(Reading time: 8 - 15 minutes)

03. உன்னால் மகுடம் சூடினேன்...!!! - அக்தர்

நாளைக்கான திட்டங்களை வரிசைப்படுத்திய ஷ்யாமை இடையில் தடுத்த ஆர்யன் "ஷ்யாம் ப்ளீஸ்... எதுவா இருந்தாலும் மெயில் பன்னு.." என சலிப்போடு வீட்டிர்கு கிளம்பினான்.

தன் அறைக்குள் நுழைந்த நேரம் இந்திரா தன் புகைப்படத்தை முறைத்து பார்த்து ஏதோ பேசியதை கண்டவன் கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். புகைப்படத்தில் விழுந்த அடியில் கொஞ்சம் விரைத்தவன் 'என்ன தைரியம்டி உனக்கு..' என எண்ணியவாறு கழுத்தில் கிடந்த டையை ஒரு கையால் இளகுவாக்கியப்படி அவளை நோக்கி நடந்தான்.

 திடீரென்று கேட்ட "வாரே வா... வாட்டே ப்ரில்லியன்ட் ஐடியா..." என்ற குரலில் இந்திரா சற்று அதிர்ந்து தான் போனாள். ஆர்யனை பார்த்ததும் போதையும் மீறி தலைக்குள் சலீரென ஏதோ பாய்ந்தது போல் உணர்ந்தவள் மின்னல் வேகத்தில் தன்னை நெருங்கி வந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள். சுவரின் இரு புறமும் கையூன்றி நின்று அவளை சிறை செய்தவனின் முகத்தில் கோபத்தையும் மீறி குறும்பு கூத்தாடியது.

Unnal magudam sudinen

"ம்ம்... அப்போ என் மேல கொலை வெறில இருக்க..?" என ஒற்றை புருவம் உயர்த்தியவனை பார்த்து சிறிதும் யோசிக்காமல் 'ஆமாம்' என்பது போல் தலையாட்டினாள். அவளின் பதிலில் 'என்ன டக்குனு தலையாட்றா..' என மனம் கேள்வி எழுப்பினாலும் அவன் தலையில் எழுதப்பட்டது சும்மா இருக்காதல்லவா..?

 "அதை எதுக்கு போட்டோ கிட்ட காட்ற..?.. தோ.. ஐம் ஹியர் இன் ஃப்ரென்ட் ஆப் யு..போட்டோவ அடிச்ச மாதிரி என்னை அடி.. கமான் ஐ சே..." என அவளின் கன்ன எலும்பு நொறுங்குமளவு தன் கைகளால் அவள் தாடையை பற்றி அவளை மிக முரட்டு தனமாக சுவரோடு சேர்த்துப் பிடித்தான்.

 பயங்கர வலியில் அவனின் கைகளில் இருந்து விடுப்பட முயன்றவளை ஒரு கட்டத்தில் விடுவித்தவன் "ம்ம்... தைரியம் இருந்தா அதே மாதிரி அடி டி பார்க்க.." என ஏதோ கூற வந்தவன் நொடி நேரத்தில் இந்திரா தன்னை நோக்கி அடிக்க வீசிய கைகளை மிக எளிதாக பிடித்து பின் புறமாக மடக்கினான்.

அவனை பார்த்து முறைத்தவள் " லீவ் மி...நீ... நீ ஒரு ஈகோ புடிச்ச சேடிஸ்ட்.. மேல் சாவனிஸ்ட்.." என அந்த வலியிலும் அவனை சரளமாக திட்டித் தீர்த்தாள்.

குழப்பங்களும் எரிச்சலும் ஓரு புள்ளியில் சந்திக்கும் நேரம் எந்த மனிதனும் நிதானத்தை இழக்க கூடும். அந்த சமயங்களில் முரட்டுத்தனமும் முட்டாள்த் தனமும் எங்கிருந்து வருகிறது என அறிந்திட முடியாத சில மனித இயல்புகள்.

 ஏற்கனவே பல முடிவு காணாத விஷயங்களை மனதில் வைத்து லேசாக புகைந்து கொண்டிருந்தவனிர்கு அவளின் தள்ளாட்டமோ தடுமாற்றமோ கருத்தில் பதிவதற்கு மாறாக இந்திராவின் செயலும் பேச்சும் இன்னும் தூண்டி தான் விட்டது. "கம் எகைன்.." என ஆத்திரத்தை அடக்கிய குரலில் கேட்டவனிடம் தான் பேசிய அத்துனையும் மறு ஒலிப்பரப்பு போல் அச்சு பிசகாமல் பேசிக் காட்டினாள்.

 கண்ணில் கோபம் கொப்பளிக்க அவளின் கழுத்தில் பேச முடியாதவாறு கை வைத்து நெறித்தவன் பலமாக அவளை பிடித்து தள்ளிய வேகத்தில் சல்லென்று போய் மேஜை விளிம்பில் நெற்றி மோதி "டொம்" மென்ற சத்தத்தோடு "ஹய்யோ.." என வலியில் முனங்கியவாறு தரையில் விழுந்தாள்.

You might also like - Puthir podum nenjam... A romantic story...

ஆத்திரம் அடங்காது மெத்தையில் அமர்ந்தவனின் கையில் அந்த பாட்டில்கள் சிக்கியது. 'இதெப்படி இங்க' என திகைத்தவன் அதில் பாதி பாட்டில் காலியாயிருந்ததை அப்போது தான் கவனித்தான். அவளின் பேச்சில் மாற்றத்தின் காரணம் எல்லாம் ஒரு மாதிரி புரிய ஆரம்பிக்க 'குடித்திருக்கிறாள்' என்பது மட்டும் தெள்ளத் தெளிவானது. உள்ளங்கையால் தன் நெற்றியில் பலமாக அடித்துக் கொண்டவன் அவசரமாக தரையில் விழுந்து கிடந்தவளை மெத்தையில் அமர வைத்து விட்டு அலுவலக அறையினுள் சென்று ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து ரத்தம் கட்டிய இடத்தில் பட்டும் படாமல் ஒற்றி எடுத்தான்.

 "அடி வேணும்னு நீயா தான்டா அல்வா மாதிரி கேட்ட..? எப்படி அடிச்ச என்னை...ம்ம்..? நீ... நீ பக்கா வில்லன் டா...வி இல் ல ன்....வில்லன்.. " என்றாள் ஒவ்வொரு எழுத்தாக கூறி பாடம் நடத்துவது போல்.

"ம்ம்... எனக்கு தேவை தான்..." என முனங்கியவன் திடீரென நியாபகம் வந்தது போல் "ஹே...ஆபீஸ் ரூம்ல தான் இதெல்லாம் இருக்கும்.. அதை நான் லாக் பன்னிட்டு தானே போனேன்..." என்றான் கோபமாக.

பதிலுக்கு நெருப்பென விழித்தவள் கண்ணீரை சுண்டி விட்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே "பெரிய லாக்கு.. போடா பேக்கு..லாக்கும் பன்னிட்டு சாவியையும் இங்க தான வெச்சிட்டு போன.." என்றாள் தடுமாற்றத்தையும் மீறி கோபம் தொனிக்கும் குரலில்.

அவளின் பேச்சை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சிரிப்பு பொங்கி வர கஷ்டப்பட்டு முகத்தை கடினமாக்கியவன்

"ஹாஃப் பாட்டில் குடிச்சதுக்கே இந்த ஆட்டமா..?" என்றான் கிண்டலாக. அவனை 'ஞே' என பார்த்தவள் "ஐம் எ காம்ப்ளான் கேல் .. டூ பாட்டிலஸ் குடிச்சேன் டூ பாட்டில்ஸ்..." என்றாள் பெருமையாக மூன்று விரலை காட்டி.

அவள் கூறியதை கேட்டு அதிர்ந்தவன் "மண்டைல அடிப்பட்டும் தெளியாம இருக்கப்பவே சந்தேகப்பட்டேன்..." என்றதோடு வாய் சும்மா இருக்காமல் "எப்போ இருந்து இந்த பழக்கம்...?? காலேஜ் டேஸ்ல இருந்தா..?" என கேட்டான் குரலில் நக்கல் வழிய.

 அவனின் கேள்வியில் சின்னதாக சிரித்தவள் "ஆனா நான் உன்னை மாதிரி கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்ல ஒழிச்சு வெச்சு குடிக்கல பாத்தியா... அதுவும் அல்ப்பத் தனமா...!!! இதுக்கு தான் அந்த ரூம அலிபாபா குகை மாதிரி பூட்டி வைக்கறியா..ஹா ஹா..!!.." என பேய் படத்தில் வரும் பிசாசு போல் கெக்க பிக்கவென சிரித்தாள்.

 அவளுக்கு மருந்திட்டவாறு "அடிங்க.. யாருடி மறைச்சு வெச்சு குடிச்சா...? இவ்ளோ வாங்கியும் உனக்கு நக்கல் மட்டும் குறைய மாட்டேங்குது...." என்று ஒரு பக்கம் அவளை திட்டினாலும் இன்னொரு மனம் 'ச்சே..கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்..' என இடித்துரைத்தது.

 நெற்றியில் கைவைத்து பார்த்து "ம்ம் லைட்டா ஃபீவர் இருக்கு போல..சாப்பிட்டு டேப்லட் போட்டியா" என்றான் மெல்லிய குரலில்.

இல்லை என்பது போல் தலையை இடமும் வலமுமாக அசைத்தாள். 'கீழ கூட்டிட்டு போன மானத்த வாங்கி காத்துல பறக்க விட்டுவா' என மனதினுள் எண்ணியவன் அவளை அறையுனுள் அமரச் செய்துவிட்டு கீழே சென்று சீஸ் தேய்த்து சக்கரையிட்ட ரொட்டிகளும் ஒரு டம்ளரில் பாலும் எடுத்து அவளிடம் வந்தான். ஆயிரம் கேள்விகள் கேட்டவளை உண்ண வைப்பதற்குள் ஆர்யன் வியர்த்து குளித்து சோர்ந்தே போனான்.

கட்டிலில் படுத்தவள் தத்துபித்தென உளற ஒரு கட்டத்தில் கடுப்பான ஆர்யன்

" இன்னொரு வார்த்தை பேசுன அப்படியே சாக்கில கட்டி ஜன்னல் வழியா தூக்கி வீசிருவேன் .." என்றான் பற்களை கடித்தவாறு. அவனை பார்த்து பதிலுக்கு முறைத்தவள் "ம்ம்.... நானும் உன் மூக்க அறுத்து காக்காய்க்கு போட்ருவேன்.." என்றாள் ஆள்க்காட்டி விரல் காட்டி மிரட்டியப்படி.

அவளின் செய்கையில் மீண்டும்

புன்னகைத்தவன் 'இங்க வா' என்பது போல் கண்ணசைத்து ஒரு கையால் அவளை இழுத்து மென்மையாக அணைத்தான். அவனை விட்டு விலகி நிமிர்ந்தவளின் கண்ணில் அதிர்ச்சியும் மீறிய கேள்வியுடன் கூடிய சிறு கூர்மை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.