(Reading time: 17 - 34 minutes)

மாலதி! நீ செய்யறது கொஞ்சம் கூட. சரியில்ல!'

அடி படவா! அம்மாவை பெயர் சொல்லியா கூப்பிடுற? இதுவரைக்கும் கூப்பிடலாம் ஆனா இனி அப்படி என் மருமக முன்னே கூப்பிட்டு மரியாதையை கப்பல் ஏற்றாதேடா சிவா!'

அம்மா.. என் செல்ல அம்மா! இப்படி கோவப்படுறியே... இன்னைக்கு தான் அந்த பெண்ணை நிச்சயம் செய்துட்டு வந்தீங்க அதுக்குள்ள மருமகளுக்காக இப்படி உறுகுறீங்க! போதும் இந்த பிள்ளையை கவனீங்க!' என்றபடி பின்னிருந்தபடி கழுத்தோடு கட்டிக்கொண்டான் அந்த செல்ல சிவா.

ங்கே இவர்கள் கொஞ்சிக்கொண்டிருக்க முக்கியமான  விவாதம் கீழே நடந்தது அவர்கள் அறியவில்லை!

என்ன வைத்தி பேச்சையே காணோம்? ம்..பதில் சொல்லுங்க!

என்ன அண்ணா நீங்க இப்படியேல்லாம் பேசறீங்க? அபசகுனமா இப்படியேல்லாம் பேசாதீங்க!

என்னடா தப்பா சொல்லிட்டேன்? நான் இருக்கிறதுனால தானே உங்க யார் கையையும் உதவியையும் எதிர்பார்க்காம என் பெண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் செய்து வைக்க முடிஞ்சிது? இப்போ என் பையனுக்கும் கல்யாணம் செய்ய போறேன்!'

மாமா அதுக்கும் அண்ணா கேட்டதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

ஆமாண்ணா.. என்ன சம்பந்தம்?

இருக்கு! சம்பந்தம் இருக்கு! இப்போ நம் குடும்பதுக்கு தலைமையா நான் உங்க முன்னாடி நிக்கறதுக்கு காரணமே பூங்குழலீதான்?! உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கானு தெரியலை.. நான் 2007 ல ஸ்ட்ரோக் வந்து சீரியஸா ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்...

மறக்க முடியுமா மச்சான். என் தங்கை அப்படி ஒடுஞ்சிட்டாளே!'

அப்போ என்னை காப்பாற்றியது பூங்குழலீ தான்!' என்று நடந்தவற்றை கூறினார்.

இதுமட்டும் இல்ல.. இன்னோரு விஷயம் இருக்கு... குழலீ என் மகனோட நன்மை விரும்பி... அவனுக்கு நல்லது  நடக்கனும்னு எதிர்பார்க்கிற பொண்ணு!' என்று நாகராஜன் வீட்டில் குழலீ பேசியதையும் கூறினார்.

இவற்றை கேட்டவுடன் அனைவரும் பேசி முடிவு எடுத்துவிட்டு பிரபுவை அழைத்தனர்.

டேய் சிவா.. குழலீ வீட்டுல எக்ஸாமுக்கு அனுப்ப மாட்டாங்க போல இருக்கே!

ஆமாம் பா..

உன் பெரிய மாமா ஒரு ஐடியா கொடுத்தான்.

நானும் ஒன்று யோசித்து வைத்திருக்கேன். 

சரி சொல்லுடா சிவா..

இல்ல நீங்க சொல்லுங்க மாமா!

எப்படியும் மேரேஜ் ரிஜிஸ்டர் செய்யனும் இல்ல? அதை ஏன் கல்யாணத்திற்கு முன்னாடியே வைத்துக்க கூடாது?

பிரபுவின் கண்கள் மின்னின! 'மாமா!' என்றான்.

ஆமாம்.. நான் மாமா தான்... நான் தான் டா இந்த ஐடியாவை கொடுத்தேன்!

அப்பா இதையே தான் நானும் யோசிச்சேன்.

டேய் சிவா.. மாமனுக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் டா நீ!

தேங்கஸ் மாமா!

நான் உன்னை சிவானு கூப்பிட்டேன் டா!

அதுக்கு என்ன மாமா?

டயலாக் எல்லாம் விடுவியே டா?

டயலாக் எல்லாம் அப்படியே தான் இருக்கு.. பட் அதுக்கு தான் வாய்ப்பில்லைனு தெரிஞ்சு போச்சே! சும்மா இருந்தவனை இந்த தாத்தா ஏத்திவிட்டாங்க... இதுல நீங்க எல்லாம் வேற கூட்டு போட்டுகிட்டீங்க! அவர் காலத்தில அந்த சிவநாதனுக்கு சரிபாதியாய் உயிராய் சக்தீஸ்வரி கிடைத்தது போல் உனக்கும் கிடைப்பானு சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டீங்க.. சரி எனக்கு வர பொண்ணு அவங்க சொன்ன சக்தீஸ்வரியை போல எனக்கு சரிபாதி உயிராய் இருக்கனும்னு எதிர்ப்பார்த்தேன். இதுல உங்க பெண்ணுக்கு வேற இதே பெயரை வைத்துட்டீங்க! ஏனோ நீங்க எல்லாம் கேலி செய்தே அந்த சிவா பெயரை கேட்க பிடிக்கல... இப்போ புலம்பி ஒரு பயனும் இல்ல... என் தாத்தாவுக்கு கிடைத்தா மாதிரி எனக்கு வாழ்க்கை துணை கிடைப்பானு இருந்த நம்பிக்கை தான் அடியோடு போயிடுச்சு.. இதுல நீங்க எப்படி கூப்பிட்ட என்ன மாமா?' என்றான் பிரபு. 

சும்மா புலம்பாதே டா சிவா! நடப்பவை எல்லாம் நன்மைக்கே!' என்றார் வைத்தி மாமா.

அதற்குள் கனகராஜ் நாள் பார்த்து குழலீயின் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டார். இப்படி தான் டிசம்பர் 8 ரிஜிஸ்டர் திருமணம் முடிவு செய்யப்பட்டது. 

இவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே குழலீயின் வேலன் பெரியப்பா குடும்பம் அன்று நகை கடைக்கு செல்லும் போது பிரச்சனை கிளப்பியது. அதன்பின் வந்த புதன்கிழமை தான் அருள்மொழி, அங்கவை, சங்கவை, கீதா, ராஜ்குமார் இவர்கள் முன்னிலையில் திருமண பதிவும் இனிதாய் முடிந்தது.

பத்தாம் தேதி காலையில் குழலீயை தேர்வுக்கு அழைத்து செல்ல வந்த பிரபுவுடன் அனுப்ப மறுத்தனர் குழலீயின் உறவினர்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் பிரபுவால் பொறுமையை இழுத்து பிடித்து இருக்க முடியவில்லை! குழலீயை பார்த்தான் அவளும் பல்லை கடித்துக்கொண்டு தான் இருந்தாள் என்பதை அவள் முகம் தெளிவாய் காட்டியது.

அருள்.. அத்தை... உங்க கிட்ட பர்மிஷன் வாங்க நான் வரவில்லைனு உங்களுக்கே தெரியும். நான் என் மனைவியை கூட்டிக்கிட்டு போறேன். எக்ஸாம் முடிஞ்சவுடனே கூட்டி வந்து விட்டுடூவேன்... இன்னும் இரண்டு நாளைக்கு நீங்க இவளை கொஞ்சம் பார்த்துக்கனும்...இப்போ நாங்க கிளம்பறோம் அத்தை! புறப்படு குழலீ!'

என்ன லஷ்மி? அவர் பாட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேனு சொல்லறார்... நீயும் அமைதியா இருக்க?' என்று ராஜி கூற சட்டேன இடைமறித்தான் பிரபு.

பூங்குழலீ சட்டப்படி என் மனைவி ஆன்டீ! எங்களுக்கு சட்டப்படி திருமணம் முடிந்துவிட்டது... இப்போ நாங்க புறப்படுறோம். 

ப்படி புறப்பட்டு வருகிற வழியில் தானே நீங்க வண்டியை இடை மறித்து எங்களை கடத்திக்கிட்டு வந்தீங்க டேவிட் உங்க மனைவியுடன்!

ஆக இது தான் உன்னோட ரிஜிஸ்டர் மேரேஜ் ஸ்டோரி? இல்லையா??- வெற்றி ஆனந்தன்

டேய் வெற்றி என்னை நம்பாத மாதிரியே பேசற? உண்மையா இது தான் நடந்தது டா!

சரி அப்போ எதுக்கு காலையில் அந்த மாதிரி கேள்வியை கேட்ட குழலீட்ட? மனைவியை பார்த்து கேட்கிற கேள்வியாடா??' - இது செந்தில்.

பதில் எப்படி வந்ததுனு கேட்டீங்கல்ல?

அடிங்க... நீ என்கிட்ட அடிவாங்காம போகப்போறது இல்ல! பதில் சொல்லுடா' என்றது டீனா.

தெரியல.. சும்மா அவளை வம்பிழுத்து பார்க்க ஆசைப்பட்டேன். அது ஏனோ குழலீயை வம்பிழுத்தால் அவளோட பதில் ரியாக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். ஏதோ கொஞ்ச வருஷங்களாக விட்டிருந்தது... திரும்பவும் குழலீயை பார்த்த உடனே வம்பிழுக்கனும்னு தோன்றியது..' என்றான் பிரபு.

எத்தனை வருடங்களா மிஸ்டர் பிரபு?' என்றாள் ஷாஜித்தா. 

நான் காலேஜ் ஜாயின் செய்யற வரைக்கும்... அதுக்கப்புறம் இப்போ தான் பார்க்கிறேன். 

சரி. அந்த மோதிரத்திற்கும் உங்க தாத்தா ஸ்டோரிக்கும் என்னடா லிங்க்?

அது எங்க தாத்தாவுக்கு பாட்டி பிரப்போஸ் செய்யும் போது கொடுத்தது. தாத்தா பெயரும் பாட்டி பெயரும் ஸ்டார்டிங் லேட்டர் 'S'. 'என் சக்தி கொடுத்ததை உனக்கு தருகிறேன். உன்னுடைய சக்தியாய் வருகிறவளுக்கு நீ இதை கொடு' ..இதை சொல்லித்தான் எனக்கு கொடுத்தார் தாத்தா. அதை போய் குழலீக்கு...'

குழலீ பெயரும் சக்தி தான்னு தெரியுமில்ல?

பெயர் சக்தி..சரி. நான் எதிர்ப்பார்க்கிறது இந்த சிவத்தின் சக்தியாய் இருக்கும் பெண்! இவள் சக்தியா??? பத்ரகாளி!

ஷாஜித்தா, டீனா, மலர் சிரித்தபடியே ஒருசேரக்கூறினார்கள்...'ஆதிசக்தி!'.

என்ன சொன்னீங்க?

பத்ரகாளி யாருனு தெரியுமா?? ஆதிசக்தி! எல்லா உயிர்களுக்கும் சக்தியளிக்கும் ஆதிசக்தி!' என்றாள் மலர்.

அண்ணி... ஹி ஹி..குழலீயா?? என்றான் ஒரு ஏளனத்துடன் பிரபு.

உனக்கு குழலீயை பற்றி என்ன தெரியும் டா? பள்ளிக்கூடத்தில் பார்த்துட்டு சும்மா ஏதாவது உளராதே! நிஜமாவே எனக்கு கோபம் வந்திடும். ஜாக்கிரதை!' - என்றான் வெற்றி.

உனக்கு என்னடா தெரியும் என் மனைவியை பற்றி? சொல்லு கேட்டுக்கலாம் அதே நக்கல் தோணியில்!

பிரபு!' என்றான் வெற்றி இடியாய்! அவன் கூறியவற்றை கேட்ட பிரபுவின் மனதில் ஏதோ ஒரு வித மாற்றம். அவளை அறிந்து கொள்ளும் அவள் எண்ணங்களை புரிந்து கொள்ள ஆவல்! அதே மன நிலையில் தான் இருந்தான் அன்று முழுவதும்... அவளது நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு! மாலை நடந்த அந்த பிரமாண்டமான வரவேற்பிலும் கூட!!!

தொடரும்...

Episode # 13

Episode # 15

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.