(Reading time: 12 - 24 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 16 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ந்த எரிச்சலான குரலிற்கும் , வசீகர முகத்திற்கும் உரிமையாலானாய் அங்கு நின்று கொண்டிருந்தான் சித்தார்த்..! அருள் சாஹித்யாவிற்கு , உறவு முறையில் அண்ணன் என்றாலும், உண்மையில் அவனே அவர்களுக்கு நண்பன் , ஆசான் , வழிகாட்டி அனைத்தும் ! தொழிலை பொருத்தவரை அவனது சாம்ராஜ்யம் மிகப்பெரியது..ஆனால் அதற்கென கர்வமே இல்லாமல் இருந்தான் அவன்.. ஹரிணியின்மேல் காதல் கொண்டு அவளை கரம் பிடித்த கண்ணிய கணவன்.. அன்புக்கு மட்டுமே அடிபணிபவன்.. (சித்து  அண்ணா , தங்கச்சி கொடுத்த பில்ட் அப் போதுமா? ஹா ஹா )

“சித்து  அண்ணா “என்று ஆர்பரித்து கொண்டே இருவரும் அவனை கட்டி பிடித்து கொண்டனர்.. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இவர்களை பார்த்து? மனதிற்குள் எண்ணி கொண்டே அவர்கள் தோளில்  கை போட்டு கொண்டவன் , சந்தோஷிடம் தன்னை அறிமுகபடுத்தி கொள்ளவும் மறக்கவில்லை..

“ஹாய் , சந்தோஷ்.. ஐ எம் சித்தார்த்..உங்க சாஹித்யாவின் அண்ணன் “என்றவன் “உங்க சாஹித்யா “என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்கவும் , அவள் முகத்தில் லேசாய் ஏதோ பரபரப்பு.. அதை அவனும் அறியாமல் இல்லை.. மெல்ல புன்னகையுடன் தங்கையின் அருகில் வந்தான் சித்தார்த்..

Enna thavam seithu vitten

“என்னமோ , கல்யாணமே வேணாம்..என் மனசை யாரும் மாற்ற முடியாதுன்னு சொன்னியே.. இப்போ என்னாச்சு டா “என்று கேட்டு அவள் முகத்தை நோக்கினான்.. அவள் முகம் போன போக்கை பார்த்து மூவருமே சிரித்தனர்.

“சரி சரி இதுக்கு மேல தலை குனியாதே டீ , கழுத்து சுளுக்கிட போகுது “என்று வாரினான் அருள்மொழிவர்மன்.. அவன் முதுகில் அவள் இரண்டடி போடுவதற்கு முன்பே அந்த வேலையை செவ்வனே செய்து தங்கைக்கு ஹை  5 கொடுத்தான் சித்தார்த்..

“அண்ணா யூ டூ?"

“என்னடா யூ டூ?? நீ எப்போ லண்டன் வந்த? என்கிட்ட கூட சொல்லலை நீ? “என்றான் சித்தார்த்.

“என்ன அண்ணா சொல்லுரிங்க? அப்போ அருள் உங்க கூட வரலையா?”என்று விழிகளை வழக்கம் போலவே உருட்டினாள்  சாஹித்யா.

“இல்லடி மண்டு.. நான் இங்க வந்தே ரெண்டு நாள் ஆகபோகுது.. அப்பா அம்மாவுக்கும் சந்தோஷுக்கும் மட்டும்தான் தெரியும்.. வானதி கிட்ட கூட கெளம்பும்போது தான் சொன்னேன்.. "

“ஓஹோ , அதான் நேத்து நைட் நீ ரூம் ல இருந்து வரவே இல்லையா டா?"

“நான்தான் இங்க இருக்கேனே லூசு , அப்பறம் ரூமில் தேடினா எப்படி கிடைப்பேன் “

“ஏன்டா இப்படி எல்லாம் டிராமா பண்ணுற?”என்று சாஹித்யா கம்மிய குரலில் ஆரம்பிக்கவும் சந்தோஷ் சிட்டார்த்ஹ் இருவரும் ஒரே நேரத்தில்

“கட்  கட்... இந்த சீன்  எல்லாம் இங்க வேணாம்.. முதலில் வீட்டுக்கு போகலாம் “என்று அப்போதைக்கு அவர்களது பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்து இருவரையும் கிட்ட தட்ட தரதரவென இழுத்தே சென்றனர்.. அப்போதும் இருவரும் அமைதியாய் வரவில்லை என்பதுதான் உண்மை..

“ஹரிணி அண்ணி எங்க அண்ணா? “என்று சத்யா கேட்க

“ஆமா அண்ணியை ஏன் நீங்க  கூட்டிட்டு வரல “என்றான்.. அவர்களோடு இணைந்து கொண்டு சந்தோஷும்

“ஆமா, ஏன் அக்காவை நீங்க கூட்டிட்டு வரல “என்றான்..

“கடவுளே.. ரெண்டு குரங்குங்களையே  நான் சமாளிக்க கஷ்டப்படுறேன்.. இதுல நீ வேறயா சந்தோஷ்? “என்றான்  சித்தார்த்..

“ஹும்கும்ம்.. கொஞ்ச நேரம் சமாளிக்கவே இப்படி திணறுறிங்களே  அண்ணா.. அண்ணி பாவம் , வாழ்க்கை முழுக்க உங்களை சமாளிக்கனுமே.. அப்போ அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?”என்றாள்  சாஹித்யா..

“ஹா ஹா  “என்று சந்தோஷ் உரக்க சிரிக்க , சித்தார்த் மௌனமாய் சிரித்தான்.. 

“என்ன சித்து  மாமா , உங்க தங்கச்சி இப்படி சொல்லுறா..நீங்க அமைதியா இருக்கீங்க?”என்றான் அவன்..

“உனக்கு இந்த நாணல் பத்தி தெரியுமா சந்தோஷ்?"

“ஆமா அது காற்று வர்ற திசை நோக்கிதான் சாயும்.. "

“அதேதான்.. அதை நம்பி ரிஸ்க் எடுக்க கூடாது.. உன் ஆளும் அப்படித்தான்.. இப்போ என்னை டேமேஜ் பண்றாளேன்னு பீல் பண்ணவே கூடாது.. அது ஏன்னு  நாம வீட்டுக்கு போனதும் உனக்கே தெரிஞ்சிடும் பார் “என்றான்.. அருளும் சாஹித்யாவும் அவன் பேச்சை கேட்டு கண்களாலேயே சிரித்து கொண்டனர்..

சித்தார்த்தின்  வீடு ! தமிழர்கள் சிலர் குடியிருக்கும் அந்த பகுதியின் மத்தியில் அழகாய் ஜொலித்தது அவனது வீடு.. அவர்களை வரவேற்பதற்காகவே அழகாய் இருந்தது பிள்ளையார் சிலை..

“வாவ் ,,,நைஸ் ஹவுஸ் “என்று ரசித்தபடியே சந்தோஷ் முன்னோக்கி நடக்க அவன் முன் கைகட்டி நின்றாள்  ஒரு பெண்மணி.. முகத்தை கறாராய் வைத்து கொண்டு

“ஹே யாரு நீ? “என்றாள்..

“நான் சந்தோஷ் "

“சந்தோஷ்ன்னு  சொன்னதும் தெரிந்து கொள்வதற்கு நீ என்ன சந்தோஷ் நாராயணன் ஆ? இங்க என்ன பண்ணுற?”

“ஹெலோ , எனக்கு தெரிஞ்சவங்களை பார்க்க வந்தேங்க "

“இது எல்லாம் எவ்வளவு ஆபத்தான இடம் தெரியுமா? சித்தார்த் டான் பத்தி கேள்வி பட்டது இல்லையா நீ?”என்று உருத்து விழித்தாள்  அவள்..

“என்னத்து , என் மச்சான் ஒரு டான்னா?"

“ஹே , யாருக்கு யாரு மச்சான்? சிதார்த் சார்ன்னு சொல்லி பழகு... அவருகிட்டயும் இப்படித்தான் பேசுனியா நீ?அவர் துப்பாக்கிய நீட்டவில்லையா? “என்று கேள்விகளை அடுக்க சந்தோஷிற்கு அங்கு நின்று அவளுக்கு பதில் உரைப்பதா அல்லது அங்கிருந்து ஓடுவதா என்றே தெரியவில்லை..இருப்பினும் முகத்தை விறைப்பாய் வைத்து கொண்டு

“உங்க டானுக்கெ  நான்தான் டான்.. இப்படி வழி மறைக்காமல் தள்ளி நில்லு “என்று கறாராய் பேச

“ஓஹோ நீ என் புருஷனை விட பெரிய ஆளா?”என்று கேட்டு சிரித்தாள் ஹரிணி..

“புருஷனா? அப்போ நீங்கதான் ஹரிணி அக்காவா?:”என்று அவன் கேட்கவும்

“அப்போ மட்டும் இல்லை... இப்பவும் நான்தான் ஹரிணி டா தம்பி பையா “என்றபடி அவன் காதை  திருகினாள்  அவள்..

“அண்ணி...ஈஈஎ”என்றபடி அவளை கட்டி கொண்டாள்  சாஹித்யா..

“வாங்க மேடம் வாங்க... நேருல பார்த்தாதான் இந்த செல்லம் கொஞ்சுறது எல்லாம்.. அப்படி இல்லனா உங்க அண்ணாவை மட்டும்தான் உனக்கு ஞாபகம் இருக்கும்ல? அன்னைக்கு நீ இங்க வர்றதை கூட உங்க அண்ணாகிட்ட தானே சொன்ன நீ? “என்று குறைபட்டு கொண்டாள்  ஹரிணி..

“நல்லா கேளுங்க அண்ணி.. வர வர ரொம்ப அழிச்சாட்டியம் பண்ணுறா இவ “என்று போட்டு கொடுத்தான் அருள்..

“என்னத்தான் இருந்தாலும் உன்னை மாதிரி முடியுமா அருள்? அண்ணாவுக்கும் அண்ணிக்கும்  தெரியாமலேயே லண்டன் வர்ற அளவு சார் பெரிய ஆளு ஆகிட்டிங்க ! இருந்தாலும் எப்படி கண்டுபிடிச்சி உங்க அண்ணா கிட்ட சொன்னேன் பார்த்தியா?”என்று அவள் சொல்லவும் அருளின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது..

“அப்படினா , நான் இங்கதான் இருக்கேன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.