(Reading time: 39 - 77 minutes)

16. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

யோசித்துச் சொல்வானா? எதை யோசிக்கப் போகிறான் இவன்? ரேயா ஆதிக்கைத்தான் அதிர்ச்சியும் தவிப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவள் பார்வை மாற்றத்தை உணர்ந்தானோ? கணநொடி அவள் மீது கண்திருப்பி ‘பயப்படாத, உனக்கு பிடிக்காததை செய்வனா? என்பது போல் சற்றே கண் சுருக்கி ஒரு ஐக்கிய பார்வை பார்த்தவன், மீண்டுமாக ராஜ்குமாரை நோக்கி பேசத் தொடங்கினான்.

ரேயாவுக்குள் அனைத்து ஆறுதலும் அப்பொழுதே கிடைத்துவிட்டது.

Eppadi solven vennilave“அங்கிள் அன்றில் தான் உங்க மூத்த பொண்ணு ரேயான்னு நாங்க தப்பா புரிஞ்சுக்கிட்டதாலதான் முன்னால நடந்த குழப்பம் நடந்து போச்சு…..ஐ’ம் வெரி சாரி அபவ்ட் இட்…”

ராஜ்குமாரிடம் சொன்ன ஆதிக் கண்களால் சரித்ரனிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். “ஷாலு அண்ணிய ரேயுவோட யங்கர் சிஸ்டர்னு நினச்சுட்டேன்…”

சரித்ரன் ‘புரிஞ்சிட்டுது, இட்’ஸ் ஓகே’ என்பது போல் நட்பு புன்னகையுடன் பார்க்க,

ராஜ்குமாரோ “ சாரில்லாம் எதுக்குப்பா? நடந்த குழப்பத்துக்கு நாங்களும்தான காரணம்… என்னவோ எவ்ளவுதான் கவனமா போனாலும் சில நேரம் சிலருக்கு ஆக்‌ஸிடெண்ட் ஆகிடுது இல்லையா…அதுமாதிரி அது நடந்துட்டுது……அதோட டேவியையும் உங்க அம்மாவையும் அன்னைக்கு நாங்க ரொம்பவும் இன்சல்ட் செய்த மாதிரி ஆகிட்டுது…..அதான் அடுத்து அவன்ட்ட சாரி கேட்டுட்டு, ரேயா…அதாவது என் மூத்த பொண்ணு ஷாலு கல்யாண பத்திரிக்கையை உங்க வீட்டுக்கு அனுப்றதுக்காக உங்கப்பாட்ட பேசுனேன்…..ஆதிக் ரொம்ப ஃபீல் பண்றான்…..இப்போதைக்கு நாங்க அங்க வர்றது அவனுக்கு இன்னும் கஷ்டமா தோணும்னு டேவி சொன்னான்…அவன் சொல்றதும் நியாயம்தானேன்னு தான் அடுத்து உங்க வீட்டோட எந்த கான்டாக்ட்லயும் நான் இல்லை….பத்திரிக்கை அனுப்பி இருந்தா கூட உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்கும்னு இப்ப தோணுது….பைதவே எப்டினாலும் இதெல்லாம் இப்போ நானும் டேவிட்ட பேசனும்…”

“ எஸ் அங்கிள்…..நீங்க அப்பாட்ட பேசுங்க…..அப்பா கண்டிப்பா ரொம்ப சந்தோஷப் படுவாங்க…”

“ஓகே நான் டேவிட்ட பேசப் போறேன்….நீங்க ரெண்டு பேருமா பேசி என்ன முடிவெடுத்றுக்கீங்கன்னு சொல்லுங்க… ” ராஜ்குமார் ரேயாவையும் ஆதிக்கையும் பார்த்துப் பொதுவாக சொன்னார்.

ராஜ்குமாரை தேவையில்லாமல் இடம் பெயர்க்க விருப்பமின்றி சரித்ரன் அருகிலிருந்த அறையைக் காண்பித்தான் இளையவர்களுக்கு.

“ஆதிக்க அங்க கூட்டிட்டுப் போ அன்றில்…அங்க கார்டன் வியூ நல்லா இருக்கும்….பை த வே ப்ரிட்ஜல கஸ்டர்ட் இருக்குன்னு சொன்னாலும் நாங்க போக மாட்டோம்…”

பதிலுக்கு அவள் வாயாடுவாள் என எல்லோரும் எதிர் பார்த்தனர் தான். சரன் ஒரு வார்த்தை சொல்லி அதுக்கு மறுவார்த்தை சொல்லாமல்விட்டால் அது ரேயா இல்லையே… ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லாமல்,  நடை தயங்க, அதைப் பிறர் உணரா வண்ணம் மறைக்க முயன்றபடி அந்த அறையைப் பார்த்து நடக்க துவங்கிவிட்டாள். ஆதிக்குடன் பேசுவதற்காக வந்த தயக்கம் இல்லை இது. ஆனால் அனைவர் முன்பாக அவனோடு செல்ல என நினைக்கும் போது ஏன் வருகிறதாம் இது? ஆதிக்கும் எழுந்து கொண்டான்.

“தனியா கூட்டிட்டுப் போய் அடிக்றதுதான் அவ ஸ்டைல்…ஆதிக் நீங்க எதுக்கும் கவனமா இருங்க…”

சூழலை இயல்பாய் உணரவைக்க உதவினான் சரித்ரன்.

“ஓ ஷாலு அண்ணி உங்கள அப்டித்தான் சமாளிக்றாங்களா….? இப்பதான் அண்ணி எவ்ளவு பெரிய டெரர்னு தெரியுது….” சத்தமாய் சொன்ன ஆதிக் சற்று குரலிறக்கி

“தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா அவளுக்கு சப்போர்ட் செய்யாம உங்க கூட சேர்ந்து சிரிச்சுட்டுப் போனா இன்னும் ரெண்டு அடி எக்‌ஸ்ட்ரா கிடைக்குமே…அனுபவபட்டவர் உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே” என இன்னுமாய் வாரினான்.

எல்லாவற்றையும் திரும்பிப் பாராமல் கேட்டுக் கொண்டிருந்த ரேயாவுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும்  மறுபுறம் அவள் முடிவுதான் ஆதிக்கின் முடிவும் என தெளிவாக புரிந்தேவிட்டது.

றையின் நுழை வாசல் இருந்த பகுதியும், அதற்கு இடபுறமுமாக L வடிவில் சுவர்கள் இருக்க  மற்ற இரு புறமும் முழுவதுமாய் கண்ணாடி ஜன்னலாய் இருந்தது. வெண்ணிற அறைதான். சுவர், ஜன்னல் கதவு, சட்டம் என அனைத்திற்கும் வெண்ணிறம் தான். நிறம் சேர்த்தவை அறையின் கண்ணாடி சுவர் அருகில் இருந்த செடிகளும்…கண்ணாடி வழியே பார்வைக்குள் பட்ட தோட்டப் புல்வெளியும் அதில் வரிசையாய் வளர்க்கப்பட்டிருந்த பல நிற ஓலியான்டர்களும்தான்.

நுழைந்ததும் அறையை ஒரு சுற்றுப் பார்வையால் பார்த்தவன் “அழகா இருக்குது ரேயு” என்றபடி அவளை நோக்கி வந்து,  ஜன்னல் சுவர் அருகில் நின்றிருந்தவளுக்கு அங்கிருந்த ஒரு சிறு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு அதற்கு அருகில் இருந்த பியானோவின் முன்னிருந்த நாற்காலியில் தானும் அமர்ந்து கொண்டான்.

“எப்டியோ நாம இப்டி ஒரு பீரியட் கோ த்ரூ செய்யனும்னு இருந்திருக்குது ஆதிக்…..” ரேயா தான் ஆரம்பித்தாள்.

“நம்ம லைஃப்ஃபோட 90% விஷயம் நம்ம கைல தான் இருக்குது…பட் மீதி இருக்ற 10 % இப்டித்தான்…அவனவனுக்கு நியமித்த பாதையில் பொறுமையோடு ஓடக் கடவன்னு ஒரு வசனம் இருக்குது தெரியுமா…அது தான் இது….இது நமக்கான ட்ராக்….இப்டி நடந்திருக்கலைனா நீங்க உங்க ஃபேமிலி பிசினஸ்ல செட்லாகிருப்பீங்க….நான் அதே பயந்தாகொள்ளி அப்பா பொண்ணுல இருந்து பயந்தாகொள்ளி ஆதிக் வைஃபா அவ்ட் லுக் சேஞ்சாயிருப்பேன்… இன்வர்ட்லி இப்ப வந்த பலம் பக்குவம் எக்ஸ்‌பீரியன்ஸ் எதுவும் எனக்கு கிடச்சிருக்காது…. கடவுளை நேசிக்றவனுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாதான் நடக்குமாம்…அப்டித்தான் நான் நடந்து போன விஷயங்களப் பார்க்றேன்…என்ன நல்லதுன்னு இப்ப நமக்கு புரியுறதயும்விட இன்னும் கூட என்னலாமோ வகைல இது நல்லதா இருக்கலாம்…பட் இட்’ஸ் குட்…நோ க்ரீவன்ஸ்….சோ நடந்ததைப் பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம்….பட் இப்ப என்ன செய்யப் போறோம்…..உங்க ப்ளான் என்ன? அதைப் பத்தி சொல்லுங்க முதல்ல…என்னப் பொறுத்தவரை ஐ வான்ட் டு கெட் மேரிட் இம்மீடியட்லி…..”

தெளிவாய் தன் மனதை எடுத்துச் சொன்னாள் அவள். முக்கியமான விஷயத்தில் இன்னும் கண்ணாமூச்சி ஆட அவள் தயாராயில்லை. அவன் முகத்தில் ஒரு ரசனை கலந்த முறுவல் இருந்தாலும் அவளுக்காய் சில கேள்விகள் இருந்தன ஆதிக் மனதில்.

“என்னைப் பத்தி முழுசா எதுவும் தெரியாம, ஒரு டி ஜி பி, அதுவும் உங்க ஃபேமிலி வெல் விஷர் வந்து இவ்ளவு சொல்லிட்டுப் போனபிறகும் நீ இப்டி அவசரமா டெஷிஷன் எடுக்றது உனக்கு எப்டி சரியாப் படுது ரேயு?”

அவனிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தாள் ரேயா.

“.ஒரு மனுஷனை முழுசா புரிஞ்சுகிட்டுதான் மேரேஜ் செய்யனும்னா….100 வயசுல கூட மேரேஜ் செய்ய முடியாது….பிகாஸ் த்ரோ அவ்ட் அவர் லைஃப் ஒவ்வொரு சிச்சுவேஷன்ல நாம ரியாக்ட் செய்றத வச்சுதான் நம்மளோட ஒவ்வொரு குணமும் நமக்கே தெரியும்..அப்டித்தான் கூட இருக்கவங்க பத்தியும்…ஆக வாழ்க்கை முழுக்க உங்களைப் பத்தி எனக்கு புதுசு புதுசா தெரிஞ்சுகிட்டே தான் இருக்கப் போகுது…தென் நான் எப்பதான் மெரேஜைப் பத்தி டிசைட் பண்ண?... அடுத்த விஷயம் உங்க ஃபேமிலி பத்தி….கல்யாணம் செய்றதுக்கு ஐடியலான குடும்பம் தான் வேணும்….ஐடியலான சூழல் வேணும் அப்டின்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை….பாவம் செய்யாதவன் ஒருவனும் இல்லைனு பைபிள் சொல்லுது….அப்போ குறை இல்லாத ஃபேமிலி மட்டும் எப்டி இருக்கும்? நாம எல்லோரும் ஒவ்வொரு வகையில் இம்பெர்ஃபெக்ட் தான்…நான் அங்கிள தப்பா சொல்லலை…பட் ஓவரால் என் எக்ஸ்பெக்டேஷன சொல்றேன்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.