(Reading time: 39 - 77 minutes)

துக்காக முன்னபின்ன தெரியாத ஒருத்தனை எப்டிபட்ட ஃபேமிலில இருந்து வந்தாலும் கல்யாணம் செய்யலாம்னும் நான் சொல்ல வரலை….உங்க பேசிக் மாரல் வேல்யூஸ் எனக்குத் தெரியும்…..கோவா பேங்களூர்னு ஒவ்வொரு இடத்திலும் யு பிகேவ்ட் பெர்ஃபெக்ட்….இப்பவும் நான் இப்பவே செய்யலாம்னு சொல்றேன்…….நீங்க தான் யோசிக்கனும்னு சொல்லிகிட்டு இருக்கீங்க….பணத்துக்காக வர்றவங்க செய்ற வேலையா இது? எல்லாத்தவிட….இவங்கள கல்யாணம் செய்தா இவங்க என்னை நல்லா வச்சுபாங்க, நான் சந்தோஷமா இருப்பேன்னு ஒரு மனுஷனை  நம்பி கல்யாணம் செய்றதுல்ல எனக்கு உடன்பாடு கிடையாது…..ஏன்னா அந்த மனுஷன் மறுநாள் உயிரோட இருப்பான்னு கூட நமக்கு என்ன கேரண்டி இருக்குது…?

இவங்க கூட என் வாழ்க்கைய கடவுள் இணைத்துருக்கார்….சோ இவங்களோட சேர்ந்தா நாங்க ரெண்டு பேரும் லைஃபை…அதன் சேலஞ்சஸை….சுக துக்கத்தை…பெட்டரா ஃபேஸ் செய்வோம்…ஒருத்தரோட வீக்னஸ்ல்ல அடுத்தவங்க பலமா இருப்போம்……டுகெதர் வீ வில் பி சக்‌ஸஸ்ஃபுல் அன்ட் இட் வில் கன்டின்யூ டில் காட் வான்ட்ஸ், நானா இத விட்டு வெளிய வரமாட்டேன்… அப்டிங்கிற வியூல மேரேஜை அப்ரோச் செய்யத்தான் எனக்கு பிடிச்சிருக்குது…. அந்த வகையில என் இன்னர் ஸ்பிரிட்க்கு நல்லாவே தெரியும்…வீ ஆர் ப்ராட் டுகதர் பை காட்…அதானால இதுக்கு மேல வெயிட் செய்றதுல அர்த்தம் இருக்றதா எனக்குப் படலை….அங்கிள் விஷயம் என்னதா டர்ன் அவ்ட் ஆனாலும் அதை நாம சேர்ந்து பெட்டராவே ஹேண்டில் செய்யலாம்னு எனக்கு தோணுது....”

அவளை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிக். அடுத்த சில நிமிடங்களில் ஆதிக் ரேயா திருமண முடிவு ராஜ்குமார் மற்றும் சரித்ரனுடன் பகிர்ந்து கொள்ளப் பட்டது. அதோடு ராஜ்குமாரிடம் பேசிய ஆதிக்கின் தந்தை டேவிட் மற்றும் ஜெயா அனைவருமாக மறுநாள் எங்கேஜ்மென்ட் என முடிவு செய்தனர். ஆதிக்கிற்கு விடுமுறை கிடைப்பதை பொறுத்து வெகு விரைவில் திருமணம் என ஏற்பாடு.

ன்கேஜ்மென்ட் பர்ச்சேஸ். இப்பொழுது அவளது காரை ஆதிக் ட்ரைவ் செய்ய அவன் அருகில் ரேயா.

“ தேவநேசன் அங்கிள் வந்து உங்கப்பா உனக்கு மாப்ள பார்க்காங்கன்னு சொன்னதா புரிஞ்சதும் தான் நான் அம்மா அப்பாலாம் அப்ப கல்யாண முடிவுக்கு வந்தோம் ரேயு….உனக்குத் தெரியுமான்னு தெரியலை…சிமி காலேஜ் செகண்ட் இயர் படிச்சுகிட்டு இருக்றப்ப நல்ல அலையன்ஸ் வந்துதுன்னு கல்யாணம் செய்து வச்சுட்டாங்க..…நான் அப்ப எவ்ளவோ சொல்லிப் பார்த்தேன் வீட்ல…பட் அடுத்த வருஷம் பண்றதுக்கு இந்த வருஷம் பண்ணப் போறோம்….இதுல என்ன பெரிய வித்யாசம்னு சொல்லிட்டாங்க எல்லோரும்…அதோட நல்ல பையன விட முடியுமா…அடுத்து இதே மாதிரி நல்ல இடம் எப்ப கிடைக்குமோ…? அதோட அவ கல்யாணம் முடிஞ்சா எங்களுக்கு எவ்ளவு பெரிய பொறுப்பு முடிஞ்ச மாதிரினு ஆயிரம் விளக்கம் அம்மாட்ட இருந்து….” அவன் நடந்த குழப்பத்தை விளக்கவே இன்னும் முனைந்தான்.

ரேயாவும் தன் கவனத்தை அதில் திருப்பினாள். அவன் சொல்ல விரும்புவதை சொல்லி முடிக்கட்டுமே….

“அப்டி உங்கப்பாவும் நினச்சுதான் படிச்சுகிட்டு இருக்ற உனக்கு அலையன்ஸ் பார்க்காங்கன்னு நான் நினச்சேன்…அதோட ராஜ்குமார் அங்கிள்கு ஹார்ட் ப்ராப்ளம் உண்டுன்னு கேள்விப் பட்டுருந்தேன்…அப்போ பொண்ணுங்களை சீக்ரம் செட்டில் செய்யனும்னு அவங்க நினைக்கிறது இயல்பு தானேன்னு பட்டுது…அதான் ஃபர்ஸ்ட் இயர் படிக்ற பொண்ணுக்கு ஏன் இப்பவே கல்யாணதுக்குப் பேசுறாங்கன்னு எனக்கு வித்யாசமா தோணலை……நீ படிச்சு முடிச்சப் பிறகு வெட்டிங் வச்சுப்போம்னு சொன்னா அங்கிள் எப்டி எடுத்துப்பாங்களோ? சரி வேற இடம் பார்க்கலாம்னு நினச்சுடுவாங்களோன்னு எனக்கு நெர்வஸாகிட்டு…அதான் அப்பவே மேரேஜ்க்கு நான் ஓகே பண்ணதே…சாரிடா நான் செல்ஃபிஷா மூவ் பண்ணிடிட்டேன்னு நினைக்காத…”

“சே…இல்ல…”

“ப்ச்..பயத்துல எடுக்ற முடிவு எப்பவும் சரியா இருக்றது இல்லை…அது அப்ப தெரியலை…இப்போ புரியுது…..பட் அப்ப மேரேஜ்னு முடிவானதும்  ரொம்பவே சந்தோஷமா ஃபீலானது நிஜம்…..அதுவரைக்கும் நான் உன்ன எப்பவுமே கான்டாக்ட் செய்யாததற்கு உனக்கே ரீசன் தெரிஞ்சிருக்கும்….உங்கப்பா எங்கம்மான்னு யாரும் அதை ரொம்ப நல்ல விஷயமா எடுத்துறுக்க மாட்டாங்க….அதனால அதை சீக்ரெட்ட செய்ற மாதிரி போய்ருக்கும்…அது ஒரு வகையில ரெண்டு பேருக்கும் கில்டியா இருந்துருக்கும்… அதோட நமக்குமே கண்டிப்பா அது தேவையில்லாத டீவியேஷன்… ப்ரெஷர்…எல்லாம்… உனக்கும் அதுல இஷ்டம் இல்லைனு வேற பட்டுது.. பட் வெட்டிங் ஃபைனலைஸ் ஆனதும் கண்டிப்பா உன்ட்ட பேசனும்னு நினச்சேன்…ரொம்பவே ஆசையா இருந்துது ஒரு பக்கம்.…நாம பார்த்து கிட்டதட்ட வன் அண்ட் ஆஃப் இயர் ஆகி இருந்துது…ஐ மிஸ்ட் யூ பேட்லி…

ஜஸ்ட் முந்தின நாள் நைட் தான் நான் இன்டியா வந்திருந்தேன்…காலைல என்ட்ட அப்பா இந்த ப்ரபோசல் பத்தி சொன்னாங்க, நான் சரின்னு சொன்ன உடனே உங்கப்பாட்ட அப்பா ஓகே செய்ய, உங்கப்பா என்ட்ட பேசுனாங்க….எனக்கு உன்னைப் பார்க்க இருந்த ஆசையிலேயே நான் எல்லாத்தையும் சீக்கிரம் வைக்க சொல்லிக் கேட்டேன்…..”

அது தனக்கு என்னதாய் புரிந்தது என்ற நினைவு இப்பொழுது வந்து போனது ரேயாவிற்கு.

“அங்கிள்ட்ட பேசி முடிச்சதும் நான் உன்னத்தான் கூப்ட ஆசப் பட்டேன்…..அந்த டைம் அங்கிள்ட்ட நான் பேசுன விஷயத்தைப் பத்தி, ஈவ்னிங் ஃபங்க்ஷன் பத்தின்னு  என்ட்ட கேட்க ஆரம்பிச்சாங்க அப்பாவும் அம்மாவும்…அந்த டைம்தான் அங்கிள் திரும்ப கூப்ட்டு என் சின்னப் பொண்ணு உங்கட்ட பேசனுமாம்னு சொல்லி போன் செய்தாங்க….இப்போ புரியுது அப்போ லைன்ல வந்தது நீன்னு…பட் அந்த டைம் நான் புரிஞ்சுகிட்டது லைன்ல வந்தது உன்னோட குட்டி தங்கைனு…அதாவது ஷாலு அண்ணி…அதான் அப்டி பேசிட்டேன்…சாரி”

“புரியுது ஆதிக்….இட்ஸ் ஓகே..” இயல்பாக சொல்வது போல் சொல்ல முடிந்தாலும் அன்று அவனுடன் பேசிய ஃபோன் கால்களின் வலி இன்னும் கூட நாக்கடியில் கசந்து இதய நடுவில் வலிக்கிறதுதானே…

“அந்த கால்ல நீ எதாவது பேசி இருந்தன்னா கூட எனக்கு பேசுறது என்னோட ரேயுனு தெரிஞ்சிருக்கும்டா…. “ அவள் முகமே அவளின் வலியை அவனுக்கு உணர்த்த ஆதிக்கின் குரல் இன்னுமாய் தழைந்து மென்மையானது.

அவள் கையை மென்மையாக தன் கரத்திற்குள் எடுத்து வைத்தான்.

“உனக்கு இருந்த மன வேதனைல அப்ப நீ பேசிருக்க மாட்டன்னு  புரியுதுமா,  ஆனா அப்ப ஒரு வார்த்தை கூட நீ பேசலையா…அதனால எனக்கு பேசுறது நீன்னு தெரியலை….உன் அப்பா ரெண்டாவது பொண்னுனு சொன்னதால, நான் உன் தங்கைட்ட பேசுறதா நினச்சுதான் உன்னைப்  பார்க்கனும்னு நினச்சேன் முடியலை…உன் அக்காவ பேச சொல்லுன்னுல்லாம் நான் சொன்னது…”

“இன்னைக்கு எது தப்பா போயிருக்கும்னு யோசிக்றப்பவே இதெல்லாம் ஓரளவு புரிஞ்சிட்டு ஆதிக்…”

“அதுல வேற நான் முதல் தடவை உங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப, ரெண்டாவது பொண்ண அவ மாமா வீட்ல எல்லோரும் நல்லா ட்ரீட் செய்ய மாட்டாங்க…அவ பிறந்ததுல தான் அவ அம்மா இறந்துட்டாங்கன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கைனு உங்கப்பா சொல்லி இருந்தாங்க… அதனால எனக்கு ஆரம்பத்துல இருந்து உன் தங்கைனு நான் புரிஞ்சு வச்சிருந்த பொண்னு மேல ரொம்பவே சாஃப்ட் கானர்… .நீ வேற ஷாலுக்கு நீங்க அலையன்ஸ் பாருங்கன்னு வேற சொல்லிகிட்டு இருந்த…சம் வாட் உன் தங்கை ஷாலுவுக்கு நாம பொறுப்புன்னு ஒரு ஃபீல்…..அது என் பேச்சுல எக்கோ ஆகி இருக்கும்…”

அவள் விழிகளில் நீர் கோர்த்தது. எத்தனையை யோசித்திருக்கிறான்?

“சாரிடாமா……ஐ ஹர்டட் யூ வெரி பேட்லி…’ அவள் கண்களில் நீர் கோர்ப்பதைக் காணவும் அவன் பேச்சு நின்று போனது.

“அப்டில்லாம் இல்லப்பா…ஐ’ம் ஃபைன்….நீங்க சொல்லுங்க…” நடந்த எல்லாவற்றையும் அறிந்த பின்புதான் அவன் மீது நம்பிக்கை வரப்போகிறது என்றெல்லாம் இல்லை. ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் மனதை ஸ்பரிசிக்க ஆவல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.