(Reading time: 20 - 40 minutes)

வ்வளவு நேரமா மயக்கத்தில்..??

மணி இப்போ விடியற்காலை மூன்றரை! பதினோரு மணிக்கு விழுந்தீங்க..

அச்சச்சோ!

அதற்குள் அவன் வந்துவிட்டான் கையில் ஜூஸுடன். 

இல்லை.. எனக்கு வேண்டாம்... நான் சாஃப்ட் டிரிங்கஸ் குடிக்க மாட்டேன்!

அப்போ ஹாட் டிரிங்கஸ் மட்டும் தானா?? சரி சரி சும்மா கண்ணை உருட்டாதே... இந்தா குழலீ முதல்ல இதை குடி ப்ரஷ் ஜுஸ் தான்...'

மச்சான் நீங்க போங்க.. இல்லைனா உங்க மனைவி பேயாட்டம் ஆடுவா.. இப்போ அந்த அம்மாவுக்கு ஏக மரியாதை வேற..ஹம்ம் என்ன செய்றது எல்லாம் என் நேரம்! சரி சரி நீங்க போங்க நான் பார்த்துக்குறேன். உதவி தேவைபட்டா கூப்பிடுறேன்!

சரி நீங்களாச்சு உங்க மனைவியாச்சு.. நான் கீழே போறேன்.. அவங்களை கொஞ்சம் தூங்க வைங்க!

கதவை தாளிட்டுவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டான். அப்போது தான் கவனித்தாள் தான் அணிந்திருந்த நகைகளை காணவில்லை... போட்டுக்கொண்டு தானே வந்தேன்... எங்கே போச்சு? சரி தேடி பார்க்கலாம்' என்று எழ முடியாமல் எழுந்து தேட தொடங்கினாள்... அது எப்படி எல்லா நகையும் காணாம போகும்??' என்று எண்ணியபடியே தோட்ட கதவை திறக்க போனவள் முடியாமல் கீழே விழும் முன் தன் கைகளில் தங்கியிருந்தான் பிரபு.

ஏய் புலீ! அறிவேயில்லையா? சொன்னா கேட்க கூடாதென்று முடிவு செய்திருக்கியா?' என்றவாறு அவளை தூக்கிக்கொண்டு கட்டிலை அடைந்து அவளை படுக்க வைத்து அவளை அணைத்தாற் போல் கைகளுக்குள்ளேயே படுக்க வைத்துக்கொண்டான்... அவளும் விலகவில்லை... அதற்கும் தேம்பும் இல்லை. அவனை ஒட்டியே படுத்துக்கொண்டாள்.

'ஏய் புலீ! ஏன் டீ இப்படி செய்யற? சொல் பேச்சு கேட்கவே மாட்டியா? எப்பவுமே தூக்கி வர என்னால் முடியாது…டீ...' என்று அவள் முகம் பார்த்து கடிந்து கொள்ள அவள் அழுதுக்கொண்டே அவன் முகம் பார்த்திருந்தாள்.

நான் புலீ... இல்ல! பூங்குழலீ!' என்று விலகினாள். 

ஏய் லூசு! உனக்கு பிடிக்காம இங்க எதுவுமே நடக்காது... நான் அவ்வளவு மோசமானவன் இல்லை... உன் உடம்பு பார் இப்படி நடுங்கிட்டு இருக்கு...? இப்படி என் மூலமாய் உனக்கு ஹீட் டாரன்ஸ்வர் செய்யறேன்... அவ்வளவு தான்.. மற்றபடி ஏதேதோ கற்பனை செய்துக்காதே!

நானா லூசு???

ஆமாம் பின்னே? சரி சரி முட்டக்கண்ணி! அப்படி பார்க்காதே! சொல்லிட்டேன்!

என் கண்ணு என்ன அவ்வளவு பெரிசாவா இருக்கு?

நகர்ந்து பக்கத்தில் இருந்த தலையணையில் படுக்க முயன்றவளை இழுத்து தன் தோள்மீது போட்டுக்கொண்டான். மெல்ல சொன்னான் 'இவ்வளவு நேரம் இங்க தானே படுத்துட்டு இருந்த?? இப்போ என்ன வந்துச்சு?? ஏதோ கீதா ஒரு எக்ஸ்ட்ரா பில்லோ உனக்காக எடுத்துட்டு வந்து கொடுத்தா... இல்லை ஒரு பில்லோ தான்! இது கீதாவுக்கு அவங்க வீட்டுல கத்துகொடுத்து இங்கே நம்ம வீட்டுல இம்ப்லிமென்ட் செய்யறா..'

ஏன் நம்ம வீட்டுல வேற பில்லோவே இல்லையா?

நம்ம வீட்டுல என்ன இருக்கு... இல்லை என்பதையெல்லாம் நாளைக்கு பேசலாம். இப்போ தூங்கு... நாளைக்கு குருவாயூர் வேற போகனுமே!

இப்படி பேசிக்கொண்டே எப்போது தூங்கினார்கள் என்பதே தெரியவில்லை!

மொபைல் ரிங்க் அடிக்க எழுந்து பார்த்தான் பிரபு! அவன் அம்மா அழைத்துக்கொண்டிருந்தார். நேரம் காலை ஒன்பது. அவசரமாக கையை விலக்கிக்கொண்டு எழுந்து அழைப்பை ஏற்றான். அம்மா வாசலில் தான் நின்றிருந்தார் குழலீக்கு தேநீருடன்!

கதவை திறந்ததும் கோப்பைகளை இவனிடம் கொடுத்துவிட்டு மருமகளை தேடி சென்றார்.

அவர் உள்ளே நுழையும் முன் அதிர்ந்து 'அம்மா!' என்றான்.

டேய் சிவா! பயப்படாதே! என்ன நடந்ததுனு எனக்கு தெரியும். மாப்பிள்ளை சொல்லிட்டார். நான் பார்த்துக்குறேன் விடு. ஆனா...'

சாரிமா! நான் சொல்ல வேண்டாம்னு நினைக்கலை.. கொஞ்சம் உடம்பு தேறட்டுமேனு பார்த்தேன்.. எப்படியும் உங்ககிட்ட எழுத்துடனேயே சொல்லிடனும் தான் முடிவு செய்தேன். அப்போவே சொன்னா நீங்க பயப்படுவீங்க.. தேவையில்லாத டேன்ஷன்... கீழே ரிலேடிவ்ஸ் வேற இருக்காங்க...'

கீதா சொன்னா!' என்று உள்ளே சென்று மருமகளை பார்த்தார். காய்ந்த கொடி போல துவண்டு கிடந்தாள் குழலீ. அவர் தலையை வருடி கொடுக்கும் போதே கண்விழித்து விட்டாள் குழலீ. அருகில் மாமியாரை பார்த்ததும் முகம் சிவக்க பதறி எழுந்தாள்.

இப்போ உடம்பு எப்படி மா இருக்கு? பரவாயில்லையா??'

ஒன்னுமில்லை அத்தை. சரியாகிடுச்சு! ஒரு பத்து நாளா சரியா சாப்பிடல... அதனால...'

சரி எழுந்து சீக்கிரம் கிளம்பி வாங்க! மதியம் விருந்து இருக்கு! நான் போய் ரெடி செய்யறேன்! சிவா... உனக்கு சிக்கேன், மீன், ப்ரான் எல்லாம் ஸ்பேஷல்... நீ என்னமா சாப்பிடுவ?'

இதை அவர் கேட்கும் போதே குழலீயின் முகம் அஷ்டகோணலாய் ஆனது.

அம்மா... விருந்துக்கு நான்வெஜ் வேண்டாம் மா! வெஜ் ல சமைத்திடுங்க... 

ஏன்டா? கல்யாண விருந்து கறிசோறு போடனும் டா!

குழலீ நான்வெஜ் சாப்பிட மாட்டா! சுத்த சைவம் மா!

ஓ!!!

சரி நீங்க ரெண்டு பேரும் தயாராகி கீழே வாங்க.. மறக்காம நகையேல்லாம் போட்டுகிட்டு வாமா!

குளித்து தயாராகி வந்தவுடன் பிரபுவுடம் தான் அணிந்திருந்த நகைகளை பற்றி கேட்டாள் குழலீ. பிரபுதான் அவற்றை கழற்றி வைத்ததாய் கூறி எடுத்து வந்து கொடுத்தான்.

அப்போதுதான் அவள் சொன்ன அந்த வரிகள் நினைவு வந்தது...

'போதும் பிரபு! இதுக்கு மேலையும் என்னால் உடைய முடியாது... ஆனாலும் உங்களை வெறுக்க முடியவில்லையே என்னால?'

அவளுக்கும் அதே நினைவு போல! தன் நகைகளை வாங்கிக்கொண்டு இறங்க போனாள்.

இரு.. நகையேல்லாம் மாட்டிக்கிட்டு. போ!... ஒரு நிமிஷம்! கொடு நானே போட்டுவிடறேன்!

இல்ல...தேவையில்ல! இட் ஸ் நன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்! டோன்ட் டேக் டூ மச் அட்வான்டேஜ்! எனக்கும் கையிருக்கு நானே போட்டுக்குவேன்!' என்று நடந்தவள் கதவருகே ஒரு நிமிடம் நின்று ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துக்கொண்டு இவனிடம் திரும்பி...

'சாரி... நேற்று தேவையில்லாமல் உங்களுக்கு சிரமம் கொடுத்ததற்கு.. என்னை தூக்கி வந்து முதலுதவி செய்து... எல்லாம் சிரமம் தானே! ஐ ம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி!...

அண்ட் தேங்கஸ்! இது எல்லாம் செய்து என்னை காப்பாற்றியதற்கு! இந்த உதவிக்கு நான் நன்றிகடன் பட்டிருக்கேன்! இதற்கு கைமாறு செய்ய தெரியல... பட்.... இப்படி ஏதாவது செய்ய முடியும்னா சொல்லுங்க செய்துடறேன்! அப்படி செய்யவில்லைனா என்னால நிம்மதியா தூங்க முடியாது!'

.......

சரி யோசித்து சொல்லுங்க! நான் போறேன்!

ஒரு பக்கம் கோபம் கொந்தளித்து கொண்டிருந்தது. மறுபக்கம் மகிழ்ச்சி. 

நைட் எல்லாமே என் தோள் மேல தான் தூங்கிட்டு இருந்தா? சுய நினைவு வந்தவுடனே எவ்வளவு பேசறா பாரு?திமிரு மட்டும் அப்படியே இருக்கு! ஆனா பேசறது...? அப்போ இந்த அளவுக்கு பேச மாட்டாளே? எப்போ இருந்து இவ்வளவு வாய் வந்ததோ? எங்க போய்விட போற? அந்த திமிரை நான் அடக்காம விடப்போறதில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.