(Reading time: 19 - 37 minutes)

22. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன்னப்பா சொல்லுற ?” மூன்றாவது முறை அதிர்ச்சியாய் கேட்டார்,லக்ஷ்மினாராயனன்..

“அதான் சொல்றேன் ல ? நான் இன்னும் ஒரு வாரத்தில் அங்க வரேன்..ஆனா இந்த விஷயம் மிதுக்கு தெரிய கூடாது…எப்பவும் நீங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு தானே சப்போர்ட் பண்ணுவிங்க ? இந்த தடவை நோ” என்று சிரித்தவன் சாட்சாத் நம்ம ஷக்தியே தான்…தன் மகன் திரும்பி தாய்நாட்டுக்கு திரும்புவதே ஒரு அதிர்ச்சிதான்… இதில் அவன் இவ்வளவு புன்னகையுடன் வழக்கத்திற்கு மாறாய் கொஞ்சம் அதிகமாகவே பேசிடவும்,அவருக்கு தலைகால் புரியவில்லை..

அந்த சூழ்நிலையிலும் அவருக்கு தனது மானசீக குருவின் குரல் மனதிற்குள் கேட்டது … வேற யாரு ?எல்லாம் நம்ம மிது மேடம்தான் ! என்றோ  ஒரு நாள் அவனை பற்றி பேசி கொண்டிருக்கும்போது அவள் இதை சொல்லி இருந்தாள்…

Ithanai naalai engirunthai

“ உங்க புள்ளைக்கு என்னைக்காவதுதான் வாய் வாசப்படி தாண்டுற அளவுக்கு பேச்சு வரும் மாமா…அந்த மாதிரியான நேரத்துல நீங்க மட்டும்  அதை சுட்டி காட்டிவிட்டிங்கன்னா,உடனே  பழைய குருடி கதவை திறடின்னு மௌனம் ஆகிடுவான்” என்று கூறி வைத்தாள் ..தக்க சமயத்திலதை நினைவு கூர்ந்தவர்.. ஷக்தியின் பேச்சை மட்டும் கவனித்தார்…

“சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும் அப்பா… நான் வரேன்னு அவளுக்கு தெரிய கூடாது… சரியாசொல்லனும்னா இன்னும் ஆறு நாளில் நான் அங்க இருப்பேன்”

“அதெல்லாம் சரிடா… ஆனா உனக்கு எப்படி லீவ் கொடுக்குறாங்க ??” என்று அப்பாவியாய் கேட்டார் நாராயனன்..

“அதெல்லாம் சீக்ரட் …நான் அப்பறம் பேசுறேன் பாய் “ என்று ஃபோனை வைத்தான் ஷக்தி…”அட வெவஸ்தை கெட்டவனே, உனக்கு கண்ணாம்பூச்சி  ஆட,வேற சமயமே கிடைக்கலையாடா ?அங்க என் மருமக , ராத்தூக்கம் இல்லாமகடையை  திறக்குற வேலையை பார்க்குறா..இந்த நேரத்தில் தான் நீ சர்ப்ரைஸ் கொடுப்பியா ?” என்று முனகியவர், ஷக்தி அத்தனை முறை எச்சரித்ததை மதிக்காமல் ஃபோனை எடுத்தார்… மாமா , உண்மையை சொல்ல,மருமகள் என்ன பண்ணினாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி ,நாம சிங்கப்பூர்ல இருக்குற காதல் ஜோடியை பார்த்திட்டு வருவோமா?

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

தேய்வது எல்லாம் பிரிந்ததற்குத் தான்

பிரிவு எல்லாம் சேர்வதற்குத் தான்

சேர்ந்தது எல்லாம் வளர்வதற்குத் தான்

வளர்வது எல்லாம் நமது உறவுக்குத்தான் !

இடையைத் தாண்டி வளர்த்திருந்த ஈர கூந்தலை  காற்றில் உலர்த்தியபடி வெண்ணிலவை இரசித்து கொண்டே மனதிற்குள் கவி வடித்தாள் தேன்நிலா.. ஹாலில் புவனாவும் மதியழகனும் காரசாரமாய் ஏதோ தொலைகாட்சி நிகழ்ச்சியை பற்றி விமர்சிப்பது அவள் செவிகளில் கேட்க இதழில் நிறைவான மந்தகாச புன்னகையை சிந்தினாள் தேன்நிலா ..  என்னத்தான் வெண்ணிலவும்,வருடும் தென்றலும் அவளது காதல் மனதை உரசினாலும்,இப்போது  அவள் நினைவில் நின்றது என்னவோ,  புவி மற்றும் மதியின் பாசப்பினைப்பு தான் …

இன்று காலை காரில் நடந்ததை நினைவு கூர்ந்து லேசாய் முகம் சிவந்தாள் அவள்..(நம்ம நிலாவெட்கப்பட்டா,அங்க   என்ன நடந்ததுன்னு நமக்கு தெரிஞ்சே ஆகனுமே … வாங்க என்னனு பார்போம்….. எல்லாரும் மேல பாருங்க)

“செல்லம் நீ போயி கதவை திறடா…”என்று புவனாவை அனுப்பி வைத்த மதியழகன் ,மிகவும் பொறுமையாய் நிலாவின் பக்கம் திரும்பினான் … அவன் எதிர்பார்த்தது போலவே எப்போதும்போல வேகமாய் பெருமூச்சு விட்டப்படி அவனை முறைத்தாள் தேன்நிலா…

“ என்ன நினைச்சிட்டு இருக்க மது நீ ? நான் இங்க எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியும்ல ? தெரிஞ்சும் என்னோடு வந்துட்டு, இப்போ என்னை தடுத்தா என்ன அர்த்தம் “ என்றாள் அவள்…அவனோ எதையோ தேடுவதைப் போல குனிந்து சிறிது நேரத்தில் “அம்மா” என்று அலறினான்.. காரில் பின்சீட்டில் அமர்ந்திருந்த நிலா, அவசரமாய் அவன் புறமாய் முன்னே நகர்ந்து “ என்ன ஆச்சு மது?” என்று கேட்கும் முன்னரே அவளது குழி விழும் கன்னத்தை லேசாய் கடித்து முத்தமிட்டான் அவன்..

“ ஹேய் திருடா விடுடா..”என்று திமிறி அவசரமாய் புவனாவை பார்த்தாள் நிலா .. அவளோ சற்று தூரம் தள்ளி நின்று ஃபோனில் யாருடனோபேசிக்கொண்டிருக்க , மதியை முறைத்தாள்  நிலா..

“ இந்த நேரத்தில் உனக்கு இந்த கொஞ்சல் தேவையா மது ?”

“கொஞ்சலா ? மேடம்…இதுக்கு பெயர் தண்டனை…ஒரு முக்கியாமன விஷயத்தை மறந்ததுக்காக  உன்னுடைய மிஸ்டர் மது தந்த தண்டனை ..” என்று கண்சிமிட்டினான் அவன்..

“எனக்கு எதுக்கு தண்டனை ?அப்படி நான் என்ன பண்ணேன்?” என்றாள் நிலா ரோஷமாய்..

“ஹாஹா, மறதி மருத்துவச்சி, நாளைக்கு என்ன நாள்ன்னு உனக்கு மறந்து போச்சா ?” என்றான் மதியழகன் உற்சாகமாய்..நாளைய திகதியை நினைவு  கூர்ந்தவள் லேசாய் பின்னந்தலையில் அடித்து கொண்டாள்..

“ச்ச,மறந்தே போச்சு மது…”

“ ஹா ஹா..மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு மடிமேல்விளையாடி…

நாம்,மனம் போல் உறவாடி” அவளை குறும்பாய் பார்த்தப்படி பாடினான் மதி..

இதுதான் இடமா ?நினைத்ததும் வருமா?

இடம் உண்டு விளையாட,எதற்கும் பொழுதுண்டு உறவாட…

எதற்கும் பொழுதுண்டு உறவாட” என்று பதிலுக்கு பாடினாள் நிலா…

“அஹெம்..அஹெம்….பாட்டுக்கு பாட்டா…?சொல்லி இருந்தா நானும் ஜாய்ன் பண்ணி இருப்பேன் ல ஹனிமூன் “ என்று இடைபுகுந்தாள் புவனா… அவள் குரல் போட்டதும் லேசாய் தூக்கி வாரி போட,

“ ஹேய் நான் உன்னை குரங்குன்னு சொன்னேன்ல ? அதை மாத்தி கரடின்னு வெச்சுக்க டீ “என்றாள் நிலா..

“ஒஹோ உங்க பூஜை வேளையில் நான் நுழைஞ்சிட்டேன்னு சூசகமாய் சொல்லுறியா ஹனிமூன்? என் அண்ணா என்னை பார்த்து கரடின்னு சொல்லட்டும் , கண்டிப்பா பெயரை மாத்திக்கிறேன்” என்றாள் இளையவளும் குறும்பாய்..

“அடேங்கப்பா,உங்க சண்டையில்  என்னை  வெச்சு  சாத்துக்குடி ஜூஸ் பிழியாதிங்க செல்லங்களா…வாங்க உள்ளே போகலாம் “ என்றவன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமின்றி , இருவரையும் விட்டுகொடுக்கமலும் இருந்தான்…

தை நினைவு கூர்ந்தவளின் இதழில் மீண்டும் புன்னகை தவழ்ந்தது… கூந்தலை உலர்த்தி முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்  தேன்நிலா…

“ஹ்ம்ம்ம்ம்,  அண்ணா உங்க பாடு திண்டாட்டாம் தான்… மஹாராணி குளிச்சிட்டு  வர்றதுக்கு  மட்டுமே  ஒரு மணி நேரம் ஆகுது… கல்யாணத்துக்கு  அப்பறம் இவ, குளிச்சு, சமைச்சு,உங்களுக்கு பறிமாறுரதுக்குள்ள நான் மூனு ப்லேட் பிரியாணியை உள்ளே தள்ளிடுவேன் போல “ என்று விழிகளை உருட்டினாள் புவனா…

“அய்யே போதும்டி, உங்கண்ணா புராணம்..பசிக்கிறது…வா சாப்பிடலாம்”

மூவருமே பேசுவதற்கு விஷயங்கள் பஞ்சமே இல்லை என்பது போல சலசலத்து கொண்டிருந்தனர்…

“ஹா ஹா ஹா ஹா ஹா”  வில்லனை போல எதிரொலி தந்து சிரித்தான் அன்பெழிலன்… கையில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி எரிந்தாள் சங்கமித்ரா…

“அட என்ன தான் மித்ரா உன் பிரச்சனை…?”

“ஒரு காலத்துல, இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதேன்னு பாடிக்கிட்டு இருந்த நீ .. இப்போ ஏதோஉன் மங்குனி  மாமா கொஞ்சம் தெளிவாகி உன்னை தேடி வரான்னு தெரிஞ்சதும், அன்புள்ளமன்னவனே  ஆசைக் காதலனேன்னு பாட்டு பாடுறதை விட்டுட்டு தாம் தூம்ன்னு குதிக்கிற நீ”  என்று அவன் குற்றப் பத்திரிக்கையை வாசிக்க,கையில்  இருந்த டிவி ரிமோர்ட்டை அவனை பலமாய் தாக்கினாள் மிது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.