(Reading time: 19 - 37 minutes)

" ஹா ஹா ஹனிமூன் , எழில் , கதிர் அண்ணா , காவியா பேபி , முகில் குட்டி  எல்லாருமே எமது நண்பர்கள் வலையில் சிக்கிக் கொண்ட எலிகள் "

" மித்ரூவுக்கு  பாடிகார்டா இருக்குறவரை எப்படி நான் நல்ல இருப்பேன்  புவி பேபி .? பேசாம உன் கம்பனியில வேலை இருந்தா சொல்லு, அடுத்த ப்ளைட்ல வரேன் "- எழில்

" என் கம்பனில இடம் இல்லை நண்பா ..பக்கத்து கம்பனியில முதலைக்கு பல் தேய்க்கனுமாம்  வர்றியா டா "

" நிலா , இது இன்னைக்கு முடியுற மாதிரி இல்லை .. வா நாம அப்படியே ஒரு வாழக்  போகலாம் " என்று நிலாவின் கைகளை பற்றி  தோட்டத்து பக்கமாய் சென்றான் மதி ..

" பார்த்திங்களா , இவங்க ரொமான்ஸ் காக  நம்மளை சொல்றாங்க !" என்று பெருமூச்சு விட்டவள் , அதன் பின் ஓயாமல்  எழில் , மித்ரா இருவரிடமும் வழக்காடி கொண்டிருந்தாள் ...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்  புவனா .. 3....2....1....... முகத்தில் பேய் முகமுடியை போட்டுகொண்டு , " பே  " என்று அவளை உலுக்கி கத்தினாள்  நிலா .. பொறுமையாய் தூக்கம் களைந்து எழுந்தாள்  புவனா ...

" ப்ச்ச்ச் , லூசு " என்று நிலா கோபமாய் முகமூடியை  விளக்கவும்

You might also like - Oru kootu kiligal... A family drama...

 

" ப்பா .... பேய் .... பேய்... அண்ணா காப்பாத்துங்க " என்று அலறினாள் புவனா

" அடியே கொழுப்பு ஜாஸ்தி டீ உனக்கு "

" அது இருக்கட்டும் ஹனிமூன் மணி 12 ஆச்சு , சீக்கிரம் எனக்கு ஹேப்பி பர்த்டே சொல்லு " என்று புவனா கண் சிமிட்டவும் நிலாவுக்கு எதிலாவது முட்டி கொள்ளலாம் போல இருந்தது .

"  சீக்கிரம் டீ விஷ் பண்ணு 00.01 ஆகிடும் " என்று அவள் அவசரபடுத்தவும்

" ஷாபா , ஹேப்பி பர்த்டே டீ குரங்குக்குட்டி .. இந்த பிறந்தநாளுக்கு நான் உன்கூட இருக்குற மாதிரி இன்னும் நூறு பிறந்தநாளுக்கும் நான் உன்னோடுதான் இருப்பேன் " என்று கூறி தோழியை அணைத்து  கொண்டாள்  நிலா ... சரியாய் அதே நேரம் அவர்களின் அறையில் கேக்குடன் பிரவேசித்தான் மதியழகன் .. அவனை கண்டதுமே , " அண்ணா " என்று சொல்லி அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள்  புவனா ...

" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி "

" வாவ்.... யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணோம்னு சும்மாவா சொன்னாங்க ?" என்று சிலாகித்து சிரித்தாள் புவனா .. ஆட்டம் , பாட்டம் என்று வினாடிகள் நிமிடங்களாய் கரைய,

" அண்ணா , நிலாவுக்கு எங்க சர்ப்ரைஸ் ?" என்று புவனா ஜாடை காட்டவும் நிலாவின் அருகில் சென்றான் மதி .. அவளது விழிகளை விரல்களால் பொத்தி அருகில் இருந்த அறைக்கு கூட்டிச் சென்றான் ...

" ஹே மது , என்ன பண்ணுற ?"

" சர்ப்ரைஸ் " என்றபடி  அறை  கதவை திறக்கவும் அங்கு நின்றவர்களை  பார்த்து விழி விரித்தாள்  தேன்நிலா .. மதியழகனின் சாயலில்  ஒரு பெரியவரும் பெண்மணியும் , நிற்க அவர்கள்தான் அவனது பெற்றோர் என்பதை புரிந்துகொண்டவள் அதிர்ச்சியாய்  நின்றாள் ..

" ஹே ஹனிமூன் , இப்படியே  நின்னா என்ன அர்த்தம் ? அம்மாவும் அப்பாவும்  அவங்க மருமகளுக்கு பேச்சு வராதுன்னு நினைச்சிக்க போறாங்க ? "

" ஹா ஹா ... ஆமா , எதுக்கும் பொண்ணுக்கு பாட தெரியுமான்னு  கேளுங்க அம்மா " என்று மதி அவன் அன்னை மலர் தோளில்  கைபோட்டு கொண்டான் .. அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்

" தங்கசிலை  மாதிரி இருக்குற மருமக , பாடித்தான் ஆகணுமா மதி ? அவ பேசினதுக்கே நீ மயங்கி இருப்பியே " என்று  அவர் கண் சிமிட்டவும் " அத்தை " என்று அவரிடம் ஓடி வந்தவள் மதியழகனின் தலையில் குட்டு வைத்துவிட்டு  அவர்களின் பாதம் பணிந்தாள் ..

" புவி , உன் அண்ணி , ரொம்ப அடக்கமான பொண்ணு மாதிரி நடிக்கிறா பாரேன் " என்று சத்தமாய் சொல்லி சிரித்தான்  மதி ...

" உன் குறும்புக்கு எந்த பொண்ணு தான் டா  அமைதியா அடக்கமா இருக்க முடியும் " என்றார் வாசு ..

" அப்பா , இவ்வளவு நேரம் மகனே  மகனேன்னு சொன்னிங்க .. நிலாவை பார்த்ததும் கட்சி மாறுற மாதிரி இருக்கே "

" அவங்க ரெண்டு பெரும் எப்பவும் என் கட்சி தான் .. போ " என்று முகத்தை திருப்பி கொண்டாள்  நிலா ..

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் மதி

" என் மேல உனக்கு நம்பிக்கை இருக்க தானே நிலா ? நான் எது பண்ணாலும் அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும் குட்டிமா ... கோபப்படாம சமாதானம் ஆகிடுவியாம் " என்றவன் காதில் கிசுகிசுத்ததும் போதாமல் லேசாய் முத்தமிட

" இங்க ஒரு சின்ன பொண்ணு இருக்கேன்னு யாருக்காச்சும் தெரியுதா ? கேக் மிச்சம் இருக்கு .. நான் சாப்ட போறேன் .. நீங்க எல்லாரும் அவரவர் ரூம்ல தூங்குங்க ... நாளைக்கு பேசிக்கலாம் " என்று புவனா உத்தரவிடவும்

அவள் கன்னத்தை கிள்ளி  " சரி மகளே " என்றார் வாசு ..

ந்து நாட்கள்  கடந்ததே தெரியவில்லை ... நிலாவிற்கு மதியிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அதற்கான  சந்தர்ப்பம்  அமையவே இல்லை .. சரி பொறுமையாய் பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள் , மதியின் பெற்றோருடன்  கூட்டணி சேர்ந்து கொண்டாள் ... நால்வரையும் சந்தோஷமாய்   வழி அனுப்பி  வைத்தாள்  புவனா ..

" அஞ்சு நாள் போனதே தெரியல அண்ணா .. நிஜம்மா உங்களை அனுப்பி வைக்க மனசே இல்லை .. ஆனா , பாவம் மை டியர்  லாயரம்மா அங்க  தாம் தூம்னு குதிச்சுட்டு இருப்பா ..  சோ போயிட்டு வாங்க ,,, சீக்கிரமா  கல்யாண தேதி சொல்லு ஹனிமூன் ... உன்னை காரணமாய் காட்டி தான் நான் இந்தியா வருவேன் போல ... அப்பா அம்மா  , ஊருக்கு போனதும் என்னை மறந்திட கூடாது " என்று அறிவுரைகளை தாராளமாகவே  வாரி வழங்கினாள்  புவனா .. பிரிவென்பது எல்லாம் இணைவதற்காகத்தானே ??? என்று மனதை தேற்றியபடி அனைவரும் புறப்பட்டனர் ..

" இந்த நேரத்தில் யாரு லக்ஷ்மி கதவை தட்டுறது ?" தூக்கத்தில் இருந்து விழித்தபடி மனைவியை எழுப்பினார் லக்ஷ்மிநாராயணன்..இரவு மணி 12 நெருங்கி கொண்டிருந்தது ... " தெரியலையே " என்றபடி அவரும் எழுந்து வாசலுக்கு விரைய , அந்த சத்தத்தில் முகில்மதியும்  எழுந்திருந்தாள் ..

" அம்மா ,,,யாரும்மா இந்த நேரத்துல ? "

"  தெரியலையே டீ " என்றபடி கதவை திறந்தவரை கண்டு புன்னகைத்தபடி நின்றான் அவன் ..

" ஷக்தீ ????" 

" ஹை  அண்ணாவா ?"  என்று விரைந்து வந்தாள்  முகில் ..

" அண்ணா .... நீங்க நாளைக்கு தானே வர்ரிங்கன்னு அப்பா சொன்னாரு "

" சும்மா , சர்ப்ரைஸ் " என்று புன்னகைத்தான் அவன் ..

" என்னம்மா , இங்கயே நிற்கவா ?"

" உ ... உள்ளவா ஷக்தி " என்று அவன் கையை பிடித்துக்கொண்டே லக்ஷ்மி உள்ளே வர இப்போது அதிர்ச்சி அடைவது அவனின் தந்தையின் முறையானது ..

" என்னடா இப்படி பண்ணிட்ட ?"

" என்ன ?"

" நாளைக்குதானே வரன்னு சொன்ன ?"

" சீக்கிரமா வரணும் தோணிச்சு ..ஏன் ?" என்றவன் விழிகளால் மித்ராவை தேடினான் ..

" ச்ச , சஞ்சய் ராமசாமி மாதிரி கொஞ்ச நேரத்துக்கு இவனுக்கு மித்ராவின் நினைவு வாராமல் இருக்க கூடாதா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.