" அப்பா , மித்ரா எங்க ?"
" அது "
" மிது " என்றபடி அவர்கள் அறைக்கு சென்றவன் அவளை காணமல் ஏமாந்தது அவன் முகத்திலேயே தெரிந்தது ..
" அது வந்து அண்ணா , காவியாவுக்கு உடம்பு சரி இல்லையாம் .. அதான் அண்ணி அங்க இருக்காங்க " என்று திக்கி திணறி சொன்னாள் முகில்மதி ..
" அப்போ , மித்ரா வீட்டுக்கு வரவே இல்லையா ?"
" அது "
" உண்மைய மட்டும் சொல்லு மதி " என்றான் ஷக்தி .. அவன் முகத்தை பார்த்து கொண்டு பொய் சொல்ல இயலாமல் முகிலா " இல்லை " என தலையசைத்தாள் ..
" டேய் அன்பு , எழுந்திரி ... கழுதை எழுந்திரி டா "
" ஆஅ ... ஏன் டீ அஞ்சலி படம் க்ளைமாக்ஸ் மாதிரி எழுப்பற ? இப்போதானே தூங்கவே போனேன் ?"
You might also like - Kanaamoochi re re... A romantic comedy...
" ஷக்தி வரான் "
"என்னடி புலி வருது மாதிரி சொல்லுற ? கொஞ்சம் தெளிவா சொல்லேன் "
" டேய் லூசு , ஷக்தி சர்ப்ரைஸ் தரேன்னு இன்னைக்கே வந்துட்டாங்க டா ... நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சதும் கோபமாய் காரை கெளப்பிகிட்டு வந்துகிட்டு இருக்காராம் "
" உன் மரியாதையில தீய வெச்சு கொளுத்தணும் டீ .. சரி இப்போ என்ன பண்ணுறது ?"
" பக்கி நானும் அதேதான் யோசிக்கிறேன் " என்றவள் வீட்டு வாசலிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள் ..
" விடு மித்ரா , ஷக்தி சாருக்கு நாம சர்ப்ரைஸ் கொடுத்தா சரியா போச்சு " என்றாள் காவியா
" அதில்லை காவியா .. அவன் கோபத்துல டிரைவ் பண்ணுறான் ... பத்திரமா வந்து சேரனும் .. வந்ததும் முதல் வேலையா இப்படி கோபத்துல வண்டி ஓட்டாதே ன்னு சொல்லணும் "
" காவியா , உங்க வீட்டுல எந்த தூண் ரொம்ப ஸ்ட்ரோங்ன்னு சொல்லேன் ..எனக்கு முட்டிக்கணும் போல இருக்கு "
" டேய், வா நானே ஹெல்ப் பண்றேன் " என்று உறுமினாள் மித்ரா .. சிறிது நேரம் இங்கும் அங்குமாய் நடந்தவள் வாசலிலேயே அமர்ந்துவிட்டாள் .. ஷக்திக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது ..அப்படி அவன் கோபம் அடைந்தால் , அவனை சமாதனம் செய்வதற்குள் பெரும்பாடு ஆகிவிடும் ..
" மாமா , என் மேல ரொம்ப கோப படாதே ப்ளீஸ் .. மிது பாவம்ல ? பத்திரமா என்கிட்ட வந்திடுவியாம் " என்றவள் கண்மூடி அப்படியே அமர்ந்தாள் .. நேரங்கள் வேகமாய் கரைய , காவியாவும் எழிலும் அமர்ந்தபடியே உறங்கினர் .. சங்கமித்ரா மட்டும் அவனை நினைத்து கொண்டே அமர்ந்திருந்தாள் ...
சட்டென அவளுக்குள்ளேயே அசரீரி கேட்டது .. " ஹே மித்ரா, என்ன இதெல்லாம் ஓவரா இருக்கே ? உன் மாமாவின் கோபத்துக்கு பயந்து இருக்குற ஆளா நீயி ? இந்நேரத்துக்கு ஷக்தி வரான்னு சந்தோஷத்துல துள்ளி குதிச்சிருக்க வேணாமோ ? மித்ராவாலேயே ஷக்தியை சமாளிக்க முடியலைன்னா , வேற யாரு சமாளிப்பாங்க " என்று தனக்கே கூறி கொண்டாள் .. முகத்தில் குறும்பாய் புன்னகை அரும்ப , அவன் பசியை வருவான் என்று அவனுக்காக சமைக்க தொடங்கினாள் .. "முருகா , இந்த மக்கு மாமா , பத்திரமா வந்து சேரனும் " என்று அவள் வேண்டுதலை பிறப்பித்த உடனேயே கார் ஹாரன் கேட்டது ... அவள் வாசலுக்கு விரைவதற்கும் , ஷக்தி காரில் இருந்து இறங்கவும் சரியாய் இருந்தது .. மலையளவு கோபம் இருந்தாலும் அவள் முகத்தை பார்த்ததும் " பாய் ஷக்தி " என்றபடி அவனது கோபம் எங்கோ மறைந்தே விட்டது .. ஏதோ வீடு வந்து சேர்ந்த உணர்வை போல , பெருமூச்சு விட்டவன் , அழுத்தமான காலடிகளோடு அவளருகில் வர
" ஷக்தீதீ தீ தீ ஈஈஈஈஈ மாமா " என்றபடி அவனை தாவி அணைத்து கொண்டாள் சங்கமித்ரா ..
"ஹேய் " என்றவனும் அவளை மெல்ல அணைத்தப்படி நின்றான் ..
" என்னை மன்னிச்சிரூ மாமா "
" .."
" ப்ளீஸ் நான் பாவம்ல ?"
"..."
" நீ என்னை மிஸ் பண்ணி , என்னைபார்க்கத்தானே வந்த ? "
".."
" நியாயப்படி நான் உனக்காக காத்துட்டு இருந்திருக்கணும் "
" .."
" பட் நீ வருவன்னு தெரிஞ்சு நான் உன்னை அவாய்ட் பண்ணலையே "
"...."
" ம்ம்ம் , உன்கிட்ட சொல்லாமல் இங்கயே தங்கினது தப்புதான் "
" ..."
" நீ ஏற்கனவே சொல்லி இருந்த , காவியாவுக்கு இங்க தொந்தரவு தர கூடாதுன்னு "
" .;.."
" இனிமே இப்படி நடக்காது மாமா ... ப்ளீஸ் "
" ஹும்கும் லாயரம்மான்னு ப்ரூவ் பண்ணிட்ட .. என்னை கொஞ்சமும் பேச விடாம "
" நீ பேசுறதே கொஞ்சமாய் தானே மாமா ?" என்று சொல்ல துடித்த இதழ்களை மூடிக் கொண்டு விழிகளையும் மூடி கொண்டாள் மித்ரா ..
" சரி வா உள்ள போலாம் "
" ம்ம்ம்ம்ஹ்ம்ம் மாட்டேன் .. நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு அப்போதான் விடுவேன் " என்று அவன்மீது நன்றாய் சாய்ந்து கொண்டாள் அவள் .. இதழில் மலர துடித்த புன்னகையை மறைக்க பெரும்பாடு பட்டான் ஷக்தி ...
" சொன்னா கேளு டீ .. யாராச்சும் பார்ப்பாங்க "
" ம்ம்ம்ஹ்ம்ம் மாட்டேன் .. நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு "
" சரி மன்னிச்சுட்டேன் "
" இல்ல நீ வேண்டா வெறுப்பாய் சொல்லுற "
" இப்போ நீ அடி வாங்க போற "
" ப்ளீஸ் .... மாமா " என்று தலை நிமிர்த்தி அவனை அண்ணார்ந்து பார்த்து பாவமாய் முகத்தை வைத்து கொண்டாள் மித்ரா .. அவனது வார்த்தைக்காக காத்திருந்தாள் மித்ரா .. நாமும் ஷக்தி சார் என்னதான் பண்ணுறார்ன்னு காத்திருந்து பாப்போம் ..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ? " வாசகர்களுக்கு முதல்ல என் மன்னிப்பை சொல்லிடுறேன் .. ரொம்ப பெரிய இடைவெளி வந்துவிட்டது இந்த அத்தியாயம் அனுப்புவதற்கு .. காத்திருந்து படிக்கும் எல்லோருக்குமே நன்றி .. அடுத்த அத்தியாயம் விரைவிலேயே தந்துவிடுகிறேன் ..நன்றி :)
தொடரும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.