(Reading time: 30 - 59 minutes)

17. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

ன் வாயை மூடிய கணவனின் கையை மெல்ல விலக்கிவிட்டு அவனை மிரண்டு போய்  பார்த்தாள் ரேயா. பின்னே வீட்டுக்குள்ளயும் மானிடர் செய்வாங்கன்னா இவங்க ப்ரைவசி என்னாகிறதாம்??? இப்ப இவளை கைல தூக்கிட்டு வந்தானே அத யாரும் பார்த்திருப்பாங்களா??

அவள் ஈர விழி பாவங்கள் அவனுக்கு புரியாதா என்ன? அவள் தலையை லேசாக தட்டினான் ஆறுதலாகத்தான். தொட்ட கையை அவசரமாக தட்டிவிட்டாள் அவள். பதறிப்  போய் சுற்றிலும் பார்த்தாள்.

இவனைத் தொட்ட காற்றைக் கூட இனி அவள் தன்னை தொட அனுமதிக்கப் போவதில்லை என ஆதிக்கிற்கு தெளிவாக உணர்த்தியது அப் பார்வை.

esvமறு நாள் ரேயா தூக்கம் கலையும் போது தான் எதிலோ பயணித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.  ‘ஐயோ ஆதிக்கிற்கு என்னாச்சு? என்ன யார் கிட்நாப் செய்றாங்க?’ அவசர அவசரமாக அரண்டு மிரண்டு எழுந்தால் “குட் மார்னிங் செல்லப் பொண்டாட்டி….நீயும் உன் ப்ராண்ட் நியூ ஹஸ்பண்டும் ஸேஃப்” என்றான் ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஆதிக்.

 அவள் அவர்களது காரின் பின் இருக்கையில்தான் படுத்திருந்தாள். அதாவது படுக்க வைக்கப் பட்டிருந்தாள். காரை ட்ரைவ் செய்து கொண்டிருந்த ஆதிக்கைப் பார்த்துக் கேட்டாள் “எங்க போறோம் ஆதிப்பா…?”

“இப்டில்லாம் கேட்டா சொல்ல மாட்டேன்… நமக்கு கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு நைட் ஒரு டே முடிஞ்சுட்டு….லவ் பண்ண ஆரம்பிச்சு ஏழு வருஷமே முடிஞ்சுட்டு….பட் இன்னும் ஹஸ்பண்ட்ட எப்டி இன்ஃபோ கலெக்ட் செய்யனும்னு தெரியாத குட்டிப் பாப்பாக்கு பதில் கிடையாது….”

 அவன் வாயால் அவளது கணவனவன் என கேட்பதில் இப்படி ஒரு சந்தோஷம் இருக்கிறதா? உள்ளம் துள்ள அவன் அருகில் சென்று உட்கார ஆசை கொண்டது பெண் மனது.

 “இப்ப நான் முன்னால வரனும்….” இவள் சொல்ல காரை நிறுத்தினான். இறங்கும் போதுதான் கவனித்தாள் அவள் படுக்கச் சென்ற போதிருந்த அதே நைட் ட்ரெஸிலிருந்தாள்.

அவசரமாக முன் சீட்டில் அமர்ந்து கதவை மூடியவள் “என்ன நீங்க என்னை நைட் ட்ரெஸ்ல கூட்டிட்டு வந்திருக்கீங்க…” சிணுங்கினாள். கார் பறக்க தொடங்கி இருந்தது.

“அந்த வீட்ல வச்சு ட்ரெஸ் மாத்த ஒத்துப்பியா நீ…?”  இப்பொழுதுதான் சூழ்நிலை ஞாபகம் வர பக்கென்றது. மிரண்டு போய் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

பறந்து கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் என் எச் 45பி கல் கண்ணில் பட்டது. சற்று தொலைவில் பச்சை நிறத்தில் டோல் கேட் அருகிருக்கும் அறிவிப்பு பலகை. அடுத்த போட் மதுரை எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறது என்றது.

“மதுரைக்கா போறோம்? ஏன்பா?”

“இல்லமா தேவகுளம் போறோம்.”

“ஹான்……தாத்தா வீட்டுக்கா….? அங்க இப்ப யார் இருக்கான்னு தெரியலையே…அப்பாட்டயாவது சொன்னீங்களா….?” கேட்டுக் கொண்டிருக்கும்போதே கேள்வியின் அபத்தம் புரிந்துவிட்டது அவளுக்கு. சொல்லிவிட்டு துப்பறிய போவார்களாமா?

“இன்னைக்கு எப்டி அங்க?”

“நேத்து டூட்டியில் ஜாய்ன் செய்துட்டேன்ல…இன்னைக்கு லீவ் எடுத்தாச்சு….அனஃபீஷியல் ட்ரிப் தான்….டூ டேஸ்….மினி ஹனிமூன்னு நினச்சுப்பாங்க…..”

“அங்க என்ன செய்ய போறோம் ஆதிக்?”

“எங்க ஹனிமூன்லயா…?” அவன் குறும்பாய் கேட்க

“போடா..” வெட்கத்துடன் அவன் தோளில் ஒரு செல்ல அடி. தலை அதுவாக குனிய செந்நிறம் கொள்ளும் செம்பொன் வதனம்.

“காலைலயே பேசுற பேச்ச பாரு…” முனங்கினாள்.

“ஓகே குட்டிமா…பாய்ண்ட் நோட்டட்…..நைட் கவனிச்சுகிடலாம்…” விளையாட்டாய் அவன் சொல்லவில்லை என புரிகின்றது அவளுக்கு.

அடி வயிற்றிலிருந்து ஆகாய மார்க்கமாய் அவளறியா புது  ஆசை அலை ஒன்று அவளுள் பிறந்து அவஸ்தை செய்தாலும், அதையும் தாண்டி இனம் புரியா பயம் ஒன்று  திக் திக்கென்று நெஞ்சடைக்க,  அவன் ஆசையை மென்மையாக மறுத்தாள்.

“போங்க நீங்க….இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு…?”

இன்னும் அவனுடன் கொஞ்சம் பழகியபின் இந்த பயம் போய்விடுமாய் இருக்கும்.

“என்ன ஆச்சா? ஏய் கேடி கல்யாணம் ஆச்சுடி நமக்கு….ரெண்டு நாளைக்கு முன்னால நடந்துதே அது பேர் தான் கல்யாணம்…”

“ப்ச் விளையாடாதீங்க ஆதிக்…யூ நோ அவர் சிச்சுவேஷன்…எங்க இருந்து யார் எப்டி வாட்ச் பண்றாங்களோ…?” இதுவும் தயக்கத்திற்கு ஒரு காரணம்.

“ஹேய்…பொண்ணு….அது ஒரு யூகம் தட்ஸ் ஆல்…அதுக்காக அந்த கேஸ் முடியுற வரைக்கும் ஒன்னும் கிடையாதுன்றதுல்லாம் ரொம்பவும் ஓவர்…..இன்னைக்கு நைட் அன் ப்ளான்ட் ஸ்டே தான…அப்றம் என்ன?”

அவனை அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஆசையை பயம் கொன்று தின்கிறதே!!!

“இல்ல ஆதிப்பா….வேண்டாம்…..பயமா இருக்குது….நேத்து தான சொன்னீங்க அப்புறமான்னு…அப்றம் இப்ப ஏன்?” மெல்லமாய் வந்தது அவள் வார்த்தைகள். தவிப்பு அவளிடம்.

“அதுல்லாம் அப்டித்தான்… முதல்ல என் ரேயுவ பார்க்க முடிஞ்சா போதுமேன்னு இருந்துது…பார்க்கவும் பேசிட்டா போதும்னு தோணிச்சு…..பேசினதும் கூடவே இருந்தா போதும்னு பட்டுது…..கூடவே வந்த பிறகு இப்ப இப்டி தோணுதே…” அவன் குரலில் இருந்த உச்ச துள்ளல் அவள் கருத்துக்குப் பட்டதே தவிர அதில் ஒழிந்திருந்த கிண்டலை அவள் சட்டை செய்யவே இல்லை….

“க்ரீடி மைன்ட்…” ரொம்ப சின்ன குரலில் சொன்னாலும் அதில் ஆழ கோபம் இருந்தது.

“எஸ் எஸ்…க்ரீடி டு ஹவ் மை வைஃப் அலோன்…” முழுக் கேலி இது. ஆனால் அவள் குத்தலாய் உணர்ந்தாள். கண்ணில் நீர் வடிதல் ஆரம்பம்.

அவளை சீண்டி விளையாடத்தான் ஆசைப்பட்டிருந்தான் ஆதிக். அவள் அழுவாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை…’ஆக நான் முதல்ல நினச்ச மாதிரி இது இன்னும் குட்டிப்பாப்பா தானா….நான் கூட வெட்கத்தல்லாம் பார்த்து ஏமாந்துட்டேன் போலயே…இந்த பயத்தை எப்டி போக வைக்க..அதவிட இப்ப அழுறாளே…?’

காரை நிறுத்த வேண்டுமானால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை.  இப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கேட் அருகே தவிர பிற இடத்தில் காரை நிறுத்துவது பாதுகாப்பான செயல் இல்லை என்பதால் அவன் ஆக்சிலேட்டரை அழுத்தினான். சீக்கிரம் ஏற்ற இடத்தில் போல் காரை நிறுத்தி அவளிடம் பேச வேண்டும்.

காரின் வேகம் அவனது கோபத்தின் வெளிப்பாடு எனப் பட்டது அவளுக்கு.  ‘நான் அழுதா அவனுக்கு கோபம் வருதாமா? அப்ப என் பயத்த விட அவன் ஆசை தான் அவனுக்கு முக்கியமா போச்சா….’ இறுகிப் போய் அமர்ந்திருந்தாள் ரேயா.

 பார்வை தொடும் தூரத்தில் டோல்கேட் கண்ணில் தெரிய காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான் ஆதிக். விரைப்பாய் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல் கோப முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருப்பவளை எதிர் பாராத நொடியில் இழுத்து அணைத்தான் தன்னோடு.

 ஆறுதல் சொல்லும் எண்ணம் தான் அந்நொடி வரை அவனுக்கு. ஆனால் அவனது எதிர்பாராத அணைப்பில் முதல் நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி தனக்குள் தானே நழுவி தலைவன் தோளில் சுகமாய் சங்கமிக்க, தோன்றும் முன் செயல் வடிவம் பெற்றிட்ட திட்டமற்ற முதல் முத்தம் மனைவியின் பட்டுக் கன்னதில் கணவன் செயல். அடுத்த அட்டாக் அவள் வெண் கழுத்து.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.