ஆதி யோசனையோடு தன் அப்பாவை பார்த்தவன் அவர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவும் “சூர்யா, வாணியை செலக்ட் செய்து விடு” என்றான்,.
மதி சூர்யாவிடம் “நீங்கள் அவள் உங்கள் வேலைக்கு பொருத்தமாக இருப்பாளா? என்று யோசித்து கொள்ளுங்கள்”
“எனக்கு பொருத்தம்தான். “ என்று முனகியவன் “ வேலைக்கு எல்லாம் பொருத்தம் தான் அண்ணி. “
ஆதி ஏதோ யோசித்து கொண்டிருந்தவன், மதி ஆதியின் முகத்தை பார்க்கவும் “அவள் படிப்பு, தகுதி எல்லாம் ஓகே தான். நமக்கும் நம்முடைய ஆள் ஒருவர் அலுவலகத்தில் இருப்பது வசதிதான். நேரடியாக நிர்வாகத்திடம் வர தயங்கும் சில விஷயங்கள் தெரிய வாய்ப்பாகும். மேலும் அப்பாவிற்கும் கொஞ்சம் இலகுவாக இருக்கும்” என்று முடித்தான்.
இப்படியே அன்றைய மாலை பொழுது கழிய, இரவு உணவு எல்லாரும் முடித்து விட்டு அவரவர் அறைக்கு திரும்பினர்.
ஆதிக்கு தேவையானது செய்து விட்டு, படுக்க போகும் முன்
“உங்களிடம் ஒன்று கேட்கலமா? “ என்றாள் மதி.
“என்ன?” என்று பார்த்தவன்
“நீங்கள் நேற்று சொன்னதற்கு பிறகு அதிதியை கவனித்தேன். அவளிடம் ஒரு கல கலப்பு இல்லை. அது ஏன் என்று தெரியுமா?
“ஹ்ம்ம்... நீ அவளிடம் கேட்கவில்லையா?
“அது .. அவளிடம் பேசுவதற்கு முன் உங்களிடம் இருந்து ஏதாவது தெரிந்து கொள்ளலாமே என்று நினைத்தேன்.
“அவளிடம் நீயே பேசு. அவளும் சார்ட்டர் பாக்ஸ் தான். இப்போதான் இப்படி இருக்கிறாள். ஒரு வகையில் நானும் அதற்கு காரணம். மேலும் அவளுக்கு இப்போ நல்ல பிரண்ட்ஸ் தான் தேவை. அது நீயும், வாணியாக இருந்தால் நல்லது. அவளும் உங்களிடம் மட்டும் தான் அப்படி இருப்பாள் என்று எண்ணுகிறேன்.
மதிக்கு வியப்பாக இருந்தது. சரி இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம் என்று எண்ணியவள், குட் நைட் கூறி விட்டு படுத்தாள்.
மறு நாள் முதல் நாள் போலே செல்ல, அலுவலகத்திற்கு சென்ற சூர்யா செய்த முதல் வேலை வாணிக்கு வேலை நியமன உத்தரவு அனுப்பியதுதான். அதுவும் உடனே வேளையில் சேர சொல்லி.
வீட்டிற்கு மதியம் சாப்பிட வந்த அதிதியுடன் மதி பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
மதி “அதிதி, இன்று மாலை வாணி வருகிறாள். நீயும் சீக்கிரம் வந்து விடு. மூன்று பெரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம் “ என்று கூறினாள்
“அட.. சரி அண்ணி. போகலாம்” என்றாள்.
அன்று மாலை சூர்யா வரும்போது வாணியின் குரல் கேட்கவே ஒரு புன்னகையோடு உள்ளே வந்தான்.
அவள் ஆதியிடம் “அக்கா, மாமா, எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இந்தாங்க ஸ்வீட்“ என்று கொடுத்தாள்.
மதி “ஏய், ஏண்டி இவர்கள் கம்பனில் தான் என்று சொல்லல?
“அக்கா , எனக்கு எப்படி தெரியும் .. இது மாமாவின் கம்பனி என்று. அப்பா கிட்ட கூட பேர் எல்லாம் சொல்லல. சரி போய் பார்ப்போம். கிடைச்சா சொல்லலாம்நு நினைச்சேன். ஆனா அங்க ஒரு ஏலியன் என்னை சைட் அடிக்க ஆசை பட்டு வேலை போட்டு கொடுத்திருச்சு. சரி நம்மல பத்தி தெரியாம ஒரு எலி வந்து மாட்டிருக்கு . ஏன் விடுவானேன்னுஓகே சொல்லிட்டேன்.
அதிதி “அதென்னடி ஏலியன்? என
அதுவா இண்டர்வியு முடிச்சிட்டு மாமாவை பார்க்க போனா, மாமா பைலே எல்லாம் வச்சுட்டு ஒரு மாதிரி முழிச்சுட்டு இருந்தார். என்ன ஆச்சு? கேட்டா ரொம்ப நாளா ஆபீஸ் வராததால ஒண்ணுமே புரியலன்னு சொன்னார். அப்போதான் உங்க அண்ணா வந்தாரா, நான் அவருக்கு ஏலியன்னு பேர் வச்சுட்டேன் என்று சிரிக்க,
பின்னாடி இருந்து வந்த சூர்யா அவள் தலையில் தட்டி “ஏய் வாயாடி இங்கே என்ன எக்ஸ்ட்ரா பிட் போட்டுட்டு இருக்க என்று அவள் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸ் ஸ்வீட் எடுத்து சாப்பிட்டான்
ஹி ஹி .. என்று சிரித்து சமாளித்த வாணி , ஆமா சார், நீங்கள் எப்படி எனக்கு வேலை கொடுத்தீங்க? எங்க அக்கா சிபாரிசா
யாரு உங்க அக்காவா ? உனக்கு வேலை போட்டு கொடுக்க வேண்டாம்நு தான் சொன்னங்க. நான்தான் நீ வேற எங்கியாவது வேலைக்கு போய் அவங்களோட சாபத்தை வாங்கறதுக்கு பதிலா, நீயே எங்க உயிரை வாங்கிக்கோனு அப்போயன்ட் பண்ணிட்டேன்.
அக்கா துரோகி .. . உனக்கு ஏன் இந்த பொறாமை .. எனக்கே கொஞ்சம் பொழுது போகுமேனு வேலைக்கு போலாம்னு பார்த்த.. “இப்படி பன்றீங்கலேம்மா “ சிவகர்த்திகேயன் ஸ்டைலில் கேட்டாள்.
ஏண்டி உனக்கு பொழுது போறதுக்கு மாமா கம்பனிதான் கிடைச்சுதா.. என்று அடிக்க வர அங்கே கட்டிலை சுற்றி வாணி ஓட மதியும் அதிதியும் துரத்தினார்கள்,
சற்று நேரம் கழித்து மூவரும் கோவிலுக்கு கிளம்ப, சூர்யா, ஆதியிடம் “அண்ணா , ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருக்குல்ல ,” என ஆதியும் சின்ன சிரிப்போடு ஆமோதித்தான்.
கோவிலுக்கு சென்ற மூவரும் , சாமி கும்பிட்டு விட்டு அரட்டை அடித்து விட்டு கிளம்பினர். வாணி அங்கிருந்தே தங்கள் வீட்டிற்கு செல்வதாக கூற அதிதியும் மதியும் மட்டும் காரில் வந்தனர். நேராக வீட்டிற்கு வந்தவர்கள் , எல்லாரிடமும் பிரசாதம் கொடுத்து விட்டு, இரவு உணவிற்கு நேரம் இருக்கவே, தோட்டத்திற்கு வந்தார்கள். சூர்யாவும், ஆதியும் பேசி கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, “அதி, உன்னிடம் கொஞ்சம் பேசலாமா” என்றாள் மதி.
“என்ன அண்ணி?” என்றாள்
“உனக்கு ஏதாவது மனசுக்குள் குறை இருக்கிறதா? ஏனோ உன்னிடத்தில் ஒரு சோகம் இருக்கிற மாதிரி இருக்கு.
அண்ணன் கேட்க சொன்னரா
இல்லை .. நானாகத்தான்.. என்று மதி இழுக்க
எனக்கு தெரியும் அண்ணி. இது நிச்சயம் அண்ணன் கேட்க சொல்லி இருப்பார். நீங்கள் அனாவசியமாக எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. நீங்கள் என்னை கவனித்து இருந்தாலும் கூட அண்ணன் சொல்லாமல் கண்டிப்பாக கேட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆம். உன் அண்ணன் தான் கேட்க சொன்னார். ஆனால் அவர் சொல்ல வில்லை என்றாலும் நான் கேட்டிருப்பேன் .. இன்னும் கொஞ்ச நாள் கழித்து. இப்போ நீ சொல்.
உங்களுக்கு அண்ணனின் முதல் திருமண ஏற்பாடு பற்றி தெரியும் என்று நினைக்றேன்.
ஹ்ம்ம்.. தெரியும் ...
அப்படியானால் உங்கள்ளுக்கு வாசு மாமா, பத்மா அத்தை மற்றும் வந்தனா பற்றியும் தெரியுமா.
அவர்கள் உங்கள் குடும்ப நண்பர்கள் என்பதும், வந்தனாவோடு தான் உன் அண்ணனுக்கு முதலில் திருமணம் பேசியது என்றும் தெரியும்.
நான் இப்போது வந்தனாவை பற்றியும் , அவர்கள் திருமண ஏற்பாடு பற்றியும் உங்களிடம் சொல்கிறேன்.
தொடரும்
{kunena_discuss:903}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.