(Reading time: 11 - 21 minutes)

"ய் இப்போ எதுக்கு இவ்ளோ ஸ்பீட்ல போற. யாருக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லி தொலை" என்று கத்தவும் காரின் வேகத்தை குறைத்தவன் சாலை ஓரமாக நிறுத்தி திரும்பி அவளை நிதானமாக பார்த்தான்.

ஒரு சில நிமிடங்கள் அவளின் கண்களை பார்த்தவன் மறு நொடி அவளை தாவி அணைத்தான்.

அவனின் எதிர் பாரத செயலில் சில நிமிடங்கள் திகைத்தவள் , மறுநொடி தன் வலது கையை அவனின் இடது கன்னத்தில் இடியென இறக்கினாள்.

அவளின் அடியில் சுய நினைவிற்கு வந்த ரஞ்சனின் கரங்கள் தாமாக அவளை விடுவித்தது. அவளை பார்த்து முறைத்தவன் " ஏய் இப்போ எதுக்கு என்னை அடிச்ச" என்று கண்கள் சிவக்க கேட்கவும் அவனின் பார்வையில் ஒருநொடி பயந்தவள் அதனை மறைத்து கொண்டு 

"பின்ன நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை ஒரு அடியோட விட்டேன்னு சந்தோஷ படு. எனக்கு வர ஆத்தரத்துக்கு உன்ன கொன்னாலும் கொன்றுவேன்.முதல்ல நீ ஒழுங்கா வண்டிய எடு. எதுக்கு  என் friends  கிட்ட பொய் சொல்லி இப்படி அவசரமா கூட்டிட்டு வந்த " என்று கத்தவும் 

அதே நிதானத்துடன் "முடியாது இப்போ என்ன பண்ண போற.ஆமா பொய் சொன்னேன் .இப்போ அதுக்கு என்ன " என்று அவளை சீண்டவும் 

"என்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாங்கின அடி மறந்து போச்சா " 

"ச்சே ச்சே அது எப்படி மறக்கும் சொல்லு. " என்று கிண்டல் குரலில் கேட்கவும் 

"உன் கூட பேசறதே வேஸ்ட். நீ முதல்ல வண்டியை எடு" என்று அவனை பார்க்காமல் மறுபுறம் திரும்பி பேசவும் 

“சாரி!! உன்ன இவ்ளோ பக்கத்துல பாத்ததுல கொஞ்சம் உணர்ச்சி வசப்  பட்டு அந்த மாதிரி நடந்துடுச்சு. இனி மேல்  கண்டிப்பா உன்னோட அனுமதி இல்லாம தொட மாட்டேன். இப்போ முதல்ல என்னோட கேள்விக்கு பதில் சொன்னா தான் வண்டி இந்த இடத்தை விட்டு நகரும். முதல்ல என்னை திரும்பி பாரு. உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன். என் மேல நம்பிக்கை இருந்தா திரும்பு. இல்லேன்னா நான் உன்னை ட்ரோப் பண்ணிட்டு போறேன். உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்" என்று கூறி தான் சீட்டில் கண் மூடி சாய்ந்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் அவனின் முகத்தை பார்த்து என்ன தோன்றியதோ மெதுவான குரலில் "சொல்லு " என்று அவன் புறம் திரும்பி அமர்ந்தாள்.

அவளது செயலில் மகிழ்ந்தவன் " தேங்க்ஸ்" யன்று கூறி புன்னகைத்தவன்

"மது. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா காது கொடுத்து கேட்டு அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு. குறுக்க பேசாத. சரியா" என்று அவளை பார்த்து கேட்கவும் சரி என்றவாறு தலையை இருபக்கமும் அழகாய் ஆட்டினாள் மதுமதி.

ஒரு நிமிடம் அவளின் செய்கையை ரசித்தவன் ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டு அவளின் கண்களை பார்த்தவாறே "நான் உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப நேசிக்கறேன் மது. அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்த போது கூட நான் உனக்கு மெசேஜ் பண்ணேன். நீ கூட அதுக்கு ரிப்ளை  பண்ண . ஆனா எனக்கு உன்னோட வாயால அதை கேட்கணும் ரொம்ப அசைய இருக்கு மதி. ப்ளீஸ் சொல்லுடா” என்று அவன் தன் மொத்த காதலையும் தன் கண்களில்  தேக்கியவாறு  கேட்கவும் இப்போது திகைப்பது மதுவின் முறையானது.

 " நான் உன்னை லவ் பண்றேன். உனக்கு மெசேஜ் கூட அனுப்பி இருக்கேன் பாரு. நீயும் என்னை லவ் பண்றன்னு தெரியும். அதை உன் வாயால சொன்ன நான் கொஞ்சம் சந்தோசபடுவேன்"  என்று கூறவும் இவள் கோவத்தின் உச்சிக்கு சென்றாள்.

அவனின் கண்களில் தெரிந்த காதலை கண்டவளுக்கு ஒரு நிமிடம் தான் இருக்கும் உலகம் மறந்தது. அவனின் மதி என்ற அழைப்பே மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ரஞ்சனும் அவளின் மீது கொண்ட காதலில், அவளின் மதி முகத்தை இவ்வளவு அருகில் பார்த்து  பேசி கொண்டு இருக்கும் ஆர்வத்தில், தான் என்ன பேசி கொண்டு இருக்கிறோம் என்பதை பற்றி சிந்திக்காமல் ,தன் எண்ணம், நேசம் முழுவதையும்  இன்றே அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று  நினைத்து பேசி கொண்டு இருந்தவன் தான் அவளை மதி என்று அழைத்ததை பற்றி சிந்திக்கவில்லை.

தொலைவில் கேட்ட காரின் ஹாரன் சத்தத்தில் நினைவுக்கு திரும்பியவள் மறுபுறம் திரும்பி தன்னை சமநிலை படுத்தி கொண்டவள் கோவத்தை முகத்தில் வலுக்கட்டாயமாக கொண்டு வந்து

" ஏய் நீ எப்போ எனக்கு மெசேஜ் அனுப்பின." என்று கேட்கவும் அவளின் மொபிலை அவளிடம் இருந்து பிடுங்கியவன் இன்பாக்சில் அவன் அனுப்பிய மெசேஜ் திறந்து காட்டினான்."

"பாரு நல்லா உன்னோட முட்டை கண்ணை முழிச்சு பாரு. இதுக்கு மேடம் கூட ரிப்ளை பண்ணி இருக்கீங்க" என்று அவளின் மொபைலில் தான் அனுப்பிய மெசேஜ் எடுத்துக் காட்டவும்

"இதுக்கு பேரு தான் உங்க ஊர்ல லவ் சொல்றதா. நான் கூட ஒரு வேலை இது அனிமல்ஸ் லாங்குவேஜ்  இருக்கும்ன்னு நெனச்சேன். அதுக்கு தான்  ரிப்ளை பண்ணி இருக்கேன் பாரு." என்று சமாளிக்கவும் 

அவள் கூறிய விளக்கத்தை கேட்டவன் இதழில் தோன்றிய புன்னகையை அடக்கியவன் " அப்போ ஒரு அனிமல்ளோட லாங்குவேஜ் இன்னொரு அனிமல்க்கு  தான் தெரியும். கரெக்ட்டா மெசேஜ் அனுப்பி இருக்க. ச்சே எனக்கு தான் தெரியாம போச்சு. தேங்க்ஸ் டா என்னோட லவ் அச்செப்ட் பண்ணதுக்கு. 

இப்போ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மது . அதனால வித் யுவர் பர்மிசன்" என்று கூறியவன் திடீரென அவளின் வலது கையை எடுத்து அவனின் இதழ் அருகே கொண்டு சென்றவன்  மெல்லிய முத்தமொன்றை பதித்தான்.

"ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா. முதல்ல இந்த மாதிரி என்னை தொட்டு பேசறத நிறுத்து. அறிவில்லை உனக்கு. நீ இந்த மாதிரி பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை"

"சரி சரி. சாரி . இனிமேல் இப்படி பண்ணலை. பட் நான் கேட்டதுக்கு உன்னோட உண்மையான பதில் வேணும் எனக்கு . ப்ளீஸ் மது!!

"அச்சோ உனக்கு நான் எப்படி சொல்லி  புரிய வைக்கறது. எனக்கு அந்த மாதிரி ஐடியா ஏதும் இப்போதைக்கு இல்லை. அப்படி எதாவது இருந்தா கண்டிப்பா உன்கிட்ட வந்து சொல்றேன். ப்ளீஸ் இப்போ நான் வீட்டுக்கு போகணும். நீ முதல்ல வண்டியை எடு" என்று கூறவும் அவனின் முகம் வருத்தத்தை பிரதிபலித்தது.

அதனை முயன்று வெளிகாட்டாமல் மறைத்தவன் " இது தான் உன்னோட முடிவா" என்று அமைதியா குரலில் கேட்கவும்

"ஆமா" அவளும் அமைதியா குரலில் கூறினாள்.

அதன் பின்பு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதவன் வண்டியை எடுத்து அவளின் வீட்டின் முன் நிறுத்தினான்.அவள் இறங்கியதும் அவளை திரும்பியும் பார்க்காமல் வேகமாக சென்றான். 

இதனை நினைத்து பார்த்த மதுவுக்கு நீண்ட நாட்களாக  தன் மனதினை அரித்து கொண்டு இருந்த விஷயம் இப்போது மிக நன்றாக புரிந்தது. அன்று தன்னை  முதன் முதலில் கல்லூரி வாசலில் சந்தித்த போது அவன் தன் காதலை வெளிபடுத்தியதும், அவனிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறியதும் நினைவிற்கு வந்தது. " ச்வீட் ரஜு" என்று தனக்குள் கூறியவாறு அவனின் நினைவுகளுடன் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தாள் மதுமதி.

ஹாய் Friends!!

ரெண்டு மாசம் கழிச்சு ஒரு வழியா அடுத்த அப்டேட் குடுக்க  வந்துட்டேன். அப்டேட் படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ் சொல்லுங்க. ரொம்ப ஆவலோட எதிர் பார்க்கறேன். இனி மேல் ரெகுலரா அப்டேட் குடுத்தறேன். என்ஜாய் ரீடிங்! 

காற்று வீசும்

Episode # 08

Next episode will be published as soon as the writer shares her episode.

{kunena_discuss:848}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.