(Reading time: 25 - 49 minutes)

வர்களை நோக்கி நடந்து வந்தவள் ,

" அண்ணா " என்று மதியை முதலில் அழைப்பதா , அல்லது

" ஹனிமூன் " என்று நிலாவை அழைப்பதா என்று தெரியாமல் தேமே  என்று விழித்தாள்  .. அதற்குள் அவளை இருவருமே பார்த்துவிட ,

" அவங்களே வரட்டும் " என்று சிரிப்புடன் நின்றாள்  அவள் .. எத்தனை முயன்றாலும் சரிதான் போடி

என்றபடி கண்ணீர் துளிகள் அவள் விழிகளை நனைக்க , அதை மறைக்கிறேன் பேர்வழி என்று விழிகளை சிமிட்டினாள்  .. அவள் மனநிலையை புரிந்தது போல நிலா , மதி இருவரும் ஒரே நேரத்தில் இருபக்கமும் நின்றுகொண்டு அவள் தோளில்  கைபோட்டு கொண்டனர் ..

வாவென்று அழைக்காமல்

" ஹப்பாடி , கடைசியா என்னை பார்க்கறதுக்கு ரெண்டு பேருக்கும் வழி தெரிஞ்சதே ரொம்ப சந்தோசம் " என்று பேச்சை தொடக்கினாள்  புவி ..

" சரி சரி ... நீ அழுததை நாங்க கவனிக்கல ..வீணா மொக்க போடாதே " என்று இயல்பாய் பேச முயன்றாலும் நிலாவுக்குமே ஏதோ  ஒன்று மனதில் இன்பமாய் திணற வைத்தது ..

" ச்சி  போடி ஹனிமூன் " என்றவள் அவளது கன்னத்தை நன்றாக கிள்ளி  வைத்தாள் ..

" ஸ்ஸ்ஸ்ஸ்  ஆ .. குட்டிச்சாத்தான் .. வலிக்கிறது டீ "

" வலிக்கனும்னு தான் கிள்ளினேன் .. நாம விடியோ காலில் பேசும்போதெல்லாம் நினைப்பேன் ..உன் குழிவிழும் கன்னத்தை கிள்ளணும்ன்னு அட் லாஸ்ட் ஐ  காட் இட் பேபி "  என்றாள்  புவி உற்சாகமாய் ..

" அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இதே வேலையா போச்சு " என்று கன்னத்தை தடவினாள்  நிலா வலியுடன் ..

" ஹே , நான் தான் உன்னை கிள்ளினேன் .. அண்ணா நிச்சயாமா கிள்ளி  இருக்க மாட்டார் ..வேற ஏதாச்சும் ட்ரீட்மென்ட்  கொடுத்திருப்பார் " என்று கண்சிமிட்டி ரகசியமாய் பேசுகிறேன் என்று மதியின் காதில் விழும்படியே கூறி வைத்தாள்  புவனா .. மதியழகனோ மையலுடன் நிலாவை பார்க்க

" அடியே , நீ பாவம் சின்ன பொண்ணுன்னு நான் அமைதியா இருந்தா , நீ இப்படி எல்லாம் பேசறியா " என்றாள்  பொய்யான எரிச்சலுடன் ..

" சின்ன பெண்ணா ? அப்படின்னு நான் சொன்னேனா ? ஏதோ ஜெயா பச்சன்மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்  ஆ இருந்தா உனக்கு பிடிக்காதா ஹனிமூன் " என்றவள்

" பாருங்கண்ணா " என்றபடி மதியின் தோளில்  உரிமையாய்  சாய்ந்து கொண்டாள்  .. அதோடு இல்லாமல்

" எப்படி இருக்கீங்க அண்ணா  ? நிலா உங்களை ரொம்ப படுத்திட்டாளா ?" என்று அக்கறையாய் கேட்க

" அதை எப்படி டா என் வாயல சொல்லுவேன் .. ஏற்கனவே எனக்கு வார்னிங் கொடுத்துதான் கூட்டிட்டு வந்தா .. உன்கிட்ட நான் எதுவும் கம்ப்ளைன்ட் பண்ண கூடாதாம் " என்று பயந்தவனாய் அவன் கூற

" ஹே நீ கார் சாவிய கொடுடி .. நானே டிரைவ் பண்ணிட்டு போறேன் .. அண்ணனும் தங்கச்சியும் பொடி  நடையா நடந்துகிட்டே  பாசமலர் படத்தை ஓட்டுங்க " என்றாள் ...இதெற்கெல்லாம் அசருபவளா  புவனா ?

" ஹே ஹனிமூன் .. நான் என்ன உன்னை மாதிரி கரகாட்டகாரன் காரா வெச்சு இருக்கேன் ? நீ வண்டியை ஓட்டி  , எங்கயாச்சும் இடிச்சு டாக்டருக்கே வைத்தியம் பார்க்க வைக்காதே தாயே " என்று வாரினாள்...

மதிதான் இடைபுகுந்து " நானே டிரைவ் பண்றேன் ல்..கீ கொடுடா " என்றான் ..

" நீ எப்படி ?" என்று நிலா விழிக்கவும்

" எங்க அண்ணா , இண்டர்நேஷனல் லைசன்ஸ் வெச்சு இருக்காங்க ஹனிமூன் .. இது கூட தெரியாதா உனக்கு ? ஓ  ஆமாம் உனக்கு என் அண்ணாவை பார்த்ததும் சைட் அடிக்கவே நேரம் போதாது .. இதில் எங்க இதெல்லாம் தெரிஞ்சுக்க போற ? " என்று வாரி நிலாவிடம் இருந்து அடி வாங்கி கொண்டாள்  ..மதியழகனோ இருவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான  சண்டைகளை ரசித்து கொண்டிருந்தான் .. அமைதியாய் இருப்பது அவனது இயல்பு இல்லைத்தான் .. எனினும் புவனாவுடன் இணைந்து நிலாவை சீண்டிகொண்டிருந்தால் அவளுக்கு தனித்து விட்டது போல தோன்றிடுமோ என்று யோசித்து , இருவருக்கும் சாதகமாகவே பேசினான் ..

(இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் அண்ணா )

" மது  நாம எங்க போறோம் இப்போ ?" என்றாள்  நிலா பதட்டமாய் .. அவளது பதற்றம் அவளுக்கு ... மதியழகனின் பிரதிநிதியாய்

" நாம இப்போ மார்சிலிங் என்றபகுதிக்கு போகிறோம் .. அங்கு நம்ம மதி அண்ணாவுக்கு ஒரு குட்டி ஹவுஸ் இருக்கிறது " என்று செய்தி வாசித்தாள்  ..

" ஏன் உன் அண்ணாவுக்கு வாய் இல்லையா ? எல்லாத்தையும் நீதான் சொல்லுவியா ?"

" எல்லாத்தையும் நான் ஏன் சொல்ல போறேன் ஹனிமூன் ? ஐ லவ் யூ எல்லாம் கண்டிப்பா மதி அண்ணாதான் சொல்லுவார் " என்று புவனா வாரவும் தலையில் அடித்து கொண்டாள்  நிலா .. பிறகு முகத்தை தீவிரமாய் வைத்து  கொண்டவளாய்

" மது , நான் ஏன் இங்க வந்தேன்னு உனக்கு தெரியும் தானே " என்றாள் .. அவளுக்கு பதில் கூறாமல் ஆமென தலையை மட்டும் ஆட்டினான் மதி ..

" நான் அத்தை மாமாவை பார்க்கணும் "

" பார்க்கலாம் பார்க்கலாம் "

" இன்னைக்கே "

"இன்னைக்கு முடியாது !"

" ஏன் ? டயர்டா இருக்கா ? சரி  அப்போ நாளைக்கு போகலாம் "

" நாளைக்கும் கண்டிப்பா முடியாது நிலா "

" என்ன நீ , நான் என்ன சொன்னாலும் நோ சொல்லுற ?"

" குட்டிமா இன்னைக்கும் நாளைக்கும் முடியாது... அதன் பிறகு போலாம் " என்றான் மதியழகன் ..

" உனக்கென்ன பிரச்சனை டா ?" என்று நிலா குரல் உயர்த்தவும் , அந்த வீட்டின் முன் அவன் காரை பார்க் பண்ணவும் சரியாய் இருந்தது ..

" அம்மு , நீ போயி கேட்டை திறடா " என்றபடி சாவியை தங்கையின் கையில் கொடுத்துவிட்டு நிலாவை பார்த்தான் மதியழகன .. அவனையே கோபமாய் முறைத்தாள்  தேன்நிலா  .. அவங்க சண்டை போடுவாங்களா இல்லையான்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன் :)

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.