(Reading time: 25 - 49 minutes)

21. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ணிகம் .. வியாபாரம் .. உலக தொழில்களில் ஆழமான , பரவலான அஸ்திவாரம் கொண்டது. சாலையோரம் சிறு கடை திறந்து வியாபாரம் செய்பவன் தொடங்கி , அடுக்குமாடி கட்டடங்களில் ஏ சி அறையில் அமர்ந்திருப்பவன் வரை அனைவரின் கனவிற்குமே விதைப்போடும் தொழிலாய்  தான் இருக்கிறது வியாபாரம் . பணத்திற்காகத்  தான் இத்தொழில் என்றாலும் கூட , பலரும் இந்த தொழிலில் ஈடுபாடு காட்டுவதே தனக்கென்று ஓர் அடையாளம் அமைத்து கொள்ளத்தான் . நமக்கும் மேல் முதலாளி என்றொருவன் இருக்கும் வரையினில் வாழ்வில் போராட்டம் என்பது இருக்கத்தான் செய்யும் .. காரணம் எந்தவொரு வேலையிலுமே உயரக இடத்தில் இருக்கும் அதிகாரிக்கு தேவை , தனக்கு கீழ் பணிபுரிய ஒரு திறமையான பணியாள்  மட்டுமே .. அந்த பணியாளின்  ஆசைகள் என்ன ? அவனது கனவுகள் என்று தெரிந்துகொள்ள எந்த ஒரு முதலாளியும் முன்வந்திருப்பது மிகக்குறைவுதான் ! இருப்பினும் வாழ்க்கை எனும் சக்கரம் ஓடித்தான் ஆகவேண்டும் .. எலி வலையானாலும்  தனி வலை வேண்டுமென , ஒவ்வொருவருமே சுயதொழில் செய்வதாய்  முடிவெடுத்தாலும் கூட , அந்த சமுத்திரத்தின் வேகத்தில் மூழ்கி முத்தெடுத்து கரைசேர பெரும்  உழைப்பு வேண்டும் .. அதை நன்கு உணர்ந்திருந்தாள்  சங்கமித்ரா . எப்போதுமே ஷக்தியின்  தலைநிமிர்வுக்கு தான் காரணமாய் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள், அவனுக்காகவே இந்த டிபார்ட்மண்ட் ஸ்டோர் திறக்கும் பணியில் முழுமூச்சாய் இறங்கினாள்  .. அவளது சிறுசிறு சந்தேகங்களுக்கு கூட முகம் சுளிக்காமல் உதவினான் மதியழகன் . அங்கு அனைவருக்குமே மதியழகன் தேவைப்பட்டான் ..

அம்மு பாட்டிக்கு பாசமிகு பேரனாய்

வர்ஷினிக்கு அன்பான சகோதரனாய்

Ithanai naalai engirunthai

ஷாந்தனுவிற்கு  நண்பனாய்

ஷக்தி , மித்ரா , எழில் , முகில் , புவி  என யாவருக்கும் அண்ணனாய்

பாக்கியம் - மனோகர் இருவருக்கும் அவன் பொறுப்பான மாப்பிளை

இது அனைத்தையும் விட தேன்நிலாவிற்கு அவன் சகலமும் என்றாகி போனான் ..!

பெண்ணுக்கு எப்படி வீட்டினுள் இருந்தபடியே பல பரிமாணங்கள் இருக்கிறதோ , அதே போல தான் ஆண்களுக்கும் என்பதை அவன் செயலிலேயே உணர்த்தினான் .. இப்படி ஓயாமல் ஓடி கொண்டிருப்பவனுக்காக என்ன செய்ய போகிறோம் என்று யோசித்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள்  தேன்நிலா  .. மணி நள்ளிரவு 2 ஆகியும் நித்திராதேவி அவளை அணைத்து  கொள்ளவில்லை .. காரணம் மனதிற்குள் ஒருவித பரபரப்பு .. இன்னும் சில மணிநேரங்களில் அவள் சிங்கபூருக்கு புறப்பட்டு விடுவாள் ..ஒருபுறம் தனது உயிர்த்தோழியை பார்க்க போகிறோம் என்றாலும் , இன்னொரு புறம் மதியழகனின் பெற்றோரை காண போகிற ஆர்வம் .. தன்னவனின் பெற்றோர் என்ற நினைவே அவளை அவர்கள் மீது  மரியாதையை ஏற்படுத்தி வைத்தது .. என்னத்தான் நடக்கிறது என்று பார்த்தது விடுவோமே , என்று எண்ணியவளுக்கு தெரியும் நிச்சயம் மதி அவள்  வருந்தும்படி நடக்கவே மாட்டான் என்று .. " மது உன்னால எனக்கு தூக்கம் போச்சிடா " என்று வாய்விட்டே கூறியவள் , ஏதோ உந்துதலில் ஸ்பார்க்  ஐ திறந்தாள் ..அவளது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தனது இனிய குரலால் பேசி கொண்டிருந்தான் மதி ..

காதல் . எல்லைகள் இல்லாத தேசம் அது .. இதுதான் காதல்ன்னு நாம கோடிட்டு காட்ட ஆரம்பிச்சிட்டோம்னா , அங்கு காதலின் அளவு குறையுது என்ற அர்த்தம் .. ஒவ்வொரு மனுஷனுக்கு தன்னை முன்னோக்கி இழுத்துகிட்டு போறதுக்கு ஒரு ஷக்தி வேணும் .. சிலருக்கு அந்த ஷக்தி பணம் , சிலருக்கு  அடையாளம் .. சிலருக்கு காதல் !! ஒரு சின்ன கற்பனைதான் ..

செல்போன், இன்டர்நெட் , லேப்டாப் அல்லது எந்த ஊடங்ககலுமே இல்லாத இடத்தில் ,

பச்சை பசுமையாய்  காட்சிகள் கண்முன் விரிய

ஒரு அழகான வீடு

வீட்டுக்குள்ள ஏதோ சத்தம்

என்னாடான்னு திரும்பி பார்த்தா

உங்களை உங்களுக்காக மட்டும் நேசிக்கும் அவன் அல்லது அவள் !

ஜஸ்ட் பீல் இட் ... இப்போ சொல்லுங்க ப்ரண்ட்ஸ் , உங்க வாழ்வின் தேடல் என்ன ? இந்த பாட்டை கேட்டுகிட்டே யோசிங்க .. என்றபடி ஒரு பாடலை உயிர்பித்தான் ..

" வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா ?

விளையாட ஜோடி தேவை ..

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்குமுன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் "

வசீகரமான குரல் மதியழகனுக்கு  .. அதை சரியான விதத்தில் ஏற்ற இறக்கத்துடன் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான் அவன் ..

" என் தேடல் நீதான் மது " என்று அவனுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள்  தேன்நிலா .. உடனே அவளுக்கு போன்  கால் பறந்தது ..

" ஹே குட்டிமா "

" ம்ம்ம்ம் "

" தூங்கலையா நீ ?"

" ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம் "

" என்ன மேடம் .. வாய திறந்து பதில் சொல்ல மாட்டிங்களா "

" ம்ம்ம்ம் "

" ஹனி குட்டி " என்று குழைந்தான் மதி .. அவன் அழைத்த விதத்தில் செவிமடல்கள் சூடேற

" ம்ம்ம்ம் ??" என்று கேள்வி கேட்கும் தொனியில் நிறுத்தினாள்  அவள்

" என்னடா ?" என்று கேட்டான் அவனும் கனிவுடன் ..

" இத்தனை நாளாய்  எங்க தான் இருந்த மது நீ ? ஏன் இப்படி என்னுடைய ஒவ்வொரு நிமிடங்களையும் உனக்கானதாய் எடுத்துக்குற நீ ? நான் என்ன டீனேஜ் கேர்ள்  ஆ ? இப்படி காதல் வந்த நிமிஷத்துல இருந்து இப்போவரை மிதந்துகிட்டே இருக்கேன் .. சில நேரம் சிரிப்பா இருக்கு ..சில நேரம் வியப்பா இருக்கு .. "

" இப்போ எதுக்கு இந்த வாக்குமூலம் " என்றான் மதி , அவள் உணர்ச்சி பெருக்கில் குரல் கம்ம பேசுவதை பொறுக்க  மாட்டாமல் ..

" அப்படி இல்லடா .. எனக்கு கொஞ்சம் மனசு விட்டு பேசணும் போல இருக்கு "

" வேலை இருக்குடா குட்டிமா " என்றான் மதி அவள் உறங்கட்டுமே என்று .. அவள் பதில் பேசாமல் அமைதியாய் இருக்கவும் ..

" ஒரு 5 மினிட்ஸ் ல கூப்பிடுறேன் இரு " என்றபடி நிகழ்ச்சியை தொடர்ந்தான் .. இடைவிடாமல் காதல் பாடல்கள் ஒளிபரப்புவதாக அறிவிப்பு கூறிவிட்டு , நான்கு நிமிடத்திலேயே அவளை மீண்டும் அழைத்திருந்தான் ..

" மது "

" சொல்லு டா "

" ஐ லவ் யூ மது "

" அடிப்பாவி .. நட்டநடு ராத்திரியில் , வயசு பையன்கிட்ட இப்படியா பேசுவ ?" என்றான் அவன் பயந்தவன் போல .

" டேய் .. சொல்றத கேளுடா "

" ஹும்கும்ம்ம்ம் .. மரியாதை  குறையுதே , அப்போ நான் வாயை மூடிக்க வேண்டியதுதான் .. சரி சொல்லும்மா " என்றான் கனிவாய்

" நான் ரொம்ப ப்ராக்டிகல் மது .. எப்பவும் யாரையும் சார்ந்து இருக்க கூடாதுன்னு நினைப்பேன் .. எதையும் எதிர்ப்பார்கறதுனால்தான்  ஏமாற்றங்கள் வருதுன்னு நம்புவேன் ..அதன்படி நான் யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதே இல்லை .. ஆனா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.