(Reading time: 39 - 77 minutes)

ய் கே பி நீ உன் அண்ணிய இன்னொரு நாள் கவனிச்சுக்கோ…இப்ப அவள அனுப்பு….” இலகுவாக சொன்னாலும் அவன் சொன்ன விதத்தில் ஒரு அழுத்தம் இருந்தது.

சிமிக்கு தன் அம்மாவுக்கும் அண்ணிக்கும் இடையில் நடக்கும் சீக்ரெட் லடாய் எதுவும் தெரியாதாகையால் இப்பொழுதைய அண்ணன் குரல் அவளுக்குள் ஏதோ ஒரு வலியைக் கொண்டு வந்தது. அவனோட பெர்சனல் ஸ்பேஸ்குள்ள போறனோ? சிமியின் முகம் சுருங்குவதைக் கவனித்த ரேயா தன்னவனைப் கெஞ்சலாக ஒரு பார்வைப் பார்த்தாள். நான் மேனேஜ் செய்துப்பேன்…யூ டோண்ட் வொர்ரி என்ற செய்தி இருந்தது அதில்.

சற்று தொலைவில் இருந்து அதைப் பார்த்திருந்த ஜெயாவுக்கு வசிகரனும் மலர்விழியும் ஞாபகம் வந்து போயினர். எப்பவும் ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்கல அவங்க…மனம் தொட்ட ஒரு நொடி வலியை பெருமூச்சால் தூர ஓட்டினார் அவர்.

“சிமி குட்டி அண்ணி நேத்து காலைல இருந்து இப்ப வரைக்கும் ரொம்ப பிஸியா இருந்திருப்பாடா….டயர்டா இருக்கும்…நீ ரொம்ப எதுவும் செய்யாம சீக்ரமா அனுப்பி வைமா…ஆதிமா அன்றிலுக்கும் சிமிக்கும் ஒரு பாண்டிங் வர இதல்லாம் கொஞ்சம் வேணும்…….”

சிமிக்கு அண்ணன் தன் அம்மாவிற்காகவா தயங்குகிறான் என சட்டென புரிய ஆதிக்கிற்கோ வேறு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அது  அதி கேஸில் முக்கிய முடிச்சு என்னதாக இருக்கும் என்ற புரிதலையும் கொண்டு வந்தது. தன் அம்மாவின் அருகில் சென்றவன் அவரைக் கட்டி அணைத்து வழக்கமான பாணியில் அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான், 

“ஏய் கே பி உன் அண்ணிய எவ்ளவு லேட்டானாலும் அனுப்பி வை எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…பட் அவ ஷார்ப்பா 9 .30 க்கு தூங்கிடுவாளாம் …அப்றம் உன் ரூம்லயே தூங்கிடப் போறா….அத்தான்தான் அழப் போறாங்க…”

ரேயாவைப் பார்த்து கண்ணசைத்துவிட்டுப் போய்விட்டான் அவன். ரேயாவுக்கு நடப்பது முழுமையாக புரியவில்லை எனினும், ஆதிக்கிற்கு எதோ முக்கிய விஷயம் புரிந்துவிட்டது என மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

டுத்து சிமியும் புனிதாவும் அவளை அத்தனை கிண்டலும் கேலியும் செய்து  தயாராக்கி மாடிக்கு அனுப்பி வைத்தனர். படியேறி இவள் மாடியை அடைந்தால் மாடியின் ஹாலில் வெளிச்சமில்லை. ஹாலைத் தவிர ஒரே ஒரு அறை மாத்திரமே அங்கிருந்தது. மிகப் பெரிய அறையாக இருக்கும் போலும்….அதை நோக்கி நடந்தாள். ஏனெனில் அங்கு மாத்திரமே வெளிச்சம். அறைக்குள் நுழைந்தால் அவளுக்காக காத்திருந்தான் ஆதிக். அதுவும் வேஷ்டி சட்டையில். அள்ளிக் கொண்டு போனது அவளுள் எதையோ அவன் உருவம்.

“என்ன ரேயு..?” அவள் பார்வையைக் கண்டவன் கேட்டான்.

“உங்களுக்கு இது ரொம்பவே அழகாயிருக்குது ஆதிக்…செம ஹேன்ட்சமா..”

இயல்பாய் அவனை நோக்கி நடந்தாள். ரோஜா வர்ண புடவையில் அவளும் நீளக் கால் கொண்ட ஒற்றை ரோஜாவைப் போலத்தான் இருந்தாள். வந்து அவள் கை பற்றினான் அவன். கண்களோ கன்னி அவள் கண்களுடன் காதல் மொழி. அவள் விழிகளுக்கு அது புரிந்ததா? பதில் இல்லை… கையிலிருந்த பாலை அவனிடமாக நீட்டினாள்.

“டெய்லி நைட் பால் சாப்டுவீங்களாமே…அத்தை சொன்னாங்க…குட் ஹபிட்…ஈசியா தூக்கம் வரும்…”

 பாலை வாங்கி அருகிலிருந்த டீ டேபிளில் வைத்தான்.

“எனக்கு சாரிலல்லாம் தூங்க முடியாதுப்பா…நான் நைட் ட்ரஸ் எதாவது மாத்திகிடலாமா….? இல்லனா அதுக்கும் யாரும் எதுவும் சொல்வாங்களா..?”

“சே…அதல்லாம் ஒன்னுமில்லடா….உன் திங்க்ஸ் அங்க இருக்குது…போய் சேஞ்ச் செய்துட்டு வா…” அறையின் ஓரத்தில் இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமைக் காண்பித்தான்.

“தேங்க்யூப்பா…..” அவன் காண்பித்த திசையை நோக்கிச் சென்றவள்  “ நைட்டுக்கு எதுக்கு இவ்ளவு ஸ்பெஷலா ட்ரெஸ் செய்றாங்களோ? எனக்குத்தான்னு பார்த்தா உங்களுக்கும்தான் போல…….இதுல தூங்க கஷ்டமா இருக்காதா?....எனக்கு இப்பவே தூக்கமா வருது…”

செல்லும் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான் ஆதிக். அடுத்த சில நிமிடங்களில் அவள் வெளி வரும் போது ஆதிக் அங்கு இல்லை. மனம் சுருண்டு போனது அவளுக்கு. அவனையும் ஹர்ட் செய்துட்டனா?

வனை தேடி அறையில் இருந்த மற்ற ஒரு திறந்த வாசலுக்குள் நுழைந்தாள். சில தூண்களுடன் அறை நீள போர்டிகோ, அடுத்து மொட்டை மாடி. அங்கிருந்த ஊஞ்சலில் அவன்.

“நீ சீக்ரம் தூங்குவன்னு சொன்னல்ல…போய் தூங்குமா….எனக்கு டைம் ஆகும்.. கொஞ்ச நேரத்தில வர்றேன்…” அவள் பக்கத்தில் இருந்தால் அவன் கையும் வாயும் அவளை தூங்க அனுமதிக்குமா எனத் தெரியவில்லை அவனுக்கு. அத்தனை பேச ஆசை அவளுடன். பால்யத்திலும் பருவத்திலும் பார்த்து வந்த நாளனைத்தயும் காதினிக்க கதையாய் சொல்லியபடி, பாவை அவள் தந்த காதல் நோய் சுடும் வீதம் நூறும் சொல்லியபடி, அவள் காதோடு சுருளும் முடியை தானும் சுழற்றி, தான் வீழும் அந்த முன் நெற்றியில் இதழ் ஒற்றி….இடையோடு கை போட்டு, மடி மீது தலை சாய்த்து, ஓராயிரம் முறை அவள் பேரை உச்சரித்து, இதழ் பிரித்து இவன் பெயர் அவள் சொல்லிடும் வேளைகளில் முத்துதிர்த்து…. ம்ஹூம் இவன் மனம் போற ஸ்பீடுக்கும் அவள் இருக்கும் மூடுக்கும்… குட்டிப்பாப்பா தூங்கட்டும்… பாவம் நேத்து மார்னிங்ல இருந்து அவளுக்கு ரெஸ்ட்டே இருந்திருக்காது….

 சென்று அவன் அருகில் அமர்ந்தாள் ரேயா.

“ சின்ன வயசுல இருந்து தூக்கத்துல எப்ப விழிச்சாலும் இருட்டு ரூம்ல பெட்ல தனியா படுத்ருக்கோம்னு ஒரு ஃபீல் தான் வரும்…எனக்கு மேரேஜ்ல ரொம்ப பிடிச்ச விஷயமே கண்ண திறந்த உடனே பக்கத்துல நீங்க இருப்பீங்கன்றதுதான்….” சட்டென எழுந்துவிட்டான் ஆதிக்

“ வா ரேயு…தூங்கலாம்…” இதற்குள் இவன் தோள்மீது சாய்ந்திருந்தாள் அவள். தனக்கு தோள் தந்த கையை தன் கையால் சுற்றிப் பின்னிக் கொண்டாள்.

என்ன பேசினார்கள் என அவளுக்கே தெரியாது. பேசிக் கொண்டே அங்கேயே அவள் தூங்கிப் போனது காலையில் கண் விழிக்கும் போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.  அன்றே தம்பதியராய் கிளம்பிவிட்டார்கள் அவர்கள் தஞ்சாவூருக்கு. திருச்சி வரை ஃப்ளைட்.  அங்கிருந்து கார் பயணம். அவர்களை கொண்டுவிடவென ஆதிக் பேற்றோரும் ஷாலு குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

திக்கின் தந்தையின் நண்பர் ஒருவருக்கு பூர்வீகம் தஞ்சாவூர். அவர் அங்கிருந்த தனது பரம்பரை வீடை இவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கொடுத்திருந்தார். ஓடு வேயப்பட்ட போர்டிகோவும், கணத்த  மரகதவுகளும், கதவின் இருபுறமும் இருக்கும் கையகல விளக்கு மாடமும், வீட்டின் ஹாலில் ஆடும் தேக்கு ஊஞ்சலுமாக  வீடு பழமைக் கோலம் கொண்டிருந்தாலும், க்ரானைட் தரையும், மாடுலர் கிச்சனுமாக புதுமைப் பார்வையும் கொண்டிருந்தது. கிட்டதட்ட அரை ஏக்கர் காம்பவ்ண்டுக்குள் இந்த ஒற்றை பெரிய வீடும் கத்திக் கூப்பிட்டாலும் காதுக்கு கேட்க முடியுமா என தெரியாத தூரத்தில் இரட்டை அறை கொண்ட ஒரு துணை வீடும்…..முன் புறம் பல மரம். வீட்டைப் பார்த்தவுடன் ரேயாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

“வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆதிக்…” அவள் துள்ளிக் குதிக்காத குறைதான். அனைவரும் மீண்டும் கிளம்பிப் போனதும் கிடைத்த முதல் தனிமையில் தன்னவனிடம் வந்து அறிவித்தாள் அவள்.

ஆனால் ஆதிக்கின் முகத்தில் சிந்தனை.

“என்னப்பா…?”

“இல்ல டே டைம்ல நீ இங்க தனியா இருக்கனும். நைட்டும் நான் முன்ன பின்ன வருவேன்….இவ்ளவு பெரிய வீடு..அதுவும் தனியா….சமாளிச்சுடுவியா?”

பயமா இல்லையா எனக் கேட்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.