“போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு என்ன பயம்…? இன் எனி கிவ்வன் சிச்சுவேஷன் கல்ப்ரிட்டோட வைஃபும், காவல்காரன் வைஃபும் பயப்பட தேவையில்ல தெரியுமா?” குறும்பு இருந்தது அவள் கேள்வியில்.
“போலீஸ்காரன் வைஃப் கான்சப்ட் புரியுது….அது என்ன கல்ப்ரிட்டோட வைஃப்…?”
“ஹஸ்பண்ட் தான் கல்ப்ரிட்னா அவ யாருக்குப் பயப்படனும்…?”
இப்பொழுது சிர்த்தான் அவன்.
“அவன்தானே அவளுக்கு பயப்படனும்…?” தோள் பற்றி இவன் காதில் வந்து கிசு கிசுத்தாள்.
“ஆமா இது திருடன் போலீஸ்னு பாரபட்ஷமே இல்லாம எல்லோருக்கும் பொருந்தும் யுனிவர்சல் லா தான்…” அவளிடம் அவன் வாய் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதி விஷயத்தில் அவன் யூகம் மேலுமாய் ஊர்ஜிதமாகியது அவனது மனதுக்குள்.
சென்னையில் ரேயாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ப்ரபாகரையும், சுரபியையும் தஞ்சாவூரில் ஒரு அலுவலகம் தொடங்கி இங்கேயே ட்ரான்ஸ்ஃபரில் கொண்டு வருவது என்ற திட்டத்தை செயல்படுத்த தேவையானவைகளை ஆதிக்குடன் பேசி முடித்து, தற்காலிகமாக அலுவலகத்தை இந்த பெரிய வீட்டின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்வதென்றும், சுரபியும் ப்ரபாகரனும் திருமணம் செய்ய இருப்பதால் திருமணத்திற்குப் பின் விரும்பினால் இவர்கள் காம்பவ்ண்டிற்குள் இருக்கும் துணை வீட்டில் தங்கிக் கொள்வது எனவும் முடிவெடுத்து அதை உரியோருக்கு தெரியப் படுத்திவிட்டு, இரவு உணவுக்குப் பின் இந்த வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்த ரேயாவை தன் இரு கைகளில் அள்ளினான் ஆதிக். நேற்று போல் இன்று இல்லை….
அவள் முகத்திலுமே சிறு வெட்க பூக்கள்.
“ஹேய் இப்பவே வெட்கத்த காலி செய்துறாத…பின்னால வேணும்…இது வேற…”
அவன் முகத்தை கேள்வியாக நோக்கினாள்.
“நேத்து முதல்ல நான் கூட வேற என்னமோன்னு நினச்சேன்…..பட் அப்றம் தான் யாரோ எதுவும் சொல்லிட்டாங்கன்னு புரிஞ்சிது…அப்பவே என்ன விஷயம்னு கேட்கனும்னு நினச்சேன்…ஆனா நீ சின்ன வயசில இருந்து நடந்த உன் மனசுக்கு பிடிக்காத விஷயத்தையா பேசிட்டு இருந்த…ஐ டின்’ட் வாண்ட் டு டிஸ்டர்ப்…வாண்டட் டூ நோ தெம்..சோ இப்ப கேட்கிறேன் யார் என்ன சொன்னா? நீ ஏன் அவ்ளவு டவ்ன்? அம்மாவா? என் மேல் என்ன கோபம்???”
“ ஆன்டி வெட்டிங் வரைதான் அப்டிலாம் பேசிட்டு இருந்தாங்க ஆதிப்பா….அப்றம் ஷீ வாஸ் இன்ஃபாக்ட் ஸ்வீட்…புனிதா அண்ணி தான்….” அவள் நடந்ததை நினைத்துக் கொண்டே பேச
இப்பொழுது அதிர்ந்தே போனான் ஆதிக். அம்மா இப்படி நடந்து கொள்வார்கள் என அவன் எதிர் பார்க்கவில்லை எனினும் காரணம் இப்பொழுது அவனுக்குப் புரிகின்றது. ஆனால் புனிக்கு என்னவாயிற்று? இத்தனை வருடத்தில் இவனிடத்தில் கூட ரேயாவை விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை அவள்.
“புனியா?” அவன் குரலின் தவிப்பு புரிய அவசரமாக மறுத்தாள் ரேயா..” அவங்க எதுவும் தப்பா சொல்லலை ஆதிப்பா….ஆன்டி விஷயம் புனிதா அண்ணிக்கு தெரியாது இல்லையா…..வெட்டிங் அப்ப அவங்க கொஞ்சம் கெஸ் செய்தாங்க போல….எனக்கு அப்பா இருப்பாங்க…..உன் வைஃப்க்கு எப்பவும் நீதான்னு ஆதிக்ட்ட எப்பவுமே பெரியம்மா சொல்லிகிட்டு இருப்பாங்க…வீட்டுக்கு வந்த பொண்ணை அழவிட்டா நம்ம தலமுறைக்கே சாபமாகிடும்…நான் நல்ல மாமியாரா இல்லனா நல்ல அம்மாவா இல்லைனு அர்த்தம்னு சொல்றவங்க ஜெயா பெரியம்மா….அவங்க எப்டி உன்ன டிஸ்டர்ப் செய்றாங்கன்னு தெரியலை….பட் என்னமோ எவ்ளவு ஸ்ட்ராங் வுமனும் இந்த மாமியார் ரோல்ல வர்றப்ப இப்டி தான் ஃபெயிலாவாங்க போல….நீ கவலப் படாத ரேயா...சீக்ரமே உங்களுக்கு ஒரு குட்டிப்பாப்பா வரட்டும் எல்லாம் சரியாகிடும்னு சொன்னாங்க…”
அவனை ஒரு பார்வை நிமிர்ந்து பார்த்தவள் குனிந்து கொண்டாள்.
“சோ குழந்தை உட்பட எல்லாம் எதோ ஒரு கட்டாயத்துக்காக…ஒரு நீட்காக செய்ற மாதிரி தோணிட்டு…..அது எனக்குப் பிடிக்கலை….ஐ வான்ட் திஸ் டு ஹேப்பன் அவ்ட் ஆஃப் லவ்…”
“ரேயு…” அவன் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.
“ என் மாமா யாருக்கும் என்னை பிடிக்காது…என் அம்மா டெத்க்கு நான் தான் காரணம்னு அவங்களுக்கு ஃபீல்…என்னதெல்லாமோ செய்து பார்த்துட்டேன்…பட் ஆஃப் நோ யூஸ்…இப்ப ஆன்டிய கன்வின்ஸ் செய்றதுக்காக குழந்தை வச்சுகிட்டா மட்டும்…??? இதுக்காக குழந்த வச்சுகிடனும்னு நினைக்கவே பிடிக்கலை ஆதிப்பா….” ஒரு நொடி மௌனமாக இருந்தவள்
“சூழ்நிலை மேல உள்ள கோபத்த உங்கட்ட காட்றனோன்னு படுது ஆதிப்பா…” அவள் முனங்க மெல்ல அணைத்திருந்தான் அவன்.
“நமக்குள்ள எதுவும் கட்டாயம் கடமைக்காகல்லாம் நடக்கப் போறது இல்லடா …..யாரையும் கன்வின்ஸ் செய்றதுக்காகன்னு எப்பவும் எதுவும் என் ரேயு செய்ய தேவையில்ல…செய்யவும் கூடாது….நீ நீயா இரு அத புரிஞ்சு அவங்க உன்னை ஏத்து வந்தா போதும்….முக்கியமான விஷயம் இப்போதைக்கு பேபி பத்தி எனக்கு எந்த ப்ளானும் இல்ல…நீ பிடிவாதம் பிடிச்சா மட்டும்தான் நான் அந்த ப்ளனா சேஞ்ச் செய்றதா இருக்கேன்…..அட்லீஸ்ட் ஒரு ட்டூ இயர்ஸ் போகட்டும்…நாம ஒருத்தர ஒருத்தருக்கு அடாப்ட் ஆகிப்போம்….அப்றம் நம்ம ஜூனியர்க்கு ப்ளான் செய்யலாம்ன்றது என் தாட்…….அதோட அம்மா இப்டி ரியாக்ட் செய்றது அந்த கேஸ்னாலதான்….அதுவும் அதி உன் சித்தப்பான்றதால இல்ல……”
சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ரேயா.
அப்படியானால்????
ஆதிக்கிற்கு புரிந்த விஷயம் அவளுக்குமே புரிந்துவிட்டது.
“அப்டின்னா நினைக்றீங்க? நான் கூட வந்தனா ஆன்டி………” அவள் வாயை மூடி இருந்தான் அவன்.
“இந்த கேஸைப் பத்தி பேசாதே…..வி மே பி மானிடர்ட்…” அவள் காதில் கிசுகிசுத்தான்.
இந்த உரையாடலை சி டியில் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு உருவம், தன் முகத்தை கையால் துடைத்துக் கொண்டது. “தெய்வமே நான் என்ன செய்யப் போறேன்???????”
தொடரும்
{kunena_discuss:876}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.