(Reading time: 12 - 24 minutes)

03. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 3

னால்...

இயற்கை சதி செய்தது.. பலத்த காற்று வீச... வேட்டி காற்றில் பறந்து விடுமோ என்று இவன் மனம் பதற கவனம் எல்லாம் அதன் மீது திரும்பியது.

அவன் பார்வையில் இருந்து தப்பிய பெண் மீண்டும் கண்ணெதிரே தோன்றத்தான் போகிறாள்.... சில மணி நேரத்தில்...

Puthir podum nenjam

ஆனால், பார்வை சிந்த வேண்டிய இந்த மணித் துளிகள் கடந்து விட்டதே... இது எப்பேர்பட்ட சுழலை உருவாக்க போகிறதோ... விளைவு அறியாமலே கால தேவனை நிந்தித்தானா... இல்லை தன் தலை விதியை நிந்தித்தானோ....

“எல்லாம் நேரம்!”,

என்ற புலம்பலும் போராடி வேட்டியை கட்டுக்குள் கொண்டு வர... அதைப் பார்த்த வாசு,

“உன்னை கட்டிகிட்டு பாடா படுது வேட்டி”, என்று கிண்டலடித்தான்.

அவர்கள் நின்ற வரிசையின் இருபுறமும் தடுப்பு இருக்க... இவர்களோ சற்று வழியை அடைத்த படி பேசிக் கொண்டிருந்ததால், இவர்களுக்கு அடுத்து நின்றவர்,

“ஸார் , கொஞ்சம் வழி விடுறீங்களா...”, என்று கேட்க,

அவரை நோக்கி திரும்பியவர்களின் கண்களில், அவர் மாபெரும் தொப்பை பிரதானமாக பட்டது.

“மாப்பு, கொஞ்சம் இல்லை மொத்தமா ஒதுங்கணும்...”, என்று வாசு அவன் காதில் மெல்ல முணுமுணுக்க...

இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டே சற்று தள்ளி வந்த பின்...

“ஆனாலும், உங்க எஸ். பி.யை விட சர்கம்ஃப்ரன்ஸ் கம்மி தான்”, என்று சிரித்த படியே ஆர்யமன் வாசுவை நோக்கி  சொல்லி விட்டு பின்பு நினைவு வந்தவனாய்,

You might also like - Vidiyalukkillai thooram... A story that focuses on social problems!

“சர்கம்ஃப்ரன்ஸ் ன்னா உனக்கு தெரியுமா?”, என்று கேட்க..

“தெரியும் தெரியும் தொப்பையைத் தானே சொல்றே”, என்று வாசு எடுத்து விட...

“சுற்றளவு! தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சுக்கோ! நீயா தப்பு தப்பா கெஸ் பண்ணிட்டுத் இருக்காதே “, என்று சொல்லி விட்டு,

“இந்த அட்டெம்ப்ட்டும் ஃபெயில்! காலம் முழுக்க அந்த எஸ். பி.க்கு இப்படியே சலாம் போட்டுக்கிட்டு இருக்க போறியா?”, வாசு மீதிருந்த அக்கறையில் சற்றே கடுமையுடன் கேட்க...

வாசு சற்றே தயக்கத்துடன்,

“இல்லை மாப்ளே! இங்கிலீஷ் தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு! மெயின் பேப்பர் கூட தமிழ்ல எழுதிடுவேன். ப்ரிளிம்ஸ் இங்கிலீஷ் மாப்ளே....”, என்று புலம்ப...

“இங்கிலீஷ் என்ன கடலா? மலையா? ஒரு 26 எழுத்தை வைச்சு எழுதப்பட்ட மொழி அவ்வளவு தான். இப்போ நமக்கு இருபத்தி ஐந்து வயசு தானே ஆகுது! ஒரு வருஷம்... ஏன் இரண்டு, மூணு வருஷம் கூட எடுத்துக்கோ... வெறியோட படிச்சா கண்டிப்பா சாதிக்கலாம்!”

என்று ஆர்யமன் உத்வேகத்துடன் சொல்ல...

ரத்த நாளங்கள் கொதிக்க சிவப்பேறிய வாசுவின் கண்கள்... விரைத்த மார்புடன்.. விரலை பலமுறை சுழற்றி...

“நானும் ஆவேன்டா...”, என்று ஆரம்பிக்க.. அவன் வாயை பொத்துமாறு சைகை செய்த ஆர்யமன்,

“ஐ. பி. எஸ். ஆக ப்ராக்டிஸ் பண்ண சொன்னா.. ஐ. பி. எஸ். ன்னு சொல்றதுக்கு ப்ராக்டிஸ் பண்ற! வீட்டுக்கு போய் யூனிர்பார்மை  மாத்திட்டு உருப்படியான கான்ஸ்டபிளா இருக்கிறதுக்காவது ப்ராக்டிஸ் பண்ற வழியைப் பாரு!”,

என்று கடிந்து சொல்ல...

“ஹெட் கான்ஸ்டபிள் மாப்ளே”, என்று வாசு திருத்த...

‘சீரியஸ் போலீஸ் ஆக்கலாம்னு பார்த்தா சிரிப்பு போலீஸ்ஸாவே இருப்பேன்ங்கிறானே!’ என்று தனக்குள் நொந்த படி அவனை முறைக்க..

அவனை சமாளிக்க திணறிய வாசு,

“சரி மாப்ளே! பேசுறதுக்கு டைம் இல்லை.. ட்யூட்டிக்கு லேட்டாகுது.. ஐ அம் எ ஸ்டரிக்ட் ஸ்பைடர்மேன்..... ச்சீ.. போலீஸ்மேன்”, என்று முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு சொல்வது போல நடிக்க...

‘என் வேலையை விட்டுட்டு உனக்கு வந்து நின்னா ஏன் பேச மாட்ட! உனக்கு வைக்கிறேன்டி ஆப்பு’, என்று நினைத்து கொண்ட ஆர்யமன் அவனை பார்த்து,

“ஒரு ஸ்பைடர்மேன்க்கு.. ச்சீ போலீஸ்மேன்க்கு கடம தானே முக்கியம்! பை மச்சி!”, என்று சிரித்துக் கொண்டே வாழ்த்த...

அவன் சிரிப்பில் உள்ள வில்லத்தனம் புரிந்தவனாக ‘மாப்பு வைக்க போறியாடா

ஆப்பு’, என்ற உள்ளுக்குள் கலங்கிய படி முழிக்க...

“ஆப்பு வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருக்கு மச்சி! பயப்படாம போ!”,

என்று அவனை மேலும் கலங்கடித்து விட்டு விடை பெற்றான் ஆர்யமன்.

ஒரு ஆட்டோவை பிடித்து அலுவலகத்திற்கு விரைந்தான்.

கிளம்பும் பொழுது சாரலிட்ட மழை.... அவன் அலுவலகத்தை நெருங்க நெருங்க கன மழையாக இறங்கியது.

கிட்டத்தட்ட அலுவலகத்தை நெருங்கிய நேரம் ஆட்டோ நின்று விட்டு மீண்டும் ஸ்டார்ட் ஆக மறுக்க...

நேரம் விரயமாவதை கண்டவன்,

‘ஜஸ்ட் அஞ்சு நிமிஷ வாக்ல ஆபிஸ்!’, என்று ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்ட பின் தான்.. 

அலுவலக கேட் வரை நடப்பதற்குள்ளே மழை அடித்து துவைத்து விடுமே என்பது உரைக்க...

‘ஒயிட் அன்ட் ஒயிட் போட்டு ஹீரோயின்ஸ் ரெயின் டான்ஸ் ஆடினா  ஓகே! வேட்டி விளம்பரத்தில் கூட வராத சீன்னை எனக்கு பிக்ஸ் பண்றியே வருண பகவானே!”, என்று புலம்பியவனாக...

வேட்டியை தூக்கி பிடித்தவனாக மீண்டும் ஆட்டோவை நோக்கி திரும்ப நினைக்கும் பொழுதே....

அவனை கடந்து சென்றது ஒரு கார்...

‘நம்ம ப்ராண்டிங் மானேஜரோ...’, என்று அவன் அனுமானிக்கும் பொழுதே...  அந்த கார் ரிவர்ஸ்ஸில் அவன் அருகில் வந்து நின்றது..

“வந்து ஏறுங்க ஆர்யமன்!”, என்று கண்ணாடியை பாதி இறங்கிய படி அழைத்தவன் அவன் நினைத்த மானேஜர் தான்.

“தேங்க்ஸ்!”, என்று தலையசைத்தவனின் பார்வை பாசென்சர் சீட்டில் இருந்த பெண் மீது சென்றது...

சேலையில் ஜெக ஜோதியாக மிளிர்ந்து கொண்டிருந்தத கோகிலா - மார்க்கெட்டிங் டீம்மில் உள்ள பெண். அலுவலகத்திலே சில அழகிய பெண்களில் அவளும் ஒருத்தி.. பணி நிமித்தம், ஒரு மாதம் சிங்கப்பூர்  சென்று விட்டு இன்று தான்  அலுவலகம் திரும்பி இருந்தாள். 

கொள்ளை அழகை பார்த்து  கண்ணை எடுக்கவே தோன்றவில்லை என்றாலும், மிகவும் நல்ல பையனாக அவளிடமிருந்து பார்வையை மீட்டுக் கொண்டு அவன் காரில் ஏற....

“எப்படி இருக்கீங்க?”, என்று விசாரித்த படி  அவன் பக்கம் திரும்பினாள் கோகிலா.

“ஃபைன். சிங்கப்பூர் டிரிப் எப்படி போச்சு?”, பதிலுக்கு கேட்டான் அவன்.

“வேலை பயங்கர ஹெக்டிக்! ஒரு மாசம் எப்படா முடியும்ன்னு இருந்தது”, என்று அவள் சோகத்துடன் சொல்ல..

‘உங்க தரிசனம் கிடைக்காம எங்களுக்கும் அப்படி தான் இருந்ததுன்னு சொல்லவா முடியும்.’, இவன் தனக்குள் சொல்லிக் கொண்டிருக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.