(Reading time: 10 - 19 minutes)

05. நேசம் நிறம் மாறுமா - தேவி

தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச் 

செய்து வருங்காற்றே;

உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர் 

உள்ளம் படைத்துவிட்டோம்.

சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு 

சேர்ந்திடு நற்காற்றே!

மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ் 

வெட்டொலி யேன்கொணர்ந்தாய்?

- பாரதியார் 

Nesam niram maaruma

வெண்மதியின் படிப்பை பற்றி கேட்டு திகைத்த ஆதி மேலே ஏதோ கேட்க வருமுன் மேனேஜர் வரவே அப்படியே நிறுத்தி விட்டு தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

மேனேஜர் வரவும் மதி அவருக்கு குடிக்க எடுத்து வந்தாள். அவரோடு ஆதிக்கும் ஜூஸ் எடுத்து கொடுத்தாள். அவர்கள் குடித்து முடிக்கவும் , கிளம்பியவளை தடுத்த ஆதி

“இப்போ உள்ளே என்ன வேலை இருக்கிறது?” என்றான்.

“உள்ளே மதிய சமையல் பார்க்க வேண்டும்.’

அப்போது ஜானகி மானேஜரை பார்த்து விசாரிக்க வந்திருக்க, ஆதியின் கேள்வியை கவனித்து “அதை நான் பார்த்து கொள்கிறேன் மதிம்மா. நீ ஆதியோடு இருந்து அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்.

இல்லை அத்தை. நீங்கள் கஷ்டபட வேண்டாம்.

நான் ஒன்றும் அதிகமாக செய்யப் போவதில்லை. மற்ற வேலை எல்லாம் வள்ளியிடம் வாங்கிவிட்டு, மேல் சமையல் மட்டும் செய்கிறேன்.

ஆதியும் “அம்மா நீங்கள் அதிகபடியாக செய்ய வேண்டாம். மெதுவாக செய்யுங்கள் போதும். அவசரமில்லை. மதி நீ இங்கேயே இருந்து எனக்கு இந்த லேப்டாப் வேலையில் உதவி செய்.” என்று கூறவே

“சரி” என்றாள்.

ஜானகி கிளம்பவும், மானேஜரை சோபாவில் உட்கார சொல்லி விட்டு, மதியை அந்த மூவிங் டேபிளை கட்டில் அருகே நகர்த்த சொல்லி அதிலே லேப்டாப் வைத்தவன், அவளையும் ஒரு சேர் போட்டு உட்கார சொன்னான்.

மேனஜெரிடம் ஒவ்வொரு பைலாக வாங்கியவன் அது சம்பந்தப்பட்ட விவரங்களை அவன் சொல்ல சொல்ல லேப்டாபில் ஏற்றினாள் மதி. மதிய உணவு நேரம் வரை வேலை செய்தவர்கள் மானேஜெரை அனுப்பி வைத்தான்.

அவரிடம் சொல்லிய விவரங்களை சரி பார்த்தவன், மேலே ஏதோ கூற வந்தவனை தடுத்து எழுந்தாள் மதி. ஆதி கேள்வியாக ஏறிடவும்

“போதும். நீங்கள் ரெஸ்ட் எடுப்பதற்கு பதிலாக இன்னும் வேலையே அதிகமாக்கி கொள்கிறீர்கள். மீண்டும் மாலையில் சூர்யாவிடம் வேறு டிஸ்கஸ் செய்ய வேண்டும்மல்லவா.  இப்போது சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.” என்று கூறி விட்டு அவள் உணவை எடுத்து வர சென்றாள்.

அவனுக்கு மனதில்லை என்றாலும் உடலுக்கு ஓய்வு தேவை என்று உணர்ந்தான்.. மேலும் இப்போ ஸ்ட்ரைன் செய்தால் பிறகு நடமாட இன்னும் அதிக நாளாகும் என்று எண்ணினான்.

மதி சாப்பாடு எடுத்து வந்து ஊட்ட ஆரம்பித்தாள். ஆதி அவளிடம்

“இப்போ இடது கை நல்லாத்தான் இருக்கு. ஸ்பூன் கொடு நானே சாப்பிடுக்றேன்”

“பரவாயில்லை. . இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். பிறகு நீங்களே சாப்பிடலாம்”

சாப்பிட்டு கொண்டே ஆதி “நீ M.BA. எங்கே படித்தாய்?”

“IIM Ahamedbad” என்றாள்.

“ஆனால் நீ M.com தானே”

“இல்லை. ரிசல்ட் வராததால் அப்பா அப்படி சொல்லிருப்பார்.

“ஓஹ.. “என்றவன் .. சாப்பிட்டு முடிக்கவும், அவனுக்கு தேவையான மருந்துகளை கொடுத்தாள். மருந்து சாப்பிட்டவுடன் கிளம்பியவளை

“மதி. ஐ ம் சாரி. நான் உன்னை வீட்டிற்குள் முடக்கி விட்டதற்கு “

“இல்லை. இதுவும் என் கடமை தானே. “ என்றாள்.

நான் நன்றானவுடன் உனக்கு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்றான் ஆதி.

“அதை பற்றி ஒன்றுமில்லை. நீங்கள் சீக்கிரம் குணமாகுங்கள். “

அவள் கிளம்பியவுடன், அவன் மனசாட்சி “ஆதி நீ ரொம்ப சுயநலம் பிடித்தவானாகி விட்டாய். சீக்கிரம் மாறி விடு” என்று இடித்து கூறியது, பிறகு மாத்திரைகளின் விளைவால் உறங்கினான்.

தற்கிடையில் சூர்யா அண்ணன் பார்க்க வேண்டிய பைல்களை அப்பாவிடம் கொடுத்து மதியத்திற்கு மேல் அனுப்பி விட்டான். அவர் வெகு நாட்கள் கழித்து வந்திருப்பதால் அதிகம் பளுவேற்றாமல் விரைவில் வீட்டிற்கு செல்ல சொன்னான்.

அவர் வந்த பின் மதி, ராகவன், ஜானகி, அதிதி நால்வருமாக உணவருந்தினார்கள். சூர்யாவிற்கு ஏற்கனவே அனுப்பி விட்டாகியது. மதிய உணவின் போது அதிதியை கவனித்த மதி, அவளிடம் முந்தைய நாள் மலர்ச்சி இல்லை என உணர்ந்தாள் அப்போது ஆதி இரவு கூறியது நினைவு வந்தது. அவளிடம் இன்று பேச வேண்டும் என்று எண்ணினாள்

மாலையில் இவர்கள் எல்லாரும் ஏற்கனவே டிபன் காபி முடித்திருக்க, கொஞ்சம் லேட்டாக வந்த சூர்யாவும், அதிதியும் ரெப்ரெஷ் செய்து விட்டு ஆதியின் அறைக்கு சென்றனர்.

அன்றைய வேலையை பற்றி பேசி கொண்டிருக்கும் போது ஆதியின் அம்மா, அப்பாவும் அங்கே வந்தனர். எல்லாரும் அங்கே இருக்கவே , சூர்யாவிற்கும் அதிதிக்கும் நேராக ஆதியின் அறைக்கே டிபன் எடுத்து வந்தாள் மதி.

“அண்ணி, உங்களுக்கெல்லாம் “ என்றாள் அதிதி.

“நாங்கள் முடித்து விட்டோம். நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள் “ என்று கூறி விட்டு கிளம்பியவளை

“நீங்கள் எங்கே போறிங்க? என்று வினவிய சூர்யா, “இங்கே உட்காருங்க” என்று அங்கே இருந்த சோபா, சேர்களில் இவர்கள் அமர்ந்திருக்கவே , ஆதியின் கட்டிலை காண்பித்தான். ஒரு கணம் தயங்கி ஆதியை பார்த்தவள், அவன் தலையசைக்கவும், அருகில் அமர்ந்தாள்.

பிறகு விட்ட பேச்சை தொடர்ந்து சூர்யா “அண்ணா, இன்றைக்கு இண்டர்வ்யு செய்தவர்கள் பைல்ஸ். என்னுடைய மற்றும் பர்சனல் மேனேஜர் இருவரின் கருத்தும் இருக்கிறது. நீ பார். நாளை செலக்ட் செய்பவர்களுக்கு பதில் சொல்லி விடலாம். “

அதை பார்த்து கொண்டே கேள்விகள் கேட்டு கொண்டிருந்தவன், “சூர்யா, இந்த வான்மதி .. ?” என்று நிறுத்தவும்,

“அண்ணியின் தங்கைதான் அண்ணா, அவளும் வந்திருந்தாள். “

மதியும், அதிதியும் “ஐயோ, செலக்ட் செய்து விட்டீர்களா? “ என்று ஒரு சேர வினவ,

சூர்யா சிரித்து கொண்டே “என்ன அண்ணி, நீங்கள் கூட ஜெர்க் ஆகிறீர்கள்” என்றாள்.

சூர்யா, அந்த வாயாடியை வைத்து எப்படி சமாளிக்க போகிறீர்கள். அவள் இது வரை வேலை செய்த நிறுவனித்தில் எல்லாம் இவள் படுத்திய பாடு .. இங்கே வந்தால் உங்களுக்கு தலை வலிதான்.”

ஏன் அண்ணி , அப்படி என்ன செய்தாள் ?

அதிதி முகமெல்லாம் சிரிப்போடு “அண்ணா, நேற்று ஒரு நாள் நான் அவளை கூடிக்கொண்டு சென்றதில், அவள் எட்டு மணி நேரத்தில் ஆறு மணி நேரம் காண்டீனில் தான் இருந்தாள். அதிலும் மிச்ச இரண்டு மணி நேரத்தில் கேட் வாட்ச்மேநிலிருந்து ஜெனரல் மேனேஜர் வரைக்கும் எல்லாரிடமும் அரட்டை தான். சரியான சார்ட்டெர் பாக்ஸ் அண்ணா அவள்.” என்றாள்.

“ஒஹ்ஹ .. என்று முகத்தில் ஒரு எதிர்பார்ப்புடன், சூர்யா “அண்ணா , என்ன செலக்ட் செய்து விட்டயா?” என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.