(Reading time: 39 - 77 minutes)

வள் இயல்பானது போல் தோன்றவும் மீண்டுமாய் தொடர்ந்தான் ஆதிக்.

“ மொத்தத்துல அப்ப எனக்கு உன் தங்கைனு மனசுல இருந்தது ஒரு  ஸ்கூல் கோயிங் குட்டிப் பொண்னு வித் த ஃபீலிங் ஆஃப் ரிஜக்க்ஷன்… சோ நான் ஃப்ரெண்ட்லியா, டென்டரா பேச ட்ரை பண்ணிருப்பேன்….அதோட ஐ வாஸ் டையிங் டு ஸ்பீக் டு யூ….அதான் உன் அக்காவ பேசச் சொல்லுன்னு சொன்னேன்…அதாவது அந்த அக்கா என்னைப் பொறுத்தவரைக்கும் என் ரேயு….பட் அக்கானு சொன்னதும் உனக்கு உன் அக்கா ஷாலு அண்ணினு புரிஞ்சிருக்கும்….”

“ம்…”

“அடுத்து நீயா எனக்கு கால் பண்றப்ப,  முதல்ல பேசுன ஷாலு போய் தன் அக்கா ரேயுட்ட சொல்லி நீ கால் பண்றன்னு நான் நினச்சேன்….ஏன்னா அந்த டைம் நீ உன் நம்பர்ல இருந்து கால் பண்ண, அதோட வாய திறந்து பேசுன, பேசுறது நீன்னு புரிஞ்சுது….எல்லாத்துக்கும் மேல முதல்ல லைன்ல வரவும் நீ அழுத… அவ்ளவு நாளும் நான் உன்னை மிஸ் செய்த மாதிரி நீயும் என்னை… மிஸ் பண்ணிருப்ப, அதான் அழுறன்னு நான் நினச்சேன்.… ஆனா அடுத்து நீ எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்டதும் என்ன இப்டி ஒரு கேள்வின்னுதான் முதல்ல தோணிச்சு. உன் வாய்ஸ்ல வேற ஜீவனே இல்லாத மாதிரி ஒரு ஃபீல். உன் அப்பா உன் சம்மதத்தை கேட்டுறுக்க மாட்டாங்க, நானும் அப்டியே உன்ட்ட எதுவுமே சொல்லாம வெட்டிங்க ப்ரசீட் செய்றேன்னு நீ அப்சட்டாகுறியோன்னு ஒரு தாட்.  நேர்ல பார்த்து ப்ரபோஸ் செய்யனும்ன்ற ஆசையில தான் நான் அதுக்கு முன்னால ஓபனா உன்ட்ட எதுவும் பேசலைனு மனசுல இருந்த உண்மையான ரீசனை உன்ட்ட சொன்னேன்…பட் நீ அப்பன்னா நேர்லயே சொல்லிக்கோங்கன்னு ஒரு மாதிரி கட் பண்ண…உனக்கு அதுல ஏதோ பிடிக்கலை…எங்கேஜ்மென்டுக்குப் பிறகு ப்ரபோஸ் செய்வியோன்ற மாதிரி நீ இரிடேட் ஆகுறன்னு நினச்சுதான் அவசர அவசரமா எனக்கு இந்த கல்யாணத்துல ரொம்பவே இஷ்டம்னு சொன்னேன்…அது உனக்கு நான் உன் அக்கவைப் பத்தி சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு இப்ப தெரியுது. அதுக்குப் பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. தென் அப்பா ரேயா வேற ஒரு பையனை விரும்புறான்னு சொன்னப்ப என்னால நம்பவும் முடியலை டைஜஸ்ட் செய்யவும் முடியலை.”

இப்பொழுது அவன் கையை இறுகப் பிடித்தாள் ரேயா அன்றைய அவன் வலி உணர்ந்தவளாய்..

ஆதிக்கோ மறுப்பாய் புன்னகைத்தான். “இப்பதான் அது ஷாலு அண்ணி சரித்ரன் அண்ணா லவ்ஸ்டோரின்னு தெளிவா புரிஞ்சிட்டே….அப்ப சொல்றப்ப அந்த பையன் அங்க வந்தாச்சு…மேரேஜ் ஃபிக்ஸ்‌ ஆன மாதிரிதான், நீ இங்க வந்தா எல்லோருக்கும் கஷ்டம்…அதோட கல்யாண பொண்ணு உன்னை விரும்புனாங்கற மாதிரி எதையாவது சொல்லிட்டனா ஊர்ல அவள ரொம்பவே தப்பா பேசிடுவாங்கன்னு அப்பா சொன்னாங்க….இன் ஃபாக்ட் அப்ப உன் அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்ததும்  எனக்குத் தெரியாது….யாரும் சொல்லலை….என் அப்பா என்ட்ட பொய் சொல்றாங்கன்னு நான் நினைக்க வழியே கிடையாது… ப்ரபோசலே அவங்க இஷ்டப் பட்டு கொண்டு வந்தது….அதோட நான் உனக்கு கூப்ட காலை நீ அட்டென்ட் செய்யவும் இல்ல…. நீ என்ட்ட பேசுறப்ப அழுததும், உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமான்னு அப்சட்டா கேட்டதும், விருப்பத்தோட பேசுன மாதிரி இல்லாம, அவசராமா காலை கட் செய்ததும் இப்ப வேற மாதிரி தோணிச்சு. உன்னை நம்பி பழகினேனே….நீ என்னை இப்டியா நினச்ச…நான் வேற ஒருத்தன விரும்புறனேன்னு நீ…  “

“மை காட்…எதெல்லாம் எப்டில்லாம் தோணிருக்குது”

“ ம்…..நாம அதுக்கு முன்ன மனசுவிட்டு பேசிகிட்டது கிடையாது…நீ என்னை விரும்புறன்றது எனக்கு அப்பவரை ஒரு யூகம் தான்…அதோட அடுத்து ஒரு வன் அண்ட் ஹால்ஃப் இயர் உன்னைப் பத்தி எனக்கு எந்த தகவலும் கிடையாது…..எங்க காலேஜ் வர உனக்கு மார்க்‌ஸ் இருந்தும் நீ வரலைன்ற இன்ஃபோ தவிர… அடுத்து நம்ம எங்கேஜ்மென்டுக்குன்னு ஆசையா கிளம்பி வந்த அப்பா, உனக்கு வேற ஒருத்தங்களோட மேரேஜ் ஃபிக்‌ஸ் ஆகுதுன்னு சொல்றாங்க…நீயும் என்ட்ட பேசலை….அதான்…உனக்கு வேற ஒருத்தங்களோட உன் விருப்பத்தோட மேரேஜ்னு ஆன பிறகு….நான் உன்னை பெர்சிவியர் செய்றது என் மனசாட்சிக்கு நியாயமா படலை…அதோட உன்னை அப்டி பார்க்க தெம்பும் எனக்கு இல்லை…..அப்றம் இப்போ காலேஜ் ஃபங்ஷன்ல பார்க்றப்பதான் தெரிஞ்சிது யூ ஆர் நாட் எட் மேரீட்னு….அதோட யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீன்னு ஒரு அன்டர்ஸ்டாண்டிங் பட் ஏதோ ஒரு ஹர்ட்லயும் என் மேல கோபத்துலயும் இருக்குதுன்னு புரிஞ்சிது….அதான் கம்பல் பண்ணியாவது உன்ட்ட பேசி எல்லாத்தையும் ரிசால்வ் செய்யனும்னு நினச்சேன்… அப்றம் உன் காலேஜ் சேர்மன் ரூம்ல வச்சு, அங்கிள் உனக்கு அலையன்ஸ் பார்க்றதா சொல்லவும் உன் முகத்துல ஒரு கம்ஃபர்டபிள் ஃபீல்…நான் ஒவ்வொரு தடவையும் உன்னை சரியா புரிஞ்சுக்க மாட்டேன்றனோன்னு தோணிட்டு…..உனக்கு உன் அப்பா அலையன்ஸ் பார்க்றதுதான் பிடிச்சிருக்குதுனு தோணிச்சா…சோ நீ வீட்டுக்குப் போன்னு சொன்னேன்…”

“சாரிப்பா…நானாவது அட்லீஸ்ட் அந்த கால்லயாவது கொஞ்சம் தெளிவா பேசி இருக்கலாம்….”

“அப்டியே ஒவ்வொருத்தரும் சொல்லிகிட்டே போனா சொல்லிகிட்டே போகலாம்…பைதவே நீ எப்டி ரேயுமா நான் அப்டி சொல்வேன்னு நினச்சே…சிமி உன்ன அண்ணினு வரைக்கும் நேரடியாவே சொன்னா?”

தான் குழம்பிய எல்லா வகையையும் சொன்னாள் ரேயா.

“ அந்த டைம்ல அத்தான்னு தான் சொல்லிக் கொடுக்க முடியும்….ஹஸ்பண்ட்னா சொல்லி கொடுக்க முடியும்…? எல்லாத்தையும் முதல்ல சரியா புரிஞ்சுட்டு, அப்புறம் எல்லாத்தையும் மாத்தி யோசிச்சு…ப்ச்…..எவ்ளவு ஹர்ட் ஆகிருக்க நீ?

ஷாலு அண்ணி ரூம்னு தெரிஞ்சு அன்னைக்கு நான் அங்க போகல …நான் ஸ்டே செய்திருந்த ரூம்ல தண்ணி வரல அதனால அங்க போனேன்…நெக்‌ஸ்ட் ரூம்ல லைட் ஆன்ல இருந்ததால அங்க நீ இருக்கன்னு நினச்சுட்டு நான் இந்த ரூமை யூஸ் செய்தேன் அவ்ளவுதான்…மத்தபடி அதுக்கு முன்ன நான் உன்னை மீட் செய்த சிச்சுவேஷன் எதுவும்….அந்த பஸ் சண்டையிலோ…இல்ல அதுக்குப்பிறகு  ஸ்கூல்லயோ எங்கயும் உன்னை ஃபோட்டோ எடுக்ற சான்ஸ் அமையலை…..அந்த ரூம்ல உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் அதை நான் ஸ்னாப் எடுத்துக்கிட்டேன்…..தட்ஸ் ஆல்… உன் ரூமுக்கு நான் ஏன் போறேன்னு கேட்டது அவ்ட் ஆஃப் ப்யூர் டென்ஷன்…..ஜஸ்ட் முந்தின நைட் தான் உங்கப்பா லவ் மேரேஜ் பத்தி எவ்ளவு வெறுப்புல இருக்காங்கன்னு சொல்லிருக்காங்க…..அவங்களுக்கு என்னப் பிடிச்சிருக்கின்ற ஒரு விஷயம் மட்டும் தான் என் லவ்க்கு ஃபேவரா இருந்த ஒரே பாய்ன்ட்….மறுநாள் நம்ம ரெண்டு பேரையும் அப்டி சேர்த்து உங்கப்பா பார்த்தா…..அப்றம் என்னைப் பத்தி  என்ன நினைப்பாங்க? வேர் வில் ஐ கோ ஃபார் யூ?...அந்த டென்ஷன்ல தன் உன் ரூம்க்கு நான் எப்டி வருவேன்னு கேட்டேனே தவிர…ஐ டின்’ட் மீன் எனி திங் எல்ஸ்….”

ங்கேஜ்மென்ட்டுக்கென வயலட் மற்றும் பச்சை வர்ணம் கலந்த புடவை அதற்கான அக்‌ஸசரீஸ் என எல்லாம் வாங்கிக் கொண்டு அன்று இரவு வீடு வந்த ரேயா நிச்சயமாக மறுநாள் நடக்கவிருப்பது எங்கேஜ்மென்ட் எனதான் நம்பி இருந்தாள்.

ஆனால் மறு நாள் காலை அவள் கண் விழித்து, குளித்து உடை மாற்றி  அறையைவிட்டு  கீழிறங்கி வரும்போது அங்கே அவளுக்காக காத்திருந்த ஆதிக்கின் அம்மா  நிகழ்ச்சியை மாற்றிவிட்டார்.

“ என் தம்பி வசி பத்தி ஏதோ ஒரு டி ஜி பி என்னமோ சொன்னாங்களாமே….ஆதிக் இப்பதான் சொன்னான்…” அவர் பேச ஆரம்பிக்கவுமே விஷயம் அவருக்கு எவ்வளவாய் பிடிக்கவில்லை என்பது ரேயாவுக்குப் புரிந்துவிட்டது.

“உட்காருங்க ஆன்டி…”

இவள் வார்த்தையை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.