(Reading time: 7 - 13 minutes)

02. உன்னால் மகுடம் சூடினேன்...!!! - அக்தர்

டற்கரை மணலில் கால்களை மடக்கி அமர்ந்திருந்தவனின் கண்கள் பல யோசனைகளை தாங்கியிருக்க ஏனோ மழைத்துளி விழுவது கூட தெரியாமல் கடல் அலையை வெறித்துக் கொண்டிருந்தான்.  இந்த கடலின் எல்லையை போன்றது தான் மனிதனின் மனமும் போல, ஒரு கட்டம் வரைக்கும் தான் கண்ணுக்கு புலப்படுகிறது. கைப்பேசி அலறலில் சிந்தனைகளை உதறிவிட்டு வெளிவந்தவன் அழைத்தது நிரஞ்சனா என்றதும் மெதுவாக எழுந்து வீட்டுக்கு புறப்பட்டான்.

நீர் சொட்ட நனைந்து வந்த மகனை பார்த்து அதிர்ந்த நிரஞ்சனா "என்னடா இது... கார்ல போயிட்டு எப்படி நனஞ்ச..?" என்று புலம்பியவாறு அவனின் தலையை துவட்டி விட்டாள்.

இதையெல்லாம் படிகளில் நின்று பார்த்த இந்திராவிர்கு ஏதோ ஒன்று மனதினுள் நெருடியது.  அறைக்குள் வந்தவனை அவள் கண்டு கொள்ளாத போல் படுத்துக்கொள்ள ஆர்யன் சிந்தனையோடே பால்கனியில் அமர்ந்து தூக்கத்தை தொலைத்தான். அதன் பின் வந்த நாட்களில் இருவருக்குமிடையில் மௌனமே ஆட்சி செய்தது. அன்பை பகிற எல்லா உரிமையும் அதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் அமைந்திருக்க, காலம் கூறப் போகும் பதிலுக்கு காத்திருக்க வேண்டிய நிலையை எந்த வார்த்தையை கொண்டும் வடித்திட முடியாதல்லவா..? அந்த மாதிரி உணர்வுகளின் மத்தியில் தான் நம் ஆர்யனும் தத்தளித்தான்.

Unnal magudam sudinen

வீட்டில் இப்படியென்றால் அலுவலகத்தில் வேற ரூபத்தில் பிரச்சனை கிளம்பியது. சின்ன நிறுவனங்களின் ஷேர் அல்லது சொத்துக்கள் மற்றும் தனி தொகுதிகளை பெரிய நிறுவனங்கள்  விலையிற் கொள்வது இன்றைய வியாபார சூழலில் சாதாரணமான ஒன்று.

பெரும்பாலும் வியாபாரத்தை விரிவாக்கும் நோக்கத்தோடு மட்டுமே இந்த முறைகள் கையாளப்படுகிறது. அந்த மாதிரி ஆர்யனின் நிறுவனமும் நகரத்தில் புதிதாய் முளைத்துள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கைக்கோர்க்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, அந்த சின்ன நிறுவனத்தை குறி வைத்து நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வலை வீச ஆரம்பித்தது.

அதனுள் என்ன வியாபார சூழ்ச்சி உள்ளடங்கியுள்ளது என்பது அடித்துக் கொள்ளும் அவர்களுக்கு தான் தெரியும். ஆர்யனின் பக்கம் எல்லாம் சரியாகிவிட்ட நிலையில் சில முக்கிய பங்குரிமையாளர்கள் மட்டும் காரணமில்லாது கருத்தாதரவு கொடுக்காமல் குடைந்தப்படி இருந்தார்கள்.

  "உங்க கிட்ட எல்லா டேர்ம்சும் பேசிட சொன்னேன் ரங்கன்... இப்படி சொதுப்புவீங்கேனு நான் எக்ஸ்பெக்ட் பன்னல..." என தன் நிறுவனத்தின் வக்கீல் ரங்கனிடம் எண்ணெயில் விழுந்த ஒரு துளி நீர் போல் வெடித்துக் கொண்டிருந்தான்.

அவரை வெளியே போக சொல்லிவிட்டு ஷ்யாமை அழைத்தவன் "ஷ்யாம்...ஆல்ரடி டிசைட் பன்ன டேட்ல ஷேர் ஹோல்டர் மீட்டிங் இருக்குனு நோட்டீஸ் ரெடி பன்னு...  போன மீட்டிங் ரிப்போர்ட்சும் எனக்கு ஈவ்னிங் வேணும்..." என்றான் உறுதியாக.

மதியம் அலுவலகத்தின் சில மிக முக்கிய நபர்களுடன் சின்ன சந்திப்பு நடந்தது. அதில் ஏற்கனவே எறிந்து கொண்டிருந்தவனை இன்னும் பெட்ரோல் ஊற்றுவது போல் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வர "வெல், கூடிய சீக்கிரம் நம்ம கம்பனிய யாரோ டேக் ஓவர் பன்ற நிலைமை வந்திடும் போல.." என உறுமிவிட்டு சென்றவனை பார்க்கவே ஷ்யாமிர்கு கவலையாக இருந்தது. தந்தையை தொந்தரவு செய்யாது இந்த பிரச்சனை ஒரு புறம், மற்றொரு நிறுவனத்தின் புது ப்ரோஜக்ட்  இன்னொரு புறம் என தன் நண்பன் அல்லாடுவதை ஒரு வாரமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

 பல வருடங்களாக மறந்து போன புகைப்பிடிப்பு பழக்கத்தை மீண்டும் ஆர்யனின் மனம் நாடிச் செல்ல கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் புகைத்து தள்ளினான்.

You might also like - Oru kootu kiligal... A family drama...

வன் அப்படியென்றால் இந்திரா தன்னவனின் ஒதுக்கத்திர்கான காரணத்தை கண்டு பிடிக்க வழியறியாமல் திணறினாள்.

ஷீத்தல் கூட ஒரு முறை "என்னாச்சு இந்து எனித்திங் ராங்..?" என  வாய் விட்டு கேட்டும் இந்திராவிடமிருந்து ஒரு சலிப்பான சிரிப்புதான் பதிலாய் கிடைத்தது.

நிரஞ்சனாவிர்கும் பிரபாகரனிர்கும் ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும் 'அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்..இடையில் சென்று மூக்கை நுழைப்பது சரியாக இருக்காது..' என அமைதியாக கண்டும் காணாதது போல் நடந்து கொண்டார்கள்.

காலநிலை குளிர் காற்றையும் பலமான மழையையும் பரிசாக தந்ததின் விளைவாக இந்திராவிர்கு லேசாக காய்ச்சல் அடிக்க ஸ்வெட்டர் ஸ்கார்ஃப் என பொம்மை வேடத்தில் அறையினுள்ளே அடைந்து கிடந்தாள்.

 ஆதித்யா காலை நேரம் அவசரமாக வந்து "அண்ணி இது மூன்று வேளை ஒவ்வொன்னா போட்டுக்கங்க... இருமல் இருந்தா மட்டும் டானிக் குடிங்க.." என்று மருந்து மாத்திரைகளை கொடுத்ததோடு தவறாது நேரா நேரத்திர்கு  எடுத்துக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி விட்டுச் சென்றான்.

ரவு உணவு வேளை முன் மேஜையிலுள்ள மாத்திரையை தேடிப் போனவளின் கண்ணில் அப்போது தான் அந்த சாவி கொத்து தென்ப்பட்டது. ஆர்யன் அறையோடு ஒட்டிய அலுவலக அறையை அவன் இல்லாத நேரம் பூட்டி தான் வைப்பான். அவள் இதுவரை அந்த அறையை பார்த்ததே இல்லை. சாவியை இன்று அவன் மறந்து வைத்துவிட்டு சென்றதின் பலனாக இந்திரா அந்த அறையை திறந்து உள்ளே சென்றவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. குளிரூட்டப்பட்ட சுத்தமான அறை கணிணி, குளிர்சாதன பெட்டி, புத்தக ஷெல்ஃப் என தேவையான அத்துனையும் ஒரு அறையினுள் அழகாக அடங்கியிருந்தது. அவனின் கணிணியை உயிர்ப்பிக்க அது பாஸ்வேர்ட் கேட்டு கடுப்பாக்கியது.

சரியென ஃப்ரிட்ஜை திறந்தவள் கண்முன்  குளிர்பானம் தென்ப்பட 'அடேங்கப்பா..' என மூடியை திறந்து இரண்டு மடக்கு மிடறு மிடறாய் குடித்தாள்...

ஆர்யனுக்கு வியாபார சூழலில் அவன் வயதிலுள்ள நிறைய நண்பர்கள் உள்ளனர். பெரிய பெரிய பார்ட்டிகளில் சபை நாகரீகத்திர்காக குடித்தாலும் அவனின் தனிப்பட்ட கருத்தில் குடிப்பழக்கத்தை அவ்வளவு விரும்ப மாட்டான். அந்த மாதிரி பார்ட்டிகளின் போது சில அரை வேக்காடுகள் வெளிநாட்டு உயர் ரக மது பானங்களை அன்பளிப்பாக தருவதை ஆர்யனும் மறுக்காமல் வாங்கிக் கொள்வதுண்டு. அதெல்லாம் வாட்ச்மேன் தீபனிடம் கொடுக்கும் வரை அவனின் அலுவலக அறையின் குளிர் சாதன பெட்டிக்குள் தான் உறங்கிக் கொண்டிருக்கும்.

ஒரு முறை அலுவலக வேலைகளில் மூழ்கிப் போனவன் தண்ணீருக்காக குளிர்சாதன பெட்டியை திறக்கும் போது "க்ளிங்..க்ளிங்" என கண்ணாடி பாட்டில்கள் ஒன்றோடொன்று முட்டி சத்தம் செய்து மானத்தை வாங்குகிறதென  எல்லா பானங்களையும் சாதாரண  ப்ளாஸ்டிக்  பாட்டில்களில் மாற்றி வைத்தான். இதெல்லாம் நம்ம வாயாடி வக்கீலுக்கு தெரிய வாய்ப்பில்லை.

முதலில் ஒரு மாதிரி இருக்க அவளே அதற்கு 'எனெர்ஜி ட்ரின்க்' என்று  பெயரிட்டதோடு தயவு தாட்சனை பார்க்காமல் முழு பாட்டிலையும் காலி செய்தவள் இன்னொரு பாட்டிலையும் கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்து மெத்தையில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டாள்.

கையில் கிட்டார் வைத்தப்படி வசீகர சிரிப்புடன் நின்றிருந்த ஆர்யனின் ஆளுயர புகைப்படம் கண்ணில் பட லேசாக தள்ளாடியவாறு அதனருகில் சென்றவள் "நீ ப்ச்...  பேச மாட்ற, சரியா சாப்பிட மாட்ற....என்னம்மோ நான் வந்து உன்னை கொடுமை பன்ற மாதிரி... ஹா ஓவர் சீனுடா டேய்..." என்றாள் குழறலாக.

கழுத்தை நெட்டை எடுத்தவாறு பிடரியில் கை வைத்து கண் மூடியவள் திடீரென நியாபகம் வந்தது போல் "இங்க வந்த முதல் நாள் என்னம்மோ சொன்னியே..???" என வாயில் விரல் வைத்து யோசித்தாள்.

சட்டென்று விரல்களை சொடுக்கியவாறு "ஆங்...நம்ம மேரேஜ் ஒரு பப்பெட்  ஷோ...ம்ம் அதே தான்....இல்....இல்ல தெரியாம தான் கேட்கறேன் எங்க சொந்தக்கார பயலுகள பார்த்தா கிறுக்கனுக மாதிரி இருக்கா..? ." என்றாள் கோபமாக  அவனின் கண்ணத்தில் ஒரு குத்து விட்டவாறு.

பாவம், இதையெல்லாம் அந்த புகைப்படத்திலுள்ளவன் நிஜமாக நின்று கேட்டு கொண்டிருக்கிறான் என தெரியாமல் போனது அந்த பாவைக்கு.

தொடரும்

Episode # 01

Episode # 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.