(Reading time: 39 - 77 minutes)

த்தனைக்கும் சென்னையில் ஆதிக் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த அவனது வீட்டிற்கு செல்லவே அவளுக்கு அத்தனை டென்ஷன். இதில் அவனது பெற்றோர் வசிக்கும் கோயம்புத்தூர் வீடாய் இருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவளுக்கு… ஒரு வழியாய் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு இவள் சென்றால்….அங்கும் ஜெயா இவளிடம் மிக தன்மையாகத்தான் பழகினார். இன்ஃபாக்ட் அவர் அங்கு இருக்கிறார் என்பதே மறந்து போகுமளவிற்கு அவளை சுற்றிச் சூழ்ந்து கவனித்துக் கொண்டது சிமியும் புனிதாவும். அந்த அளவிற்கு ஜெயா இவளை இளையவர்களிடம் விட்டுவிட்டு இவளுடன் வந்திருந்த இவள் பக்க உறவினர்களை கவனிப்பதில் பிஸி ஆகி இருந்தார்.

அப்பா மற்றும் ஷாலு குடும்பம் இவளை ஆதிக்கின் வீட்டில் விட்டுக் கிளம்பும் போதுதான் மீண்டும் இவள் அருகில் வந்தார் அவர். இப்பொழுது ரேயா வெளிப்படையாக அழுது கொண்டிருந்தாள். அப்பா ஆதிக்கின் தோளை மெல்லமாக தட்டிவிட்டு நிரம்பிய கண்களுடன் இவளைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பினார் என்றால், சரித்ரன் ஆதிக்கின் கையை இருகைகளாலும் பிடித்து குலுக்கிவிட்டு இவளைப் பார்த்து சின்னதாய் புன்னகைத்துவிட்டு விடை பெற்றான். ஷாலு இவளை ஹக் செய்யும்வரை இயல்பாய் இருந்தவள் அந்த நொடியில் கண்கள் கசிய அதற்கு நேர் மாறாக சிரிக்க முயன்றபடி…..”நாளைக்கு ஏர்போர்ட்ல பார்ப்போம்…”என்றுவிட்டு இவள் அருகில் நின்றவர்களிடம் முறையாய் விடைபெற்றாள்.

திக் இப்பொழுதும் இவள் கையைப் பிடித்தபடிதான் நின்றிருந்தான்.  ஜெயாவோ “ஆதி அன்றில் கூட லான்ல ஒரு வாக் போய்ட்டு வாயேன்” என இவர்கள் இருவரையும் தனியாக அனுப்பி வைத்தார்.

அவனுடன் கை கோர்த்து முகத்தில் மோதும் இரவுக் காற்றை எதிர்க் கொண்ட படி நடக்க நடக்க மனதிலிருந்த எல்லாம் மறைந்து ஒரு இலகு உணர்வு பரவத் தொடங்கியது ரேயாவிற்குள். ஆதிக்கிற்கு அவளருகில் இருப்பது சொர்க்கமாக தோன்றியதென்னமோ உண்மை. சற்றே மஞ்சளாய் எரியும் வெள்ளை நிலா, இதமான காற்று, புல்வெளி, பனி செய் சிற்பமாய் அவன் மனைவி, அனைத்திற்கும் மேலாய் அவர்களுக்குள் வந்திருக்கும் உரிமை.

தன்னவளைப் பார்த்தான். ‘உன்ன கண்ணுக்குள்ள வச்சு மூடிக்கிடனும்னு ஆசையா இருக்குது குட்டிப் பொண்ணு. ஆனா உனக்குதான் மூச்சு திணறிப் போய்டும்…அதனால தான் வெளிய விட்டு வைக்க வேண்டி இருக்குது….’ மானசீகமாக தன் மனதை மனைவிக்குச் சொன்னான்.

எது எதுவோ நடந்து எவ்ளவோ என்னவள அழ விட்டுட்டேன்….இனி ஒரு துரும்பு கூட அவள கஷ்டப் படுத்திரக் கூடாதுன்னு நினைக்கிறேன்….ஆனா அம்மாவ அவ பயந்து பயந்து பார்க்ற பார்வையே சொல்லுது நான் அதுல எவ்ளவு தோத்துக்கிட்டு இருக்கேன்னு…..அம்மாட்டயும் எவ்ளவோ சொல்லிப் பார்த்துட்டேன்….அவங்க பதில்னு எதாவது சொன்னாத்தான அவங்களுக்கு நான் எதையும் புரிய வைக்கவே முடியும்? அவங்க எதனால இப்டி நடந்துக்றாங்கன்னே புரியலையே…..அதோட அம்மா எனக்கு முக்கியம் தான்…ஆனா அம்மாவப் பார்த்துக்க அப்பா இருக்காங்க…. இவ என்னை நம்பி வந்துருக்ற எனக்கே எனக்கான உலகம்…, நான் தான் அவள கஷ்டம் தொடாமப் பார்த்துகனும், எப்டி செய்யப் போறேன்னுதான் தெரியலை…அதுவும் அவ அழுதா எனக்கு என்ன செய்யன்னே தெரியாம…ஐ ஃபீல் ஹெல்ப்லெஸ்…இட்’ஸ் நெர்வ் ரெக்கிங்…இப்பவும் அவ அப்பாவைப் பத்தி என் அம்மவப் பத்தின்னு ஆயிரம் ஸ்ட்ரெஸ்ல இருப்பா….ஹவ் ஐ’ம் கோயிங் டூ ஈஸ் ஹெர்?....ஆதிக்கிற்கு அவனது அத்தையின் கணவரும், ரேயாவின் கல்லூரி சேர்மனுமான ஜோசப் அங்கிள் சொன்னது ஞாபகம் வந்தது. சின்னதாய் சிரிப்பு அவன் முகத்தில்.

லானில் இருந்த ஒரு கல் பெஞ்சின் அருகில் போனதும் நின்றான் ஆதிக். அவன் அருகில் நின்றாள் அவன் மனைவியும். இடப்புற காம்பவ்ண்ட் சுவருக்கு மேலே மஞ்சள் நிலா.

“உட்கார் ரேயு…” சொல்லியபடி உட்கார்ந்தவன் அவள் கையைப் பற்றி தன் அருகில் அமர வைத்தான்.

“என்ன சிரிக்றீங்க…?”

“இல்ல….ஜோசஃப் அங்கிள் சொன்னது ஞாபகம் வந்துச்சு.”

“அப்டி என்ன சொன்னாங்க அங்கிள்?”

“மாப்ள உங்கள நல்ல போலீஸ்னு நினச்சேன்…..இப்டினு தெரியாம போச்சே….. நம்பி காலேஜ் கேம்பஸ்குள்ள  விட்டா, இப்டி ஃபர்ஸ்ட் அட்டெம்ட்லயே எங்க பெஸ்ட் ஸ்டூடண்டை  ஒரே நாள்ல கிட்நாப் செய்துட்டு போய்டீங்களேன்னு சொன்னாங்க…”

இப்பொழுது அவன் மனைவி முகத்திலும் புன்னகை. அவனுக்கும் அதுதானே வேண்டும்.

“யூ நோ ஒன் திங் நாளைக்கு எங்க வீட்ல தான் டின்னர்னு நேத்து நம்மள காலேஜ்ல வச்சு ஜோசஃப் அங்கிள் இன்வைட் செய்தாங்கல்ல, அது ஆக்சுவலி நம்ம மேரேஜைப் பத்தி பேசத்தானாம்…நம்ம ரெண்டு பேரையும் பார்த்ததும் அவங்களுக்கு அப்டி எதோ நமக்குள்ள இருக்குன்னு தோணிட்டாம்…..நான் கல்யாணத்தைப் பத்தி பேச வரச்சொன்னா…நீங்க கல்யாணமே செய்துட்டு வந்து நிக்கீங்க…படு ஃபாஸ்ட் மாப்ள நீங்கன்னு அவங்க சொல்ல  மத்தவங்க பயங்கரமா ஓட்னாங்க…”

“ஆமாமா ஆமை கூட கம்பேர் செய்தா, நீங்க படு ஃபாஸ்ட் தான்…, பிடிச்ச பொண்ணுட்ட ஐ லவ் யூ சொல்ல 7 வருஷம்….அப்டியே விட்டுருந்தா கல்யாணம் செய்ய 70 வயசுல தான் வந்திருப்பீங்களோ என்னமோ…..இதுல ஃபாஸ்டாம்…” ரேயா இலகுவாவது அவனுக்குப் புரிந்தது. நிம்மதி அவன் மனதில்.

“ஆஹா என் இமேஜ் உன்ட்ட எவ்ளவு டேமேஜ்னு இப்பதான் தெரியுது….நான் கூட நம்ம பொண்ணு படு டென்ஷன்ல இருக்குது…இன்னைக்கு இதுக்கு மேல வேற ஒன்னும் வேண்டாம்னு நினச்சேன்…..பட் போஸ்ட்போன் செய்தா நீ என்ன ஆமைட்டயும் தோத்த ஆதிக்னு சொல்லிடுவ போலயே…”

அவனைக் கொன்று தின்னும் வெட்கமா அல்லது அந்த  வாட்டர் டேங் ஐஸில் வரும் மிரண்ட லுக்கா எது கிடைக்கப் போகிறதாம் இப்போது இவனுக்கு? அவளை ஆவலாய்ப் பார்த்தான் ஆதிக்.

உண்மையில் நைட் நல்லா தூங்குறதை தவிர ஆதிக்கிற்கு வேறு திட்டம் எதுவும் இல்லை…’ஊருக்குப் போய்கிடலாம்…லெட் அஸ் நோ ஈச் அதர் இன் அ பெட்டர் மேனர்…அதுக்கு பிறகுதான் எல்லாம்’ எனதான் அவன் நினைத்து வைத்திருந்ததே. ஆனால் இப்பொழுது அவளுக்கு  வெட்க தீ மூட்டிப் பார்க்க ஆசை அவனுக்கு.

ஆனால் அவன் எதிர்பார்த்த இரண்டில் எதுவுமே வரவில்லை அவளிடம்.

“இதுக்கு மேல வேற என்ன? இன்னும் எதாவது செர்மனி இருக்கா என்ன?” என ஜெனியூனாக கேட்டாள் அவள். இவன் எதைப் பற்றிப் பேச வருகிறான் என அவளுக்குப் புரிந்த அடையாளமே தெரியவில்லை.

தன்னவள் முகத்தை இன்னும் ஆழமாய் ஆராய்தலாய்ப் பார்த்தான் கணவன். யாரிடமும் மனம் விட்டுப் பேசிப் பழகாத இவனது குட்டிப் பொண்ணுக்கு இந்த விஷயத்தில் ஏ பி சி கூட இவன் தான் சொல்லித்தர வேண்டுமோ…???

ரேயாவோ உறுத்திய கணத்த நகைகளை கழுத்துப்பகுதியில் குத்தாதவாறு வலக்கையால் சற்று தூக்கிப் பிடித்து, இடக்கையால் தன் கழுத்தை தேய்த்துக் கொண்டாள்.

முதல்ல ட்ரெஸ் மாத்த சொல்லனும்… நினைத்தவன் “வா ரேயுமா உள்ள போலாம்…” அவளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

“எனக்கு தெரியும் போன ஸ்பீட்ல நீ திரும்பி வருவன்னு….” சிமி ஆதிக்கை விஷமச் சிரிப்புடன் வரவேற்றாள்.

“மாடிப் போர்ஷன் முழுக்க உங்களுக்குத்தான்…நீ போ….அண்ணிய நாங்க அப்றமா அனுப்பி வைக்றோம்…அவங்கள நாங்க கொஞ்சம் கவனிக்க வேண்டி இருக்குது” ரேயாவைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

ஆதிக்கிற்கோ தங்கையின் கிண்டல் பிடித்தாலும், மனைவியை கண்பார்வையை விட்டு விலகி இருக்க அனுமதிக்க முடியவில்லை. அம்மாவோ யாரோ  எதுவும் சொல்லிட்டாங்கன்னா? அவங்க சொல்லுவாங்களோ மாட்டாங்களோ…ரேயு அம்மாவ நினச்சு டென்ஷனாவாளே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.