(Reading time: 25 - 49 minutes)

" ரி லேட் ஆகுது .. வைக்கவா டீ ? " என்றான் அவன் மிக இதமாய் .. கண்மூடி அவன் குரலை பதிவு செய்து வைத்து கொண்டவள்

" ம்ம்ம்ம்  " என்றாள்  ...

" சொல்லவா ?"

" என்ன ?"

" நீ சொல்லுன்னு சொன்னதை சொல்லவா ?"

" வேணாம்டா "

" ஏன் ?"

" ஏன்னா "

" ஏன்னா  நீ மௌனமாய் சொன்னது எனக்கு கேட்டுருச்சு ஷக்தி " என்று அவன் பெயருக்கே வலிக்காமல் உரைத்தாள்  ..

" ஆஹான் .. " என்று சிரித்துவிட்டு

" சரி அத்தை பொண்ணு குட்நைட் " என்றான்

" ம்ம் குட் நைட் "

றுநாள் மிகுந்த எதிர்பார்போடு விடிந்தது .. காலையிலேயே சங்கமித்ராவுக்காக  காரை எடுத்து கொண்டு சென்னை வந்திருந்தான் எழில் .. இன்று டிபார்மண்ட் ஸ்டோருக்கான  பொருட்களின் விநியோகஸ்தர்களை பார்பதாக இருந்தனர் இருவரும் . இவர்கள் ஒரு புறம் இருக்க , தேன்நிலா  தாய்  தந்தை இருவரிடமும் விடைபெற்றுவிட்டு சென்னை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தாள் .. அவளுக்கே தெரியாமல் , அவளுக்காக அங்கு ஏற்கனவே காத்திருந்தான் மதியழகன் .. இவர்கள் அனைவரையும் விட அன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாய் அமைந்தது அவனுக்கு .. (வேற யாரு நம்ம மணிரத்னம் சார் ஹீரோவே தான் )

திருமணம் ஆனவுடனேயே துபாய்க்கு போக வேண்டும் என்று ஷக்தி அவசரபட்டதற்கு ஒரே காரணம் , கூடிய விரைவில் மித்ராவிடம்  திரும்பி வரவேண்டும் என்பதுதான் .. நான்கு வருடங்கள் தனியாய் இருந்தவனுக்கு தெரியும் , உறவின் ஆழமும் பிரிவின் துயரமும் .. முன்பைவிட அவள் தன்னை இப்போது அதிகம் தேடுவாள் என்பது அவன் அறிந்ததே .. மேலும் அவனுக்குமே , கடமைக்கு மனம் புரிந்துவிட்டு பிரிந்து வாழ்வதில் இஸ்டமில்லை .. கஷ்டமோ நஷ்டமோ , இன்பமோ துன்பமோ இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை என்று நம்பினான் ஷக்தி ...

அவனும் சராசரி ஆண்தான் .. அவனுக்கென்று காதல் உணர்வுகள் உண்டு , கனவுகள் உண்டு , மரத்தை சுற்றி டுயட் பாடும் கனவுகள் அவனுக்கும் வந்தது உண்டு , காதல் கவிதைகளை எழுதும் திறமையும் உண்டு ..ஆனால் அனைத்துமே ஒரு அளவோடு வைத்திருந்தான் ஷக்தி .. அதை வெளிப்படுத்த கூடாது என்றெல்லாம் இல்ல .. அவனை பொருத்தவரை , காதல் வாழ்வில் ஒரு அங்கம் அல்ல , ஒருவகையில் காதலும் ஓர் அஸ்திவாரம் ..அதனால்தான் மித்ராவின் மீது ஆழமான காதல் இருந்தும் அதை அவன் திருமணத்திற்கு முன்பு வெளிபடுத்தவில்லை .. திருமணம் ஆனபிறகும் கூட , அவன் மொத்தமுமாய் மாறிவிடவில்லைதான் .. அவனது தனித்துவத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை காரணம் அவன் மனைவி அவனது குணத்தையும் தானே நேசிக்கிறாள் ? ஆனால் அதே நேரம் , செயலால் தனது காதலை உணர்த்தி கொண்டுதான் இருக்கிறான் ஷக்தி ... இதோ அந்த காதலின் உந்துதலில்தான் துபாய்க்கு பறந்து வந்தான் , வேலையை ராஜினாமா செய்வதற்காக ..  !

முன் அறிக்கை இல்லாமல் வேலையில்  நிற்பதற்கு சாத்தியம் குறைவு , மேலும் அது அவனை தவறாக காட்டி விடலாம் , என்றாலும் கூட தன்னால் இயன்றவரை தன்னிலையை விளக்கி இருந்தான் அவன் . இன்று தெரிந்துவிடும் , அவனது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்று .. உல்லாசமான மனநிலையில் இருந்தான் போலும் , மித்ராவிற்கு அவனாகவே

" குட் மோர்னிங் மிது " என்று மெசெஜுடன்  ஒரு அழகான புகைப்படத்தையும் அனுப்பி வைத்து இருந்தான் .. எத்தனை நாள்தான் உங்களையே வெச்சு கேம் விளையாடுறது ? என்று சலித்து கொண்ட கடவுளும் , அன்று அனைவருக்குமே நல்லருள் புரிந்திருந்தான் .. எதிர்பார்த்தது போல மித்ரா -எழிலின் வேலைகள் சுமூகமாகவே ஏற்கபட்டு இருந்தது .. ஷக்தியின்  விண்ணப்பமும் ஏற்கப்பட்டு எப்படியும் ஒரு வாரத்தில் அவன் இந்தியாவிற்கு திரும்பும்படி  அனைத்தும் சுமூகமாய் முடிந்தது .. ஆனால் நம்ம மதிதான் பாவம் !!

தேன்நிலாவின் அதிர்ச்சி கலந்த முகத்தையும் , கன்னக்குழி சிரிப்பையும் எதிர்பார்த்தபடி அவளுக்காக அவன் காத்திருக்க அவளோ மிகவும் இயல்பாய்

" நீ இங்கதான் இருக்கியா மது ? எங்க உன்னை ரொம்ப நேரம் தேடனுமோ நினைச்சேன் .. வா போலாம் " என்று அவனது கை பிடித்து இழுத்து நடந்தாள் .. ஆச்சர்யத்தில் வாயை பிளந்து நின்றான் அவன் ..

" மது , கொசு வாயில் புகுந்திட போகுது" என்றாள்  நிலா கேலியாய் ..

" ஹே வாலு , நான் உன்னோடு வரேன்னு உனக்கு தெரியுமா ?"

" குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருக்குற மாதிரி , நிலா இருக்குற இடத்தில் தானே மது இருப்பான் ? இதை தெரிஞ்சுக்க நான் ஏழு கடல் ஏழு மலை தாண்டியா கண்டு பிடிக்கணும் ? எப்படியும் உன் ஓட்டை வாய் தங்கச்சி நான் இன்னைக்கு வரேன்னு சொல்லி இருப்பாளே ?" என்று நிலா கேட்கவும்

" உப்ப்ப்ப் " என்று பெருமூச்சுவிட்டான் மதியழகன் ..

" புத்திசாலி பொண்டாட்டி கிடைச்சாலே கஷ்டம் ..இதில் நீ அதிபுத்திசாலியா இருக்கியே .. என் பாடு கஷ்டம்டா " என்றான் அவன் சோகமாய் ..

" அது , சின்ன பசங்க கூட சேர்ந்து எனக்கு திருட்டுத்தனமா கிஸ் கொடுக்குற முன்னாடியே யோசிச்சு இருக்கணும் நீ " என்றாள்  தேன்நிலா ..

" அதுவும் சரிதான் தாயே " என்று மதியழகனும் பூரிப்பாய் அவளோடு கரம் கோர்த்து நடந்தான் .. அத்தனை கூட்டத்திலும் அவன் உரிமையாய்  கை பற்றியது மிக சிறிய செயலாய்  இருந்தாலும் கூட , தேன்நிலா  மிதந்து கொண்டிருந்தாள் என்பதுதான் உண்மை ..

எங்கும் பரவியிருந்த ஏ  சி காற்று .. தமிழர்கள் மட்டுமல்லாமல் மற்ற இன மக்களின் நடமாட்டம் .. தாங்கள் நிற்பது சிங்கப்பூர் என்பது பார்த்த முதல் பார்வையிலேயே உணர்ந்துவிடும்படியான சூழல் .. வருடத்திற்கு ஒருமுறையாவது அலுவலக வேலை நிமித்தமாய் இங்கு வருபவன்தான் மதியழகன் .. ஆனால் அப்படி அவன் வரும்போதெல்லாம் ஒருவித இறுகிய மனநிலையில் தான் இருப்பான் .. முதல்முறையாய் இலகுவான மனநிலையுடன் சிங்கையின் காலடி எடுத்து வைத்தான் .. அதற்கு காரணம் இரு பெண்கள் தான் .. முதலாவதாக தேன்நிலா  , இரண்டாவது அவளது ஆருயிர் தோழி யும், தனது செல்ல தங்கையுமான புவி .. முகநூளின் மூலமாகத்தான் தொடங்கியது புவனா- நிலாவின் நட்பு .. ! முகநூல் வெறும் பிள்ளையார் சுழி போட்டுவிட அதற்கு பின்னால் இப்படி ஒரு நட்பு உருவாகி ரகசியம் இரு பெண்களுக்குமே வியப்புதான் .. நேரில் காணாமலேயே அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கும் .. நேரடியாய் சந்திக்கவில்லை என்பதை தவிர மனதளவில் இருவரும் மிக அருகில் சொல்லப்போனால் , இருவரும் ஒருவருமாய் தான் இருந்தனர் ..

இதோ அவர்களை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டாள்  புவனா .. தன்னையும் மீறி கண்கள் கண்ணீரை கசிந்தது .. அது அன்பின் சாயல்தான் ..! இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ? என்று கேள்விகளை ஏந்தி இருந்தன இருவிழிகள் ..

" ச்ச , என்ன புவி , இப்படி என்ட்ரி  கொடுக்கும்போதே அழுதா , உன்னை அழுமூஞ்சின்னு சொல்ல மாட்டாங்களா ? சீக்கிரம் கெட்  அப்பை மாற்று " என்று தனக்குள்ளேயே குரல்கேட்க , இருவிழிகளையும் அழுந்த துடைத்துவிட்டு செல்போனால் அவர்களை முதலில் படம் பிடித்து கொண்டாள்  .. மதியும் , நிலாவும் அவளை தேட , சில நிமிடங்கள் தூண் மறைவில் நின்றுகொண்டு கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தாள் .. சில நொடிகள் அப்படியே கரைய , முகத்தை சந்தோசம் கொப்பளிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.