(Reading time: 15 - 29 minutes)

11. கிருஷ்ண சகி - மீரா ராம்

வனின் அழகான புன்னகை…, மனதை வருடி திருடி செல்லும் புன்னகை…

இது தானே அவளை முதலில் ஈர்த்தது…

அந்த புன்னகை இப்போதும் அவன் முகத்தில்….

krishna saki

அதுவும் நடந்து முடிந்த இந்த களேபரத்திலும்….

அவனையே கண்களுக்குள் நிறைத்து அவனின் புன்னகையை உள்வாங்கிக்கொண்டிருந்தாள் ருணதி…

அவளின் பார்வை வீச்சினை தாங்காது சட்டென்று திரும்பினான் அவன்…

அவனில் விலகல் முகம் அவளுக்கு புரிய,

“எத்தனை வருஷமா இப்படி கஷ்டப்படுறீங்க?...” – ருணதி

அவள் கேட்டதும், “உன்னைப் பிரிந்த நொடியிலிருந்து…” என்ற சொல்லத்துடித்த நாவினைக் கட்டுப்படுத்தியவன், “கஷ்டம் எல்லாம் எதுவும் இல்லை…” என்றான்…

“பொய் சொல்லாதீங்க… எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்…” என்றாள் அவளும் அழுத்தமாய்…

“தெரிஞ்சுக்க பெரிசா எதுவுமில்லை…” – மகத்…

“இருக்கு… எனக்கு இருக்கு… இப்போ சொல்லுவீங்களா?... மாட்டீங்களா?...”

“சொன்னாக்கேளு ருணதி… சராசரியா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்குறதுதான்… விடு…”

“இல்லன்னு நான் அடிச்சு சொன்னா… என்ன செய்வீங்க?....”

“எதுவும் செய்ய மாட்டேன்…” – என்றான் அவன் அமைதியாய்…

You might also like - Unnal magudam soodinen... A romantic story...

அவனின் அழுத்தம் அவளை கலங்கவைக்க, “ப்ளீஸ்… சொல்லுங்க… எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தேடிக்கிட்டீங்க?...”

“என் வாழ்க்கைக்கு என்ன?... நல்லாதானே இருக்கு…” - மகத்

“எதுக்கு இப்படி உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க?...” - ருணதி

“இல்ல ருணதி…”

“என்ன இல்ல?... எங்கிட்ட சொல்லுவீங்களா மாட்டீங்களா?... சொல்லுங்க…” என்றவள் அவனின் அருகே வந்து அவன் கண்களை பார்த்து கேட்க, அவன் ஒரு கணம் தடுமாறிப்போனான்…

“உங்களைக் கெஞ்சி கேட்குறேன்… சொல்லிடுங்க… எங்கிட்ட… என்னதான் நடந்துச்சு உங்க வாழ்க்கையில?...” – அவளின் கெஞ்சிதலில் மனம் கரைந்தவன், மெல்ல தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,

“விதிப்படி என்ன நடக்கணுமோ எல்லாமே நடந்துடுச்சு… இதுக்கு மேல இதுல சொல்லுறதுக்கு எதுவும் இல்லை…” என்றவன் சட்டென்று அங்கிருந்து வெளியேறினான்…

வன் சென்றதும் பித்து பிடித்தவள் போல் இருந்தவள், காவேரியிடம் சென்று, தனக்கு தலை வலிக்கிறதென்று கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு அருள் இல்லத்தை விட்டு வெளியேறியதும், அவளை ஒரு கார் பின் தொடர்ந்தது…

அவள் அது எதையுமே கவனிக்காமல், சென்று கொண்டிருந்த வேளை, அவள் மேல் மோதுவது போல் வந்த அந்த காரை அவளிடம் நெருங்காமல் தடுத்து அவளின் அருகே சென்று காரை நிறுத்தினான் மகத்…

“காரில் ஏறு….” என்று அவன் சொல்லவும் அவள் வீம்பாக நடந்தாள்…

“உன்னைத்தான் சொல்லுறேன்… சொல்லுறதைக் கேளு… ப்ளீஸ்…” என அவன் கெஞ்ச, அவள் அந்த கெஞ்சலில் மனதை செலுத்த, காரினுள் ஏறினாள்…

அவள் காரில் அமர்ந்ததும், சட்டென்று காரை வேகமாக ஓட்டியவன், அவளைப் பின் தொடர்ந்த அந்த காரிடமிருந்து வெகு தொலைவில் சென்றுவிட,

“ஷிட்… எஸ்கேப் ஆயிட்டாளே…” என கோபத்துடன் காரின் கதவைத்திறந்து சாலையை வெறித்தாள் விசித்திர கன்யா…

“எதுக்கு இப்படி வேகமா போறீங்க…” என காரினுள் அமர்ந்திருந்த ருணதி பயந்துகொண்டே கேட்க,

அப்போது தான் இன்னும் காரை வேகமாக ஓட்டுவது புரிந்தது மகத்திற்கு…

திரும்பி அவள் முகத்தினை அவன் பார்க்க, அவள் பயந்து போயிருக்கிறாள் என புரிந்தது அவனுக்கு…

அவன் வேகத்தை குறைத்த நொடியில், அவனுக்கு கோபத்தை ஏற்றுவது போல் போன் செய்தாள் கன்யா…

“ஹலோ… என்ன அசிஸ்டெண்ட்… என்ன அவளைக் காப்பாத்திட்டோம்னு நிம்மதியா இருக்குறீயா?...”

“….”

“இந்த நிம்மதி… இன்னைக்கு வேணா நிலைக்கலாம்… ஆனா நாளைக்கோ அதற்கு மறுநாளோ நிலைக்காது…” என அவள் குரோதத்துடன் சொல்ல,

“பார்க்கலாம்… போனை வைக்கிறேன்…” என்றான் அவன் அமைதியாய்…

“ஹேய்… இரு இரு… என்ன திமிரா?... நான் பேசுறது உனக்கு கடுப்பா தெரியுதா?...”

“தெரிஞ்சா சரி…” என்றான் அவனும்….

“வாட்?... இப்போ நீ அவ கூட இருக்கலாம்… ஆனா எப்பவும் இருக்க முடியாது… வசமா அவ எங்கிட்ட மாட்டுவா… அப்போ உனக்கு புரியும்… இன்னைக்கு அவளை எதுவும் செய்ய முடியாம நான் படுற அவஸ்தை…”

“இதைத்தான் காலையில நானும் சொன்னேன்… அவஸ்தை நேரும்.. உனக்கு… நீ திணறி நிப்பன்னு…”

“ஏய்… என்ன ஒருநாள் ஒரு செகண்ட் ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப ஆடாத…”

“நீயே சொல்லிட்ட நான் ஜெயிட்டேன்னு…”

“நீ தோத்து போவ… அதை நான் செய்து காட்டுவேண்டா… காட்டுவேன்…” என அவள் அகங்காரத்தோடு சொல்ல,

“சரி… பார்க்கலாம்…” என்றான் அவன் வெகு இலகுவாய்…

“சே….” என்றபடி அவள் போனை கட் செய்ய,

அவன் சிரித்துக்கொண்டே போனை கீழே வைத்துவிட்டு, ருணதியின் பக்கம் திரும்பினான்…

அவள் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என புரிந்து கொண்டவன், தொண்டையை செருமி,

“இனி வீட்டுக்கு போகும்போது அவரை வந்து அழைச்சிட்டு போக சொல்லு….” என்றான் அவன்…

அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, அவன் திரும்பி அவளிடம் மீண்டும் சொன்னான்…

“எவரை?...” என்றாள் அவள் அலட்சியமாய்…

“உன் கணவன்” என்று சொல்ல அவன் மனம் தடுக்க, “துருவன் அப்பாவை….” என்றான் அவளின் கண் பார்த்துக்கொண்டே…

“ஓ… சரி பார்க்கலாம்……” என்றாள் அவள்…

“என்ன சொல்லுற புரியலை…” என்றான் அவன்…

“அதெல்லாம் இப்போ எதுக்கு… விடுங்க…” என்றவள் சட்டென திரும்பியபோது அங்கே உள்ள பார்க்கில் துருவ் குட்டியும், ஜிதேந்தரும் விளையாடிக்கொண்டிருந்தனர்…

அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவன், “அது துருவ் தானே… கூட இருக்குறது?....” என அவன் கேள்வி எழுப்ப,

“ஜிதேந்தர்…” என்றாள் அவள் மொட்டையாய்…

அவன் “அது பேருன்னு புரியுது… பட் அவர்….???...” என அவன் கேள்வியாய் நிறுத்த,

“துருவனோட அப்பா….” என சொல்லிவிட்டு காரின் சீட்டில் சாய்ந்து கண் மூடினாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.