்து பவுனும் போடுவேன்ங்க...அதிலாம ஒரு கிலோ வெள்ளி... மற்றபடி கல்யாண செலவு...' என்று குழலீயின் அம்மா லஷ்மி பேசும் போதே தடுத்து நிறுத்திவிட்டார் கனகராஜ்.

நீங்க உங்க பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் செய்வதை நான் எதுவும் சொல்லலை.. ஆனா கல்யாணம் எங்க மகனுக்கும் தானே.. அதனால கல்யாண செலவில் எங்களுக்கும் சரி பாதி பங்கு இருக்கு. அதை நீங்க தடுக்கக்கூடாது! என்ன மாலதி நான் சொல்லுறது சரி தானே?'

அண்ணா கல்யாணம் பொண்ணு வீட்டுல செய்யறது தானே நம்ம பக்கத்து வழக்கம்?

ஆமாம் கவிதா. ஆனா இப்போ காலம் மாறிக்கொண்டு வருவதை போல நாமளும் நம்ம வழக்கத்தையும் கொள்கையை மாற்றிக்கனும் மா..' என்றார் தன் தங்கையிடம்.

நீங்க சரினுட்டா தாம்பூலம் இப்போவே மாற்றிக்கலாம். நிச்சயத்தை கல்யாணத்துக்கு முந்தின நாள் செய்துடலாம்! நாம தான் ஏற்கனவே பேசிட்டோமே சம்பந்தி!' என்றார் லஷ்மியிடம்.

அருள்மொழி கண்களால் சரி சொல்ல தாயும் அதையே முன்மொழிந்தார்.

லஷ்மி எடுத்து கொடுக்க நீலகண்டன் அவன் மனைவியுடன் நின்று தாம்பூலத்தை மாலதி கனகராஜ் தம்பதியிடம் மாற்றிக்கொண்டனர்.

திருமண தேதியை பற்றி பேச்சு வர நாகராஜன் பேச ஆரம்பித்தார். 'குழலீ பிரபு கிரக நிலைகள் படி அவர்கள் இருவருக்கும் ஏற்ற தேதியாய் வருகிற டிசம்பர் 12 தான் இருக்கிறது. இந்த தேதியை விட்டால் தை மாதம் ஒரு தேதியும் அடுத்த ஆகஸ்ட் ஒரு தேதியும் இருக்கு. அது மட்டுமில்லாம இவர்கள் திருமணம் அதிகாலை சுபநேரமாய் இருந்தால் மிகவும் சிறந்தது...சூரியன் மேல ஏறுவதற்கு முன்பாக தாலி கட்டியாகனும்.

அதிகாலை மூஹுர்த்தம் சரிபட்டு வராதே சம்பந்தி! வரவேற்பு வேற கல்யாணத்திற்கு மாலையில் தான் வைக்க போறோம்... முந்திய நாளே வைத்தாக்கூட எங்க சொந்தமேல்லாம் வந்திடுவாங்க.' என்றார் விநாயகம்.

அதற்கு தானே மாப்பிள்ளை அழைப்பும் நிச்சயமும் இருக்கு! அவர்கள் எல்லோரையும் முன் தினமே வந்திட சொல்லுங்க! ஆனா காலை எட்டரை மணிக்குள்ளே எல்லா சடங்குகளையும் முடிச்சிடனும் சம்பந்தி!

ஏன் இவ்வளவு அவசரப்படனும்? பொறுமையா செய்யலாமே?!

இல்லைங்க! அது முடியாது! 

காரணம்? அப்புறமா ஏதாவது வேற வேலையிருக்கா?

ஆமாம். குழலீக்கு இருக்கு! என் மருமகளுக்கு அன்றைக்கு பரீட்சை இருக்கு! பத்து மணிக்கு..அதனால எல்லாவற்றையும் சீக்கிரமா முடிக்கிறது நல்லது!

கல்யாணமும் வைத்துக்கிட்டு எக்ஸாமும் எப்படி எழுத முடியும்??

முடியும்! முடியனும்! அதற்கு தான் மண்டபத்தை தி. நகரில் பார்க்கிறோம். மற்ற நான்கு நாட்களும் எழுதும் போது இந்த ஒரு நாள் அவ வாழ்க்கையின் மற்ற விசயங்களை பாதிக்கக்கூடாது பாருங்க!

'என்னது எல்லா நாளும் எக்ஸாம் எழுத போறாளா?? எப்படி போவா? பந்தக்கால் வைத்துட்டா நாங்க வெளியே அனுப்ப மாட்டோமுங்க! அதுவும் தனியா!'

பாருங்க தாம்பூலம் மாத்தியாச்சு! அந்த நிமிஷத்துலநிருந்து பூங்குழலீ எங்களுடைய மருமகள். அவளுடைய படிப்பு, திறமை, அறிவு, உழைப்பு எல்லாவற்றையும் வீணாய் போக நாங்க விட மாட்டோம்! தனியா விட வேண்டாம்... எங்க மகனும் தான் கூட போயிட்டு  வருவான்.

இல்லைங்க கல்யாணத்திற்கு முன்னாடி பெண்ணையும் பையனையும் தனியா வெளியில அனுப்புவது சரியில்ல...'

சரி என் மகன் வரல... நாங்க யாராவது போறோம்...சரி நாங்கக்கூட வரவில்லை. நீங்களே யாராவது கூட்டி போய்வங்க. அப்படியில்லைனா எங்ககிட்ட விட்டுவிடுங்க நாங்க பார்த்துக்குறோம்'

சரியாய் அந்த நேரம் தான் மாலதி மகனை பார்த்து 'பிரபு... குழலீயை உனக்கு நிச்சயித்தற்கு அடையாளமாக உன் கையிலிருக்கும் அந்த மோதிரத்தை கழற்றி என் மருமகளுக்கு போட்டு விடு!' என்றார்.

வேறு ஒரு மோதிரத்தை கழற்ற சென்றவனை தடுத்து 'அந்த மோதிரம் இல்லப்பா.. நம்ம பரம்பரை மோதிரம் இருக்குல அதை போட்டு விடு! எப்படியும் நிச்சயத்துல கொடுக்க வேண்டியது தானே. இப்போவே போட்டு விடு!'

அம்மா.. அந்த மோதிரம்...

தெரியும் பிரபு! அதனால தான் அந்த மோதிரத்தை என் மருமகளுக்கு போட்டுவிட சொல்லறேன். 

ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துவிட்டு அவன் கையிலிருந்து அந்த 'S' பதித்த மோதிரத்தை கழற்றி குழலீயின் விரல்களில் மாட்டிவிட்டான்.

தேங்க்ஸ் குழலீ!' என்றான் மெல்லிய குரலில்.

வீடு திரும்பிய போது வைத்தியலிங்கம் தன் தங்கை கணவரிடம் வந்து நின்றார். அதே நேரம் மாலதியின் தம்பியும் கனகராஜின் தம்பிகளும் வந்து நின்றனர்.  இவர்கள் ஏதோ கேட்க போகிறார்கள் என்று யூகித்தவர் 'என்னப்பா வைத்தி?' என்றார்.

'ஏன் மச்சான் இந்த பொண்ணு தான் வேணும்னு இவ்வளவு பிடிவாதம்? நம்முடைய வசதிக்கும் தகுதிக்கும் ஏற்றவங்க இல்லை... ஆனாலும் ஏன்? அதுவும் கட்டின புடவையில் வந்தா போதும்னு வேற சொல்லறீங்க? என் பொண்ணையோ இல்ல தம்பி பொண்ணையோ கட்டியிருந்தா இவ்வளவு பேச்சு கேட்காம இருந்திருக்கலாம்!'

ஏன்பா நான் உயிரோட இல்லைனாலும் இப்படித்தான் பிரபுவுக்கு பெண் கேட்டிருப்பீங்களா? இல்லை உங்க பையங்களில் யாருக்காவது என் பெண்ணை எடுத்திருப்பீங்களா? சொல்லுங்க?'

தாயும் மகனும் இதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டுருந்தார்கள். 'அப்பா அவர் மச்சான்கள்கிட்ட ஏதோ எடாகுடமா பேச போறார் அம்மா... நான் இருந்தா சரி வராது! நான் என் ரூமிற்கு போறேன்' என்றான் பிரபு.

'நான் மட்டும் இங்க இருந்து என்னடா செய்ய போறேன். வா நானும் உன் கூட வந்து உன் ரூமை பார்க்கிறேன் டா. என்ன சேஞ்சஸ் செய்யலாம்னு பார்க்கலாம் வா..'

அம்மா!!

என்னடா?? என் மருமக வருகிறா.. இன்னைக்கு அவளோட ஸ்டடி ரூமை பார்த்தேன் டா! அவளுக்குனு தனியா பெட் ரூம் இல்லையாமே! என் கிட்ட சொல்லுறா எப்பவுமே தம்பி பக்கத்தில் தான் படுத்துப்பாளாம்.. அவ அப்பா தவறினதுக்கு அப்புறமா தான் அவனை தனியா படுக்க விட்டிருக்காளாம்.. ஏன்னா அவனுக்கு தைரியம் வரனும்மாம்.. அதுவரைக்கும் அவள் கையை பிடிச்சிக்கிட்டு தூங்கிட்டு இருந்தானம் உன் மச்சான் அருள்மொழி. அம்மாவும் தம்பியும் ஆளுக்கு ஒரு கட்டிலில் படுக்க வசதி செய்து கொடுத்துட்டு இந்த பொண்ணு இத்தனை வருஷமா தரையில் தான் படுக்குதாம்!' என்றபடி மாடி ஏறி அவன் அடைந்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.