(Reading time: 25 - 49 minutes)

" நீ சென்னைலயா இருக்க ?"

" அது "

" சொல்லு டீ "

" ம்ம்ம் ஆமா டா"

" ஏன் என்கிட்ட சொல்லல நீ ?"

" இப்போதான் சொல்லனும்னு நினைச்சேன் ஷக்தி .. அன்னைக்கு காவியாவை டிராப் பண்ணலாம்னு எல்லாரும் வந்தோம்ல  , இங்க அவ தனிமையா இருக்குன்னு ஒரு 2 டேஸ்  இருக்க சொன்னா அதான் .. " என்றாள்  விளக்கம் அளிக்கும் குரலில் ..

" இப்போ காவியா வீட்டிலா இருக்க ?"

"ஆமா டா "

" உனக்கு ஏன் இந்த வேலை எல்லாம் ?" என்று சற்று கண்டிப்பான குரலில் கேட்டு இருந்தான் ஷக்தி ..

ஏன் இவன் இப்படி கேட்டுவைக்க வேண்டும் ? அதை அவனிடம் கேட்காமலே படபடவென பொரிந்தாள் மித்ரா ..

" இதென்ன கேள்வி மாமா .. அவ பாவம் தானே ? இத்தனை நாள் நம்ம கூடவே இருந்துட்டா ..திடீர்னு தனியாய் இருக்க கஷ்டமா இருக்காதா என்ன ? நான் என்ன இங்கேவா இருந்திட போறேன் .. அடுத்த வாரம் நான் இனியா அப்பாகிட்ட ஜூனியரா சேர போறேன்னு உனக்கு தெரியும்தானே ? இன்னும் ஒரு ரெண்டு நாள்தன இங்க இருப்பேன் .. நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை " என்றாள் ..

" ம்ம்ம் பேசி முடிச்சிட்டியா டீ ?"

" .."

" நீ லாயரம்மாவா இருக்கலாம் .. பாயிண்ட் பிடிச்சு பேசலாம் .. ஆனா அதுக்கு முன்னாடி சொல்ல வர்றதை புரிஞ்சுக்கணும் "

" அப்போ நீ சொல்ல வர்றதை நானா புரிஞ்சுக்கவில்லையா மாமா ?" என்றாள்  அவள் உள்ளே போய்விட்ட குரலில் ..

" ம்ம்ம்ம் ஆமா "

" சரி அப்போ சொல்லு .. நீ என்ன சொல்ல வந்த ? நான் என்ன தப்பா புரிஞ்சுகிட்டேன் ?"

" ம்ம்ம்ம்ம் .. நாம கூட்டு குடும்பமா இருக்கோம் .. எப்பவும் நம்ம வீட்டில் ஆளு இருப்பாங்க ..அதனால் காவியா நம்மோடு இருக்கும்போது நமக்கு அது புது சிரமம் இல்லை .. ஆனா காவியா தனியா இருக்குற பொண்ணு .. அன்னைக்கு டயர்டா இருக்குன்னு நீ எழில் எல்லாரும் ஒரு நாள் தங்குனிங்க  ஓகே..இப்படி நாலு நாள் ஆகியும்  அங்கேயே இருந்தா காவியாவுக்கு சிரமமாய் இருக்காதா ?"

" அட என் மக்கு மாமா , மத்த எல்லாரும் கெளம்பியாச்சு நான் மட்டும்தான் அவளோடு இருக்கேன் " என்று வாய் வரை வந்த வார்த்தையை இழுத்து பிடித்து கொண்டாள்  அவள் .. அவள் மட்டும் அப்படி கூறிவிட்டால் இவன் நிச்சயம் கண்டுபிடித்து விடுவான் அவள் இங்கு இருக்கும் காரணத்தை ..அதனால் மௌனமாய்  இருந்தாள் ..

" ஆமால "

" ஆமா தான்டீ லூசு ... அதனால்தான் அப்படி சொன்னேன் "

" நான் தான் தப்ப புரிஞ்சுகிட்டேன் சாரி மாமா "

" நான் சொல்றது புரியலைன்னா , புரியலைன்னு சொல்லிடு .. அதுவே பாதி பிரச்சனையை தீர்த்து வெச்சிடும் மிது .. இல்லன்னா தேவ இல்லாம பிரச்சனையை தலையில் போட்டுக்கணும் " என்றான் அவன் ..

" ம்ம்  ம்ம்  ம்ம் " என்று தலையை நாலாபுறமும் ஆட்டி வைத்தாள்  சங்கமித்ரா .. பிறகு

" ஆனா இதிலும் ஒரு நல்லது இருக்கு மாமா " என்றாள் 

" என்னடி ?"

" இப்படி எடாகுடமா பேசினா மட்டும் நீ எப்படி வளவளன்னு அட்வைஸ் பண்ணுற பார்த்தியா " என்றாள்  குறும்பாய் ..

" ஓஹோ இதான் உன் திட்டமா ? ஏதோ பாவம் சின்ன பொண்ணுன்னு அட்வைஸ் பண்ணினேன் .. சரி அப்போ இனி எந்நேரமும் சைலண்ட் தான் " என்று அவன் கூறவும் பதறியே போனாள்  மித்ரா .. விளையாட்டை கூட இவன் சீரியசாய் விளையாடுவானே .. உடனே வேண்டுமென்றே

" சரி சரி ஃ ப்ரியா (freeya)  விடு .. ஃ ப்ரியா விடு" என்றாள் .. அவனோ குறும்பாய்

" ப்ரியா யாருடீ ? உன் ப்ரண்டா  ? " என்றான்

" டேய் "

" சொல்லு அத்தை பொண்ணு " என்று கொஞ்சியும் கொண்டான் ஷக்தி

" உன்னை என்னதான் பண்ணுறது ?"

" ஹா ஹா என்னை கேட்டா ..எனகென்ன தெரியும் "

" கொழுப்பு ஜாஸ்தி மாமா உனக்கு .. ஆனா நீ ரொம்ப அப்பாவின்னு எல்லாரும் நினைக்கிறாங்க "

" ஹா ஹா .. சரி உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு "

" வழக்கம் போல முகில்கிட்ட ஏதாச்சும் கொடுத்து வெச்சு இருப்ப ..அதானே "

" ஹே கல்யாணத்துக்கு முன் .. இது கல்யாணத்துக்கு பின் "

" அடப்பாவி .. அப்போ கல்யாணத்துக்கு பின் கிபிட் எல்லாம் கிடையாதா ?"

" கிடைக்கும்ன்னும் இல்லை .. கிடைகாதுன்னும் இல்லை "

" சரியான தொல்லை "

" ஹா ஹா அறியா பிள்ளை "

" டேய் நீயா அறியாபிள்ள ? எனக்கு கெட்ட  கோபம் வந்திரும் போனை வை "

" என்ன சர்ப்ரைஸ்ன்னு கேட்கவே இல்ல நீ ?"

" எனக்கு தூக்கம் வருது மாமா "

" மிது "

" ம்ம்ம் "

" நீ சரி இல்லையே "

" உன் பொண்டாட்டி ஆச்சே ..அப்பறம் எப்படி டா சரியா இருப்பேன் "

" ஓஹோ அப்படியா அப்போ சர்ப்ரைஸ் என்னனு சொல்ல மாட்டேன் "

" நானும் கேட்க மாட்டேன் போடா "

" சரி ஓகே குட் நைட் "

" குட் நைட் மாமா ... ஹே "

" என்னடி ?"

" ஐ லவ் யூ மாமா "

" சேம்  டூ யூ "

" டேய் , ஐ லவ் யூ டூன்னு சொன்னா  என்னவாம் ?"

" சொன்னாதான்  தெரியனுமா டீ ?" என்று காதலுடன் கேட்டான் ஷக்தி .. சரியாய்  இரண்டு நிமிடங்கள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை .. மௌனம் ..மௌனம் ..மௌனம் !!! சுகமான மௌனமான நொடிகள் அது .. அவன் வார்த்தையால் சொல்லி இருந்தால் கூட அவள் அப்படி சிலிர்த்திருக்க மாட்டாள் .. அவள்  அதற்கு பதில் சொல்லி இருந்தால் கூட அவன் அப்படி நிம்மதி அடைந்திருக்க மாட்டான் .. வார்த்தைகள் இல்லாத நேரத்தில் கூட உன்னோடு நான்தானே என்று செயலால் இருவரும் உணர்த்தி கொண்டிருந்த நேரம் .. அவன் தன் கண்முன் இல்லை என்று அவளோ , அவள் தன்னருகில் இல்லையே என்று அவனோ  இம்மியளவும் உணராத அளவு மனதால்  நெருங்கி இருந்தனர் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.