(Reading time: 20 - 40 minutes)

ன்றைக்கோ அவன் நண்பனிடம் சொன்ன நினைவு வந்தது. எனக்கு மனைவியாய் வர பெண்ணுக்கு என்னை போலவே சுயமரியாதை இருக்கனும்! யாராயிருந்தா என்னக்கென்ன... என் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டேனு நிக்கனும்! எல்லா முறையிலும் எனக்கு சரிசம்மா இருக்கனும்!'

இவளுக்கு என்னை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கு!' முதல் முறையாக அவள்மீது மதிப்பு வந்தது. அன்று முழுவதும் அவளது செய்கைகள் அந்த மதிப்பை அதிகரித்தது.

மறு விருந்தாக அசைவ உணவு தான் போடப்பட்டது. இவள் உறிவுகளுக்கு தனியாக வெஜ் அயிட்டங்கள் தயாரிக்கப்பட்டது. அதையும் அவளே முன்னிலையில் இருந்து தயாரித்தாள்.  அவர்களுக்கு பார்த்து பார்த்து உணவளித்தாள். பிரபுவின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் போதும் சகஜமாய் தான் சாப்பிட்டாள்.

'இவ்வளவு பார்த்து செய்தும் ஏன்டா சிவா இப்படி செய்யற?' என்று மாலதி கடிந்துக்கொள்ளவும் தான் அதை கவனித்தாள். அவனும் சைவ உணவு தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்தவையாக பார்த்து பார்த்து செய்த மாமியாருக்கு பெருத்த ஏமாற்றம்!

உனக்காக தானே சிவா இவ்வளவையும் பார்த்து செய்தோம்! நீ இப்படி எதையுமே தொடாமல் இருந்தா என்ன அர்த்தம்?'

நான் எதையுமே சாப்பிட மாட்டேனு அர்த்தம். இன்றிலிருந்து எப்போதுமே சாப்பிட மாட்டேனு அர்த்தம். நான் தான் சொன்னேன் இல்ல... குழல் சுத்த சைவம்.. அதனால சைவமே சமைத்திடுங்கனு! இனி நானும் சாப்பிட போறதில்ல!'

டேய் பிரபு! இதேல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியல??' - கீதா

அவனை விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தாள் குழலீ.

ஏம்மா மருமக பொண்ணே! நீ சைவமா?? முட்டையாவது சாப்பிடுவீயா? உனக்காக பாரு என் பேரன் சாப்பிட மாட்டறான்! பொண்ணா பொறந்தா நீ தான் இதையேல்லாம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சு போகனும்.. இதுவரைக்கும் சாப்பிடலைனா இனி சாப்பிட்டு பழகிக்க? ஆண்பிள்ளை உனக்காக இறங்கி வந்து அவனோட வழக்கங்களை விட்டுக்கொடுக்கனுமா? என்னடீ அம்மா நியாமா இது? உங்க அம்மாவை கூப்பிடு கேட்கிறேன் இந்த நியாத்தை!' என்றார் கிராமத்திலிருந்து வந்திருந்த பிரபுவின் அந்த ஒன்றுவிட்ட பாட்டி!

ஆயா! நீ சும்மா இருக்கியா! எனக்கு சாப்பிட பிடிக்கல அதனால சாப்பிடல... அதேன்ன ஆண்பிள்ளை இறங்கி வந்தா குற்றமா? அதுவும் கட்டின மனைவிக்காக? அவ பிறந்த குடும்பத்தை விட்டுட்டூ எனக்காக நம்ம வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கா! அவளுக்காக நான் இதை விட்டுக்கொடுக்க கூடாதா? இது புருஷன் பொஞ்சாதிக்குள்ள சமாச்சாரம்.. நீ இதுல்ல தலையிடாதே! எங்க கல்யாணத்தை பார்க்க வந்த... கண்குளிர பார்த்தேயில்ல? நல்லா கறிசோறு சாப்பிடு... ஓய்வெடுத்து ஊரை பார்த்து கிளம்பு! இல்ல அமைதியா இரு!'

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தாள் பூங்குழலீ. 

எனவோ போடா சிவநாதா! ஒரு ராத்திரியில்லேயே முந்தானையில்ல உன்னை முடிஞ்சிட்டா இந்த பொண்ணு!'

ஏய் தேவானை! சும்மா அமைதியா இருக்க மாட்டே.. பட்டணத்தில்ல வந்து பேரப்புள்ள பொஞ்சாதிக்கிட்ட வம்பு வளர்க்கிற?' என்று கடிந்து கொண்டார் நேற்று இரவு தாலிக்கொடி அணிவித்த அந்த பெரிய பாட்டி!

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து புறப்பட்டனர் திருவனந்தபுரம்.

ஏர்போர்ட் வரைக்கும் ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டனர். திருவனந்தபுரத்தில் இறங்கும் வரை அவர்களது நேரம் மௌனத்திலேயே கரைந்தது! இருவரது மனமோ தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.

நான் சாப்பிடலைனா இவனும் சாப்பிட மாட்டானா?? நிஜமாவே பெண்களை மதித்தது நடப்பவனா?? என் எக்ஸ்பக்டேஷன்சை தெரிந்து வைத்து ஆக்ட் கொடுகிறானோ?? சரி பார்ப்போம்!'

என் வீட்டுல எல்லார்கிட்டையும் நல்ல விதமா தான் நடந்துக்குறா.. பாட்டி பேசின பேச்சுக்கு மேடமுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியிருக்கும்! பட் அமைதியின் திருவுருவமா தானே இருந்தா? எனக்காக பொருத்து போகிறாளா?? அப்படிப்பட்டவ இல்லையே?சரி பார்ப்போம்!'

விமான நிலையத்தில் இவர்கள் வெளியே வரும்போதே யாரோ ஒரு பெண் இவர்களை நோக்கி வேகமாய் வருவதை பார்த்துவிட்டு குழலீயிடமும் காட்டினான்.

அண்ணி!!' என்று அந்த பெண் கட்டிக்கொண்டாள்.

அண்ணி!' என்று இன்னோரு வாலிபன் வந்து சேர்ந்தான்.

டேய் சும்மா இருங்கடா!' என்றாள் குழலீ.

அண்ணி! சம அழகாயிருக்கீங்க! அசத்தரீங்க போங்க... இத்தனை நாள் எங்கேயிருந்தது இவ்வளவு அழகும்? நாங்க சொல்லும் போது காதிலேயே வாங்க மாட்டீங்களே! இப்போ மட்டும் எப்படி?

ஹம்ம்... அந்த அழகை ஆராதிக்க இதோ ஒருத்தர் வந்திட்டாருல்ல.. அதனால தான்டீ லூசு!'

திவ்யா.. விஷால் (அர்ஜுனின் தங்கையும் தம்பியும்)! சும்மா இருக்க மாட்டீங்களா? வந்தவுடனேவா! இங்க பாருங்க.. இவர் தான் உங்க அண்ணா... பிரபு!

ஹாய் சேட்டா!' என்றாள் திவ்யா.

பட் நீங்க செய்தது ரொம்ப பெரிய அநியாயம் அண்ணி! நாங்க எவ்வளவு ஆசையோட உங்களை அண்ணினு கூப்பிடறோம்! நீங்களும் அர்ஜுனும் என்னடானா எங்களை ஏமாத்திட்டீங்க! சரி பரவாயில்லை.. உங்களை கல்யாணம் செய்ததுனால இவர் எங்களுக்கு அண்ணா! - என்றான் விஷால்.

பிரபுவின் முகத்தை அப்போது ஒரு நொடி பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சி! 'இவன் காதலி ப்ரியாவை அர்ஜுடன் பார்த்தபோதோ அவர்கள் இருவரும் திருமண செய்யும் செய்தி கேட்டோ இவன் அவ்வளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை! ஆனால் என்னை வேறு ஒருவன்... அதுவும் அர்ஜுனுடன் இணைத்து பேசும் போது எதுக்கு இவ்வளவு கோபம்... இவ்வளவு உணர்ச்சிகள் முகத்தில்!'

அண்ணா... அண்ணி! வாங்க வீட்டுக்கு போகலாம்! நீங்க என்ன கேட்க வரீங்கனு புரியுது.. ரிலேடிவ்ஸ் கூப்பிட வந்தோம்! பட் அவங்களை டிரைவர் கூப்பிட்டு வருவார். நீங்க இருவரும் தான் முக்கியம்... வாங்க போகலாம்!' என்று இருவரையும் இழுத்து சென்றனர்.

இவர்களுக்காக வந்திருந்த வண்டியிலேயே சென்றனர். விஷாலும் திவ்யாவும் இவர்களுடன் பேசிக்கொண்டே வந்தனர். குழலீயிடம் பேச வேண்டும் என்று தனிமைக்காக காத்திருந்தான். அவளும் அந்த தனிமைக்குத்தான் காத்திருந்நாள்! ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல சந்தர்ப்பம் அமையவில்லை! அர்ஜுன் வீட்டிற்கு சென்றவுடன் சூழ்நிலை இன்னும் மோசமானது!

மாமா.. அத்தை!' என்றழைத்தவாறு அர்ஜுனின் பெற்றோரிடம் ஆசிப்பெற்றாள். புதுமணமக்கள் என்பதால் இவர்களுக்கு தனியாக அறை ஒதுக்கியருந்தனர்... ஆனால் தனிமை தான் கிடைக்கவில்லை! யாரவது நாலு பேர் உடன் இருந்து கொண்டேயிருந்தனர். இவர்கள் திருமணத்திற்கு வர இயலாத்தால் இப்போது தாங்கினர். அர்ஜுன் வீட்டில் உள்ள அணைத்து சொந்தங்களும் குழலீயை நன்கு அறிந்துவைத்துருந்தனர். காலில் சக்கரம் கட்டாத குறையாய் பம்பரமாய் வேலை செய்து கொண்டிருந்தாள்.

சரியென்று வெளியில் சென்று காற்றாட நிற்கலாம் என்று நினைத்தால் அங்கே அர்ஜுன் யாருடனோ ஃபோனில் சிரித்து ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். பிரபு நிற்பதை கவனித்துவிட்டு பேசியவாறு பிரபுவிடம் வந்தான் அர்ஜுன்.

நான் உங்ககிட்ட குழலீயை பத்தி கொஞ்சம் பேசனும்! இப்போ நீங்க ஃபரி தானே பிரபு? 

சொல்லுங்க அர்ஜுன்! 

கொஞ்சம் அப்படியே நடத்துகிட்டே பேசலாமா?

சரி வாங்க!

இருவரும் பேசிமுடித்து வரும் போது இருவர் மனதிலும் பெரிய மாற்றங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.